தந்தைகள் ஜாக்கிறதை!

இதுநாள்வரை கணவன்மார்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள், உடன் பிறப்புக்கள் மட்டும்தான் கண்ணியமற்ற இளம் பெண்களின் கைகளில் சிக்கி, பொய் வழக்குகளில் மாட்டி விடப்பட்டு சீழிந்து கொண்டிருந்தனர். ஆனால் இந்தப் பிரச்னை தற்போது இந்த சாராருடன் நிற்காமல் அடுத்த பரிமாணம் எடுத்துவிட்டது!

”ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து” தற்போது இந்தப் பெண்கள் தங்களுடைய தந்தையர்கள் மேலும் பொய்வழக்கு போட்டு சித்திரவதை செய்யத் துணிந்து விட்டனர். இதற்கு செய்தித் தாள்களும், ஊடகங்களும், பெண்ணியவாதிகளும் துணை போகின்றனர்.

முந்தைய பதிவு ஒன்றில் தன்னுடைய ஓரினச் சேர்க்கைக்கு தடையாக இருந்ததால் பெற்றோரைப் படுகொலை செய்த இளம் பெண்ணைப் பற்றிப் படித்தோம். இப்போது ஒருபடி மேலே போய், தான் கேட்டபோது பணம் கொடுக்க மறுத்தாலோ, அல்லது தன் உடன்பிறந்த சகோதரனுக்கு ஏதாவது உதவி செய்தாலோ, அல்லது தான் யாரையோ இழுத்துக் கொண்டு ஓடுவதற்கு மறுப்பு சொன்னாலோ, உடனே, “என் தந்தை என்னை பாலியல் பலாத்காரம் செய்தான். பல ஆண்டுகள் என்னை அடைத்து வைத்து வன்புணர்ந்தான்” என்று வாய் கூசாமல் பொய் புகார் ஜோடிப்பதில் இந்தப் பெண்கள் இறங்கியிருக்கிறார்கள். உடனே பெண்ணியவாதிகள் “ஓ”வென்று காது கிழியக் கூச்சலிடுவார்கள். ஊடகங்கள் அந்தப் பெண்ணின் “கண்ணீர்க் கதையை” மீண்டும் மீண்டும் வெளியிட்டு மேலும் பல பெண்கள் இத்தகைய அட்வென்சரில் இறங்க ஊக்குவிக்கும்.

ஆகையால் பெண்ணைப் பெற்றவர்களே, ஜாக்கிறதை!

இதோ, இந்தச் செய்தியை வாசியுங்கள்:-

தாராபுரம், ஏப்.18- கொடைக்கானலில் சாமியாரால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கல்லூரி மாணவி, தாராபுரம் போலீசில் சரணடைந்தார். "என்னை யாரும் கடத்தவில்லை. வீட்டில் என் தந்தை என்னை கொடுமை படுத்தியதால்தான் நான் வீட்டைவிட்டு வெளியே வந்து சாமியார் அசோகிஜியுடன் இருக்கிறேன்.'' என்று அவர் நிருபர்களிடம் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் புளியமரத்து செட் என்னும் இடத்தில் ஷீரடி சாய்பாபாவுக்கு ஒரு கோவில் கட்டி, அதன் அருகில் ஆசிரமம் வைத்து நடத்தி வருபவர் அசோக்ஜி. இவர் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் மந்திரம் மூலம் விபூதி வரவழைத்து ஜோதிடம் சொல்லி வந்தார். இந்தநிலையில், கொடைக்கானல் ஏரிச்சாலையில் பெட்டிக்கடை நடத்தி வரும் செல்வம் என்பவர் அசோக்ஜியின் சீடர் ஆனார். இளம்பெண் மாயம் அதனால் செல்வம் வீட்டுக்கு சாமியார் அசோக்ஜி அடிக்கடி வருவது வழக்கம். அப்போது, கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வரும் செல்வத்தின் மகள் ராகசுதா (வயது 19)வுடன் அசோக்ஜிக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில்,

``என் மகள் ராகசுதாவை சாமியார் அசோக்ஜி கடத்திச் சென்று விட்டார். என் மகளை கண்டுபிடித்து தர வேண்டும்'' என்று செல்வம் கொடைக்கானல் போலீசில் புகார் செய்தார். தனிப்படை போலீசார், தலைமறைவான அசோக்ஜி, மாணவி ராகசுதா இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், மாணவி ராகசுதா நேற்று முன்தினம் காலையில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு வந்தார். மாஜிஸ்திரேட்டு சந்திரனிடம் (பொறுப்பு) கோர்ட்டில் சரணடைவதாக கூறி மனு கொடுத்தார். மனுவை பெற்ற மாஜிஸ்திரேட்டு சந்திரன் (பொறுப்பு), இந்த சரண்டர் மனுவில் கொடைக்கானல் போலீசார் வழக்குபதிவு செய்த நகல் இணைக்கப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளதா, இல்லையா என்றும் தெரியவில்லை. எனவே இளம்பெண் ராகசுதாவின் சரண்டரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை மாணவி ராகசுதா, வக்கீல் சேகர் மூலம் தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மறைமலை முன் சரணடைந்தார். "என் தந்தையால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். என்னை யாரும் கடத்தவில்லை. என் தந்தையின் தொந்தரவை தாங்க முடியாமல் தான் வீட்டைவிட்டு வெளியே வந்தேன்'' என்று, போலீஸ் துணை சூப்பிரண்டிடம் கூறினார்.

"இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கொடைக்கானல் போலீசில் உள்ளதாலும், கொடைக்கானல் சரக போலீஸ்தான் பாதுகாப்பு கொடுக்க முடியும் என்பதாலும் நாங்கள் பாதுகாப்பு வழங்கமுடியாது'' என்று தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தெரிவித்தார்.

பின்னர் ராகசுதா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்கள் குடும்பத்துக்கும் அசோக்ஜிக்கும் கடந்த 16 வருடமாக பழக்கம் உண்டு. இதன் காரணமாக அவர் அடிக்கடி எங்களது வீட்டுக்கு வருவார். அதுபோன்று நாங்களும் அடிக்கடி அவரது வீட்டுக்கு செல்வோம்.

என் தந்தை, "பெண் பிள்ளைகள் படிக்கக் கூடாது; ஆண் பிள்ளைகள்தான் படிக்க வேண்டும்'' என்ற கொள்கை உடையவர். இதன் காரணமாக என்னை 10-ம் வகுப்புக்கு மேல் படிக்கக் கூடாது என்று கூறினார்.

இந்த நிலையில், அசோக்ஜி பலருக்கு உதவி செய்து வந்தார். அதனால் எனது படிப்புக்கு உதவி செய்யுமாறு அவரிடம் கேட்டேன். அதனால் அவர் என்னை படிக்க வைத்தார்.

நான் 12-ம் வகுப்பு முடித்த பின்பு பி.சி.ஏ. படிக்க விரும்பினேன். எனது விருப்பத்தை தந்தையிடம் கூறினேன். அவர் `நீ படிக்கவே கூடாது' என்று சொல்லி என்னை துன்புறுத்தினார்.

படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால், நான் அசோக்ஜியிடம் சென்று என்னை பி.சி.ஏ. படிக்க வைக்குமாறு கூறினேன். அவரும் நான் பி.சி.ஏ. படிக்க அனைத்து உதவிகளும் செய்தார். தற்போது நான் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன்.

எனது படிப்புக்கு அசோக்ஜி உதவி செய்து வருவதும், நான் படித்து வருவதும் என் தந்தைக்கு பிடிக்கவில்லை. இதனால் கடந்த வாரம் நான் படித்து வரும் கல்லூரிக்கு வந்து, மாணவிகள் முன் என்னை அடித்து உதைத்தார். இது எனக்கு பெரிய அவமானமாக இருந்தது.

வீட்டுக்கு சென்ற நான் பெற்றோரிடம் இருக்க பிடிக்காமல், வீட்டைவிட்டு வெளியே வந்துவிட்டேன். என்னை அசோக்ஜி கடத்தி சென்று திருமணம் செய்துவிட்டதாக என் தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். என்னை அசோக்ஜி கடத்தவும் இல்லை; திருமணம் செய்யவும் இல்லை. வீட்டில் என் தந்தை என்னை கொடுமை படுத்தியதால்தான் நான் வீட்டைவிட்டு வெளியே வந்து இருக்கிறேன்.

இனிமேல் நான் எனது வீட்டுக்கு செல்ல மாட்டேன். ஏதாவது ஒரு காப்பகத்தில் தங்கியிருந்து பி.சி.ஏ. படிப்பை முடித்து விட்டு, பின்னர் ஐ.ஏ.எஸ். படிக்க உள்ளேன். இவ்வாறு இளம்பெண் ராகசுதா கூறினார்.

இந்தநிலையில், தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்த கொடைக்கானல் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரனிடம், மாணவி ராகசுதாவை கொடைக்கானல் அழைத்து செல்கிறீர்களா என்று கேட்டதற்கு, அவர் கூறியதாவது:-

"ராகசுதா மீது எந்த வழக்கும் பதிவு செய்ய வில்லை. எனவே நாங்கள் அவரை கொடைக்கானல் அழைத்து செல்லவில்லை. அவர் தாராபுரம் போலீசில் சரண் அடைந்துள்ளார் என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது. ராகசுதாவை கடத்தி சென்ற சாமியார் அசோக்ஜி இங்கு வந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில்தான் இங்கு வந்தோம். ஆனால் சாமியார் இங்கு இல்லை என்பதால் நாங்கள் அவரை தீவிரமாக தேடி வருகிறோம். இவ்வாறு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் கூறினார்.

இளம்பெண் ராகசுதா, தாராபுரத்தில் உள்ள வக்கீல் மூலம் கொடைக்கானல் வக்கீலிடம் ஒப்படைக்கப்பட்டு, கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுவார் என்று தெரிகிறது.