கணவனைக் கைது செய்யவில்லையே என்று அழுத அபலை

என்னை கொடுமைப் படுத்திய கணவரை போலீசார் விசாரித்துவிட்டு கைது செய்யவில்லை சென்னை மார்வாடி புதுப்பெண் குமுறல்!

சென்னை, ஏப்.11- 2009

என்னை அடித்து உதைத்து கொடுமைப்படுத்திய கணவரை போலீசார் விசாரித்துவிட்டு கைது செய்து சிறையில் அடைக்கவில்லை என்று புதுப்பெண் அழுது குமுறினார்.

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி.நகர் 4-வது குறுக்குதெருவில் வசித்து வருபவர் பிரகாஷ் சந்த் ஜெயின். இவருடைய மகள் ஷர்மிளா(வயது 23). மார்வாடி பெண். பி.காம். தொலைதொடர்பு வழியில் படித்துவருகிறார். இவருக்கும் மேற்கு மாம்பலம் லேக் அவென்னிவில் வசிக்கும் சஜன் ராஜ் கிவேஷ்ரா மகன் பதம் சந்த் கிவேஷ்ராவுக்கும் கடந்த 55 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 50 பவுன் நகைகள் மற்றும் சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டுள்ளன. (இது வக்கீல்கள் எழுதிக் கொடுக்கும் ஸ்டாண்டர்ட் டெம்பிளேட்)

இந்த நிலையில் ஷர்மிளா அவருடைய கணவர் மற்றும் மாமனார் சஜன் ராஜ் கிவேஷ்ரா, மாமியார் புஷ்பா, நாத்தனார் வசந்தா ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். அந்த புகார் மனு எம்.கே.பி.நகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஷர்மிளா கண்ணீர்விட்டு அழுதார்.

அவர் அழுது கொண்டே கூறியதாவது:-

நான் உடல் ஊனமுற்றவள். நான் திருமணம் ஆன 4 நாட்கள் மட்டும் கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்தேன். தனியாக குடித்தனம் வைத்தனர். ஆனால் எந்த பொருளும் சமைக்க இருக்காது. எனவே எனது தந்தை வீட்டில் இருந்து சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்கித்தந்தார்கள். ஆனால் மாமியார் வீட்டிலும் போய் வேலை செய்யச்சொல்வார்கள். ஆனால் டிபன் கூட சில நாட்கள் தரவில்லை. உன் தந்தையிடம் பேசி குளிர்சாதனப்பெட்டி, வாஷிங் மெஷின், மேலும் 2 மோதிரங்கள் வாங்கிதரச்சொல் என என் கணவர் கூறினார்.

அதன்படி அந்த பொருட்களை என்னுடைய அப்பா வாங்கித்தந்தார். பின்னர் எனது கணவர் தினமும் அடித்து உதைப்பார். ஒரு கடையும் பிளாட்டும் வாங்கிவா என்பார். மேலும் வியாபாரத்திற்கு ரூ.5 லட்சம் கேட்டார். எனது மாமியார், மாமனார்தான் இதற்கு முக்கிய காரணம். இன்னும் அங்கு இருந்தால் எப்படியும் கணவர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் என்னை கொலை செய்துவிடுவார்கள். உயிரோடு தந்தைவீட்டிற்கு தப்பி ஓடிவிடுவோம் என்று எண்ணி பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் போன் பெற்று எனது தந்தைக்கு போன் செய்தேன். அவர் வந்து என்னை எனது பிறந்த வீட்டுக்கு அழைத்துசென்றுவிட்டார்.

ஆனால் எனது கணவர் அடித்ததால் உடல் முழுவதும் உள் காயங்கள் இருந்தன. வலி அதிகமாக இருந்தது. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். பணத்திற்கு ஆசைப்பட்ட எனது கணவருடன் இனி நான் வாழ விரும்பவில்லை. எனது கணவர் மற்றும் என்னை இந்த அளவுக்கு சித்திரவதைபடுத்த காரணமாக இருந்த மாமனார் மாமியார் நாத்தனார் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும். திருமண நாளில் இருந்தே எனது கணவரும் அவருடைய குடும்பத்தினரும் கொடுமை படுத்தும்போதும் சரி, வரதட்சணை கேட்கும் போதும் சரி ``எங்களை யாரும் ஒன்றும் செய்யமுடியாது. எங்களுக்கு பெரிய பெரிய இடத்தில் தொடர்பு உள்ளது. எங்கள் மீது எந்த புகார் எங்கு கொடுத்தாலும் எடுபடாது'' என்றே சொன்னார்கள். அவர்கள் சொன்ன படியே நான் வரதட்சணை கொடுமை புகார் கொடுத்தும் போலீஸ் நிலையத்தில் எனது கணவரை ராஜ மரியாதையுடன் விசாரித்துவிட்டு அவரை கைது செய்யாமல் வெளியே விட்டுவிட்டனர். நான் இனி யாரிடம் முறையிடுவேன். இவ்வாறு கூறிய ஷர்மிளா அழுது கண்ணீர்வடித்தார்.