வரதட்சணை புகாரில் புதுமைகள்

குடும்பத்தில் கணவன்-மனைவியிடையே எந்தவித பிரச்னை ஏற்பட்டாலும் உடனே மனைவி “வரதட்சணை” என்ற மந்திரச் சொல்லைச் சேர்த்தால் “498A" சட்டம் பாய்ந்து கணவன், அவனுடைய பெற்றோர், சகோதரி, சகோதரியின் குழந்தைகள், நண்பர்கள், அணடை அயலார்கள் அனைவரையும் கைது செய்யப் படுவார்கள்.

ஆகா, எவ்வளவு சௌகரியம்! பெண்விடுதலை என்பது இப்படியல்லவா நிகழ வேண்டும்!

ஆமாம், கணவனின் பெற்றோரும் சகோதரியும் பெண்கள்தானே என்கிறீர்களா? இந்தச் சட்டத்தின் கண்களில் அப்படி இல்லை! ரேணுகா சவுத்திரியும் அவர் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சியும்தான் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்!

இப்போது செய்தியை படியுங்கள்:-

புத்தகங்களை எரித்து வரதட்சணை கொடுமை செய்தவர் மீது வழக்கு
ஏப்ரல் 12,2009, 2009

மதுரை : திருப்பரங்குன்றம் அருகே மனைவியின் புத்தகங்களை எரித்து வரதட்சணை கொடுமை செய்த கணவர் உட்பட நால்வர் மீது அனைத்து பெண்கள் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருப்பரங்குன்றம் அருகே வேடர்புளியங்குளத்தை சேர்ந்த சரவணசுந்தரம். இவருக்கும் அபிராமிக்கும் 2005ல் திருமணம் நடந்தது. இவர்களது மகள் ஆத்மிரா(3). பெற்றோர் பேச்சை கேட்டு சரவணசுந்தரம் அபிராமியை அடிக்கடி அடித்து பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி விடுவார். அபிராமியின் பெற்றோர் சமாதானம் செய்வர். கடந்த ஏப்., 5ம் தேதி மாமியார் சுமதியிடம் சொல்லி விட்டு பக்கத்துவீட்டிற்கு சென்று திரும்பிய அபிராமியை சரவணசுந்தரம் அடித்துள்ளார். மேலும் அபிராமி கருமாத்தூர் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படிக்கிறார். அவரை படிக்க கூடாது என கணவர் வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் அவரது புத்தகங்களை வாங்கி தீ வைத்து எரிக்க வைத்தனர். இதனை தட்டி கேட்ட அபிராமி, அவரது தந்தையையும், தாயாரையும் சரவணசுந்தரமும், அவரது குடும்பத்தினரும் தாக்கினர். இதுகுறித்து அபிராமி அனைத்து பெண்கள் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து சரவணசுந்தரம், அவரது தந்தை பாலசுப்ரமணியன், தாயார் சுமதி, சகோதரர் பிரகாஷ் மீது வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

3 மறுமொழிகள்:

')) said...

//புத்தகங்களை எரித்து வரதட்சணை கொடுமை செய்தவர் மீது வழக்கு//

இதெல்லாம் ரொம்ப சாதரண விசயம் சென்னையில நான் என்னுடைய கற்புகரசி மனைவியை போனில் திட்டியாதாற்ககா (??) dowry case போட்டக் கூட்டமெல்லாம் இருக்கு.. இன்னும் கொஞ்ச நாள் மனைவிக்கு சாப்பட சாப்பாடு செரிக்கல அப்புறம் காலையில சரியா toilet போகல இதுக்கால்லம் கேசு போடுவாங்க...

')) said...

//புத்தகங்களை எரித்து வரதட்சணை கொடுமை செய்தவர் மீது வழக்கு//

இதெல்லாம் ரொம்ப சாதரண விசயம் சென்னையில நான் என்னுடைய கற்புகரசி மனைவியை போனில் திட்டியாதாற்ககா (??) dowry case போட்டக் கூட்டமெல்லாம் இருக்கு.. இன்னும் கொஞ்ச நாள் மனைவிக்கு சாப்பட சாப்பாடு செரிக்கல அப்புறம் காலையில சரியா toilet போகல இதுக்கால்லம் கேசு போடுவாங்க...

')) said...

//"இன்னும் கொஞ்ச நாள் மனைவிக்கு சாப்பட சாப்பாடு செரிக்கல அப்புறம் காலையில சரியா toilet போகல இதுக்கால்லம் கேசு போடுவாங்க..."//

திருவாளர் சரவணன், ....... டெம்ப்ளேட் வக்கீல்களுக்கு எக்ஸ்ட்ரா இரண்டு பாயிண்ட் எடுத்து உட்டிருக்கிங்க....... இனி வரும் வரதட்சணை புகார்களில் இந்த குற்றச்சாட்டுகளையும் பார்க்கலாம்.
:-)