உங்கள் பெயரும் புகாரில் இருக்கப் போகிறது ஜாக்கிறதை!

வீட்டை விட்டு துரத்தியதாக கணவர் உள்பட 8 பேர் மீது இளம்பெண் போலீசில் புகார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

சாத்தூர் அருகே உள்ள ஊத் துப்பட்டியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரி. இவர் விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்துள்ள ஒரு புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எனக்கும், சோரம்பட்டியைச்சேர்ந்த கார் டிரைவர் துரைப்பாண்டி என்பவருக் கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 30 பவுன் நகை, 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் துரைப்பாண்டிக்கு 11/2 பவுனில் பிரேஸ்லெட், மோதிரம் ஆகியவை கொடுத்தனர். எங்களுக்கு ஒரு மகள் உள்ளார். இதனிடையே எனது கண வர் துரைப்பாண்டிக்கும், சிவகாசியில் உள்ள ஒரு வங்கி மானேஜரின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இதனை நான் தட்டிக்கேட்டேன்.

இதனால் ஆத்திரமடைந்த எனது கணவர் துரைப்பாண்டி, மாமனார் மாரியப்பன், மாமியார் முனியம்மாள் கொழுந்தனார் பூபாண்டி, உறவினர்கள் குணசேகரன், பாண்டிகனி, போலீஸ்காரர் தமிழரசன், வங்கி மானேஜரின் மனைவி ஆகியோர் என்னை சித்ரவதை செய்து வீட்டை விட்டு துரத்தினர். எனவே அவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டு உள்ளது.

மனுவை விசாரித்த போலீஸ் சூப்பிரண்டு, புகார் மீது நடவடிக்கை எடுக்கசாத் தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிட்டார். இதன் பேரில் கணவர் துரைப்பாண்டி உள்பட புகார் கூறப்பட்ட 8 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 மறுமொழிகள்:

')) said...

//புகார் கூறப்பட்ட 8 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.//

அட இது என் கத மாதிரி இருக்க... என்னோட கேசுலயும் கற்புக்கரசி அட்டனெஹ் லிஸ்ட் மாதிரி 8 பேர எழுதிகொடுத்திச்சி பத்தாததுக்கு ஒரு வருசம் கழிச்சி 9தாவதா என் தம்பி பேரயும் சேத்து வுட்டு ஒரு மாசம் புழல் சிறையில உள்ள போட்டாங்க மேடம்...

நம்ம நாட்ல எப்படியெல்லாம் சட்டம் இருக்கு பாருங்க...

அடங்கொய்யால!

')) said...

'புழல் ஜெயிலில் திருமண குற்றவாளி என்ற முறையில் என் அனுபவங்கள் " தலைப்பில் எழுதுங்களேன் !