ஓட்டப் பந்தய வீராங்கனை!

மாப்பிள்ளை பிடிக்காததால் இளம்பெண் ஓட்டம்!

அம்பத்தூர், ஏப்.16- 2009. தினத்தந்தி

சென்னை புறநகர் பகுதியான அம்பத்தூர் கள்ளிக்குப்பம் அபிராமபுரத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் விஜயலட்சுமி (வயது17). இவருக்கும் திருத்தணியை சேர்ந்த கிரி என்பவருக்கும் மே மாதம் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்தநிலையில் விஜய லட்சுமியின் பெற்றோர் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வெளியூர் சென்றிருந்தனர். அப்போது விஜயலட்சுமி வீட்டிலிருந்த தனது தங்கை உமாமகேஸ்வரியிடம் வெளியில் சென்று வருவதாக கூறி சென்றவர் இது வரை வீடு திரும்பவில்லை இதுகுறித்து அம்பத்தூர் போலீசில் அவரது பெற்றோர் புகார் கொடுத்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது `நிச்சயம் செய்த மாப்பிள்ளை பிடிக்காததால் விஜயலட்சுமி வீட்டை விட்டு ஓடியதாக தெரிய வந்தது. விஜயலட்சுமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

------------

இதுபோல் பல ஓட்டங்களை நீங்கள் இனிமேல் எதிர்பார்க்கலாம். திருமணத்திற்குப் பிறகும், காலணாக் காசு பெறாத சில்லறைக் காரணங்களுக்குக்கூட கோபித்துக் கொண்டு ஓடி விடுவார்கள் மனைவிமார்கள். அதைத் தட்டிக் கேட்க கணவனுக்கோ அவனது பெற்றோருக்கோ உரிமையே கிடையாது. அப்படி ஏதேனும் கேள்வி கேட்டால், ஒரு கிழிந்த காகிதத்தை எடுத்து, “என்னை வரதட்சணை கேட்டு துன்புறுத்தினார்கள்” என்று கிறுக்கி காவல் நிலையத்திற்கு அனுப்பினால் உடனே கணவனையும் அவனது பேற்றோரையும், உடன் பிறப்புக்களையும் கைது செய்து விடுவார்கள்.

ரேணுகா சவுத்திரியும் அவர் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சியும் இந்தியாவில் திருமணம் என்பதையே ஆண்களைப் பொருத்தவரை ஒரு பாம்புப் புற்றாக மாற்றிவிட்டனர்.

ஆண் குழந்தைகளைப் பெற்றவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது!

1 மறுமொழி:

')) said...

//மாப்பிள்ளை பிடிக்காததால் இளம்பெண் ஓட்டம்!//

இது மாதிரி முன்னாடியே ஒடி பொறது என்ன மாதிரி பாதிக்கப்பட்ட ஆளுங்களுக்கு ரொம்ப சந்தோஷம்... இல்லாட்டி கைல கால்ல உழுந்து கட்டிக்கொடுத்துட்டு அப்புறம் நாலஞ்சு மாசத்துல பொய்கேசு போடுறதுக்கு இது மாதிரி "கல்யாணந்தான் கட்டிக்கிட்டு அடுத்தவன் கூட ஒடீ போகம" அதுக்கு முன்னாடியே ஒடிப்போறது ரொம்ப நல்லது