பெற்ற குழந்தையின் கழுத்தை நெறித்த தாய்க்குலம்

கணவன் மேல் கொண்ட கோப வெறியில் தான் பெற்ற பச்சிளம் குழந்தைகளை கழுத்தை நெறித்தும், வீசியெறிந்தும் கொலை செய்ய முயற்சித்தாள் தாய்!


சென்னை, ஏப்.25- 2009


சென்னை கோடம்பாக்கம் புலினிர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா(வயது 30). இவர் நேற்று காலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தனது 2 குழந்தைகளுடன் வந்தார். திடீரென்று தனது குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றார். குழந்தை கதறி அழுதது. பின்னர் இன்னொரு குழந்தையை வேகமாக வந்த போலீஸ் வேன் முன்பு தூக்கி வீசினார். வேனை பிரேக் போட்டதால் குழந்தை தப்பியது. இதற்கிடையில் அந்த இளம் பெண்ணும் தீக்குளித்து தற்கொலை செய்யப்போவதாக கூறினார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே அங்கு காவலுக்கு நின்ற பெண் போலீசார் 2 குழந்தைகளையும், இளம்பெண் திவ்யாவிடம் இருந்து மீட்டனர். குழந்தையை மீட்க பெண் போலீசார் பெரும் பாடுபட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் எழும்பூர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் நசிமா விரைந்து சென்று திவ்யாவையும், 2 குழந்தைகளையும் அழைத்து சென்றார். எழும்பூர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடந்தது.

விசாரணையில், தற்கொலைக்கு முயன்றது ஏன்? என்பது குறித்து இளம் பெண் திவ்யா, போலீசாரிடம் கூறியதாவது:-


எனது கணவர் கமிஷனர் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றுகிறார். அவர், என்னையும், எனது குழந்தைகளையும் சரியாக பார்த்துக்கொள்ளவில்லை. இரவு நீண்டநேரம் கழித்து வீட்டுக்கு வருகிறார். இதுதொடர்பாக அயனாவரம் போலீசில் புகார் கொடுத்தேன். நடவடிக்கை எடுக்கவில்லை. ஏற்கனவே எனது கணவர் அவரது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். அதன்பின் என்னை திருமணம் செய்து கொண்டார். அவரிடமிருந்து எனக்கு விவாகரத்து வாங்கித்தர வேண்டும்.
இவ்வாறு திவ்யா கூறினார்.


பெண் போலீசார் திவ்யாவை கவுன்சிலிங் மூலம் சமாதானப்படுத்தினார்கள். உங்கள் கணவரோடு 6 மாதம் சேர்ந்து வாழுங்கள். அதன்பிறகும் உங்களுக்கு திருப்தி ஏற்படாவிட்டால், கோர்ட்டில் சட்டப்பூர்வமாக வழக்குபோட்டு கணவரிடம் விவாகரத்து பெற்றுக்கொள்ளுங்கள் என்று சமாதானம் கூறி அனுப்பி வைத்தனர்.


திவ்யாவின் கணவரிடமும் விசாரணை நடந்தது. அவர் இனிமேல் ஒழுங்காக வாழ்வதாக போலீசாரிடம் எழுதி கொடுத்துவிட்டு சென்றார்.


===========


இந்திய கோர்ட்டுகளில் விவாக ரத்து நிகழும்போது குழந்தைகளை தாயிடம்தான் பெரும்பாலும் ஒப்படைக்கிறார்கள். ஆனால் தாய்க்குலத்தின் லட்சணம் எப்படி இருக்கிறது பாருங்கள்! இத்தகைய கொலைகார, வெறி பிடித்த பெண்பேய்கள் கையில் சிக்கி, தகப்பன் அன்பு தெரியாமல் வளர்வதால்தான் பல சிறார்கள் இள வயதிலேயே குற்றவாளிகளாகவும், சமூக விரோதிகளாகவும் மாறுகிறார்கள்!


பெண்களுக்கு தங்கள் கோபமும் வெறியும்தான் முக்கியம். தான் பெற்ற குழந்தைகளோ, தன்னைப் பெற்ற தாய் தந்தையரோ முக்கியமில்லை!

2 மறுமொழிகள்:

')) said...

//இந்திய கோர்ட்டுகளில் விவாக ரத்து நிகழும்போது குழந்தைகளை தாயிடம்தான் பெரும்பாலும் ஒப்படைக்கிறார்கள். ஆனால் தாய்க்குலத்தின் லட்சணம் எப்படி இருக்கிறது பாருங்கள்! இத்தகைய கொலைகார, வெறி பிடித்த பெண்பேய்கள் கையில் சிக்கி, தகப்பன் அன்பு தெரியாமல் வளர்வதால்தான் பல சிறார்கள் இள வயதிலேயே குற்றவாளிகளாகவும், சமூக விரோதிகளாகவும் மாறுகிறார்கள்!//

அட நீங்க வேற இது மாதிரி சிறார் குற்றவாளிகளை உறுவாக்கத்ததான் நாங்க என்னா பாடு பட வேண்டியாதா இருக்கு... அதுக்குத்தான் இருக்கு 498ஏ அப்புறம் டிவி கேசு (இது மாதிரி இன்னும் எதாவாது உருவாக்கலாமான்னு உட்காந்து யோசிசிக்கிட்டு இருக்கோம்) இன்னும் கொஞ்ச நாள்ள பத்து வயசு பொண்ணு புள்ள பெத்துகிச்சி அப்பனுக்கு வயசு 9ன்னு நீங்க செய்திய இந்தியாவுல படிக்கிற வரைக்கும் நாங்க ஒயமாட்டொம்... அப்புறம் family court அதிகரிக்கின்றமாதிரி சிறுவர் சீர்திருத்த பள்ளியும் increase பண்ணுரதுக்கு பேச்சு வார்த நடந்துகிட்டிருக்கு சாரே....

')) said...

//இந்திய கோர்ட்டுகளில் விவாக ரத்து நிகழும்போது குழந்தைகளை தாயிடம்தான் பெரும்பாலும் ஒப்படைக்கிறார்கள். ஆனால் தாய்க்குலத்தின் லட்சணம் எப்படி இருக்கிறது பாருங்கள்! இத்தகைய கொலைகார, வெறி பிடித்த பெண்பேய்கள் கையில் சிக்கி, தகப்பன் அன்பு தெரியாமல் வளர்வதால்தான் பல சிறார்கள் இள வயதிலேயே குற்றவாளிகளாகவும், சமூக விரோதிகளாகவும் மாறுகிறார்கள்!//

எனக்கு பிறந்த குழந்தை பிறந்தப்போ ஆஸ்பத்தில பயந்துகிட்டெ பொய் பாத்தென் (ஏன்னா அதுக்கு முன்னாடியே dowry case போட்டாச்சி). குழந்தை பிறந்து ஒன்ற வருசம் அகிப்போச்சி இப்போ எப்படி இருக்கோ என்ன பன்னுதொன்னு ஒரு மயிரும் தெரியாது... அதையும் மீறி பாக்க போனா குழந்தைய கொள்ள வந்தான் கடத்த வந்தான்னு கேசு போடலாம்...

அப்புறம் எனக்கொரு டவுட்டு? இது போல கேசுங்க ஊர் மெயிறதுக்கே நேரம் இருக்காது...

இதுபோல பொய்கேசு போடற பார்டி எல்லாம் புள்ளய எப்படி வளக்கும்(கொய்யால தொலைலையதான் வளர்க்கும்)? "கொஞ்சம் யாராவது தெரிஞ்சா சொல்லூங்கப்பா....

இதுல பெரிய காமடி என்னான்னா? நாங்க இப்படிதான் கேசு போடுவோம் அள்வச்சி அடிப்போம் "குழந்தைக்காக எல்லத்தையும் பொறுத்துகிட்டு(??) என் கூட குடும்பம் நடத்தனும்னு(??) ஒப்பாரி வேறு...

இது போல லட்சம் கொடுமைகள் நாட்டில் தினமும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது...