ஆண்களுக்கென்று ஒரு நாள்

நவம்பர் 19-ம் நாளை உலக ஆண்கள் தினமாக அனுசரிக்கிறார்கள். அன்றைய தினம் இந்தியாவில் பல நகர்ங்களில் தர்ணாவும் ஊர்வலமும் நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். முக்கியமாக இன்றைய நிலையில் இந்திய ஆண்கள் எதிர்கொள்ளும் சட்டபூர்வ பயங்கரவாதத்தையும், ஆண்களை பொருளாதார ரிதியிலும் மன ரீதியாகவும் கொடுமைப் படுத்தி அடித்து நொறுக்கி அழியச் செய்யும் நோக்கத்தில், சில பெண்கள் சார்ந்த NGO நிறுவனங்களும் அரசு இயந்திரமும் கைகோர்த்துக் கொண்டு ஆணெதிர் சட்டங்களால் அனைத்து ஆண்களையும் அவர்களைப் பெற்ற பாவத்திற்காக அவர்தம் பெற்றோர்களையும் தாக்கி வரும் இந்த நிலையையும் எதிர்த்துப் போராடும் நாளாக இந்த நாள் அமைகிறது.

சில கோஷங்கள்:

1. We demand a separate ministry for men.

ஆண்கள் நலனுக்கென்று தனி அமைச்சகம் தேவை

2. Fathers are not visitors, they are parents too!

தந்தையரெல்லாம் விருந்தினரல்ல; அவர்களும் பெற்றோரே

3. Husbands are not free ATM machines

கணவன்மாரெல்லாம் இலவச ATM மெஷின்களல்ல

4. Stop men’s suicide

ஆண்களின் தற்கொலைகளை தடுத்திடுக

5. Stop creating a fatherless society

தகப்பனற்ற சமுதாயம் உருவாகும் நிலையை மாற்றுக.

6. Offence is an offence, men or women.

ஆணோ, பெண்ணோ, குற்றம் குற்றமே!

7. Punish women too for domestic violence.

குடும்ப வன்முறைக்கு பெண்களுக்கும் வேண்டும் தண்டனை

8. Banish alimony

ஜீவனாம்சத்தை ஒழித்திடுங்கள்

9. Stop legal terrorism

சட்டரீதியான் பயங்கரவாதத்தை நிறுத்துக

10. Stop elder abuse

வயது முதிர்ந்தோரைத் துன்புறுத்தாதீர்

11. Make laws gender-neutral

சட்டங்களை ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாக அமைத்திடுக.

12. Stop bias against men

ஆண்களுக்கு எதிரான ஒருதலைச்சார்பை நீக்குக

13. All men are not criminals; all women are not angels

அனைத்து ஆண்களும் குற்றவாளிகளல்ல; அனைத்து மகளிரும் புனிதர்களல்ல
-
14. Stop false cases on men

ஆண்கள்மேல் பொய் வழக்கு போடாதீர்

15. Draconian anti-male laws kill the family system

ஆணெதிர் கொடுங்கோன்மைச் சட்டங்களால் குடும்பமுறையே அழிபடும்

16. Men have only obligations and responsibilities, but no rights

ஆண்களுக்கு பொறுப்பும், கடமையும்தான் உள்ளது; உரிமைகள் ஒன்றும் கிடையாது

17. Men are forced to pay for the estranged wife; but what does he get in return?

பிரிந்துபோன மனைவிக்கு கொடுக்க வேண்டுமாம் கப்பம்; ஆனால் கணவன் பதிலுக்குப் பெறுவது என்ன?

1 மறுமொழி:

Anonymous said...

பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் இயக்கம்
பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் இயக்கம்
நவம்பர் 20,2008,00:00 IST
http://www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=6371&cls=row3&ncat=TN

சென்னை:சென்னையில் "இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம்' என்ற இயக்கத்தை, பெண் களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் துவங்கியுள்ளனர். அவ்வியக்கத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், சுரேஷ்ராம் என்பவர் தலைமையில், ஐகோர்ட் தலைமை நீதிபதி கங்குலி, போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

பெண்களுக்கு ஆதரவாக பல சட்டங்கள் உள்ளன. அவற்றால், ஆண்கள் பாதிக்கப்படு கின்றனர். மற்ற விஷயங்களில் ஆண்களுக்கு இணையாக உரிமை கோரும் பெண்கள், சட்ட விதிகளிலும் ஆண்களுக்குச் சமமாக இருக்க வேண்டும் என்பதே எங்களது கோரி க்கை.ஒரு பெண் தவறு செய்தால், போலீசார் இரக்கப்படுகின்றனர். ஆண்கள் தவறு செய்தால் சிறையில் தள்ளிவிடுகின்றனர்.

இந்த வேறுபாடுகளை களைவதற்காகவே, மனைவியால் பாதிக்கப்பட்ட நாங்கள் இந்தச் சங்கத் தைத் துவங்கியுள்ளோம்.இந்திய அளவில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப் பினர்களாக உள்ளனர். தமிழகத்தில் 4,000க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில், முன்னாள் அமைச்சர், நடிகர் உட்பட பல பிரபலங்கள் உள்ளனர். பெண்களின் கொடுமைகளுக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம்.இவ்வாறு மனுவில் கூறி யிருந்தனர்.