மகன் வெட்டிக் கொலை : தாய்க்கு ஆயுள்தண்டனை

தந்தையர் எவ்வளவுதான் தங்கள் குழந்தைகள்மேல் பாசம் வைத்து அரவணைத்து அவர்களை ஆளாக்கப் பாடுபட்டாலும், கோர்ட்டுகள் அவர்களை வில்லன்களாகத்தான் காண்கின்றன. குழந்தை பெற்ற பிறகும்கூட தன் ஈகோ மேலீட்டாலும், சுயநலத்தாலும், அல்லது கள்ளக் காதலனுடன் உள்ள ஈடுபாட்டாலும் கணவனை விட்டுப் பிரிந்து சென்ற மனைவியிடம்தான் கோர்ட்டுகள் குழந்தைகளை ஒப்படைக்கின்றன - தந்தை என்னதான் நல்லவனாக இருந்தாலும் சரி.

ஒரு தீர்ப்பின்போது குழந்தை தன் தகப்பனுடன்தான் வாழ்வேன் என்று கதறியிருக்கிறது. அப்படியும் அந்தக் குழந்தையை தாயிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். ஆனால் அந்தக் குழந்தையின் பெயரைச் சொல்லி தந்தையிடமிருந்து கப்பம் வசூலிக்க மட்டும் தவறுவதில்லை. மாதம் இவ்வளவு ரூபாய் கொடுக்கவேண்டும், அதுவும் அந்த மனைவியின் கையில் - என்று தீர்ப்பளிக்கிறார்கள். குழந்தையின் நலத்திற்கு நேரடியாகப் பயன்படும் வழியில் செய்தாலும் பரவாயில்லை. அந்தப் பணத்தை அந்தப் பெண்மணி எதற்குப் பயன்படுத்துவாளோ!

இதுதான் இன்றைய இந்தியாவில் தந்தையர்களின் நிலை.

சரி, தாய்மையின் பெருமையை சற்று நோக்குவோமா?


நவம்பர் 18,2008,00:00 IST: செய்தி - தினமலர்

திருநெல்வேலி : மகனை வெட்டிக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. நெல்லையை அடுத்துள்ள தாழையூத்தில் சலூன் கடை நடத்திவந்தவர் தெய்வேந்திரன்(30). இவரது தந்தை மாணிக்கம் விக்கிரமசிங்கபுரம், அகஸ்தியர்பட்டியில் 2007 அக்டோபரில் இறந்தார். அவரது இறுதி நிகழ்ச்சிக்கு மனைவி விஜயலட்சுமியுடன் தெய்வேந்திரன் சென்றிருந்தார். தெய்வேந்திரனின் தாயார் பூவம்மாள்(50), தந்தை இறந்துவிட்டதால், தாம் தனியாக இருப்பதாகவும் தம்முடன் அகஸ்தியர்பட்டியில் இருக்கும்படி கேட்டுக்கொண்டார். தெய்வேந்திரன் மறுத்தார். மனமுடைந்த பூவம்மாள் 2007 அக்டோபர் 23 காலையில், வீட்டில் படுத்திருந்த மகன் தெய்வேந்திரனை கோடாரியால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தன்னையும் அரிவாளால் வெட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் கைதானார். வழக்கை விசாரித்த நெல்லை முதன்மை அமர்வு நீதிபதி விஜயராகவன், தாய்க்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.