கள்ளத் தொடர்பினால் பிறந்த குழந்தையைக் கொலை செய்த தாய்

ஏழு நாள் குழந்தையை கொலை செய்த இருவருக்கு ஐகோர்ட் ஜாமீன் மறுப்பு

நவம்பர் 25,2008. செய்தி: தினமலர்

மதுரை : தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே கள்ளத் தொடர்பினால் பிறந்த ஏழு நாளான பெண் குழந்தையை கொலை செய்த தாய்க்கும், கள்ளக்காதலருக்கும் ஜாமீன் வழங்க, மதுரை ஐகோர்ட் கிளை மறுத்து விட்டது.

வீரபாண்டி அருகே பாலார்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராஜ்(46). இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்த சின்னன் மகள் ஒச்சம்மாள்(37). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் உள்ளார். கணவரை பிரிந்த ஒச்சம்மாள், ஜெயராஜின் தோட்டத்தில் வேலை செய்து வந்தார்.

அப்போது, இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதில் கர்ப்பமுற்ற ஒச்சம்மாளுக்கு, டொம்புசேரி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் செப்., 20-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.இது ஊருக்கு தெரிந்தால் அசிங்கம் எனக் கருதிய ஜெயராஜ், செப்., 26ம் தேதி பெண் குழந்தையை கொலை செய்தார். பிறகு, மஞ்சள் பையில் வைத்து பைக்கில் எடுத்துச் சென்று முல்லையாற்றில் வீசினார். வீரபாண்டி போலீசார் விசாரித்து ஜெயராஜையும், ஒச்சம்மாளையும் கைது செய்தனர்.இருவரும் ஜாமீன் கோரி ஐகோர்ட் கிளையில் மனு செய்தனர். அவர்களை ஜாமீனில் விட அரசு கூடுதல் வக்கீல் சிவ.அய்யப்பன் ஆட்சேபம் தெரிவித்தார். அதை ஏற்று ஜாமீன் மனுவை நீதிபதி கே.என்.பாஷா தள்ளுபடி செய்தார்.

1 மறுமொழி:

Murugesan said...

வாழ்க ஜனநாயகம்!!!

வாழ்க (கள்ள) காதல்!!!

குறுக்கே கணவனாலும்,
குழ்ந்தையானாலும் போட்டு தள்ளு!!!


ஆதலினால் (கள்ள) காதல் செய்வீர்!!!