பெற்றோரைப் படுகொலை செய்த பேதைப்பெண்


”நான் உங்கள் முன் “மிஸ் மீரட்” என்ற பட்டத்துடன் நிற்பதற்குக் காரணம் என் தாய்தான்” என்று குதூகலத்துடன் ஆர்ப்பரித்தாள் பிரியங்கா 2005-ல், உ.பியிலுள்ள மீரட் நகரத்தில்.


அதே பிரியங்கா நவம்பர் 11 அன்று தன் தந்தையையும் தாயையும் தன் பிரியமான தோழி(!)யுடன் சேர்ந்து கொடூரமான முறையில் படுகொலை செய்துவிட்டு அதைப்பற்றி சிறிதும் விசனமில்லாமல் டிவி கேமரா முன் “ஆம், என் பெற்றோர்களை நான்தான் கொன்னேன்” என்று ஆரவாரமாக பேட்டியளிக்கிறாள்.

போலிசார் அவர்கள் இருவரையும் கைது செய்தபோது அவர்களிடமிருந்து பிரியங்காவின் சகோதரர் கௌரவின் பெயரில் அவருடைய தந்தை சேமித்திருந்த ரூ.6 லட்சத்திற்கான வைப்புநிதி பத்திரம், ரூ. 50 ஆயிரம் ரொக்கம், அந்த சகோதரன் கௌரவ் பெயரில் அவள் தந்தை எழுதி வைத்திருந்த உயில், தாயினுடைய நகைகள், மேலும் தந்தையினுடைய சேவிங்க்ஸ் கணக்கு மற்றும் செக் புத்தகங்கள், 7 லட்சத்திற்கான நிரந்தர வைப்புப் பத்திரங்கள், அவருடைய செல்ஃபோன், அந்த வயதான பெற்றோரின் வீட்டுப் பத்திரங்கள் போன்றவற்றையும் கைப்பற்றினர்.

மீரட்டின் போலீஸ் கண்காளிப்பாளர் தன் பேட்டியில் கூறியது:

பிரியங்கா அவளுடைய தோழி அஞ்சுவுடன் தன் தாயாரிடம் சென்று பணம் கேட்டு தகராறு செய்திருக்கிறாள். அவர் கொடுக்க மறுத்ததால் வெறி கொண்டு அவரை நெஞ்சை நெறித்துக் கொன்றாள்.
அந்த தாயாரின் ஓலத்தைக் கேட்டு அந்த நேரத்தில் அங்கு வந்த தன் தந்தையின் கழுத்தை ஒரு கத்தியால் அறுத்துக் கொன்றுவிட்டு தன் தோழியுடன் பணம், பத்திரங்கள், நகைகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டாள் அந்த பிரியங்கா.

போலீசார் அவளைப் பிடித்து கைது செய்தபின் பல டிவி சேனல்களில் அவளைப் பேட்டி கண்டார்கள். அப்போது அவள் தன் பெற்றோர் இருவரையும் கொன்றதற்கான சிறிதளவு வருத்தமோ குற்ற உணர்வோ இல்லாமல் புதிதாக பல கற்பனைக் கதைகளைக் கூறத் தொடங்கிவிட்டாள். அதாவது தான் பெண் என்பதால் சிறுவயதில் கொடுமைப் படுத்தப்பட்டதாகவும் ஆதலால் தன் பெற்றோரைக் கொன்றது சரியே என்று வாதாடினாள்.

அவளுடைய கூற்றுக்கள்:

1. அவளுடைய தந்தை அவளை மிகவும் கொடுமைப் படுத்தினார். அவளை ஒரு தவறான முறையில் பிறந்தவளாகக் குறிப்பிட்டு (illegitimate child) சிறுமைப் படுத்துவார்.
2. அவளுடைய சகோதரன் கௌரவ் அவளை அடித்துத் துன்புறுத்துவான்
3. பெற்றோர் அவளை ஃபேஷன் டிசைன் துறையில் தொடர்ந்து ஈடுபட அனுமதிக்கவிலை. அதனால் அவள் தன் தோழியுடன் சேர்ந்து வாழ முடிவு செய்து வீட்டை விட்டு ஓடிவிட்டாள்.
4. அப்போது அந்த தோழி அஞ்சுவின் உறவினன் அஜேந்திரா என்பவனுடன் பழக்கம் ஏற்பட்டது. அபவளுடைய தந்தை அந்த அஜேந்திராதான் தன் மகளைக் கடத்தியிருப்பதாக போலிஸில் புகார் கொடுத்தார்
5. அந்த அஜேந்திராவும் அவனுடைய மாமாவும் பிரியங்காவை மானபங்கப் படுத்தியதாக அவள் தேசிய மகளிர் வாரியத்தில் புகார் கொடுத்தாள்
6. பிறகு அவள் நோய்டா, சஹாரன்பூர் போன்ற இடங்களில் ஃபேஷன் டிசைன் வேலைக்காக அலைந்திருக்கிறாள். அங்கும் தருண் என்பவனுடன் பழக்கம் ஏற்பட்டு அவனும் இவளை ஏமாற்றினான்.

இப்படி பலவாரியாக பேட்டி கொடுத்த வண்னம் இருந்தாள். CNN-IBN, NDTV போன்ற சேனல்களில் தேடினீர்களானால் அவளுடைய கம்பீரமான (!) பேட்டிகள் கிடைக்கும்.

அதுசரி, தந்தை கொடுமைப் படுத்தியதாக இப்போது கண்ணீர் விடும் பெண் ஏன் தாயைக் கொல்லவேண்டும்? அதுவும் தன்னை மிஸ்.மீரட்டாகப் பெருமை பெறவைத்த தாயை?

பெற்றோர் சொல்லைக் கேட்காமல் தன் தோழியுடன் (அது என்ன தோழியோ) சுற்றி சீரழிந்துவிட்டு, தன் சகோதரனுக்கு பணம் கொடுத்துவிட்டார்கள் என்பதற்காகவே தன் பெற்றோரைப் படுகொலை செய்திருக்கிறாள் இந்த 26 வயது பேய்ப்பெண்!

ஆனால் நம் நாட்டில் ஆண்கள் மட்டுமே குற்றம் இழைப்பவர்கள் எனவும், பெண்கள் என்ன குற்றம் செய்தாலும் தண்டனையே கிடையாது எனவும் பெண்கள் அனைவரும் அன்பும், பண்பும், இரக்கமும் பொங்கி வழியும் குணம் உள்ளவர்களாகவும், சட்டங்களும், அமைச்சுகளும், கோர்ட்டுகளும் அறுதியிட்டுக் கூறுகின்றன. பெற்றோர்கள் பிரியும்போது குழந்தைகள் தாயிடம்தான் ஒப்படைக்கப்படுகின்றன.

என்ன உலகமடா இது!
இந்திய ஆண்களே, திருமணம் என்னும் படுகுழியில் விழுந்து உங்கள் வாழ்வையும் உங்கள் பெற்றோர் வாழ்வையும் சீரழித்துக்கொள்ளாதீர்கள்