மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம் போர்க்கொடி


"வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது"

மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம் போர்க்கொடி. போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு மனு

சென்னை, நவ.20 - தினத்தந்தி

சர்வதேச ஆண்கள் தினத்தையொட்டி நேற்று மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கத்தினர் உரிய சட்ட பாதுகாப்பு கேட்டு போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பான மனு ஒன்றை கொடுத்தனர்.

ஆண்கள் தினம்

ஆண்டுதோறும் நவம்பர் 19-ந் தேதி சர்வதேச ஆண்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்கள் தினம், குழந்தைகள் தினத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுபோல, ஆண்கள் தினத்தை ஆண்கள் நலனை காக்கும் வகையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேச ஆண்கள் தினத்தையொட்டி நேற்று சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


"இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம்'' என்ற அமைப்பு சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு முழுக்க, முழுக்க ஆண்களின் நலனுக்காக செயல்படுகிறது. இந்த அமைப்பில் இந்தியா முழுவதும் 50 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.


பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் குறிப்பாக, மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பு சார்பில் சென்னையில் நேற்று மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. போலீசார் அனுமதி வழங்காததால், இந்த பேரணி ரத்து செய்யப்பட்டது.

போலீஸ் கமிஷனரிடம் மனு

ஆனால், இந்த பேரணியில் கலந்துகொள்ள வந்த ஏராளமான ஆண்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். கமிஷனர் ராதாகிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். மனு கொடுத்துவிட்டு வெளியே வந்ததும் இந்த அமைப்பை சேர்ந்த சுரேஷ்ராம் என்பவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


இந்த சமுதாயமும், அரசியல் சட்டமும் பெண்களுக்கு சாதகமாக உள்ளது. ஆண்கள் தவறு செய்தால் சட்டம் தண்டிக்கிறது. ஆனால் தவறு செய்யும் பெண்களை சட்டம் தண்டிப்பதில்லை.

ஆண்கள் கள்ளக்காதலில் ஈடுபட்டால் போலீசில் பிடித்து கொடுக்கிறார்கள். பெண்கள் கள்ளக்காதலில் ஈடுபட்டால் இரக்கப்படுகிறார்கள். மணமேடையில் ஆண் தாலி கட்ட மறுத்தால் வரதட்சணை கொடுமை சட்டத்தில் கைது செய்கிறார்கள். மணமேடையில் பெண் வேறு ஒருவனோடு ஓடி போனால் விருப்பப்படி அவள் வாழலாம் என்று சொல்கிறார்கள்.

திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் மனைவி இறந்தால், மனைவியின் சாவுக்கு கணவன் காரணம் இல்லை என்பதை ஆர்.டி.ஓ. விசாரணையில் நிரூபிக்க வேண்டியதுள்ளது. அதே நேரத்தில் ஆண் இறந்தாலோ, பெண்களுக்கு எந்த பாதிப்பும் இருப்பதில்லை.

ஆண் தற்கொலை அதிகம்

இந்தியாவில் தற்போதைய கணக்குப்படி ஆண்டுக்கு 55 ஆயிரம் ஆண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இவர்களில் 40 சதவீதம் பேர் பெண்களால் பாதிக்கப்பட்டுதான் உயிரை இழக்கிறார்கள். பெண்கள் ஆண்டுக்கு 28 ஆயிரம் பேர் தான் தற்கொலை செய்கிறார்கள்.

எனவே, புள்ளி விவர கணக்கை பார்த்தால், தற்போது பெண் ஆதிக்கம் தான் அதிகமாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் பெண்களுக்கு சாதகமாக உள்ளது. அதை தவறாக பயன்படுத்தி கணவன்மார்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

கணவர்கள் மட்டுமல்ல, அவர்களின் தாய், தந்தையும், சகோதரிகளும் கூட கைதாகிறார்கள். வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தில் தவறு செய்யும் பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டமும் ஆண்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படுகிறது. கணவர்கள் முறைத்து பார்த்தால்கூட உடனே புகார் கொடுத்துவிடுகிறார்கள். இந்த சட்டங்களால் அமைச்சராக இருந்த ஒருவரும் பாதிக்கப்பட்டார். எம்.பி. ஒருவரும், நீதிபதி ஒருவரும்கூட பாதிக்கப்பட்டதை செய்திகளாக பார்த்துள்ளோம்.

எனவே வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தையும், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தையும் தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தோம்.

மதிக்கிறோம்

நாங்கள் பெண்களை மதிக்கிறோம். ஆனால், அதே நேரத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமை, ஆண்களுக்கும் சமமாக வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. பெண்களை காப்பாற்றும் சட்டம், ஆண்களையும் காப்பாற்ற வேண்டும் என்று தான் எங்கள் சங்கம் கேட்கிறது.
சர்வதேச ஆண்கள் தினத்தில் கணவர்களின் உரிமையை காப்பாற்ற இந்த போராட்டத்தை நடத்தினோம்.


இவ்வாறு அவர் கூறினார்.

மனைவிகளின் கொடுமை

கமிஷனரிடம் மனு கொடுக்க வந்தவர்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளையும் கையில் பிடித்தபடி வந்தனர். மனு கொடுக்க வந்தவர்கள் அனைவருமே மனைவிகளால் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் என்று கூறினார்கள். ஒருவர் மனைவியின் கொடுமையால், தனது தாயார் இறந்துபோனதாக தெரிவித்தார்.


இன்னொருவர் கூலிப்படையை அனுப்பி தன்னுடைய மனைவியே தன்னை அடித்து உதைத்தாள் என்று வேதனையோடு கூறினார். வந்தவர்கள் அனைவருமே மனைவிகளின் கொடுமைகளை நெஞ்சில் சுமந்தவர்களாக வந்திருந்தனர்.

10 மறுமொழிகள்:

')) said...

நம்மவர்களும் கொடி தூக்க ஆரம்பிச்சாட்டாங்களா...ஆனால் அல்லாமே மெய்யுங்கோ!பெண்கள் எச்சரிக்கையாக இருப்பார்களா இனிமேலாவது

')) said...

அந்த சங்கத்தில் சேர அப்ளிகேஷன் எங்கு கிடைக்கும்?

ப்ளாக் மார்க்கெட்டில் கிடைத்தால் கூட பரவாயில்லை.

')) said...

அழகு நிலாவின் தந்தை நந்து அவர்களே,

சென்னையிலுள்ள இந்த நண்பர்களைத் தொடர்பு கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு உதவ ஆவலுடன் இருக்கிறார்கள்.

1. சுரேஷ் - 9941012958
2. கிரீஷ் - 9381026333
3. ராம்குமார் - 9941315784
4. அமர்நாத் - 9840587653
5. அரவிந்த் - 9941162085
6. தீபக் - 9965108787
7. பிரான்சிஸ் - 9962004649
8. கலைச்செல்வன் - 9445119559
9. ரஞ்சன் - 9840443555

நன்றி

')) said...

//அந்த சங்கத்தில் சேர அப்ளிகேஷன் எங்கு கிடைக்கும்?

ப்ளாக் மார்க்கெட்டில் கிடைத்தால் கூட பரவாயில்லை.//

இந்த வேண்டுகோள் நந்துவின் தங்கமணிக்கு ஃபார்வார்ட் செய்யப் படுகிறது!

')) said...

என்ன கொடும சார் இது?

')) said...

//இந்த வேண்டுகோள் நந்துவின் தங்கமணிக்கு ஃபார்வார்ட் செய்யப் படுகிறது//

இதுக்கெல்லாம் பயப்படும் பழைய நந்து நான் இல்லை.

பாத்தீங்கள்ள எனக்கு உதவ எத்தனை பேர் இருக்காங்கன்னு?

நான் இப்ப தனீ ஆள் இல்லை தெரிஞ்சுகோங்க

')) said...

நல்ல பதிவு, தேவையானதும் கூட. ITல இருக்கிறவங்களுக்கு உபயோகமானதும் கூட

')) said...

எனக்கு இந்த சங்கம் வேண்டாம்.

நா எங்க வர மட்டையர் சங்கத்துலயே இருந்துக்குறேன்.

ஆண்கள் ஒற்றுமை ஓங்குக !

')) said...

//ITல இருக்கிறவங்களுக்கு உபயோகமானதும் கூட//

சரியாகச் சொன்னீர்கள் இலா.

இதுபோன்ற சட்ட துன்புறுத்தலுக்கு உட்படுபவர்களில் பெரும்பாலோர் ஐ.டி துறையில் இருப்பவர்கள் மற்றும் என்.ஆர்.ஐ கள்தான்.

அவர்கள் இந்தியா வந்து இறங்கும் போது ஏர்போர்ட்டிலேயே கைது செய்யப்படுகிறார்கள். வராமல் அங்கேயே இருந்தால் அவர்களது வயதான பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப் படுகிறார்கள்.

நேற்றைய தினம் சென்னை போலீஸ் கமிஷணரிடம் காவல் துறையினரின் தவறான நடவடிக்கைகளைப் பற்றி முறையிடப்பட்டிருக்கிறது - அதாவது இரவு 8 மணிக்கு மேல் பெண்களைக் கைது செய்வது, வெள்ளிக் கிழமை மாலை கைது செய்வது (ஜாமீன் எடுக்க முடியாமல் போவதற்காக) இதுபோல்.

இந்த சமூகத்தில் பலர் இன்னும் பழைய நினைவிலேயே இருக்கிறார்கள். பெண்களின் மனப்போக்கிலும் செயல்பாட்டிலும் நிகழ்ந்துவரும் மாறுதல்களை கவனத்தில் ஏற்க மறுக்கிறார்கள்.

உங்களுக்கும் மறுமொழி இட்டுள்ள அனைவருக்கும் நன்றிகள்.

Anonymous said...

How to Join as member?
Thanks & Regards,

ven1959@consultant.com