கணவனாவது குழந்தையாவது!

புதுடில்லி :"எனக்கு வேலை தான் முக்கியம்; பதவி உயர்வை விட முடியாது; கணவன் முக்கியமல்ல' என்று கூறிய பெண், சுப்ரீம் கோர்ட்டில் விவாகரத்து பெற்றாள்.

நவம்பர் 19,2008,00:00 IST - செய்தி - தினமலர்

டில்லியைச் சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும், குழந்தைப் பருவம் முதல் ஒருவரை ஒருவர் அறிவர். பருவம் வந்ததும் காதலிக்கத் துவங்கிய அவர்கள், பின் திருமணமும் செய்து கொண்டனர்.

திருமணம் நடக்கும் போது, மனைவி, டில்லியில் உள்ள மத்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் (எய்ம்ஸ்) பயோ கெமிஸ்ட்ரி துறையில் பணியாற் றிக் கொண்டிருந்தார்.அதன்பின் பிஎச்.டி., படிப்பை தொடர்ந்தார். தன் படிப்பிலும், பதவி உயர்விலும் நாட்டம் கொண்ட அந்தப் பெண், குழந்தை பிறந்தால், தன் எதிர் காலம் பாழ்பட்டு விடும் என நினைத்து, இரண்டு முறை தன் கருவைக் கலைத்தார்.பின்னர் அமெரிக்க அரசின் உதவித் தொகை கிடைத்ததால், அங்கு படிக்கச் சென்றார். அத்துடன் தனியாகவும் வாழத் துவங்கினார்.

"நமக்கு குடும்பம் தான் முக்கியம்; கருவை கலைக்காதே' என்று சொன்ன கணவரை புறக்கணித்தாள் மனைவி. இதனால், மனைவியிடமிருந்து தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனக் கோரி, 1996ம் ஆண்டில் டில்லி கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். விவாகரத்து கோரும் மனுவுடன், ஆதாரமாக தன் மனைவி தனக்கு எழுதிய கடிதங்களின் நகல்களை சமர்ப்பித்தார்.அதில், "நான் என் ஆராய்ச்சி படிப்பு விஷயத்தில் அதிக ஆர்வமாக உள்ளேன். அதனால், தனியாகவே வாழ விரும்புகிறேன்' என, அந்தப் பெண் குறிப்பிட்டிருந்தார்.அந்த கடிதங்களின் அடிப்படையில், கீழ்கோர்ட் அவருக்கு விவாகரத்து வழங்கியது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில், அவரின் மனைவி வழக்குத் தொடர்ந்தார். ஆனால், அவரின் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. விவாகரத்து வழங்கி கீழ்கோர்ட் பிறப்பித்த உத்தரவு சரியே என, தீர்ப்பளித்தது.இதையடுத்து, அந்தப் பெண் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் தாக்கர், ஜெயின் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறியதாவது: இந்த வழக்கில் விவாகரத்து வழங்கி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு சரியே. வேலை மற்றும் பதவி உயர்வு மீது கொண்ட ஆவல் காரணமாக, மனுதாக்கல் செய்த பெண், தன் கணவரை தவிக்க விட்டுள்ளார். சந்தோஷமான திருமண வாழ்வை அவருக்கு கொடுக்கத் தவறி விட்டார்.திருமண வாழ்க்கையை புறக்கணித்து விட்டு, வேலையிலேயே கவனம் செலுத்தியதன் காரணமாக, அவரின் கணவரை உளரீதியாக கொடுமைப்படுத்தியுள்ளார்.

அதனால், இந்து திருமண சட்டம் 1985ன்படி, விவாகரத்து வழங்கப்பட்டது சரியானதே.இந்த வழக்கில் தொடர்புடைய பெண், தன் கணவரின் ஒப்புதல் இல்லாமல், இரண்டு முறை கருவைக் கலைத்து, பெண்களுக்கே உரிய குணாதிசயங்களை மீறி செயல்பட்டுள்ளார். இந்திய சமூக அமைப்பு மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், வெளிநாட்டுக் கலாசாரமே தனக்கு பிடித்திருப்பதாகவும், கணவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுவே விவாகரத்து வழங்க போதுமானது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

----------------

இன்னும் எவ்வளவு காலமய்யா பெண்பாவம் என்னும் கதையை விரட்டுக் கொண்டிருப்பீர்கள்!

ஆண்களே, திருமணம் என்பது ஒரு புதைமணல் (Quicksand). அதில் சிக்கிக் கொண்டு சீரழியாதீர்கள்.

5 மறுமொழிகள்:

')) said...

என்னத்த சொல்ல இந்த கலி கால பொண்ணுங்களயும் பொம்பளங்களயும்...மேற்கத்திய கலாச்சாரம் இந்தியர்களை ரொம்பவே கவுத்துடிச்சி.

AZHAGAN said...

this kind of attitude never bring social prosperity,it will oblitreate family value and our future.This is a warning alarm to awake otherwise we will face same as USA.

Anonymous said...

"1996ம் ஆண்டில் டில்லி கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்."
Now it is 2009. What sort of justice the Husband has Got?
Is there any meaning?
Who will recoup his Youth and Vigor?
Shame on Judiciary. The Judges are Guilty on record.
They think Virginity is property of women.
For this simple decision they have taken shamelessly 12 years!!!

')) said...

வாழ்க வளமுடன்.

')) said...

இதுகல் எல்லாம் ஏன் கல்யாணத்த கட்டி நம்மல சீரழிக்குதுகள்.