தாய்மையின் மேன்மை

கண்ணில் படுபவரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு 'எஸ்கேப்' ஆகும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு


சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில், பெற்ற குழந்தையை, கண்ணில்படுபவர்களிடம் கொடுத்து விட்டு, தாய்மார்கள் தப்பிச் செல்லும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு, சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் சிகிச்சைக்காக நாள்தோறும் வருகின்றனர். இலவச சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை நாடி வரும் மக்கள், தற்போது, பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர்.
கடந்த சில மாதங்களாக, இங்கு பிரசவத்திற்காக வரும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு நாளில், 30 முதல் 40 பேருக்கு இங்கு பிரசவம் நடக்கிறது. தவறான உறவால் கர்ப்பம் தரிக்கும் பெண்கள் சிலர், போலி முகவரி கொடுத்து, பிரசவத்திற்கு, "அட்மிட்' ஆகின்றனர். குழந்தை பிறந்த மூன்று, நான்கு நாட்களில், யாரிடமாவது குழந்தையை கொடுத்து, சற்று நேரம் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, "எஸ்கேப்' ஆகி விடுகின்றனர். மீண்டும் அந்த பெண்கள் திரும்பி வராததால், குழந்தையை வைத்துக் கொண்டு தவிப்பவர்கள், போலீசார் உதவியுடன் மருத்துவமனை டாக்டர்களிடம் ஒப்படைக்கின்றனர்.

சில நாட்களுக்கு முன், பள்ளிப்பாளையத்தை சேர்ந்த ரேணுகா என்பவர், தனக்கு குறைபிரசவத்தில் பிறந்த பெண் குழந்தையை, அதே வார்டில் இருந்த மற்றொரு பெண்ணிடம் கொடுத்துவிட்டு தலைமறைவானார். மற்றொரு பெண், மருத்துவமனை வளாகத்திற்குள் நின்று கொண்டிருந்த பார்வதி என்பவரிடம், "குழந்தையை வைத்திருங்கள் பாத்ரூம் சென்று வருகிறேன்' என கூறி சென்றார். நீண்ட நேரமாகியும் வராததால், பார்வதி, மருத்துவமனை போலீஸ் எஸ்.ஐ., அம்பிகாவிடம் நடந்த சம்பவத்தை கூறினார். அந்த குழந்தையை மருத்துவமனையில் வைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குழந்தையை தவிக்க விட்டு செல்லும் தாய்மார்களின் எண்ணிக்கை சேலம் அரசு மருத்துவமனையில் அதிகரித்த வண்ணம் உள்ளது. தவறான உறவுகளால் கர்ப்பம் தரிக்கும் பெண்கள், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். சேலம் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் சண்முகம் கூறுகையில், "நாள்தோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் பிரசவத்துக்கு வந்து செல்கின்றனர். டோக்கன் முறையை மருத்துவமனையில் அமல்படுத்தி வருகிறோம். குழந்தைகளை தவிக்க விட்டு செல்லும் பெண்களை, போலீஸ் உதவியுடன் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆதரவற்ற குழந்தைகளை சமூக நலத்துறை மூலம், தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைப்போம்' என்றார்.

5 மறுமொழிகள்:

')) said...

இப்படி செய்ய இவர்களுக்கு எப்படி மனது வருகிறதோ தெரியவில்லை.இது காலங்காலமாக சேலத்திலும் அண்டை மாவட்டமான தர்மபுரியிலும் நடைபெற்று வருகிறது.நான் எனது செவிலியப் பட்டப் படிப்பிலே இதைத்தான் ஆராய்ச்சி செய்தேன்.அவர்கள் கூறும் விளக்கங்கள் 1.வறுமை 2.பெண்குழந்தை என்றால்-வரதட்சணை பயம்...இன்னும் பல காரணங்கள்.இவைகள் ஒழிக்கப்படும் வரை இது தொடரத் தான் செய்யும்

')) said...

எட்வின் அவர்களே,

நீங்கள் சொல்லியிருக்கும் காரணிகள் ஒரு steriotyped cliche` வகையைச் சார்ந்தவை. ஆனால் உண்மை நிலை அதுவல்ல.

1. ஒரு ஆணுடன் ஒழுங்காக குடும்பம் நடத்தும் பல ஏழைப் பெண்மணிகள் வறுமையிற் செம்மையுடன் குழந்தைகளை அன்புடன் பேணி வளர்க்கிறார்கள்

ஆனால் கெட்டு அலைந்து போகிற பெண்கள்தான் இப்படி பெற்றுப் போட்டுவிட்டு காணாமல் போகிறார்கள்.

2. வரதட்சணையா? தற்காலத்தில் யார் கேட்கிறார்கள்? யார் கொடுக்கிறார்கள்? உங்களுக்கு யாரேனும் கொடுத்தார்களா? எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்!

இதுபோல் பெற்ற குழந்தைகளை கைகழுவிவிடும் தாய்கள் சுயநலவாதிகள், பொறுப்பேற்கும் திறனில்லாதவர்கள். இவர்கள் நம் சமூகத்தின் சாபக்கேடுகள்!

நன்றி.

Anonymous said...

உண்மையில் எந்த தாயும் தனது குழந்தையை இப்படி அநாதையாக்க விரும்பமாட்டார். ஆனால், இந்த பாழாய்ப்போன சமுதாயத்தில் கற்பு, கன்றாவி, கௌரவம் என்கிற போலி வேடங்களுக்கு பயந்துதான் பெண்கள் இப்படி செய்ய தள்ளப்படுகிறார்கள். கல்யாணத்திற்கு முன் ஒரு ஆணிடம் ஒரு பெண் உறவு வைத்து குழந்தை பெற்றுக்கொண்டால் உடனே அவளை தவறான வழியில் சென்றவர் என கூறுவது சுத்த மடத்தனம். சில ஆண் மடையர்கள் இநத மாதிரி வேலைகளை செய்வதால்தான் இது போன்ற ஏமாந்த பெண்கள் பாவங்களை சுமக்க வேண்டி கிடக்கிறது. திமிர் பிடித்த கோழை ஆண்கள் தங்கள் குறிகளை சுறுக்கிக் கொண்டு சில தப்பான காரியங்களை தவிர்த்தால் இதுபோன்ற பாவங்களையும் குறைகலாம். மாறிப்போன இக்காலங்களில், தகபபன் இல்லாமல் குழந்தையை பெற்றும் வளர்ப்பதும் தவறே கிடையாது. இதில் உறுதியான தக்க முடிவெடுக்க முழு உரிமைக்கும் தகுதியானவர் பெண் தாய் ஒருவரே. ஆண்கள் இதில் கூறுவதற்கு எதுவும் இல்லை.

')) said...

மாசிலா,

அருமையான கருத்துக்களை முன்வைத்திருக்கிறீர்கள்!

"கற்பு", "கௌரவம்" போன்றவை போலியென்கிறீர்கள். ஒரு பெண் திருமணத்திற்குமுன் வேறொரு ஆணிடம் உறவு வைத்துக்கொண்டு குழந்தை பெற்றுக்கொண்டால் தவறில்லை என்கிறீர்கள். நான் கேட்கிறேன், அப்படிப்பட்டவளுக்கு திருமணம் என்ன கேடு? கண்டவனோடு சுதந்திரமாக சுற்ற வேண்டியதுதானே!

கணவன் என்ற பெயரில் ஒரு சோப்ளாங்கியை கட்டிக் கொண்டு, அவனை பணம் காய்ச்சி மரமாக ஆக்கி, அவனை ஒரு இலவச ஏ.டி.எம் மெஷினாக பயன்படுத்தி, சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டு கண்டவனிடம் தொடர்ந்து சோரம் போவதுதான் உங்கள் கணிப்பில் சரியான வழியா!

உங்கள் மேலான கலாசார நோக்குப்படி எந்தக் குழந்தைக்கும் தகப்பன் பெயர் தெரியக்கூடாது! ஆகா என்ன உன்னதமான சமுதாய சீர்திருத்தவாதி நீங்கள்!

உங்கள் தாயாரிடம் இந்தக் கருத்தை சொல்லிப் பாருங்கள், அவர்கள் ஒப்புக்கொள்கிறார்களா பாருங்கள்!

ஆண்கள் தங்களை அடக்கிக்கொள்ள எங்கே விடுகிறார்கள்? எங்கு பார்த்தாலும் உணர்ச்சிகளை உந்தும்படியான காட்சிகள். உளரீதியாக ஒரு ஆணை எதுவெல்லாம் சுண்டி இழுக்குமோ அவற்றையெல்லாம் வெளிப்படையாக் காட்சிப் பொருளாக்கி அவனுக்கு கிரக்கத்தை உண்டுபண்ணும் விதமாக திட்டமிட்டு செய்கிறார்கள். அடக்கம், பண்பாடு போன்றவைதான் தவறு என்கிறீர்களே!

உங்களைப் போன்ற ஆட்களால்தான் இன்றைய சமுதாயம் சீர்கெட்டிருக்கிறது. சீக்கிரத்தில் விண்ணப்ப படிவங்களிலிருந்து "உங்கள் தகப்பனார் பெயர்=" என்னும் பகுதி நீக்கப்படும் என்று நினைக்கிறேன்.

Anonymous said...

வெட்கம் இல்லாமல் திறந்து கொண்டு எவன் கிடைப்பான் என்று அலையும் பெண்கள் அப்பாவிகள்! திருமணம் ஆகும் வரை இந்த அப்பாவி பெண்களால் "அதை" மூடிக்கொண்டு இருக்க இயலவில்லை. இவர்களின் வலையில் சிக்கும் ஆண்கள் திமிர் பிடித்த கோழைகள்! நல்ல மதிப்பீடு!

சில திமிர் பிடித்த பெண்களின் தவறான வழி காட்டுதலால் தான் இதுபோன்ற தவறுகள் இந்தியாவில் நடக்கிறது . பெண் சுதந்திரம் என்ற பெயரில் சில படித்த திமிர் பிடித்த பெண்கள் அப்பாவி பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கிறார்கள்.