செய்தி: தினமலர் ஜூலை 31,2008 சிவகங்கை:
திருமணமாகி 2 மாதத்தில் காளையார்கோவிலை சேர்ந்த புதுமாப்பிள்ளையை காரில் கடத்தி கொலை செய்த மனைவி, அவரது கள்ளக்காதலன் உட்பட 6 பேரை சிவகங்கை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே காஞ்சிரத்தை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் பொன்னுமுத்து (29). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவருக்கும், கருங்காலி கிராமத்தை சேர்ந்த கோபால் மகள் செந்திலாவுக்கும் (21) 2008 மே 18ம் தேதி திருமணம் நடந்தது.
ஜூலை 1-ம் தேதி வீட்டிலிருந்து புதுமணத் தம்பதியர் காளையார்கோவிலில் உள்ள மருத்துவமனைக்கு சென்றனர். அவர்கள் வீடு திரும்பவில்லை. காணாமல் போன அன்று செந்திலா 32 பவுன் தங்க நகைகள் அணிந்து சென்றதாகவும், அவர்களை கண்டுபிடித்து தருமாறு பொன்னுமுத்து தாயார் புஷ்பம் காளையார் கோவில் போலீசாரிடம் புகார் செய்தார்.
கள்ளக்காதல்:
போலீஸ் விசாரணையில் செந்திலா திருமணத்திற்கு முன் சிவகங்கை- தொண்டி ரோட்டிலுள்ள ஒரு தனியார் எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை பார்த்தார். இவரும், அங்கு வேலை பார்த்த ஏரியூர் அருகே மாம்பட்டி பிச்சைமணி மகன் புவனேஸ்வரனும்(29) காதலித்தனர். வீட்டில் திருமண பேச்சு நடந்தபோது, காதலை வெளிக்காட்டிக் கொள்ளாமல் செந்திலா திருமணத்திற்கு சம்மதித்துள்ளார். திருமணத்திற்கு பின்னரும் காதலனுடன் செந்திலா கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்.
கணவரை கைகழுவி விட்டு காதலனுடன் வாழ செந்திலா முடிவு செய்துள்ளார். இதற்கு புவனேஸ்வரன் தீட்டிய திட்டப்படி ஜூலை1-ம் தேதி நகைகளுடன் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி புறப்பட்டுள்ளார். பொன்னுமுத்துவும் உடன்வருவதாக வலியுறுத்தியதால், வேறு வழியின்றி அவரையும் அழைத்து கொண்டு பஸ்சில் காளையார்கோவில் சென்றனர்.
அங்கு மருத்துவமனை செல்லாமல் சிவகங்கையில் நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக கூறிய செந்திலா, பொன்னுமுத்துவை வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார். பொன்னுமுத்து மறுத்துள்ளார். வேறு வழியின்றி அவருடன் செந்திலா காளையார் கோவிலில் இருந்து சிவகங்கைக்கு பஸ்சில் வந்துள்ளார். பஸ் ஸ்டாண்டு அருகில் சுமோ காரில் காத்திருந்த புவனேஸ்வரன் மற்றும் கூட்டாளிகள் இருந்த இடத்திற்கு செந்திலா செல்ல, பொன்னுமுத்துவும் அங்கு சென்றுள்ளார். புவனேஸ்வரன் மற்றும் கூட்டாளி களை, "தன்னுடன் பணியாற்றியவர்கள்" என செந்திலா அறிமுகம் செய்துள்ளார்.
மன்றாடிய புதுமாப்பிள்ளை:
புதுமண தம்பதிகளுக்கு விருந்து கொடுப்பதாக புவனேஸ்வரன் கூற பொன்னுமுத்து தயங்கியுள்ளார். செந்திலா வலியுறுத்தியதால், பொன்னுமுத்து சம்மதித்து காரில் ஏறியுள்ளார். எம்.ஜி.ஆர்.சிலை அருகி லுள்ள ஓட்டல் ஒன்றுக்கு அவர்கள் சென்றனர்.
ஓட்டலில் சாப்பிட்ட பின் ஊருக்கு செல்ல செந்திலாவை பொன்னுமுத்து அழைத்துள்ளார். காரில் கொண்டுபோய் விடுவதாக கூறி புவனேஸ்வரனும் கும்பலும் கூற "அப்பாவியாக" பொன்னுமுத்துவும் காரில் ஏறியுள்ளார். சிவகங்கையை கடந்த சிறிது தூரத்திலேயே, செந்திலாவும், புவனேஸ்வரனும் திருமணம் செய்து கொள்ள விரும்பு வதாக கூறிய கும்பல், வீட்டிற்கு திரும்பி செல்லுமாறு பொன்னுமுத்துவை மிரட்டியுள்ளனர்.
இதை ஏற்க மறுத்த பொன்னுமுத்து, மனைவியை தன்னுடன் அனுப்புமாறு தகராறு செய்துள்ளார். செந்திலாவும் கும்பலுடன் சேர்ந்து காரிலிருந்து ஓடிவிடுமாறு மிரட்டியுள்ளார். மறுத்த பொன்னுமுத்துவை காரில் கடத்தி கொலை செய்து விழுப்புரம் பகுதியிலுள்ள காட்டில் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.
கும்பல் கைது:
பின்னர் கும்பல் மதுரை மாவட்டம் சத்திரபட்டி அருகே கடவூரில் புவனேஸ்வரன் கூட்டாளி ராஜாவின் நண்பர் ஒருவர் வீட்டில் தங்கினர். தகவல் கிடைத்த சிவகங்கை தனிப்படை போலீசார் செந்திலா, அவரது காதலன் புவனேஸ்வரன், கூட்டாளிகளான மதுரை ஜோசப் தெரு குமார் மகன் ராஜேஷ்(23), மதுரை மேலஅனுப்பானடி ரெங்க பாண்டியன் மகன் முருகன்(16), மதுரை புதுமீனாட்சிநகர் இகிமுத்து மகன் ராஜா(18), மதுரை கீழ்மதுரை காமராஜர்புரம் பிரகாஷ் மகன் சோமசுந்தரம்(22) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.
இக்கும்பலிடம் எஸ்.பி. கண்ணன், டி.எஸ்.பி. சாம்சன் ஆகியோர் விசாரித்தனர். இவர்களிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-----------------
இத்தனைக்கும் பிறகு அந்த அப்பாவிக் கணவன் வரதட்சிணைக் கொடுமை செய்ததாகக் கூறி வழக்குப் போடுவாளோ என்னவோ!!
உங்களுக்குத் தெரியுமா? குடும்ப வன்முறைச் சட்டப்படி வன்முறை என்றால் கணவன் தான் செய்வான். மனைவி பாவம், ஒரு பாவமும் அறியாத பேதை!
இந்த நிகழ்வுகளையெல்லாம் நோக்கும்போது அரபு நாட்டுச் சட்டங்கள்தான் சரியானவை என்று தோன்றுகிறது!
புதுமாப்பிள்ளையை கொலை செய்து எரித்த மனைவி, கள்ளக்காதலன் கைது
Subscribe to:
Post Comments (Atom)
6 மறுமொழிகள்:
பெண்கள் எல்லாரும் அப்பாவிகளும் அல்ல. ஆண்கள் எல்லாரும் கிரிமினல்களும் அல்ல என்பதை எப்போதுதான் இந்த சட்டம் இயற்றுவோர் உணரப்போகிறார்களோ தெரியவில்லை.
பெண்கள் எல்லாரும் அப்பாவிகளும் அல்ல. ஆண்கள் எல்லாரும் கிரிமினல்களும் அல்ல என்பதை எப்போதுதான் இந்த சட்டம் இயற்றுவோர் உணரப்போகிறார்களோ தெரியவில்லை.
தினகரன் 8ஆம் பக்கம் 1-8-2008
7 ஆண்டுக்குள் மருமகள் தற்கொலை செய்தால் மாமியார், மாமனார் கொடுமையே காரணம் என கருதி விடக்கூடாது
புதுடெல்லி, ஆக. 1: திருமணமான 7 ஆண்டுக்குள் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டால், கணவரும் அவருடைய வீட்டார் செய்த கொடுமைதான் அதற்கு காரணமாக இருக்கும் என்ற முடிவுக்கு உடனடியாக வந்துவிடக் கூடாதுÕ என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் சாந்தி பாய் என்ற பெண் திருமணமான சில ஆண்டுகளில் தீக்குளித்து இறந்தார். சாந்தியின் இந்த தற்கொலை முடிவுக்கு, மாமனார், மாமியார் செய்த கொடுமைதான் காரணம் என்று போலீசார் குற்றஞ்சாட்டினர். இந்த வழக்கை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம், சாந்தியின் மாமியார் முன்னிபாய்க்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது.
உயர் நீதிமன்றத்திலும் இந்த தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கை விசாரித்து முன்னிபாயை விடுதலை செய்தது.
தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது:
இந்த வழக்கில் மருமகள் தற்கொலை செய்ய மாமியார் தூண்டுதலாக இருந்தார் என்பதற்கான ஆதாரம் நிரூபிக்கப்படவில்லை.
இந்திய சாட்சிகள் சட்டம் 113-ஏ பிரிவின்படி, திருமணமான 7 ஆண்டுக்குள் ஒரு பெண் தற்கொலை செய்தால், அதற்கு கணவனும் அவருடைய குடும்பத்தினரும் செய்த கொடுமையே காரணம் என்ற முடிவுக்கு சூழ்நிலை ஆதாரங்கள் அடிப்படையில் நீதிமன்றம் வரலாம்.
ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு காயம் அல்லது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் அளவுக்கு சித்ரவதை செய்யப்பட்டதா என்பதையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்.
திருமணமான 7 ஆண்டுக்குள் தற்கொலை செய்ததை மட்டுமே காரணமாக வைத்து எந்த முடிவையும் எடுத்து விடக்கூடாது. தீர விசாரித்து உண்மையை கண்டறிய வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Thanks, anonymous.
மருமகள் இருந்தும் கெடுக்கலாம்; செத்தும் கெடுக்கலாம்!
மணமாகி 7 ஆண்டுக்குள் இயற்கையான காரணங்களால் இறந்தால் கூட விசாரணை நடத்த வேண்டுமாம்.
கணவன் தற்கொலை செய்து கொண்டால், கேட்பாரில்லையா?
என்ன சட்டங்களோ!
ராபினுக்கும் நன்றிகள்.
ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்க போலிருக்கு...
நன்றி, ரவி அவர்களே.
"ரொம்ப பேர்" பாதிக்கப்பட்டிருக்காங்க என்பதுதான் சரியான நிலைமை!
http://498a.org/
http://www.savefamily.org/
போன்ற வலைத்தளங்களுக்குச் சென்று இந்திய ஆண்கள் படும் பாட்டைப் பற்றித் தெரிந்துகொண்டு இந்த செய்திகளை உங்கள் தளம் மூலம் பரப்புங்கள். ஒரு பிடிஎஃப் வடிவ செய்தி மடலும் அங்கு தரவிறக்கம் செய்துகொல்ளலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்க