பெற்றோரின் விவாகரத்தால் பிள்ளைகளின் எதிர்காலம், மனநிலை பாதிக்கப்படுவது ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தங்களுடைய சொந்த விருப்பு, வெறுப்புகளால் கணவன் & மனைவி விவாகரத்து செய்து விடுகின்றனர். ஆனால், பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி அவர்கள் சிறிதும் கவலைப்படுவது இல்லை.
பெற்றோரின் விவாகரத்தால் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது என்பது, பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்கு கடந்த 1958ல் பிறந்து 50 வயதை நெருங்கிவிட்ட 17 ஆயிரம் பேரின் வாழ்க்கையை ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர். அந்த காலக் கட்டத்தில் விவாகரத்து குறைவு என்றாலும், விவாகரத்து செய்த தம்பதிகளின் பிள்ளைகள் படிப்பிலும் மனநிலையிலும் பாதிப்பு தெரிந்தது.
அதேபோல், விவாகரத்து என்பது மிகவும் சகஜமாகி விட்ட 1970க்குப் பிறகு பிறந்த பிள்ளைகளின் மனநிலையையும் ஆய்வாளர்கள் கண்காணித்தனர். இவர்களிலும் பெற்றோரின் விவாகரத்தை சந்தித்த பிள்ளைகளின் மனநிலை, படிப்பு போன்றவை பாதிக்கப்பட்டு, சமூகத்தில் பின்தங்கிய நிலையிலேயே அதிகம் பேர் இருந்தனர்.
இதன் மூலம், ஆண்டும் வயதும் வேறுபட்டாலும் பெற்றோரின் விவாகரத்தால் பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்பு ஒரே மாதிரி இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
செய்தி: தினகரன் 15.07.2008
2 மறுமொழிகள்:
யாருங்க நீங்க ? ஒரு பெண்ணால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கணவரா ? இல்லை கணவரின் சகோதரரா ? இல்லை தகப்பனா ? இப்டி போட்டு பின்றீங்க ? நல்ல தொண்டு. தொடரவும்.
-மனைவியால் பாதிக்கப்பட்ட இன்னொரு சக பயணி
நன்றி.
உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளலாமே!
தமிழ்498a
உங்கள் கருத்தைத் தெரிவிக்க