மனைவி எனும் முதலையிலிருந்து விடுபட்ட பிரசாந்த்

திருமணம் என்னும் புதை குழியில் விழுந்து, ஒரு கொடுமையான மனைவியால் அலைக்கழிக்கப்பட்ட நடிகர் பிரசாந்த், திரைப்படங்களில் மரங்களைச் சுற்றி வலம் வர வேண்டியவர் கோர்ட்டுகளைச் சுற்றி வரவேண்டிய சூழ்நிலை எற்பட்டது நீங்கள் அறிந்ததே. ஏற்கனவே மணமான அந்தப் பெண் 498a போன்ற ஆண் எதிரிச் சட்டங்களைத் துணை கொண்டு பணம் பிடுங்க முயற்சி செய்த சோகக் கதையை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் ஒரு திரைப் படமாக எடுக்க இருக்கிறார் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.

பிரசாந்தின் மனைவி போட்ட பொய் கேசுகளிலிருந்து அவரை விடுவிக்க 50 கோடி ரூபாய் வரை கேட்டார்களாம்! இதுபோல் பணம் பிடுங்கும் சட்டமாக கெடுமதி கொண்ட பெண்களால் மாற்றப்பட்ட இ.பி.கோ 498a பிரிவு இன்னும் எத்துணை ஆண்களைப் பலி வாங்கப் போகிறதோ!

1 மறுமொழி:

Anonymous said...

சரியாகச் சொன்னீர்கள். எத்தனை ஆட்டம் எத்தனை பேட்டி. இப்போ டவுசர கழட்டுனதும் சத்தமே இல்லையே. பிரசாந்த ஒரு நடிகரா இல்லாட்டியும் ஒரு மனுசனா இந்த அளவுக்கு அலைக்கழிச்சிருக்கக் கூடாது. அதுவும் இது என்னவோ யோக்கியம் மாதிரி. திருப்பி செவுட்டலயே அடிக்கனும்.