வரதட்சணை கொடுமை வழக்கில் மதுரை பல் மருத்துவர் கைது
தூத்துக்குடி - ஜூலை 28,2008 :: செய்தி - தினமலர்
மனைவியிடம் ஐந்து லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய வழக்கில் மதுரை பல் மருத்துவர், அவரது தாயாரையும் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி செல்வநாயகபுரத்தைச் சேர்ந்த பல் மருத்துவர் சக்தி தேவி (27) க்கும் மதுரை அண்ணாநகர் பல்மருத்துவர் பிரவீண் குமாருக்கும்(30), கடந்த ஆண்டு ஆக., 27ல் திருமணம் நடந்தது. வரதட்சணையாக 80 சவரன் நகை பிரவீண் குமாருக்கு தரப்பட்டது.
இந்நிலையில் கிளினிக் கட்டுவதற்கு பிரவீண்குமார், மனைவி சக்திதேவியை அவரது பெற்றோரிடம் கூடுதலாக ஐந்து லட்சம் ரூபாய் வரதட்சணை வாங்கி வரும்படி வற்புறுத்தினார்.அதற்கு சக்திதேவி மறுக்கவே, இருவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் வரதட்சணை கேட்டு பிரவீண்குமார் மற்றும் குடும்பத்தார் தன்னை துன்புறுத்துவதாக சக்திதேவி தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். பிரவீண்குமார், அவரது தாயார் விஜயலட்சுமி(55) ஆகியோரை நேற்று கைது செய்த போலீசார், பிரவீண்குமாரின் தாத்தா சண்முகத்தை(80 வயது) தேடி வருகின்றனர்.
---------------------------
மதுரைவாழ் அன்பர்கள் யாரேனும் அந்த பல்வைத்தியர் பிரவீண் குமார் தரப்பு செய்தியை அறிந்து இங்கு மறுமொழியாக எழுதும்படி வேண்டுகிறேன் (தமிழில் எழுத இயலாவிடில் ஆங்கிலத்திலும் எழுதலாம்).
நன்றி.
80 வயது தாத்தா வரதட்சிணை கொடுமை செய்தாராம்!
குறிச்சொற்கள் 498a, harassment, misuse, victims, பொய் வழக்கு, வரதட்சணை
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
அன்பு தோழருக்கு,
உங்களின் இந்த பதிவை நான் நீண்ட நாட்களாக வாசித்து வருகின்றேன். தற்சமயம் நான் எனது வலைப்பதிவான "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடையிலும்" (www.tmpolitics.blogspot.com) உங்கள் பதிவுக்கு ஒரு சுட்டி இணைத்துள்ளேன். அத்துடன் எமது தமிழ் முஸ்லிம் திரட்டி (www.tmpolitics.net/reader) தங்கள பதிவை இணைத்து விட்டேன்.
மேலதிகமாக நான் தங்களின் இந்த வலைப்பதிவை பற்றி ஒரு அறிமுக கட்டுரை எனது தளங்களில் இடலாம் என்றுள்ளேன். ஆனவு தாங்கள் தங்கள் பதிவை பற்றிய ஒரு அறிமுக கட்டுரையோடு பொய் வழக்குகள் குறித்து ஆன்களை விழிப்புணர்வு அடையும் விதமாக ஒரு கட்டுரை எழுதி தந்தால் வெளியிட் ஏதுவாக இருக்கும்.
நன்றி
முகவைத்தமிழன்
raisudeen@gmail.com
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி, முகவைத் தமிழன்.
அறிமுகக் கட்டுரையை சீக்கிறமே எழுதி அனுப்புகிறேன்.
தங்கள்,
தமிழ்498a
உங்கள் கருத்தைத் தெரிவிக்க