கணவனைக் கொன்ற செந்திலா


சென்ற இடுகையில் குறிப்பிட்டபடி கட்டிய கணவனை கள்ளக் காதலனோடு சேர்ந்து கொலை செய்த பேதைபெண் இவர்தான்! அவள் கழுத்தில் தொங்கும் மங்கல நாணைப் பாருங்கள். அந்த முகத்தைப் பார்த்தால் எவ்வளவு பரிதாபமான தோற்றத்தில் இருக்கிறது பாருங்கள்! இது போன்ற பொய்த் தோற்றங்களைக் கண்டுதான் ஆண்கள் ஏமாந்துவிடுகிறார்கள். பின் பொய் கேசுகளில் மாட்டிக்கொண்டு சீரழிகிறார்கள்; அல்லது இதுபோன்ற செந்திலாக்கள் கையில் சிக்கி பரலோகம் போகிறார்கள்!

இப்போது அந்த செந்திலாவின் வாக்குமூலத்தைப் பார்ப்போம்:

"கள்ளக்காதலனுடன் கைதான செந்திலா வாக்குமூலத்தில் கூறியதாவது: நான் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளேன். நாட்டரசன் கோட்டை அருகிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை பார்த்தேன். அங்கு மேலாளராக பணிபுரிந்த புவனேஸ்வரனுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகினோம்.


இந்நிலையில், எனக்கு வீட்டில் திருமண ஏற்பாடு நடந்தது. இதை, புவனேஸ்வரனிடம் தெரிவித்தேன். அதற்கு அவர், "திருமணம் செய்து
கொள், பின்னால் பார்த்து கொள்ளலாம்" என கூறினார். காஞ்சிரத்தைச் சேர்ந்த
பொன்னுமுத்துக்கும், எனக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும், நானும் புவனேஸ்வரனும் மொபைல் போனில் தொடர்ந்து பேசி வந்தோம்.

திருமணமாகி பல நாட்களாகியும் தொடவிடாமல் ஒதுங்கிய எனக்கு, கணவரது "செக்ஸ் டார்ச்சர்" அதிகமாக இருந்தது. இதனால், "அவரை ஏதாவது ஒரு வழி செய்யுங்கள்' என புவனேஸ்வரனிடம் சொன்னேன். அவர் கொடுத்த "ஐடியா"படி, ஜூலை 1ம் தேதி பொன்னுமுத்துவை காளையார் கோவிலில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். "இங்கு நல்ல மருத்துவ மனை இல்லை" என்று கூறி, அங்கிருந்து அவரை மீண்டும் சிவகங்கைக்கு பஸ்சில் அழைத்துச் சென்றேன். பஸ் ஸ்டாண்டிற்கு பின்புறமுள்ள துர்க்கை அம்மன் கோவில் பக்கம் சென்றோம்.


என்னுடன் பணியாற்றிய கார்த்தி அங்கு டூவீலரில் வந்தார். அவரை கணவரிடம் அறிமுகம் செய்தேன். சிறிது தூரத்தில் நின்றிருந்த டாடா சுமோ காருக்கு கார்த்தி எங்களை அழைத்துச் சென்றார். காரில் புவனேஸ்வரன், சோமசுந்தரம், ராஜேஷ், மலைச்சாமி ஆகியோர் இருந்தனர். அவர்களையும் கணவருக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.

கணவரிடம் அவர்கள் சகஜமாக பேசி, எங்களுக்கு கொடைக்கானலில் "ஹனிமூன்" ஏற்பாடு செய்திருப்பதாகவும், வீட்டிற்கு போனில் சொல்லி கொள்ளலாம் எனவும் கூறினர். மறுத்த கணவரை, சமாதானம் செய்து காரில் ஏற்றினர். கார்த்தி அங்கிருந்து டூ வீலரில் சென்றுவிட்டார். காரை டிரைவர் பாண்டி ஓட்டினார். கார் திருப்புத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. சந்தேகமடைந்த எனது கணவர் தகராறு செய்ததால், அவரை அனைவரும்
தாக்கினர்.

கரும்பு பயிருக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குளிர்பானத்தில் கலக்கி
கொடுத்து பொன்னுமுத்துவை குடிக்க சென்னோம். மறுத்த அவரை அடித்து துன்புறுத்தி குடிக்க செய்தோம். அவர் மயங்கிய நிலையில் இருந்தபோது, கையில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க "பிரேஸ்லெட்,' இரண்டு சவரன் தங்க சங்கிலி, மோதிரத்தை கழற்றி, வழியில் விற்று செலவு செய்தோம்.
திருச்சி வழியாக விழுப்புரம் சென்றோம். விழுப்புரத்திலிருந்து 18 கி.மீ., தொலைவிலுள்ள பெரியதச்சூர் காட்டுப் பகுதியிலுள்ள சவுக்கு தோப்பில், மயங்கிய நிலையில் இருந்த பொன்னுமுத்துவை கழுத்தை நெரித்து கொலை
செய்து, அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தோம். மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகிலுள்ள கடவூரில் புவனேஸ்வரனின் நண்பர் வீட்டில் தங்கியிருந்தோம். நேற்று முன்தினம், மதுரை மாட்டுத்தாவணி செல்லும் வழியில் போலீசார் எங்களை கைது செய்தனர்."

இவ்வாறு செந்திலா கூறினார்.

தற்போதைய செய்தி:

கள்ளக்காதலியுடன் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்த புவனேஸ்வரனின் "பாஸ்போர்ட்" மற்றும் "ஏர் டிக்கெட்' பறிமுதல் செய்யப்பட்டது. கொலைக்கு பயன்படுத்திய சுமோ கார், டூ வீலர், பொன்னுமுத்துவிடம் பறிக்கப்பட்ட செயின், மோதிரம் மீட்கப்பட்டது. கொலையாளிகளை கூண்டோடு பிடித்த தனிப்படை போலீசாரை, கண்ணன் எஸ்.பி., பாராட்டி பரிசு வழங்கினார்.