61 வயது மூதாட்டி வரதட்சிணை புகார்!


பெங்களூருவைச் சேர்ந்த 61 வயது அம்மையார் ஒருவர், தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கணவருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


பெங்களூருவைச் சேர்ந்தவர் வேங்கடலட்சுமி. தற்போது இவருக்கு 61 வயதாகிறது. இவரது கணவர் சோமப்பா(65). இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் வேங்கட லட்சுமி, பெங்களூரு பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில்,"என் கணவர், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டு விட்டார். அவருடன் வாழ முயற்சித்தேன். அதற்காக அவரை தொடர்புகொண்டபோது, அதிக வரதட்சணை கேட்டு துன்புறுத்தினார். அவரது இரண்டாவது மனைவியும் சேர்ந்து கொண்டு, என்னை கொடுமைப்படுத்தினார். இந்த வயதில் வரதட்சணைக்கு எங்கு போவேன். என் கணவர் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த கோர்ட், சோமப்பா வசிக்கும் பகுதியில் உள்ள ஜே.சி.நகர் போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகளை அழைத்து, இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது. 61 வயது பெண், தனது கணவர் மீது வரதட்சணை புகார் கொடுத்த விவகாரம், பெங்களுருவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- செய்தி: தினமலர்
அடுத்து மனைவி இறந்து பத்து வருடங்கள் கழித்து அவருடைய பேய் வந்து வரதட்சிணை புகார் கொடுக்கும்; அதன்படி கணவனும் கைது செய்யப்படுவான்! நடந்தாலும் ஆச்சரியமில்லை. திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள் இதற்கெல்லாம் தயாராக இருக்கவேண்டும்.