தினமலரில் வந்துள்ள இந்தச் செய்தியைப் படியுங்கள்:
பெண் போலீஸ் தீக்குளித்து தற்கொலை: ஆயுதப்படை போலீஸ்காரர் சஸ்பெண்ட் : ஆகஸ்ட் 25, 2008
கோவை: காதலித்து ஏமாற்றியதால், பெண் போலீஸ் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட கோவை மாநகர் ஆயுதப்படை போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
உடுமலை அருகேயுள்ள தளியை சேர்ந்த ரங்கராஜன் மகள் ஹேமலதா(25); கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை நான்காவது பட்டாலியனில், போலீசாக பணியாற்றி வந்தார். இவர், கோவை மாநகர் ஆயுதப்படை போலீசில் பணியாற்றும் சுப்பையாவை காதலித்துள்ளார். சமீபத்தில் சுப்பையனுக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இச்சூழ்நிலையில், ஹேமலதா சில நாட்களுக்கு முன் தீக்குளித்து, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
குனியமுத்தூர் போலீசார் விசாரித்து, ஹேமலதா மீது தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி ஹேமலதா பரிதாபமாக இறந்தார். போலீஸ் விசாரணையில், அவரை காதலித்து விட்டு, வேறு ஒரு பெண்ணை சுப்பையா திருமணம் செய்ய முடிவு செய்ததால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிந்தது.
ஆயுதப்படை போலீஸ்காரர் சுப்பையா மீது, தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையில், தூத்துக்குடியில் சுப்பையாவுக்கு திருமணம் நடந்து முடிந்தது. விசாரணை மேற்கொண்ட கோவை போலீஸ் கமிஷனர் மஹாலி, பெண் போலீசை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட சுப்பையாவை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.
----------------------------------
காதலித்த பெண்கள் பலர் வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொள்வதில்லையா? "ஒரு தலை ராகங்கள்" போன்ற நிகழ்வுகள் நடப்பதில்லையா? உளவியல் ரீதியான காரணங்களால் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு அந்த ஆண் எப்படி ஆட்டோமேடிக்காக தற்கொலைக்கு தூண்டியவனாக ஆவான்? விசாரணை ஏது நடக்காமலேயே ஆணாகப் பிறந்த பாவத்திற்காக மட்டும் அவன் தண்டனையை அனுபவிக்க வேண்டுமா?
இவற்றிற்கெல்லாம் இந்தச் சமூகம் பதில் சொல்ல வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது!
ஒருதலைச் சார்பு கண்ணோட்டம் தவிர்க்கப்படவேண்டும். Laws should be gender-neutral. அனைத்துச் சட்டங்களும் இரு பாலருக்கும் சமமான தாக்கம் கொண்டவையாக அமைய வேண்டும். அனைத்துத் துறைகளிலும் பெண்கள் ஆண்களைவிட இன்னும் அதிகமாக முன்னேறியிருக்கிறார்கள். இன்னும் என்ன பெண் பாவம்!
ஆண்களைப் பழி வாங்க தற்கொலையும் ஒரு ஆயுதம்!
குறிச்சொற்கள் harassment, suicide, ஆண்பாவம், நீதி, பொய் வழக்கு, வெறி
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழி:
//ஒருதலைச் சார்பு கண்ணோட்டம் தவிர்க்கப்படவேண்டும். Laws should be gender-neutral. அனைத்துச் சட்டங்களும் இரு பாலருக்கும் சமமான தாக்கம் கொண்டவையாக அமைய வேண்டும். அனைத்துத் துறைகளிலும் பெண்கள் ஆண்களைவிட இன்னும் அதிகமாக முன்னேறியிருக்கிரார்கள். இன்னும் என்ன பெண் பாவம்!// - இது சட்டம் இயற்றும் மடையர்களுக்குப் புரியவில்லையே.
உங்கள் கருத்தைத் தெரிவிக்க