வணக்கத்திற்குறிய தாய்க்குலம்

நாசரேத்: மகளை தன் கள்ளக் காதலனுக்கே மணம் முடித்து வைக்க முயன்ற தாயைத் தடுக்க முடியாததால் மணமுடைந்து தூக்கில் தொங்கினார் மகன்.

நெல்லை அருகே நாசரேத்தில் இச் சம்பவம் நடந்துள்ளது.நாசரேத் ஜனகராஜ் தெருவை சேர்ந்தவர் கலைச் செல்வன். இவரது மனைவி செல்லத்தாய் என்ற ராணி. இவர்களுக்கு பாக்கியராஜ் என்றொரு மகன் உள்ளார்.

கலைச்செல்வனை விட்டு சில ஆண்டுகளுக்குமுன் பிரிந்தார் செல்லத்தாய். பின்னர் தங்கத்துரை என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லிசா, ஆஷா என்ற இரு மகள்கள் உள்ளனர்.இதற்கிடையில் மனைவி வேறொருவரை திருமணம் செய்ததால் மனமுடைந்த முதல் கணவர் கலைச்செல்வன் சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.அதன் பிறகு அவரது மகன் பாக்கியராஜ், தாயுடன் இருக்கப் பிடிக்காமல் மதுரையில் உள்ள ஒரு பழைய இரும்பு கடையில் வேலை செய்து வந்தார். 2 மாதத்திற்கு முன்புதான் பாக்கியராஜ் மீண்டும் ஊர் திரும்பினார்.ஊரில் தனது தாய்க்கு பஞ்சாயத்து கவுன்சிலர் உள்பட பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அப்படி கள்ளத் தொடர்பு வைத்திருந்தவர்களில் ஒருவர் செல்லத்தாயின் மகள் லிசாவை தனக்கு திருமணம் செய்து தர கேட்டுள்ளார். அதற்கு செல்லதாயும் சம்மதித்துள்ளார்.இதற்கு பாக்கியராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்படவே தங்கை லிசா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுச் சென்று விட்டாராம். இதனால் மனமுடைந்த பாக்கியராஜ் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து நாசரேத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செய்தி: தட்ஸ் தமிழ்

நன்றி: என் பக்கம்