திருமணமா தூக்கு தண்டனையா!

வரதட்சணை கொடுமைக்கு தூக்குத் தண்டனை?- மத்திய அரசு பரிசீலனை

செய்தி: நியூ இந்தியா நியூஸ்


இந்தியாவில் வரதட்சணை கொடுமைக்கு பலியாகும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது. இது தொடர்பாக பெண்கள் தேசிய கமிஷன் ஆய்வு செய்தது. முடிவில் அது அறிக்கை
ஒன்றை தயார் செய்து பெண்கள் மேம்பாட்டு அமைச்சகத்திடம் கொடுத்துள்ளது. அந்த அறிக்கையில் வரதட்சணை கொடுமையை கட்டுப்படுத்தி, தடுக்க எத்தகைய நடவடிக்கைகள் எடுக்க
வேண்டும் என்று பல்வேறு பரிந்துறைகளை பெண்கள் தேசிய கமிஷன் வரையறுத்துக் கொடுத்துள்ளது. அதில் முக்கிய அம்சமாக வரதட்சணை கொடுமை செய்யும் கணவன், மாமனார், மாமியார், நாத்தனாருக்கு தண்டனை காலத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது வரதட்சணை கொடுமை செய்ததாக கைது செய்யப்படுபவர்களுக்கு அதிக பட்சமாக 7 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை 10 ஆண்டு தண்டனையாக மாற்ற வேண்டும். வரதட்சணை கொடுமை மிக கொடூரமான கொலையாக இருக்கும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை அல்லது தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை மத்திய பெண்கள் மேம்பாட்டு அமைச்சகம் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. வரதட்சணை சாவுகளை
தடுக்க இத்தகைய கடுமையான சட்டம் உதவும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக அரசியல் சட்டத்தின் 304 (பி). பிரிவை திருத்தம் செய்ய ஆய்வு நடந்து வருகிறது.அரசு ஊழியர்கள்
தங்கள் திருமணத்தின் போது எவ்வளவு நகை, பணம் வாங்கினார்கள் என்பதை அரசுக்கு தனி ஆவணத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற பரிந்துரையும் தீவிர ஆய்வில் உள்ளது.

திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட நகை, பணம் குறித்து மனைவி, மற்றும் மாமனாரிடம் ஆவணத்தில் கையெழுத்து பெற்று அரசு ஊழியர் கொடுக்க வேண்டும் என்று ஒரு கருத்து கூறப்பட்டுள்ளது.அரசு ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி போடும் இந்த நடவடிக்கைகளுக்காக வரதட்சணை தடுப்பு விதியில் புதிதாக 8 சி. என்ற பிரிவை உருவாக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவை அமலுக்கு வந்தால் வரதட்சணை பலி கணிசமாக
குறையும்.

இப்போதே பொய் கேசு போட்டு கணவன்மார்களையும் அவர்கள்தம் குடும்பத்தினரையும் பாடாய்ப் படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த பரிந்துரையை அமுல்படுத்திய பின் திருமணத்திற்குப் பின் கணவன்மார்கள் எல்லோரும் தூக்குக் கயிற்றை நினைத்து பயப்பட்டு மனைவியின் காலடியில் கிடக்கவேண்டியதுதான். கணவனின் தாயாரும் மருமகளின் காலைக் கழுவி காலத்தை ஓட்ட வேண்டியதுதான்!

இந்திய ஆண்களே, இத்தகைய கொடுமைகளிலிருந்து தப்பவேண்டுமானால் இந்தியப் பெண்களை திருமணம் செய்துகொள்ளாதீர்கள். இந்தியாவிலும் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.

1 மறுமொழி:

Anonymous said...

/
இந்திய ஆண்களே, இத்தகைய கொடுமைகளிலிருந்து தப்பவேண்டுமானால் இந்தியப் பெண்களை திருமணம் செய்துகொள்ளாதீர்கள். இந்தியாவிலும் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.
/

well said