விவாகரத்தான கணவருக்கு மகனை காட்ட மறுப்பு

ஏற்கனவே உத்தரவிட்டபடி விவாகரத்தான கணவரிடம் மகனை காட்ட மறுத்த பெங்களூரு நர்சிங் கல்லூரி பேராசிரியைக்கு மதுரை ஐகோர்ட் கிளை கண்டனம் தெரிவித்தது.

பெங்களூரு லிங்கராஜபுரத்தை சேர்ந்தவர் சிம்சன்ராஜ். இவருக்கும், மதுரை போடிலைனை சேர்ந்த ஆல்பிரட் மகள் பெர்லின் ஆல்பிரட்டுக்கும் 2002ல் திருமணம் நடந்தது. மார்க் ஏதன்(4) என்ற மகன் உள்ளார்.

பெர்லின் பெங்களூருவில் நர்சிங் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிகிறார். திருமணம் ஆன சில மாதங்களில் பெர்லினுக்கும், கணவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. 2 பேரும் விவாகரத்து கோரி பெங்களூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் பெர்லினுக்கு கள்ளத்தொடர்பு இருப்பது தெரிந்து சிம்சன் ராஜ் பெங்களூரு போலீசில் புகார் கொடுத் தார். போலீசார் விசாரித்து பெர்லின் உட்பட 6 பேரை கைது செய்தனர். பெங்களுருவில் விவாகரத்து வழக்கு நடந்த நிலையில் பெர்லின் மதுரை குடும்ப நலகோர்ட்டில் தனியாக வழக்கு தொடர்ந்தார்.

அவ்வழக்கில் சிம்சன் ராஜ் முகவரி மாற்றி கொடுக்கப்பட்டதால் அவருக்கு அனுப்பப்பட்ட சம்மன் திரும்பி வந்தது. சிம்சன்ராஜ் தரப்பில் பதில் இல்லாததால் பெர்லினுக்கு ஆதரவாக தீர்ப்பு கூறப்பட்டது. மேலும் "மகன் மார்க் ஏதனை பெர்லினிடம் ஒப்படைக்கவும்" கோர்ட் உத்தரவிட்டது. மார்க் ஏதனை அழைத்து செல்ல போலீசார் வந்த போது தான் மதுரை கோர்ட்டில் வழக்கு நடந்த விவரங்கள் சிம்சன் ராஜூக்கு தெரிய வந்தது. இத்தகவல்களை குறிப்பிட்டு ஐகோர்ட் கிளையில் சிம்சன் ராஜ் தாக்கல் செய்த வழக்கில், "மதுரை கோர்ட் ஒரு தரப்பாக அளித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும். மகனுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்" எனக் கோரினார்.

இவ்வழக்கை விசாரித்த கோர்ட், "ஒவ்வொரு சனி, ஞாயிறு கிழமைகளில் பெங்களூரு அசெம்பளி ஆப் காட் சர்ச்சில் மார்க் ஏதனை பெர்லின் சிம்சன் ராஜிடம் காட்ட வேண்டும்' என உத்தரவிட்டது. ஆனால் பெர்லின் காட்டவில்லை. இதனால் மகனை காட்ட உத்தரவிட கோரி சிம்சன்ராஜ் மீண்டும் ஐகோர்ட்டில் மனு செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரபா ஸ்ரீ தேவன், எம்.ஜெயபால் கொண்ட பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: "மைனர் சிறுவனை தந்தையிடம் காட்டும்படி கோர்ட் உத்தரவிட்டும் பெர்லின் தவிர்த்தது வேதனையளிக்கிறது. சிறுவன் மன உளைச்சலுக்கு ஆளாக கூடாது என்பதற்காக இந்த உத்தரவை கோர்ட் பிறப்பித்தது. தற்போது பெர்லின் உடல்நலம் சரியில்லை என ஆஜராகவில்லை. அவருக்கு உடல்நலம் சரியில்லாதபோது மகனை பார்த்து கொள்ள அவரது தந்தைக்கு முழு அதிகாரம் உள்ளது. வனஸ்வாடி இன்ஸ் பெக்டர் மப்டியில் பெர்லின் வீட்டிற்கு சென்று அவரது உடல் நலம் குன்றியிருக்கிறாரா என தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் பெர்லின் மீது கோர்ட் கடுமையாக நடந்து கொள்ளும். "

"25.7.2008ல் மாலை 5 மணிக்கு மார்க் ஏதனை அவரது தந்தை சிம்சன் ராஜிடம் ஒப்படைக்க வேண்டும். மீண்டும் சிறுவனை 27.7.2008ல் மாலை அவரது தாயாரிடம் ஒப்படைக்க வேண்டும். பெர்லின் தனது வழியை இனியாவது திருத்தி கொள்வார் என்றும், கோர்ட் உத்தரவுகளை புரிந்து கொள்வார் எனவும் கோர்ட் நம்புகிறது" - இவ்வாறு உத்தரவிட்டனர்.

~ செய்தி: தினமல்ர்

2 மறுமொழிகள்:

')) said...

Pls mail your contact number of mail id if possible..

Anonymous said...

http://www.youtube.com/watch?v=EXxbDaNXZao

http://www.youtube.com/watch?v=DhsE9Akl7_8

http://www.youtube.com/watch?v=_Qiv_Ims8

http://www.youtube.com/watch?v=02OsaVPR-XE

http://www.youtube.com/watch?v=CJ-IGPor-Ns


இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சி.Embed செய்து பதிவிடவும் நன்றீ!

Source:http://www.techsatish.net/2008/08/08/ippadikku-rose-4/