பாழ்பட்ட சமூகம்

பெண்களுக்காகவே நடத்தப்படும் “அவள் விகடன்” இதழில் வெளிவந்துள்ள கடிதங்கள் மூலம் இன்றைய நாட்களில் ஆண்களைப் பெற்று அவர்களுக்கு திருமணம் செய்விக்கும் பெற்றோரின் அவல நிலையை சிலர் சோகத்துடன் விவரிப்பதைக் காண்போம்:- (கிளிக் செய்து பெரிதாக்குங்கள்)








இதுபற்றி சட்ட நிபுணர்களின் கருத்து என்ன என்பதை அடுத்த இடுகையில் காண்போம்!

கள்ளத் தொடர்பினால் பிறந்த குழந்தையைக் கொலை செய்த தாய்

ஏழு நாள் குழந்தையை கொலை செய்த இருவருக்கு ஐகோர்ட் ஜாமீன் மறுப்பு

நவம்பர் 25,2008. செய்தி: தினமலர்

மதுரை : தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே கள்ளத் தொடர்பினால் பிறந்த ஏழு நாளான பெண் குழந்தையை கொலை செய்த தாய்க்கும், கள்ளக்காதலருக்கும் ஜாமீன் வழங்க, மதுரை ஐகோர்ட் கிளை மறுத்து விட்டது.

வீரபாண்டி அருகே பாலார்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராஜ்(46). இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்த சின்னன் மகள் ஒச்சம்மாள்(37). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் உள்ளார். கணவரை பிரிந்த ஒச்சம்மாள், ஜெயராஜின் தோட்டத்தில் வேலை செய்து வந்தார்.

அப்போது, இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதில் கர்ப்பமுற்ற ஒச்சம்மாளுக்கு, டொம்புசேரி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் செப்., 20-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.இது ஊருக்கு தெரிந்தால் அசிங்கம் எனக் கருதிய ஜெயராஜ், செப்., 26ம் தேதி பெண் குழந்தையை கொலை செய்தார். பிறகு, மஞ்சள் பையில் வைத்து பைக்கில் எடுத்துச் சென்று முல்லையாற்றில் வீசினார். வீரபாண்டி போலீசார் விசாரித்து ஜெயராஜையும், ஒச்சம்மாளையும் கைது செய்தனர்.இருவரும் ஜாமீன் கோரி ஐகோர்ட் கிளையில் மனு செய்தனர். அவர்களை ஜாமீனில் விட அரசு கூடுதல் வக்கீல் சிவ.அய்யப்பன் ஆட்சேபம் தெரிவித்தார். அதை ஏற்று ஜாமீன் மனுவை நீதிபதி கே.என்.பாஷா தள்ளுபடி செய்தார்.

நல்ல பிசினஸ்

நகரி: பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், சாப்ட்வேர் இன்ஜினியர்கள் இருவரை திருமணம் செய்து தலைமறைவாகி விட்டு, மூன்றாவதாக இன்னொருவரை மணக்க நிச்சயதார்த்தம் முடித்துள்ள இளம்பெண்ணை திருப்பதி போலீசார் கைது செய்தனர்.

ஆண்கள் மட்டுமே பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளதாக அனைவரும் கூக்குரலிடுகின்றனர். இதற்கு நேர்மாறாக, ஆந்திர மாநிலம் குண்டூர் நகரை அடுத்த, பிராடிபேட்டையைச் சேர்ந்த வெங்கடேஸ்வரராவ் பூர்ணவல்லி தம்பதியரின் மகளான தீப்தி(24)யும் செயல்பட்டுள்ளார்.

பிளஸ் 2 வரை படித்துள்ள இவருக்கு, சத்யதீப்தி, சாய்தீப்தி என்ற பெயர்களும் உண்டு. இவரது தந்தை ஆறு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், தாய், மகள் இருவருமாக தனியாக வசித்து வந்தனர். மகளுக்கு நல்லமுறையில் திருமணம் செய்து வைக்க, பூர்ணவல்லிக்கு வசதி இல்லாததால், பெரிய அளவில் பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டினர். இதற்கு பொறியியல் படித்த சாப்ட்வேர் இன்ஜினியர்களை திருமணம் செய்ய முடிவெடுத்து, திருமண போர்வையில் அவர்களை பிளாக்மெயில் செய்ய திட்டமிட்டனர். இதன்படி, திருப்பதி மாதவநகரைச் சேர்ந்த கோதண்டராம நாயுடுவின் மகன் பாலசுப்பிரமணியம்(30) என்ற சாப்ட்வேர் இன்ஜினியரை தேர்ந்தெடுத்து, 2004ம் ஆண்டு இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் திருப்பதியில் தனியார் ஓட்டல் ஒன்றில் திருமணம் நடந்து முடிந்தது.

திருமணமான மூன்று தினங்களுக்கு பின் பிறந்த வீடான குண்டூருக்கு சென்று வருவதாக, கணவரிடம் கூறிச்சென்ற தீப்தி, மீண்டும் கணவரின் திருப்பதி வீட்டிற்கு திரும்பவில்லை. இதைத் தொடர்ந்து பாலசுப்பிரமணியம் மனைவியை தேடிச் சென்று குண்டூரில் விசாரித்ததில், அவர் எங்கு உள்ளார் என்ற விவரம் கிடைக்காமல் திருப்பதிக்கு திரும்பி விட்டார். சில மாதங்கள் கழிந்தபின், பாலசுப்பிரமணியத்திற்கு போன் செய்து பேசிய தீப்தி, "என்னை கொடுமைப்படுத்துவதாகக் கூறி போலீசில் புகார் செய்து கோர்ட்டுக்கு போவேன்' என, போன் மூலம் மிரட்டினார். அதன்பின், பாலசுப்பிரமணியத்திடம் ஒரு தொகையை பெற்றுக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.

பின்னர், தீப்தி என்ற பெயரில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான தனசேகர ரெட்டியை, இன்டர்நெட்டில் சாட்டிங் செய்து காதலில் விழ வைத்து, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். முதல் கணவரான பாலசுப்பிரமணியத்தை மிரட்டி பணம் பறித்தது போலவே, தனசேகரிடமும் பணம் பறித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, திருமணம் நடந்த 2006ம் ஆண்டு குண்டூர் போலீசில் தனசேகர் புகார் செய்ததின் பேரில் தாய், மகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

அதன்பின்னும் மோசடியை தொடர முடிவு செய்த இந்த இளம்பெண், மீண்டும் தன் பெயரை சாய்தீப்தியாக மாற்றிக்கொண்டு மற்றொரு இளைஞரை தேடிப்பிடித்து அவரை திருமணம் செய்துகொள்ள நிச்சயதார்த்தமும் செய்து கொண்டார். இந்த தகவலை அறிந்து கொண்ட திருப்பதியைச் சேர்ந்த முதல் கணவரான பாலசுப்பிரமணியம், கடந்த மாதம் திருப்பதி பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட தாய், மகள் இருவரின் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், சொந்த வேலை காரணமாக திருப்பதிக்கு வந்து கொண்டிருந்த பூர்ணவல்லி, அவரது மகள் தீப்தி இருவரையும் திருப்பதி போலீசார் கைது செய்தனர். பின்னர் மாஜிஸ்திரேட் முன், ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது தினமலர் செய்தி.

ஆனால் என்ன? அவர்களுக்கு ஒரு பிரச்னையுமில்லை.இந்தப் பெண் பொலபொலவென்று கண்ணீர் சிந்தினால் போதும். உடனே என்.ஜி.ஓக்களும், ரேணுகாக்களும், ஊடகங்களும், பெண்ணியலாளர்களும், மேலும் இளம் பெண்களைக் கண்டாலே ஒரு டிரம் ஜொள்ளு விடும் சில கிழட்டுகளும் சேர்ந்து “ஐயகோ! இந்த ஆணாதிக்க நாட்டில் பெண்களின் நிலையைப் பார்த்தாயா! ஒரு இளம் பெண் தன் தொழிலை தடையின்றி நடத்த வழியில்லையே” என்று ஓலமிடுவார்கள். அவர்களும் ஒரு குறையுமின்றி வெளிவந்து விடுவார்கள். தொழிலும் ஜாம்ஜாமென்று நடக்கும்.

அடுத்த பலியாடு ஆக நீங்கள் தயாரா?

குடும்ப வன்முறை புகாரில் மாமியாருக்கு விலக்கு

மும்பை: குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ், குடும்பத்தில் உள்ள கணவன் மற்றும் ஆண் உறவினர் மீது தான் வழக்கு போட முடியும். மாமியார், நாத்தனார் போன்றவர்கள் மீது வழக்கு தொடர முடியாது!

மும்பையில் ஒரு வழக்கில் முலந்த் பெருநகர கோர்ட் அளித்த தீர்ப்பால் பெரும் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் முதன் முறையாக இப்படி ஒரு தீர்ப்பை இந்த கோர்ட் அளித்துள்ளது.

இனி வரும் வழக்குகளில் இந்த தீர்ப்பு முன்னுதாரணமாக இருக்கும்.

மும்பை முலந்த் பகுதியை சேர்ந்தவர் விஷால்; அவர் மனைவி பிரியங்கா. 2005ல் இவர்களுக்கு திருமணம் நடந்தது. கடந்தாண்டு இவர்களுக்கு இடையே மோதல் ஆரம்பித்தது. "என்னை என் கணவரும், அவரின் அம்மா ஷீலாவும் உடல், மனரீதியாக கொடுமைப்படுத்துகின்றனர்" என்று புகார் கூறி, பெருநகர கோர்ட்டில் வழக்கு போட்டார் பிரியங்கா. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் தேஷ்பாண்டே அதிரடி தீர்ப்பை அளித்தார்.

"குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் படி, கணவன் மற்றும் ஆண் உறவினர் மீது தான் வழக்கு போட முடியும். மாமியார், நாத்தனார் போன்ற பெண்கள் மீது இந்த சட்டத்தில் வழக்கு போட வழியில்லை" என்று கூறி, மாமியார் மீதான புகாரை நிராகரிக்க உத்தரவிட்டார். குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், 2006ல் கொண்டு வரப்பட்டது. குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே பிரச்னை ஏற்படும் போது, மனைவிக்கு பாதுகாப்பு அளிக்க இந்த சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

குடும்பத்தில் திருமணத்தின் மூலம் கணவனாக இருக்கும் ஆணோ, ஒன்றாக சேர்ந்து வாழும் "லிவ் இன் பார்ட்னரோ" வன்முறையில் ஈடுபட்டால், அந்த ஆண்கள் மீது வழக்கு போடலாம்" என்று தான் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. இதைச்சுட்டிக்காட்டிய மாஜிஸ்திரேட்,"பெண்கள் மீது இந்த சட்டத்தில் வழக்கு போட வழியில்லை என்பதால், விஷால் மீதான குற்றச்சாட்டு குறித்து மட்டும் வழக்கு விசாரணை நடக்கும்" என்று அறிவித்தார்.

இதுகுறித்து வக்கீல்கள் தரப்பில் கூறும்போது, "குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ், மாமியார், நாத்தனார்கள் ஆகிய குடும்பத்தில் உள்ள பெண்கள் மீது புகார் தாங்கிய மனுக்கள் குவிந்துள்ளன. இந்த தீர்ப்பால், இந்த பெண்கள், வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவர்" என்று தெரிவித்தனர்.

--------------

”மனரீதியான கொடுமை” - இதை மனைவி செய்வதில்லையா? கணவன் முகத்தை திருப்பிக்கொண்டு சென்றாலே அது ஒரு மனரீதியான கொடுமை என்று இந்த சட்டத்தில் கேசு போடுகிறார்கள். மனைவி கணவனை எவ்வளவு கொடுமை செய்தாலும் அவள்மேல் எந்தவித நடவடிக்கையும் எடுக்கமுடியாது.

இதுபோன்ற ஒருதலைப் பட்சமான, மோசமான, முட்டாள்தனமான சட்டம் வேறொன்று இருக்கமுடியுமா?

பெற்றோரைப் படுகொலை செய்த பேதைப்பெண்


”நான் உங்கள் முன் “மிஸ் மீரட்” என்ற பட்டத்துடன் நிற்பதற்குக் காரணம் என் தாய்தான்” என்று குதூகலத்துடன் ஆர்ப்பரித்தாள் பிரியங்கா 2005-ல், உ.பியிலுள்ள மீரட் நகரத்தில்.


அதே பிரியங்கா நவம்பர் 11 அன்று தன் தந்தையையும் தாயையும் தன் பிரியமான தோழி(!)யுடன் சேர்ந்து கொடூரமான முறையில் படுகொலை செய்துவிட்டு அதைப்பற்றி சிறிதும் விசனமில்லாமல் டிவி கேமரா முன் “ஆம், என் பெற்றோர்களை நான்தான் கொன்னேன்” என்று ஆரவாரமாக பேட்டியளிக்கிறாள்.

போலிசார் அவர்கள் இருவரையும் கைது செய்தபோது அவர்களிடமிருந்து பிரியங்காவின் சகோதரர் கௌரவின் பெயரில் அவருடைய தந்தை சேமித்திருந்த ரூ.6 லட்சத்திற்கான வைப்புநிதி பத்திரம், ரூ. 50 ஆயிரம் ரொக்கம், அந்த சகோதரன் கௌரவ் பெயரில் அவள் தந்தை எழுதி வைத்திருந்த உயில், தாயினுடைய நகைகள், மேலும் தந்தையினுடைய சேவிங்க்ஸ் கணக்கு மற்றும் செக் புத்தகங்கள், 7 லட்சத்திற்கான நிரந்தர வைப்புப் பத்திரங்கள், அவருடைய செல்ஃபோன், அந்த வயதான பெற்றோரின் வீட்டுப் பத்திரங்கள் போன்றவற்றையும் கைப்பற்றினர்.

மீரட்டின் போலீஸ் கண்காளிப்பாளர் தன் பேட்டியில் கூறியது:

பிரியங்கா அவளுடைய தோழி அஞ்சுவுடன் தன் தாயாரிடம் சென்று பணம் கேட்டு தகராறு செய்திருக்கிறாள். அவர் கொடுக்க மறுத்ததால் வெறி கொண்டு அவரை நெஞ்சை நெறித்துக் கொன்றாள்.
அந்த தாயாரின் ஓலத்தைக் கேட்டு அந்த நேரத்தில் அங்கு வந்த தன் தந்தையின் கழுத்தை ஒரு கத்தியால் அறுத்துக் கொன்றுவிட்டு தன் தோழியுடன் பணம், பத்திரங்கள், நகைகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டாள் அந்த பிரியங்கா.

போலீசார் அவளைப் பிடித்து கைது செய்தபின் பல டிவி சேனல்களில் அவளைப் பேட்டி கண்டார்கள். அப்போது அவள் தன் பெற்றோர் இருவரையும் கொன்றதற்கான சிறிதளவு வருத்தமோ குற்ற உணர்வோ இல்லாமல் புதிதாக பல கற்பனைக் கதைகளைக் கூறத் தொடங்கிவிட்டாள். அதாவது தான் பெண் என்பதால் சிறுவயதில் கொடுமைப் படுத்தப்பட்டதாகவும் ஆதலால் தன் பெற்றோரைக் கொன்றது சரியே என்று வாதாடினாள்.

அவளுடைய கூற்றுக்கள்:

1. அவளுடைய தந்தை அவளை மிகவும் கொடுமைப் படுத்தினார். அவளை ஒரு தவறான முறையில் பிறந்தவளாகக் குறிப்பிட்டு (illegitimate child) சிறுமைப் படுத்துவார்.
2. அவளுடைய சகோதரன் கௌரவ் அவளை அடித்துத் துன்புறுத்துவான்
3. பெற்றோர் அவளை ஃபேஷன் டிசைன் துறையில் தொடர்ந்து ஈடுபட அனுமதிக்கவிலை. அதனால் அவள் தன் தோழியுடன் சேர்ந்து வாழ முடிவு செய்து வீட்டை விட்டு ஓடிவிட்டாள்.
4. அப்போது அந்த தோழி அஞ்சுவின் உறவினன் அஜேந்திரா என்பவனுடன் பழக்கம் ஏற்பட்டது. அபவளுடைய தந்தை அந்த அஜேந்திராதான் தன் மகளைக் கடத்தியிருப்பதாக போலிஸில் புகார் கொடுத்தார்
5. அந்த அஜேந்திராவும் அவனுடைய மாமாவும் பிரியங்காவை மானபங்கப் படுத்தியதாக அவள் தேசிய மகளிர் வாரியத்தில் புகார் கொடுத்தாள்
6. பிறகு அவள் நோய்டா, சஹாரன்பூர் போன்ற இடங்களில் ஃபேஷன் டிசைன் வேலைக்காக அலைந்திருக்கிறாள். அங்கும் தருண் என்பவனுடன் பழக்கம் ஏற்பட்டு அவனும் இவளை ஏமாற்றினான்.

இப்படி பலவாரியாக பேட்டி கொடுத்த வண்னம் இருந்தாள். CNN-IBN, NDTV போன்ற சேனல்களில் தேடினீர்களானால் அவளுடைய கம்பீரமான (!) பேட்டிகள் கிடைக்கும்.

அதுசரி, தந்தை கொடுமைப் படுத்தியதாக இப்போது கண்ணீர் விடும் பெண் ஏன் தாயைக் கொல்லவேண்டும்? அதுவும் தன்னை மிஸ்.மீரட்டாகப் பெருமை பெறவைத்த தாயை?

பெற்றோர் சொல்லைக் கேட்காமல் தன் தோழியுடன் (அது என்ன தோழியோ) சுற்றி சீரழிந்துவிட்டு, தன் சகோதரனுக்கு பணம் கொடுத்துவிட்டார்கள் என்பதற்காகவே தன் பெற்றோரைப் படுகொலை செய்திருக்கிறாள் இந்த 26 வயது பேய்ப்பெண்!

ஆனால் நம் நாட்டில் ஆண்கள் மட்டுமே குற்றம் இழைப்பவர்கள் எனவும், பெண்கள் என்ன குற்றம் செய்தாலும் தண்டனையே கிடையாது எனவும் பெண்கள் அனைவரும் அன்பும், பண்பும், இரக்கமும் பொங்கி வழியும் குணம் உள்ளவர்களாகவும், சட்டங்களும், அமைச்சுகளும், கோர்ட்டுகளும் அறுதியிட்டுக் கூறுகின்றன. பெற்றோர்கள் பிரியும்போது குழந்தைகள் தாயிடம்தான் ஒப்படைக்கப்படுகின்றன.

என்ன உலகமடா இது!
இந்திய ஆண்களே, திருமணம் என்னும் படுகுழியில் விழுந்து உங்கள் வாழ்வையும் உங்கள் பெற்றோர் வாழ்வையும் சீரழித்துக்கொள்ளாதீர்கள்

போலி வரதட்சணை புகார்களை கண்டித்து டிசம்பர் 6-ந் தேதி ஆண்கள் பாதுகாப்பு சங்கம் போராட்டம்

போலியாக வரதட்சணை புகார்களை பதிவு செய்யக்கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் டிச.6-ல் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

இது பற்றி ஆண்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் அருள்துமிலன், துணைத் தலைவர் லிங்கம் ஆகியோர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-

பொய்யான புகார்கள்

போலீஸ் நிலையங்களில், ஆண்களுக்கு எதிராக கொடுக்கப்படும் வரதட்சணை புகார்களில் பெரும்பாலானவை பொய்யானவையாக உள்ளது. வரதட்சணை கொடுமை ஒருபுறம் இருந்தாலும், வரதட்சணை புகார்கள், ஆண்களை பழிவாங்கவே பயன்படுத்தப்படுகிறது. அதற்காகத்தான் ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தை தொடங்கியிருக்கிறோம். இதற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, விவாகரத்து பெற்ற ஆண்கள் பலரும் இதற்கு ஆதரவு தரமுன்வந்துள்ளனர்.

தற்போது இங்கு ஆண்களுக்கு, ஒருநாள் இலவச சட்ட முகாம் நடத்துகிறோம். இதில், போலியான வரதட்சணை வழக்குகள் எப்படி எதிர்கொள்வது என்பது போன்ற பல்வேறு ஆலோசனைகளை தருகிறோம்.

ஆண்கள் ஆணையம் வேண்டும்

போலீஸ் நிலையங்களில் போலியாக வரதட்சணை புகார்களை பதிவு செய்யக்கூடாது, போலியான புகார் என்று தெரிந்தால் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்; குடும்ப வன்முறை சட்டத்தில் திருத்தம் செய்யும்போது, ஆண்கள் ஆணையத்தை கலந்தாலோசிக்க வேண்டும்; சுயஉதவிக்குழுக்களில் உள்ள சிலர், குடும்ப ஆண்களுக்கு எதிராக குழு பெண்களுக்கு தவறான ஆலோசனை வழங்குகிறார்கள். இதற்கு தடை விதிக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் வரும் டிச.6-ந் தேதி 2008 அன்று எங்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்கள்.

செய்தி: தினத்தந்தி

கணவனை பிரிந்த மனைவி வேலை பார்த்தாலும் ஜீவனாம்சம் பெறலாம்: மும்பை ஐகோர்ட் உத்தரவு

நாக்பூர் : கணவனை விட்டு பிரிந்த மனைவி வேலை பார்ப்பவராக இருந்தாலும், அவருக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என, மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பல்தானாவைச் சேர்ந்தவர் ரவீந்திர பாட்டீல். இவரின் மனைவி கவிதா. இருவருக்கும் ஒரு வயது குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக ரவீந்திர பாட்டீலும், கவிதாவும் பிரிந்தனர். உடன் தனக்கும், குழந்தைக்கும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனக் கோரி, நாக்பூர் செசன்ஸ் கோர்ட்டில் கணவருக்கு எதிராக கவிதா வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த செசன்ஸ் கோர்ட், "கவிதாவுக்கு மாதம் 400 ரூபாயும், குழந்தைக்கு 500 ரூபாயும் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார் ரவீந்திர பாட்டீல். வழக்கு விசாரணைக்கு வந்த போது, "என் மனைவி பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார். மாதம் 1,800 ரூபாய் சம்பாதிக்கிறார். அதனால், அவருக்கு ஜீவனாம்சம் தர வேண்டியதில்லை' என, ரவீந்திர பாட்டீல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கவிதாவோ, "2000ம் ஆண்டில், என் கணவர் வீட்டை விட்டு துரத்திய பின்னரே, நான் பள்ளியில் வேலைக்கு சேர்ந்தேன். எனக்கும், என் குழந்தைக்கும் அவர் பராமரிப்பு செலவை தராததால், நான் வேலைக்கு செல்ல நேரிட்டது. அந்த வேலையும் நிரந்தரமான வேலை அல்ல' என, தெரிவித்தார்.
கவிதா தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக் கொண்ட மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் பெஞ்ச் நீதிபதிகள் கூறியதாவது: கவிதாவுக்கும், அவரின் குழந்தைக்கும் ரவீந்திர பாட்டீல் மாதம்தோறும் பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும். பிரிந்த மனைவியையும், அவரின் குழந்தையையும் கவுரவமாக வாழ வைக்க வேண்டியது கணவரின் கடமை. அதனால், மனைவி வேலை பார்க்கிறார் எனக் கூறி, அவருக்கு பராமரிப்புத் தொகை கொடுக்க மறுக்க முடியாது.

கணவரால் கைவிடப்பட்ட உதவியற்ற பெண், வேலை பார்க்கிறார் எனக் கூறியும், அந்த வேலை மூலம் கிடைக்கும் சம்பளத்தில் அவர் தன்னையும், குழந்தையையும் பராமரித்துக் கொள்வார் என, நினைத்துக் கொண்டும் ஜீவனாம்சம் தர மறுக்க முடியாது. ஒருவர் தன் அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்ற போதுமான பணத்தை கொண்டிருக்க வேண்டியது அவசியம். பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கும் தற்போதைய சூழ்நிலையில், வாழ்க்கைத் தேவைக்கான அலவன்ஸ் கேட்பதை குற்றம் சொல்ல முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

----------------

நண்பர்களே, திருமணத்திற்குப்பின் வாழ்நாள் பூராவும் ஒரு கணவன் எதிர் கொள்ள வேண்டிய பிரச்னைகள் என்னென்ன; சட்டங்கள் எந்த அளவுக்கு கணவனுக்கு எதிராக இருக்கின்றன; மேலும் ஒரு மனைவி கணவனை விட்டுச் சென்றாலும், குற்றம் முழுதும் மனைவியின் மேல் இருந்தாலும் கணவன் தன்னை விற்றாவது அவளுக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று சட்டங்களும், அதன்பேரில் அளிக்கப்படும் தீர்ப்புகளும் அமைகின்றன என்பதை விளக்கமாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? இந்தப் பதிவில் மறுமொழி இடுங்கள். விளக்கமளிக்கிறேன்.

மகன் வெட்டிக் கொலை : தாய்க்கு ஆயுள்தண்டனை

தந்தையர் எவ்வளவுதான் தங்கள் குழந்தைகள்மேல் பாசம் வைத்து அரவணைத்து அவர்களை ஆளாக்கப் பாடுபட்டாலும், கோர்ட்டுகள் அவர்களை வில்லன்களாகத்தான் காண்கின்றன. குழந்தை பெற்ற பிறகும்கூட தன் ஈகோ மேலீட்டாலும், சுயநலத்தாலும், அல்லது கள்ளக் காதலனுடன் உள்ள ஈடுபாட்டாலும் கணவனை விட்டுப் பிரிந்து சென்ற மனைவியிடம்தான் கோர்ட்டுகள் குழந்தைகளை ஒப்படைக்கின்றன - தந்தை என்னதான் நல்லவனாக இருந்தாலும் சரி.

ஒரு தீர்ப்பின்போது குழந்தை தன் தகப்பனுடன்தான் வாழ்வேன் என்று கதறியிருக்கிறது. அப்படியும் அந்தக் குழந்தையை தாயிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். ஆனால் அந்தக் குழந்தையின் பெயரைச் சொல்லி தந்தையிடமிருந்து கப்பம் வசூலிக்க மட்டும் தவறுவதில்லை. மாதம் இவ்வளவு ரூபாய் கொடுக்கவேண்டும், அதுவும் அந்த மனைவியின் கையில் - என்று தீர்ப்பளிக்கிறார்கள். குழந்தையின் நலத்திற்கு நேரடியாகப் பயன்படும் வழியில் செய்தாலும் பரவாயில்லை. அந்தப் பணத்தை அந்தப் பெண்மணி எதற்குப் பயன்படுத்துவாளோ!

இதுதான் இன்றைய இந்தியாவில் தந்தையர்களின் நிலை.

சரி, தாய்மையின் பெருமையை சற்று நோக்குவோமா?


நவம்பர் 18,2008,00:00 IST: செய்தி - தினமலர்

திருநெல்வேலி : மகனை வெட்டிக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. நெல்லையை அடுத்துள்ள தாழையூத்தில் சலூன் கடை நடத்திவந்தவர் தெய்வேந்திரன்(30). இவரது தந்தை மாணிக்கம் விக்கிரமசிங்கபுரம், அகஸ்தியர்பட்டியில் 2007 அக்டோபரில் இறந்தார். அவரது இறுதி நிகழ்ச்சிக்கு மனைவி விஜயலட்சுமியுடன் தெய்வேந்திரன் சென்றிருந்தார். தெய்வேந்திரனின் தாயார் பூவம்மாள்(50), தந்தை இறந்துவிட்டதால், தாம் தனியாக இருப்பதாகவும் தம்முடன் அகஸ்தியர்பட்டியில் இருக்கும்படி கேட்டுக்கொண்டார். தெய்வேந்திரன் மறுத்தார். மனமுடைந்த பூவம்மாள் 2007 அக்டோபர் 23 காலையில், வீட்டில் படுத்திருந்த மகன் தெய்வேந்திரனை கோடாரியால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தன்னையும் அரிவாளால் வெட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் கைதானார். வழக்கை விசாரித்த நெல்லை முதன்மை அமர்வு நீதிபதி விஜயராகவன், தாய்க்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

கணவனாவது குழந்தையாவது!

புதுடில்லி :"எனக்கு வேலை தான் முக்கியம்; பதவி உயர்வை விட முடியாது; கணவன் முக்கியமல்ல' என்று கூறிய பெண், சுப்ரீம் கோர்ட்டில் விவாகரத்து பெற்றாள்.

நவம்பர் 19,2008,00:00 IST - செய்தி - தினமலர்

டில்லியைச் சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும், குழந்தைப் பருவம் முதல் ஒருவரை ஒருவர் அறிவர். பருவம் வந்ததும் காதலிக்கத் துவங்கிய அவர்கள், பின் திருமணமும் செய்து கொண்டனர்.

திருமணம் நடக்கும் போது, மனைவி, டில்லியில் உள்ள மத்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் (எய்ம்ஸ்) பயோ கெமிஸ்ட்ரி துறையில் பணியாற் றிக் கொண்டிருந்தார்.அதன்பின் பிஎச்.டி., படிப்பை தொடர்ந்தார். தன் படிப்பிலும், பதவி உயர்விலும் நாட்டம் கொண்ட அந்தப் பெண், குழந்தை பிறந்தால், தன் எதிர் காலம் பாழ்பட்டு விடும் என நினைத்து, இரண்டு முறை தன் கருவைக் கலைத்தார்.பின்னர் அமெரிக்க அரசின் உதவித் தொகை கிடைத்ததால், அங்கு படிக்கச் சென்றார். அத்துடன் தனியாகவும் வாழத் துவங்கினார்.

"நமக்கு குடும்பம் தான் முக்கியம்; கருவை கலைக்காதே' என்று சொன்ன கணவரை புறக்கணித்தாள் மனைவி. இதனால், மனைவியிடமிருந்து தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனக் கோரி, 1996ம் ஆண்டில் டில்லி கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். விவாகரத்து கோரும் மனுவுடன், ஆதாரமாக தன் மனைவி தனக்கு எழுதிய கடிதங்களின் நகல்களை சமர்ப்பித்தார்.அதில், "நான் என் ஆராய்ச்சி படிப்பு விஷயத்தில் அதிக ஆர்வமாக உள்ளேன். அதனால், தனியாகவே வாழ விரும்புகிறேன்' என, அந்தப் பெண் குறிப்பிட்டிருந்தார்.அந்த கடிதங்களின் அடிப்படையில், கீழ்கோர்ட் அவருக்கு விவாகரத்து வழங்கியது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில், அவரின் மனைவி வழக்குத் தொடர்ந்தார். ஆனால், அவரின் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. விவாகரத்து வழங்கி கீழ்கோர்ட் பிறப்பித்த உத்தரவு சரியே என, தீர்ப்பளித்தது.இதையடுத்து, அந்தப் பெண் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் தாக்கர், ஜெயின் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறியதாவது: இந்த வழக்கில் விவாகரத்து வழங்கி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு சரியே. வேலை மற்றும் பதவி உயர்வு மீது கொண்ட ஆவல் காரணமாக, மனுதாக்கல் செய்த பெண், தன் கணவரை தவிக்க விட்டுள்ளார். சந்தோஷமான திருமண வாழ்வை அவருக்கு கொடுக்கத் தவறி விட்டார்.திருமண வாழ்க்கையை புறக்கணித்து விட்டு, வேலையிலேயே கவனம் செலுத்தியதன் காரணமாக, அவரின் கணவரை உளரீதியாக கொடுமைப்படுத்தியுள்ளார்.

அதனால், இந்து திருமண சட்டம் 1985ன்படி, விவாகரத்து வழங்கப்பட்டது சரியானதே.இந்த வழக்கில் தொடர்புடைய பெண், தன் கணவரின் ஒப்புதல் இல்லாமல், இரண்டு முறை கருவைக் கலைத்து, பெண்களுக்கே உரிய குணாதிசயங்களை மீறி செயல்பட்டுள்ளார். இந்திய சமூக அமைப்பு மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், வெளிநாட்டுக் கலாசாரமே தனக்கு பிடித்திருப்பதாகவும், கணவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுவே விவாகரத்து வழங்க போதுமானது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

----------------

இன்னும் எவ்வளவு காலமய்யா பெண்பாவம் என்னும் கதையை விரட்டுக் கொண்டிருப்பீர்கள்!

ஆண்களே, திருமணம் என்பது ஒரு புதைமணல் (Quicksand). அதில் சிக்கிக் கொண்டு சீரழியாதீர்கள்.

மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம் போர்க்கொடி


"வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது"

மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம் போர்க்கொடி. போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு மனு

சென்னை, நவ.20 - தினத்தந்தி

சர்வதேச ஆண்கள் தினத்தையொட்டி நேற்று மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கத்தினர் உரிய சட்ட பாதுகாப்பு கேட்டு போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பான மனு ஒன்றை கொடுத்தனர்.

ஆண்கள் தினம்

ஆண்டுதோறும் நவம்பர் 19-ந் தேதி சர்வதேச ஆண்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்கள் தினம், குழந்தைகள் தினத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுபோல, ஆண்கள் தினத்தை ஆண்கள் நலனை காக்கும் வகையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேச ஆண்கள் தினத்தையொட்டி நேற்று சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


"இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம்'' என்ற அமைப்பு சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு முழுக்க, முழுக்க ஆண்களின் நலனுக்காக செயல்படுகிறது. இந்த அமைப்பில் இந்தியா முழுவதும் 50 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.


பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் குறிப்பாக, மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பு சார்பில் சென்னையில் நேற்று மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. போலீசார் அனுமதி வழங்காததால், இந்த பேரணி ரத்து செய்யப்பட்டது.

போலீஸ் கமிஷனரிடம் மனு

ஆனால், இந்த பேரணியில் கலந்துகொள்ள வந்த ஏராளமான ஆண்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். கமிஷனர் ராதாகிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். மனு கொடுத்துவிட்டு வெளியே வந்ததும் இந்த அமைப்பை சேர்ந்த சுரேஷ்ராம் என்பவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


இந்த சமுதாயமும், அரசியல் சட்டமும் பெண்களுக்கு சாதகமாக உள்ளது. ஆண்கள் தவறு செய்தால் சட்டம் தண்டிக்கிறது. ஆனால் தவறு செய்யும் பெண்களை சட்டம் தண்டிப்பதில்லை.

ஆண்கள் கள்ளக்காதலில் ஈடுபட்டால் போலீசில் பிடித்து கொடுக்கிறார்கள். பெண்கள் கள்ளக்காதலில் ஈடுபட்டால் இரக்கப்படுகிறார்கள். மணமேடையில் ஆண் தாலி கட்ட மறுத்தால் வரதட்சணை கொடுமை சட்டத்தில் கைது செய்கிறார்கள். மணமேடையில் பெண் வேறு ஒருவனோடு ஓடி போனால் விருப்பப்படி அவள் வாழலாம் என்று சொல்கிறார்கள்.

திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் மனைவி இறந்தால், மனைவியின் சாவுக்கு கணவன் காரணம் இல்லை என்பதை ஆர்.டி.ஓ. விசாரணையில் நிரூபிக்க வேண்டியதுள்ளது. அதே நேரத்தில் ஆண் இறந்தாலோ, பெண்களுக்கு எந்த பாதிப்பும் இருப்பதில்லை.

ஆண் தற்கொலை அதிகம்

இந்தியாவில் தற்போதைய கணக்குப்படி ஆண்டுக்கு 55 ஆயிரம் ஆண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இவர்களில் 40 சதவீதம் பேர் பெண்களால் பாதிக்கப்பட்டுதான் உயிரை இழக்கிறார்கள். பெண்கள் ஆண்டுக்கு 28 ஆயிரம் பேர் தான் தற்கொலை செய்கிறார்கள்.

எனவே, புள்ளி விவர கணக்கை பார்த்தால், தற்போது பெண் ஆதிக்கம் தான் அதிகமாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் பெண்களுக்கு சாதகமாக உள்ளது. அதை தவறாக பயன்படுத்தி கணவன்மார்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

கணவர்கள் மட்டுமல்ல, அவர்களின் தாய், தந்தையும், சகோதரிகளும் கூட கைதாகிறார்கள். வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தில் தவறு செய்யும் பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டமும் ஆண்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படுகிறது. கணவர்கள் முறைத்து பார்த்தால்கூட உடனே புகார் கொடுத்துவிடுகிறார்கள். இந்த சட்டங்களால் அமைச்சராக இருந்த ஒருவரும் பாதிக்கப்பட்டார். எம்.பி. ஒருவரும், நீதிபதி ஒருவரும்கூட பாதிக்கப்பட்டதை செய்திகளாக பார்த்துள்ளோம்.

எனவே வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தையும், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தையும் தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தோம்.

மதிக்கிறோம்

நாங்கள் பெண்களை மதிக்கிறோம். ஆனால், அதே நேரத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமை, ஆண்களுக்கும் சமமாக வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. பெண்களை காப்பாற்றும் சட்டம், ஆண்களையும் காப்பாற்ற வேண்டும் என்று தான் எங்கள் சங்கம் கேட்கிறது.
சர்வதேச ஆண்கள் தினத்தில் கணவர்களின் உரிமையை காப்பாற்ற இந்த போராட்டத்தை நடத்தினோம்.


இவ்வாறு அவர் கூறினார்.

மனைவிகளின் கொடுமை

கமிஷனரிடம் மனு கொடுக்க வந்தவர்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளையும் கையில் பிடித்தபடி வந்தனர். மனு கொடுக்க வந்தவர்கள் அனைவருமே மனைவிகளால் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் என்று கூறினார்கள். ஒருவர் மனைவியின் கொடுமையால், தனது தாயார் இறந்துபோனதாக தெரிவித்தார்.


இன்னொருவர் கூலிப்படையை அனுப்பி தன்னுடைய மனைவியே தன்னை அடித்து உதைத்தாள் என்று வேதனையோடு கூறினார். வந்தவர்கள் அனைவருமே மனைவிகளின் கொடுமைகளை நெஞ்சில் சுமந்தவர்களாக வந்திருந்தனர்.

ஆண்களுக்கென்று ஒரு நாள்

நவம்பர் 19-ம் நாளை உலக ஆண்கள் தினமாக அனுசரிக்கிறார்கள். அன்றைய தினம் இந்தியாவில் பல நகர்ங்களில் தர்ணாவும் ஊர்வலமும் நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். முக்கியமாக இன்றைய நிலையில் இந்திய ஆண்கள் எதிர்கொள்ளும் சட்டபூர்வ பயங்கரவாதத்தையும், ஆண்களை பொருளாதார ரிதியிலும் மன ரீதியாகவும் கொடுமைப் படுத்தி அடித்து நொறுக்கி அழியச் செய்யும் நோக்கத்தில், சில பெண்கள் சார்ந்த NGO நிறுவனங்களும் அரசு இயந்திரமும் கைகோர்த்துக் கொண்டு ஆணெதிர் சட்டங்களால் அனைத்து ஆண்களையும் அவர்களைப் பெற்ற பாவத்திற்காக அவர்தம் பெற்றோர்களையும் தாக்கி வரும் இந்த நிலையையும் எதிர்த்துப் போராடும் நாளாக இந்த நாள் அமைகிறது.

சில கோஷங்கள்:

1. We demand a separate ministry for men.

ஆண்கள் நலனுக்கென்று தனி அமைச்சகம் தேவை

2. Fathers are not visitors, they are parents too!

தந்தையரெல்லாம் விருந்தினரல்ல; அவர்களும் பெற்றோரே

3. Husbands are not free ATM machines

கணவன்மாரெல்லாம் இலவச ATM மெஷின்களல்ல

4. Stop men’s suicide

ஆண்களின் தற்கொலைகளை தடுத்திடுக

5. Stop creating a fatherless society

தகப்பனற்ற சமுதாயம் உருவாகும் நிலையை மாற்றுக.

6. Offence is an offence, men or women.

ஆணோ, பெண்ணோ, குற்றம் குற்றமே!

7. Punish women too for domestic violence.

குடும்ப வன்முறைக்கு பெண்களுக்கும் வேண்டும் தண்டனை

8. Banish alimony

ஜீவனாம்சத்தை ஒழித்திடுங்கள்

9. Stop legal terrorism

சட்டரீதியான் பயங்கரவாதத்தை நிறுத்துக

10. Stop elder abuse

வயது முதிர்ந்தோரைத் துன்புறுத்தாதீர்

11. Make laws gender-neutral

சட்டங்களை ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாக அமைத்திடுக.

12. Stop bias against men

ஆண்களுக்கு எதிரான ஒருதலைச்சார்பை நீக்குக

13. All men are not criminals; all women are not angels

அனைத்து ஆண்களும் குற்றவாளிகளல்ல; அனைத்து மகளிரும் புனிதர்களல்ல
-
14. Stop false cases on men

ஆண்கள்மேல் பொய் வழக்கு போடாதீர்

15. Draconian anti-male laws kill the family system

ஆணெதிர் கொடுங்கோன்மைச் சட்டங்களால் குடும்பமுறையே அழிபடும்

16. Men have only obligations and responsibilities, but no rights

ஆண்களுக்கு பொறுப்பும், கடமையும்தான் உள்ளது; உரிமைகள் ஒன்றும் கிடையாது

17. Men are forced to pay for the estranged wife; but what does he get in return?

பிரிந்துபோன மனைவிக்கு கொடுக்க வேண்டுமாம் கப்பம்; ஆனால் கணவன் பதிலுக்குப் பெறுவது என்ன?

கள்ளக்காதலால் விபரீதம் : பெற்ற குழந்தைகளை தாயே கொன்ற கொடுமை

நவம்பர் 18,2008 - செய்தி: தினமலர்

தஞ்சாவூர் : தஞ்சாவூரில் சிறுவர்கள் இருவர் கொல்லப்பட்ட வழக்கில், தாயின் கள்ளக்காதலே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ரோடு இந்திரா நகரைச் சேர்ந்தவர் முருகையன்; இவரது மனைவி ரேவதி(32). இவர்களது மகன்கள் விக்னேஷ் (8) மற்றும் தினேஷ் (6). "கடந்த 11ம் தேதி வீட்டில் விளையாடிய விக்னேஷ், தினேஷ் இருவரையும் காணவில்லை' என, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார் ரேவதி. "சரவணன் (31) என்பவர், நான் தனியாக இருப்பது தெரிந்து என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அதற்கு நான் உடன் படாததால் அவர் என் மகன்களை கடத்தி இருக்கலாம்' என புகார் செய்தார்.

விசாரணையில், பட்டுக்கோட்டை அருகே புதுஆறு கிளை வாய்க்காலில் கரை ஒதுங்கிய விக்னேஷின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து எஸ்.பி., சம்பத்குமார் கூறியதாவது:

கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்ததால், ரேவதிக்கு பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த சரவணனுடனும் தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில், ரேவதிக்கும் அவரது உறவினர் காட்டுக்குறிச்சி குணசேகரனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அதற்கு சரவணன் எதிர்ப்பு தெரிவித்தார். ரேவதி, குணசேகரன் இருவரும் ஆலோசித்து, "குழந்தைகள் இருவரையும் கொலை செய்து, அந்தப் பழியை சரவணன் மீது போட்டு விடலாம்' என முடிவு செய்தனர். அதன்படி, விக்னேஷையும், தினேஷையும், பெரியகோவில் அருகே கல்லணைக்கால்வாய்க்கு (புதுஆறு) குணசேகரன் அழைத்து சென்றார். அங்கு இருவரையும் ஒருவர்பின் ஒருவராக ஆற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். இவ்வாறு எஸ்.பி., சம்பத்குமார் தெரிவித்தார்.
================

பாரதி குறிப்பிட்ட புதுமைப் பெண் இவள்தானோ!

சரி. சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்:

The Protection Of Women From Domestic Violence Act, 2005, Section 3

(a) "aggrieved person" means any woman who is, or has been, in a domestic relationship with the respondent and who alleges to have been subjected to any act of domestic violence by the respondent;

q) "respondent" means any adult male person who is, or has been, in a domestic relationship with the aggrieved person and against whom the aggrieved person has sought any relief under this Act:Provided that an aggrieved wife or female living in a relationship in the nature of a marriage may also file a complaint against a relative of the husband or the male partner;

3. Definition of domestic violence.-
For the purposes of this Act, any act, omission or commission or conduct of the respondent shall constitute domestic violence in case it -
(a) harms or injures or endangers the health, safety, life, limb or well-being, whether mental or physical, of the aggrieved person or tends to do so and includes causing physical abuse, sexual abuse, verbal and emotional abuse and economic abuse; or
(b) harasses, harms, injures or endangers the aggrieved person with a view to coerce her or any other person related to her to meet any unlawful demand for any dowry or other property or valuable security; or
(c) has the effect of threatening the aggrieved person or any person related to her by any conduct mentioned in clause (a) or clause (b); or(d) otherwise injures or causes harm, whether physical or mental, to the aggrieved person.

http://www.vakilno1.com/bareacts/Domestic-Violence/Domestic-Violence-Act-2005.htm
--------------------
இந்தச் சட்டப்படி ஆண்கள்தான் குடும்ப வன்முறையில் ஈடுபடுவார்கள். பெண்கள் பாவம், மெல்லியலார்கள். வாயில் விரலை விட்டால் கடிக்கக்கூடத் தெரியாத பேதைகள்.

அப்பாவி ஆண்களே, வேண்டாம் உங்களுக்கு திருமணம் என்னும் புதைகுழி. தப்பித்துப் பிழையுங்கள்.

கள்ளக் காதலனுடன் உடன்கட்டை!

பெரியகுளம்: பெரியகுளத்தில் கள்ளக்காதலன் கொலை செய்யப்பட்டதால் கள்ளக்காதலி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுவல்லவோ கற்பு!
செய்தி: தினமலர்


தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை காந்திஜி தெருவை சேர்ந்தவர் முத்து (40). இவருக்கும் பாண்டி (42) என்பவரது மனைவி செங்கொடிக்கும் (37) கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் பாண்டி மனைவியை பிரிந்து விட்டார். செங்கொடியின் தந்தை பாலு (62) தனது மகளின் வாழ்க்கையை சீரழித்து விட்டதாக ஆத்திரமடைந்து முத்துவை ஈட்டியால் குத்தி நேற்று முன்தினம் கொலை செய்தார். வத்தலக் குண்டு காந்திநகரில் கள்ளக்காதலன் வீட்டில் வசித்து வந்த செங்கொடி கள்ளக் காதலன் முத்து கொலை செய்யப்பட்ட தகவலை கேட்டு விஷம் குடித்தார். வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
------------------
இதற்கும் அந்த பரிதாப பாண்டியை காரணமாக்கி அவர்மேல் வரதட்சணைக் கொடுமை வழக்கு போட்டாலும் போடுவார்கள்! சட்டம்தன் கைவசம் இருக்கிறதே, போட்டுத் தாக்கவேண்டியதுதானே!
இது போன்ற பெண்களுக்கு திருமணம் ஒன்று வேறு கேடா!

தொடரும் பொய் வழக்குகள்

இன்றுதான் செய்தித்தாள்களில் படித்தோம் - காவல்துறையினர் சகட்டுமேனிக்கு மக்களைக் கைதுசெய்து அவர்களின் தனிமனித உரிமைக்கும், சமூகத்தின் அவர்களுக்கு இருக்கும் மதிப்பு, நற்பெயர் இவற்றிற்கும் களங்கம் விளைவிக்கும் போக்கை நிறுத்தவேண்டும் என்று, இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி அவர்கள் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளதை. தகுந்த விசாரணையின்றி, வெறும் புகார்களின் அடிப்படையிலோ, சந்தேகத்தின் அடிப்படையிலோ ஒரு தனி மனிதனின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் கைது, சிறையிலடைத்தல் போன்ற செயல்பாடுகளைத் தவிர்க்க வெண்டும் என்று அந்த நீதிபதி வலியுறுத்தியிருக்கிறார்.

ஆனால் நடப்பது என்ன? ஒரு பெண் ஒரு கிழிந்த காகிதத்தில் "என்னை என் கணவர், அவருடைய தாய், தந்தை, அண்ணன், அண்ணி, தங்கை, அவளுடைய ஒரு மாத சிசு அனைவரும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்தார்கள்" என்று கிறுக்கிக் கொடுத்தால் போதும். உடனே அவர்கள் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுவார்கள். திங்கள் மாலை வரை ஜாமீனில் வெளிவரக்கூடாது என்பதற்காகவே!

இதுபோன்ற சட்டம் ஒன்றை வைத்துக்குக் கொண்டு, கணவர்கள், அவர்களுடைய வயதான பெற்றோர் போன்றவர்களின் உயிருடனும், உரிமைகளுடனும் ஒரு கோர விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்கள், கெடுமதியும் பேராசையும் பிடித்த பேய்ப்பெண்கள் சிலர். இத்தகைய கொடுமைக்கு காவல்துறையும் துணைபோகிறது. உச்ச நீதிமன்றமே இதனை "சட்டபூர்வமான பயங்கரவாதம்" என்று வர்ணித்துள்ளது.

மேலும் சென்னை உயர்நீதி மன்றத்தில் இதுபோன்ற புகார்கள் வந்தால் உடனே கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது; தீரவிசாரித்த பின்னர் தேவை இருந்தால் மட்டுமே கைது செய்யவேண்டும்; மேலும் கண்வனின் பெற்றோர், உறவினர்களைக் கைது செய்யக்கூடாது என்று ஒரு தீர்ப்பில் ஆணையிட்டுக் கூறியிருக்கிறார்கள். இதனை காவல்துறைத் தலைவர் அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் அனுப்பியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆனால் அந்தக் கொடுமை தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதன்கீழ் இன்றைய தினமணியில் வெளிவந்துள்ள செய்தியைப் பாருங்கள்:

வள்ளியூர், நவ. 12: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே வரதட்சிணை கேட்டு மனைவியை கொடுமை செய்ததாக, அவரது கணவர் உள்ளிட்ட 3 பேரை போலீஸஜ்ர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திசையன்விளை அருகே உள்ள அழகப்பபுரத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம் ஆசாரி மகன் மகராஜன் (22). இவர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.
இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த துரைராஜ் மகளான அருணாவுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் நடைபெற்றது.
பின்னர், அருணாவை மகராஜனின் அண்ணன் குமார் (31), தாய் சுப்பம்மாள் ஆகிய இருவரும் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தினராம்.
இதுதொடர்பாக அருணா திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில், ஆய்வாளர் ஜெயராஜ் வழக்குப் பதிந்து மகராஜன், குமார், சுப்பம்மாள் ஆகிய மூவரையும் கைது செய்தார்.
-----------------
இதுபோல் தொடர்ந்து நடந்தால் இந்திய ஆண்கள் திருமணம் என்னும் சமூகக் கட்டமைப்பு முறையின்மீதே நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என்பது திண்ணம்!

உங்களை வரதட்சணை பொய் வழக்கு தீண்டிவிட்டதா?

கவலைப் படாதீர்கள். உங்களுக்கு உதவி செய்ய இதுபோல் பாதிக்கப்பட்ட ஆண்கள் தொடங்கியிருக்கும் "இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம்" (Save Indian Family Foundation) என்றும் அமைப்பு என்றும் தயாராக இருக்கிறது.

இதை மிக அவசரமாக இங்கு நான் அறிவிக்க விழைந்ததற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.

சமீபத்தில் நாக்பூரில் ஒரு இளைஞர் ஒரு பெண்ணை காதலித்து மணந்தார். அவள்மேல் இருந்த ஆசையால் அவள் கேட்டதெல்லாம் செய்தார். அவர் கொட்டிய அன்பினால் திளைத்த அந்தப் பெண் இவனைத் தன் கையில் பொம்மைபோல் ஆட்டுவிக்கலாம் என்று முடிவு செய்து, அவரையும் அவருடைய பெற்றோரையும் சுடு சொற்களாலும் வேறுபல தீங்குகளாலும் கொடுமைப் படுத்தத் தொடங்கினாள். தாங்க முடியாத அந்தக் கணவன் அவளைக் கண்டித்தான். அவ்வளவுதான் - அந்த நச்சுப் பாம்பு 498A என்னும் வரதட்சணைச் சட்டத்தைக் கையிலெடுத்து அவனையும் அவனுடைய பெற்றோரையும் தீண்டிவிட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த அவமானத்தைத் தாங்காத அந்தக் கணவன் "தன் தற்கொலைக்கு இதுபோல் பொய்க் கேசுபோட்டு சித்திரவதை செய்த தன் மனைவியே காரணம்" என்று எழுதி போலீசுக்கு அனுப்பி விட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டான்.

இதுவே ஒரு பெண் செய்திருந்தால் உடனே அந்தக் கணவனையும் அவருடைய பெற்றோரையும் கைது செய்து 7 வருடம் உள்ளே தள்ளியிருப்பார்கள். அனால் இந்தத் தற்கொலையின் பேரில் ஒரு கேசு கூட பதிவு செய்யப்படவில்லை.

உடனே மேற்கூறிய அமைப்பினர் (Save Indian Family Foundation) சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து ஃபோன் செய்து, பத்திரிக்கையாளர்களைக் கூட்டி விவரம் அளித்த பிறகு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நண்பர்களே, உங்கள் மீதோ, உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் மீதோ இதுபோல் பொய் வரதட்சணை கேஸ் பதியப்பட்டால் உடனே கீழ்க்கண்ட நபர்களைத் தொடர்பு கொள்ளுங்கள். தற்கொலை ஒரு தீர்வல்ல. அநிதியை எதிர்த்துத் துணிவுடன் போராடுங்கள்:

  1. திரு. சுரேஷ் - 9941012958
  2. திரு. கிரீஷ் - 9381026333
  3. திரு. ராம்குமார் - 9941315784
  4. திரு. அமர்நாத் - 9840587653
  5. திரு. அரவிந்த் - 9941162085
  6. திரு. தீபக் - 9965108787
  7. திரு. பிரான்சிஸ் - 9962004649
  8. திரு. கலைச்செல்வன் - 9445119559
  9. திரு. ரஞ்சன் - 9840443555

பெண்கள் தற்கொலைதான் இன்றைய முதல்பக்க நியூஸ். ஊடகங்கள் எல்லாம் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைத்து ஊரைக் கூட்டும். ஆனால் ஆண்டுதோறும் 56000 மணமான ஆண்கள் தற்கொலை செய்துகொள்வதாக மத்திய அரசின் புள்ளிவிவர அமைப்பு கூறுகிறதே (National crime Records Bureau), எந்த ஊடகமாவது இதைப் பற்றி மூச்சுவிடுகிறதா என்று பாருங்கள்!

ஏனிந்த நிலை தெரியுமா? பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறோம், அவர்களுக்கு தொண்டு செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டு பல இயக்கங்கள், நிறுவனங்கள் இயங்குகின்றன. அவைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை, தனியார் நிறுவனங்கள் தவிர மத்திய மாநில அரசு இவை மூலம் கொள்ளை கொள்ளையாகப் பணம் கிட்டுகிறது. அதைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்பதற்காக நாடெங்கும் பெண்கள் தொடர்ந்து கொடுமைப் படுத்தப்படுவது போலவும், ஆண்கள் அனைவரும் ராக்ஷசர்கள்போல் கையில் எப்போதும் ஆயுதம் ஏந்தி பெண்களைக் குத்திக்கொண்டு திரிவது போலவும் ஒரு பொய்ச் சித்திரத்தை விதைத்து அதை இடைவிடாமல் பயாஸ்கோப்பு காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மை நிலை தெளிவாக வெளியே தெரிந்தால் இவர்களுக்குக் கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருக்கும் குபேரபுரி கொள்ளை போய்விடும்! ஆண்களுக்கு உதவி செய்ய எந்த நிதியும் கிடையாது. இதனால்தான் ஆண்கள்நிலை இந்தியாவில் இழிநிலையாக உள்ளது!

தாய்மையின் மேன்மை

கண்ணில் படுபவரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு 'எஸ்கேப்' ஆகும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு


சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில், பெற்ற குழந்தையை, கண்ணில்படுபவர்களிடம் கொடுத்து விட்டு, தாய்மார்கள் தப்பிச் செல்லும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு, சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் சிகிச்சைக்காக நாள்தோறும் வருகின்றனர். இலவச சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை நாடி வரும் மக்கள், தற்போது, பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர்.
கடந்த சில மாதங்களாக, இங்கு பிரசவத்திற்காக வரும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு நாளில், 30 முதல் 40 பேருக்கு இங்கு பிரசவம் நடக்கிறது. தவறான உறவால் கர்ப்பம் தரிக்கும் பெண்கள் சிலர், போலி முகவரி கொடுத்து, பிரசவத்திற்கு, "அட்மிட்' ஆகின்றனர். குழந்தை பிறந்த மூன்று, நான்கு நாட்களில், யாரிடமாவது குழந்தையை கொடுத்து, சற்று நேரம் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, "எஸ்கேப்' ஆகி விடுகின்றனர். மீண்டும் அந்த பெண்கள் திரும்பி வராததால், குழந்தையை வைத்துக் கொண்டு தவிப்பவர்கள், போலீசார் உதவியுடன் மருத்துவமனை டாக்டர்களிடம் ஒப்படைக்கின்றனர்.

சில நாட்களுக்கு முன், பள்ளிப்பாளையத்தை சேர்ந்த ரேணுகா என்பவர், தனக்கு குறைபிரசவத்தில் பிறந்த பெண் குழந்தையை, அதே வார்டில் இருந்த மற்றொரு பெண்ணிடம் கொடுத்துவிட்டு தலைமறைவானார். மற்றொரு பெண், மருத்துவமனை வளாகத்திற்குள் நின்று கொண்டிருந்த பார்வதி என்பவரிடம், "குழந்தையை வைத்திருங்கள் பாத்ரூம் சென்று வருகிறேன்' என கூறி சென்றார். நீண்ட நேரமாகியும் வராததால், பார்வதி, மருத்துவமனை போலீஸ் எஸ்.ஐ., அம்பிகாவிடம் நடந்த சம்பவத்தை கூறினார். அந்த குழந்தையை மருத்துவமனையில் வைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குழந்தையை தவிக்க விட்டு செல்லும் தாய்மார்களின் எண்ணிக்கை சேலம் அரசு மருத்துவமனையில் அதிகரித்த வண்ணம் உள்ளது. தவறான உறவுகளால் கர்ப்பம் தரிக்கும் பெண்கள், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். சேலம் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் சண்முகம் கூறுகையில், "நாள்தோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் பிரசவத்துக்கு வந்து செல்கின்றனர். டோக்கன் முறையை மருத்துவமனையில் அமல்படுத்தி வருகிறோம். குழந்தைகளை தவிக்க விட்டு செல்லும் பெண்களை, போலீஸ் உதவியுடன் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆதரவற்ற குழந்தைகளை சமூக நலத்துறை மூலம், தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைப்போம்' என்றார்.

வரதட்சணை தற்போது கேட்கப்படுகிறதா?

வரதட்சணைக் கொடுமைச் சட்டத்தின் அடிப்படையில் காவல் நிலையங்களில் மணமான பெண்களால் பதியப்படும் புகார்கள் இப்படித் தான் தொடங்குகின்றன:

  1. திருமணத்தின்போது 30 லட்சம் வரதட்சணை கொடுத்தோம். 300 பவுன் நகை போட்டோம்.
  2. மேலும் திருமணத்தை விமரிசையாக 10 லட்சத்துக்கு மேல் சிலவு செய்து நடத்தினோம்
  3. ஆனால் திருமணத்துக்குப் பின் மேலும் 2 லட்சம் ரூபாய் கேட்டு மிகவும் துன்புறுத்தினார்கள்.
  4. என் தகப்பனார் மிக ஏழை என்பதால் அவரால் இவ்வளவு கொடுக்கமுடியாது என்று பலமுறை எடுத்துச் சொல்லியும் கேட்காமல் என்னை அடித்துத் துன்புறுத்தினார்கள்
  5. என் கணவர், அவருடைய 85 வயது தந்தை, 80 வயது தாய், 27 வயது சகோதரி, அவளுடைய 2 வயது மகள் எல்லோரும் என்னை அடித்து கண்டபடி ஏசி கொடுமை செய்தனர்
  6. நான் என் பெற்றோரிடம் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்று நொந்துபோய் சொன்னேன்.
இதோடு சேர்த்து:
  • "என்னை கெட்ட வார்த்தை சொல்லித் திட்டினார்கள்"
  • மாமனார் தகாத முறையில் நடந்துகொண்டார்"
  • அவர்கள் எல்லோரும் மது அருந்திவிட்டு பாலியலைத் தூண்டும் விதமான மோசமான சினிமாப்படங்களைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்"
- இதுபோன்ற கொசுறு குற்றங்களையும் சேர்த்துக் கொள்வார்கள்.

வக்கீல்கள் இதுபோல் ஒரு template வைத்திருக்கிறார்கள். பெயர் போன்ற விவரங்களை உட்செலுத்தி உடனே ஒரு புகார் மனுவை தயார் செய்து அருகிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிந்து விடுவார்கள். பிரகென்ன, அவளுடைய அப்பாவிக் கணவன், அவனுடைய வயதான பெற்றோர், நிறை மாத கர்ப்பிணியான அவனுடைய சகோதரி, அவளுடைய 2 வயது குழந்தை அனைவரையும் உடனே கைது செய்து விடுவார்கள். ஏனெனில் இந்த Sec 498A IPC ஒரு cognizable offence. தனியாக கோர்ட்டில் போட்டுத் தன் ஜாமீன் பெறமுடியும். கணவனுடைய தாயாரும், சகோதரியும் பெண்ணினத்தில் அடங்க மாட்டார்கள், இந்த சட்டத்தை தாங்கிப் பிடிக்கும் NCW, AIDWA போன்ற இயக்கத்தினர்கள் மற்றும் அமைச்சர் ரேணுகா சவுத்திரி போன்றோர் கணிப்பில்!

சரி, இந்த பதிவைக் காணுறும் நண்பர்களே, தயவுசெய்து நீங்களே சொல்லுங்கள்:

1. நீங்கள் வரதட்சணை கொடுத்தீர்களா? அல்லது கேட்டீர்களா?

2. உங்கள் உறவினர், நண்பர்கள் யாரேனும் வரதட்சணை கேட்டு அல்லது கொடுத்து உங்களுக்கு நேரடியான செய்தி உண்டா?

3. கடந்த பத்து வருட கால கட்டத்தில் உங்களுக்குத் தெரிந்து யாரேனும் மனைவியை மீண்டும் மீண்டும் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தினார்களா?

4. உங்களுக்குத் தெரிந்து மனைவியை தற்கொலைக்குத் தூண்டுமளவுக்கு யாரேனும் வரதட்சணைக் கொடுமை செய்தார்களா?

5. முடிவாக உங்களுக்குத் தெரிந்து யாரேனும் இந்த 468A, Domestic Violence act, maintenance case, divorce போன்ற கேசுகளில் சிக்கியிருக்கிறார்களா?

தயவு செய்து உங்கள் பதில்களை மறுமொழியாக இடுங்கள் - தமிழிலோ, ஆங்கிலத்திலோ.

நன்றி.

விதவைப் பெண்ணை விற்க முயன்ற பெண்கள்

கொடுமை செய்வது என்பது ஆண்கள் மட்டுமே என்று குடும்ப வன்முறைச் சட்டத்தில் எழுதி வைத்து ஆண்களை வஞ்சனை செய்கிறார்களே, பெண்கள் ஒரு பாவமும் அறியாத பேதைகளா? கீழ்க்கண்ட செய்தியை வாசியுங்கள்:

சண்டிகார்: பஞ்சாபில், விதவைப் பெண்ணை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்க முயன்ற இரு பெண்களை போலீசார் கைது செய்தனர்.

பஞ்சாப், லூதியானாவைச் சேர்ந்த விதவை குர்மீத் கவுர். இவரை கர்ஜித் கவுர், சரண்ஜித் கவுர் என்ற இரு பெண்கள், வேறு ஒரு நபரிடம் 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்க முயன்றுள்ளனர். இதற்காக அந்த நபரிடம் இருந்து முன்பணமாக 10 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளனர்.இதுகுறித்து தகவல் அறிந்த ஜர்னல் சிங் என்பவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, விதவைப் பெண்ணை விற்க முயன்ற இரு பெண்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

அராஜகமான கைதுக்கு மன்னிப்பு கேட்ட இன்ஸ்பெக்டர்

முகபத்பீவீ என்னும் பெண்மணியை சட்ட விரோதமாகக் கைது செய்து லாக்கப்பில் வைத்துவிட்டு, பொய் ஆவணங்களைச் சமர்ப்பித்த இன்ஸ்பெக்டரை ஐகோர்ட்டு மன்னிப்புக் கேட்க வைத்தது.

மதுரை ஐகோர்ட்டில் ராமநாதபுரத்தை சேர்ந்த முகபத்பீவீ தாக்கல் செய்த ரிட் மனு:

வரதட்சணை வழக்கில் அனைத்து பெண்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா மற்றும் 12 போலீசார் கடந்தாண்டு செப்., 23ல் அதிகாலை 4.30 மணிக்கு என் வீட்டிற்கு வந்தனர். தொழுகையில் ஈடுபட்ட என்னை புடவை கூட கட்ட விடாமல் கைலியுடன் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். கைது நமுனாவை என் குடும்பத்தினரிடம் வழங்கவில்லை. மாஜிஸ்திரேட் முன்பு மாலை 6.30 மணிக்கு ஆஜர்படுத்தினர். நான் உடல்நிலை சரியில்லை என கூறினேன். கோர்ட் உத்தரவின்படி இரவு 7 மணிக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். என் கைது நமுனாவை சகோதரர் லியாகத் அலியிடம் பகல் 2 மணிக்கு வழங்கினர். அதில் காலை 11.30 மணிக்கு என்னை கைது செய்ததாக குறிப்பிட்டனர். போலீஸ் நடவடிக்கை சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலுக்கு புறம்பானவை. எனவே கோர்ட் அவமதிப்பு வழக்கில் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கோரினார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கே.சந்துரு பிறப்பித்த உத்தரவு:

இவ்வழக்கில் இன்ஸ்பெக்டர் 3 பதில் மனுக்களை தாக்கல் செய்துள்ளார். ஆவணங்களை பார்க்கையில் சுப்ரீம் கோர்ட் வழிமுறைகளை இன்ஸ் பெக்டர் மீறியுள்ளது தெரிகிறது. அவர் போட்ட பதில் மனுக்களில் அந்த மீறல்களை மறைக்க முயன்றுள்ளார். மனுதாரரை காலை 11.30 மணிக்கு கைது செய்ததாக ஒரு வாக்குமூலத்திலும், மற்றொன்றில் காலை 4.30 மணிக்கும் என குறிப்பிட்டுள்ளார். கோர்ட் அவமதிப்பு செய்ததுடன் பொய் ஆவணங் களையும் இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்துள்ளார். இன்ஸ்பெக்டருக்கு 51வயது எனவும், கோர்ட் தண்டனை வழங்கினால் பதவி உயர்வு பாதிக்கும் என அவரதுவக்கீல் குறிப்பிட்டுள்ளார். அதே வேளையில் தவறு செய்த இன்ஸ்பெக்டரை விடவும் முடியாது. இன்ஸ்பெக்டரை தண்டிப்பதன் மூலம் மனதளவில் பாதிப்புக்குள்ளான மனுதாரரை சமாதானப்படுத்த இயலும். இன்ஸ்பெக்டர் மனுதாரர் வீட்டிற்கு சென்று அவரிடம் மன்னிப்புகோர வேண்டும். மனுதாரர் அவரை மன்னித்தால் இன்ஸ்பெக்டர் கோர்ட் நடவடிக்கையில் இருந்து தப்ப இயலும். இவ்வாறு குறிப்பிட்டார்.

அதன்படி இன்ஸ்பெக்டர் முகபத்பீவீ வீட்டிற்கு சென்று மன்னிப்பு கோரினார். அதனை முகபத்பீவீயும் ஏற்றார். நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது இன்ஸ்பெக்டர் மன்னிப்பு கேட்ட விவரத்தை அவரது வக்கீல் தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் மன்னிப்பை ஏற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

செய்தி: தினமலர்.

இதுபோன்ற எவ்வளவு அநியாயங்கள் நடந்துகொண்டிருக்கின்றனவோ! எல்லோருமா ஐகோர்ட்டில் ரிட் மனு போட்டு சிலவு செய்து அலைந்து கொண்டிருக்க முடியும்? ஏன், கணவனின் தாய், சகோதரிகள் பெண்களில் சேர்ந்தவர்கள் இல்லையா? அவர்களுக்காக வாதாட இந்த பெண்கள் நல அமைச்சரோ, NCW, AIDWA போன்ற அமைப்புக்களோ ஏன் முன்வரவில்லை?

மக்கள்தான் குரல் எழுப்பவேண்டும்.