மாஜி துணவேந்தர் மீதான பொய்வழக்கு ரத்து!

செய்தி: தினமல்ர் : சென்னை: மருமகள் தற்கொலை வழக்கில், சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் மற்றும் அவரது மனைவி, மகள் மீதான குற்றச்சாட்டுகளை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.

சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் மனோகரன். இவரது மகன் நவீன்குமாருக்கும், கோவில்பட்டியைச் சேர்ந்த மதுதேவிக்கும் 2000 ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. கணவன் மனைவிக்கிடையே பிரச்னை ஏற்பட்டது. நவீன்குமாருக்கும், "டிவி' நடிகை நிர்மலாவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2006 ஜூலை 1ம் தேதி மதுதேவி, தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இதையடுத்து நவீன்குமார், முன்னாள் துணைவேந்தர் மனோகரன் மற்றும் குடும்பத்தினர் கனகவள்ளி, உமா செல்வகுமார் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர். "டிவி' நடிகை நிர்மலாவும் முன்ஜாமீன் பெற்றார். இவ்வழக்கு தொடர்பாக, சென்னை மகளிர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட்டில் மனோகரன், கனகவள்ளி, உமா செல்வகுமார் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை நீதிபதி கிருஷ்ணன் விசாரித்தார். மூவர் சார்பிலும் சீனியர் வக்கீல் ஸ்ரீராமுலு, வக்கீல்கள் விஜயகுமார், கோவி.கணேசன் ஆகியோர் ஆஜராயினர். நீதிபதி கிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு:

மதுதேவி தற்கொலை செய்துகொள்ளும்போது, சம்பவ இடத்தில் மனுதாரர்கள் இல்லை. நவீன்குமார், மதுதேவி இருவருக்கும் தொலைபேசியில் உரையாடல் நடந்துள்ளது. மதுதேவி தான் நவீன்குமாரை அழைத்துள்ளார். இதில், மனுதாரர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. கணவன், மனைவி இடையே நடந்த உரையாடல் எதுவும் யாருக்கும் தெரியாது. உரையாடலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே ராஜா என்பவர் தாக்கல் செய்துள்ளார். அந்த உரையாடலில் கூட வரதட்சணை கேட்பதாக இல்லை. நவீன்குமார் இரண்டாவது திருமணம் பற்றி தான் உள்ளது. வரதட்சணை கோரினால் மட்டுமே இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 304 (பி) பொருந்தும். இந்த வழக்கைப் பொறுத்தவரை அவ்வாறு எதுவும் இல்லை. எனவே, வரதட்சணைக் கொடுமை எதுவும் இல்லை.

மனுதாரர்களுக்கு எதிரான வழக்கை நடத்த, மகளிர் கோர்ட்டில் ஆரம்ப முகாந்திரத்துக்கான ஆதாரங்கள் எதையும் அரசு தரப்பு தாக்கல் செய்யவில்லை. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிரான வழக்கை தொடர எதுவும் இல்லாதபோது, வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கை தொடர்ந்து நடத்துவது என்பது வீண் வேலை. எனவே, இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் ரத்து செய்யப்படுகின்றன. மனுக்கள் ஏற்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

ஆண்களைப் பழி வாங்க தற்கொலையும் ஒரு ஆயுதம்!

தினமலரில் வந்துள்ள இந்தச் செய்தியைப் படியுங்கள்:

பெண் போலீஸ் தீக்குளித்து தற்கொலை: ஆயுதப்படை போலீஸ்காரர் சஸ்பெண்ட் : ஆகஸ்ட் 25, 2008

கோவை: காதலித்து ஏமாற்றியதால், பெண் போலீஸ் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட கோவை மாநகர் ஆயுதப்படை போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

உடுமலை அருகேயுள்ள தளியை சேர்ந்த ரங்கராஜன் மகள் ஹேமலதா(25); கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை நான்காவது பட்டாலியனில், போலீசாக பணியாற்றி வந்தார். இவர், கோவை மாநகர் ஆயுதப்படை போலீசில் பணியாற்றும் சுப்பையாவை காதலித்துள்ளார். சமீபத்தில் சுப்பையனுக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இச்சூழ்நிலையில், ஹேமலதா சில நாட்களுக்கு முன் தீக்குளித்து, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

குனியமுத்தூர் போலீசார் விசாரித்து, ஹேமலதா மீது தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி ஹேமலதா பரிதாபமாக இறந்தார். போலீஸ் விசாரணையில், அவரை காதலித்து விட்டு, வேறு ஒரு பெண்ணை சுப்பையா திருமணம் செய்ய முடிவு செய்ததால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிந்தது.

ஆயுதப்படை போலீஸ்காரர் சுப்பையா மீது, தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையில், தூத்துக்குடியில் சுப்பையாவுக்கு திருமணம் நடந்து முடிந்தது. விசாரணை மேற்கொண்ட கோவை போலீஸ் கமிஷனர் மஹாலி, பெண் போலீசை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட சுப்பையாவை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.
----------------------------------

காதலித்த பெண்கள் பலர் வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொள்வதில்லையா? "ஒரு தலை ராகங்கள்" போன்ற நிகழ்வுகள் நடப்பதில்லையா? உளவியல் ரீதியான காரணங்களால் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு அந்த ஆண் எப்படி ஆட்டோமேடிக்காக தற்கொலைக்கு தூண்டியவனாக ஆவான்? விசாரணை ஏது நடக்காமலேயே ஆணாகப் பிறந்த பாவத்திற்காக மட்டும் அவன் தண்டனையை அனுபவிக்க வேண்டுமா?

இவற்றிற்கெல்லாம் இந்தச் சமூகம் பதில் சொல்ல வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது!

ஒருதலைச் சார்பு கண்ணோட்டம் தவிர்க்கப்படவேண்டும். Laws should be gender-neutral. அனைத்துச் சட்டங்களும் இரு பாலருக்கும் சமமான தாக்கம் கொண்டவையாக அமைய வேண்டும். அனைத்துத் துறைகளிலும் பெண்கள் ஆண்களைவிட இன்னும் அதிகமாக முன்னேறியிருக்கிறார்கள். இன்னும் என்ன பெண் பாவம்!

ஆண்கள் முன்ஜாமீன் வாங்கிக் கொண்ட பின்னரே திருமணம் செய்து கொள்ள வேண்டும்!

சென்னையில் மட்டுமே தினம் தினம் பல கணவர்கள், அவர்தம் பெற்றோர், தங்கை, அக்காள் போன்றோர் பெண்கள் தொடுக்கும் பொய் வரதட்சிண வழக்குகளின் பேரில் கைது செய்யப் படுகின்றனர்.

பத்து லட்சம் கேட்டார்கள், 20 லட்சம் கேட்டார்கள் என்று இஷ்டத்துக்கு ரீல் விடுகிறார்கள். செய்தி நாளேடுகளும் ஊடகங்களும் மனைவி கொடுத்த பொய் புகாரில் கண்ட குற்றச் சட்டுக்களை பரபரப்பாக தலைப்பிட்டு பிரசுரிக்கிறார்களயன்றி பாதிக்கப்பட்ட கணவன் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் தரப்புச் செய்தியை வாங்கிப் போடுவதேயில்லை. இருதரப்பு செய்திகளையும் வாசகர்களுக்கு திரட்டி அளிப்பது அவர்கள் கடமையல்லவா? ஏன் அவர்கள் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்றார்கள்!

ஆண்களே, நீங்கள் எல்லோருமே கொடுமைக்கார வில்லன்களா, அல்லது அனைத்துப் பெண்களுமே குணக் குன்றுகளா? கணவனையும் தன் கைக்குழந்தையையுமே கொல்லும் எவ்வளவு பெண்களின் கதையைக் கேட்கிறோம். கள்ளக் காதலனுடன் சேர்ந்து ஓடிப் போகும் குழந்தை பெற்ற பெண்கள் எவ்வளவு பேர்! ஒட்டு மொத்த ஆண்குலத்தின் மேலேயே ஏன் இந்த வெறுப்புப் பிரசாரம்? இத்தகைய நியாயமற்ற போக்கு நீடிக்குமானால் இந்தியாவில் இனி குடும்ப வாழ்க்கை முறை என்பது அறவே அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது.

பல கணவன்மார்களும் அவர்தம் குடும்பங்களும் பொய் வழக்குகளால் தங்கள் வாழ்க்கையே சின்னாபின்னமாகி, கேட்பாரின்றி மெளனமாய் அழுதுகொண்டிருக்கின்றன.

ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைக் கவனித்தால் இதில் ஒரு pattern அல்லது ஒரு ஒற்றுமை தென்படுகின்றன:-
கணவன் மனைவிக்கு இடையில் ஏதோ சிறு ஒரு பிணக்கு இருக்கிறது என்றால் அது உடனே வரதட்சிணைக் கொடுமை என்று உரு மாற்றப்படுகிறது. இதனால் குடும்பங்கள் உருக்குலைகின்றன.
சட்டத்தை மதிப்பவனாக உள்ள அப்பாவி கணவன்தான் கைது செய்யப்படுகிறான். ஒரு பேட்டை வஸ்தாதோ, ரவுடியோ கைது செய்யப்படுவதில்லை. கணவன் பெரும்ப்பாலும் மத்திய தர வகுப்பிலோ, பணம் படைத்தவனாகவோ இருந்தால் மிரட்டலும், கைதும் நடக்கிறது. அன்றாடம் குடித்துவிட்டு வந்து பெண்டாட்டியை அடிக்கும் தள்ளுவண்டி இழுப்பவர்களோ, வேறுவகை தொழிலாளியோ கைது செய்யப்படுவதில்லை. ஏன், பசை இருந்தால்தானே கைது, மிரட்டல் என்று பணம் பிடுங்கலாம்!
மனைவி சொல்லுவது எல்லாமே சத்தியம், ஆண் சொல்லுவது எதுவானாலும் ஏற்றுக்கொள்ப் படமாட்டாது என்று போலீஸ் செய்லபடுவது போல தோன்றுகிறது. கோர்ட்டு என்ன சொன்னால் என்ன? மாண்புமிகு நீதிபதி ரகுபதி ஆணையிட்டால் என்ன ? போலீஸ் கைது செய்துகொண்டு தான் இருப்போம் என்ற நிலையில் தமிழக போலீஸ் இருப்பதாய் தோன்றுகிறது

பல செய்திகள் / குற்றச்சாட்டுகள் நம்பத் தகுந்ததாக இல்லை : எடுத்துக் காட்டாக: சிங்கப்பூரில் பெரும் சம்பளம் வாங்கும் ஒருவர் ரூ 3 லட்சம் வரதட்சணை கேட்டதாயும், ஆயினும் திருமணமாகி 6 வருடங்களாகிவிட்டதாகவும் சொல்லும் இந்த செய்தியை கேட்டால் நம்பும்படியில்லை. ஒரே நாளில் புகார் கொடுக்கப்பட்டு அடுத்த நாளே கணவன் கைதாகிறான்!!. திருமணக்கூடத்திலேயே முதியோர் கைது செய்யப்படுகின்றனர். இதே வேகத்தில் எல்லா விஷயங்களிலும் போலீஸ் நடவடிக்கை எடுத்திருந்தால் தீவிரவாதம் இந்தியாவில் ஒரே வாரத்தில் ஓய்ந்து போயிருக்கும் !!

போலீஸ் கணவன் மீது பெண் வரதட்சணை புகார்

செய்தி - தினமலர் :: ஆகஸ்ட் 20,2008

மேலூர்: வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக, போலீஸ் வேலை பார்க்கும் கணவன் உட்பட 6 பேர் மீது, பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

மதுரை மாங்குளத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் மகள் பொன்முத்து(30). அத்தை மகன் மணிகண்டனுக்கும், இவருக்கும் திருமணம் நிச்சயம் செய்த போது, 15 சவரன் நகையும், 40 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் தருவதாக பேசப்பட்டுள்ளது. ஆனால், இதை பெண் வீட்டார் தரமுடியாமல் போகவே, நிச்சயம் செய்த திருமணம் நின்று போயுள்ளது. இதன் பிறகு, மேலூர் போலீசில் புகார் செய்யப்பட்டு இவர்களுக்கு 8.2.06ல் திருமணம் நடைபெற்றுள்ளது.
சென்னையில் உள்ள, போலீஸ் பட்டாலியனில் மணிகண்டனுக்கு வேலை கிடைக்கவே, பொன்முத்துவை அவரது பெற்றோர் வீட்டில் அவர் விட்டு சென்றுள்ளார். சேர்ந்து வாழ பலமுறை அழைத்தும் வரதட்சணை நகை, பணம் கொடுக்காத வரை வாழ முடியாது என்று மணிகண்டன் கூறி உள்ளார்.மேலூர் கோர்ட் உத்தரவின்படி, மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்கு பதிவு செய்து மணிகண்டன், அவரது தாயார் தொட்டிச்சி(45), சகோதரர்கள் சுரேஷ்(28), ராஜ்குமார்(26), தாய்மாமன்கள் செல்லத்துரை(55), நாகராஜன்(48) ஆகியோரை தேடி வருகின்றனர்.

--------------

இதில் ஒரு முக்கியமன விஷயத்தைக் கவனியுங்கள். அந்தப் பெண் தரப்பு செய்தியைத்தான் பிரசுரிக்கிரார்கள். ஏனெனில், "அய்யோ பாவம், ஒரு பெண்ணை வரதட்சினைக் கொடுமை செய்தார்கள்" என்றால்தன் வாசிப்பவர்கள் மனம் உருகிவிடுவார்கள். அந்த கணவன் மற்றும் அவர்கள்வீட்டார்கள் வில்லன் லிஸ்டில் வந்துவிடுவார்கள். நியாயம் எந்தப் பக்கம் என்பதெல்லாம் கவலையே கிடையாது!

ஆண்களே வேண்டாம் இந்த விஷப் பரீட்சை! கல்யாணம் என்றாலே காததூரம் ஓடுங்கள்! 498A உங்களைத் துரத்துகிறது!

குடும்பப் பிரச்னைகளுக்கு கைது, காவல் இவை தீர்வு அல்ல - உயர்நீதி மன்றம்

"கணவன் - மனைவிக்கு இடையேயான குடும்பப் பிரச்னைகளை கையாளும் போது, இயந்திரகதியாக காவலில் வைக்க உத்தரவிடக் கூடாது. போதுமான முகாந்திரத்தின் அடிப்படையில் தான் காவலில் வைக்க உத்தரவிட வேண்டும்" என, மாஜிஸ்திரேட்களுக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை ஐகோர்ட் நீதிபதி ரகுபதி பிறப்பித்த உத்தரவு:

போலீசாருக்கு தகுந்த உத்தரவுகளை அளித்திருந்தாலும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. ஒருவரை காவலில் வைக்க போலீஸ் அதிகாரி கோரும்போது, அதற்கான அவசியம் உள்ளதா என, மாஜிஸ்திரேட் ஆராய வேண்டும். காவலில் வைக்க போதுமான முகாந்திரம் உள்ளது என்றும் 24 மணி நேரத்தில் புலன்விசாரணை முடியாது என்றும் கருதினால் காவலில் வைக்க உத்தரவிடலாம்.

மனித உரிமை மீறல்கள், தனிநபர் சுதந்திரத்தில் மீறல்கள் ஆகியவற்றை கடுமையாக கருத வேண்டும். வரதட்சணை சாவு, கொலை, தற்கொலை, காயம் ஏற்படுத்துதல் போன்ற வழக்குகளைத் தவிர மற்றபடி கணவன் - மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்னைகள் குறித்து விசாரணை நடத்த போலீசாருக்கு அதிக நேரம் ஆகாது. இப்பிரச்னைகளுக்காக இயந்திரகதியாக காவலில் வைக்க உத்தரவிடக் கூடாது. போதுமான முகாந்திரம் இருக்க வேண்டும்.
ஒருவரை காவலில் வைக்க போலீசார் கோரும்போது, கேஸ் டைரியை இணைக்க வேண்டும். காவலில் வைக்க நியாயமான காரணங்கள் இருக்கிறதா என்பதை மாஜிஸ்திரேட் பார்க்க வேண்டும்; இயந்திரகதியாக உத்தரவு பிறப்பிக்கக் கூடாது. கணவன், மனைவி, குடும்பத்தினருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதற்காக கைது, காவல் ஆகியவை தான் விடை என்பது அல்ல. ஒரு பிரச்னை குறித்து விவரங்களை சேகரித்து கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டிய வேலையை போலீசார் செய்ய வேண்டும். எந்தப் பிரச்னையானாலும் அதை தீர்க்க சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் கோர்ட் அல்லது குடும்ப நல கோர்ட்டுக்கு அனுப்ப வேண்டும். புகார் மீது விசாரணை என போலீஸ் நிலையங்களில் பஞ்சாயத்து நடத்த அனுமதிக்கக் கூடாது.

இவ்வாறு நீதிபதி ரகுபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்

விவாகரத்தான கணவருக்கு மகனை காட்ட மறுப்பு

ஏற்கனவே உத்தரவிட்டபடி விவாகரத்தான கணவரிடம் மகனை காட்ட மறுத்த பெங்களூரு நர்சிங் கல்லூரி பேராசிரியைக்கு மதுரை ஐகோர்ட் கிளை கண்டனம் தெரிவித்தது.

பெங்களூரு லிங்கராஜபுரத்தை சேர்ந்தவர் சிம்சன்ராஜ். இவருக்கும், மதுரை போடிலைனை சேர்ந்த ஆல்பிரட் மகள் பெர்லின் ஆல்பிரட்டுக்கும் 2002ல் திருமணம் நடந்தது. மார்க் ஏதன்(4) என்ற மகன் உள்ளார்.

பெர்லின் பெங்களூருவில் நர்சிங் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிகிறார். திருமணம் ஆன சில மாதங்களில் பெர்லினுக்கும், கணவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. 2 பேரும் விவாகரத்து கோரி பெங்களூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் பெர்லினுக்கு கள்ளத்தொடர்பு இருப்பது தெரிந்து சிம்சன் ராஜ் பெங்களூரு போலீசில் புகார் கொடுத் தார். போலீசார் விசாரித்து பெர்லின் உட்பட 6 பேரை கைது செய்தனர். பெங்களுருவில் விவாகரத்து வழக்கு நடந்த நிலையில் பெர்லின் மதுரை குடும்ப நலகோர்ட்டில் தனியாக வழக்கு தொடர்ந்தார்.

அவ்வழக்கில் சிம்சன் ராஜ் முகவரி மாற்றி கொடுக்கப்பட்டதால் அவருக்கு அனுப்பப்பட்ட சம்மன் திரும்பி வந்தது. சிம்சன்ராஜ் தரப்பில் பதில் இல்லாததால் பெர்லினுக்கு ஆதரவாக தீர்ப்பு கூறப்பட்டது. மேலும் "மகன் மார்க் ஏதனை பெர்லினிடம் ஒப்படைக்கவும்" கோர்ட் உத்தரவிட்டது. மார்க் ஏதனை அழைத்து செல்ல போலீசார் வந்த போது தான் மதுரை கோர்ட்டில் வழக்கு நடந்த விவரங்கள் சிம்சன் ராஜூக்கு தெரிய வந்தது. இத்தகவல்களை குறிப்பிட்டு ஐகோர்ட் கிளையில் சிம்சன் ராஜ் தாக்கல் செய்த வழக்கில், "மதுரை கோர்ட் ஒரு தரப்பாக அளித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும். மகனுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்" எனக் கோரினார்.

இவ்வழக்கை விசாரித்த கோர்ட், "ஒவ்வொரு சனி, ஞாயிறு கிழமைகளில் பெங்களூரு அசெம்பளி ஆப் காட் சர்ச்சில் மார்க் ஏதனை பெர்லின் சிம்சன் ராஜிடம் காட்ட வேண்டும்' என உத்தரவிட்டது. ஆனால் பெர்லின் காட்டவில்லை. இதனால் மகனை காட்ட உத்தரவிட கோரி சிம்சன்ராஜ் மீண்டும் ஐகோர்ட்டில் மனு செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரபா ஸ்ரீ தேவன், எம்.ஜெயபால் கொண்ட பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: "மைனர் சிறுவனை தந்தையிடம் காட்டும்படி கோர்ட் உத்தரவிட்டும் பெர்லின் தவிர்த்தது வேதனையளிக்கிறது. சிறுவன் மன உளைச்சலுக்கு ஆளாக கூடாது என்பதற்காக இந்த உத்தரவை கோர்ட் பிறப்பித்தது. தற்போது பெர்லின் உடல்நலம் சரியில்லை என ஆஜராகவில்லை. அவருக்கு உடல்நலம் சரியில்லாதபோது மகனை பார்த்து கொள்ள அவரது தந்தைக்கு முழு அதிகாரம் உள்ளது. வனஸ்வாடி இன்ஸ் பெக்டர் மப்டியில் பெர்லின் வீட்டிற்கு சென்று அவரது உடல் நலம் குன்றியிருக்கிறாரா என தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் பெர்லின் மீது கோர்ட் கடுமையாக நடந்து கொள்ளும். "

"25.7.2008ல் மாலை 5 மணிக்கு மார்க் ஏதனை அவரது தந்தை சிம்சன் ராஜிடம் ஒப்படைக்க வேண்டும். மீண்டும் சிறுவனை 27.7.2008ல் மாலை அவரது தாயாரிடம் ஒப்படைக்க வேண்டும். பெர்லின் தனது வழியை இனியாவது திருத்தி கொள்வார் என்றும், கோர்ட் உத்தரவுகளை புரிந்து கொள்வார் எனவும் கோர்ட் நம்புகிறது" - இவ்வாறு உத்தரவிட்டனர்.

~ செய்தி: தினமல்ர்

61 வயது மூதாட்டி வரதட்சிணை புகார்!


பெங்களூருவைச் சேர்ந்த 61 வயது அம்மையார் ஒருவர், தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கணவருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


பெங்களூருவைச் சேர்ந்தவர் வேங்கடலட்சுமி. தற்போது இவருக்கு 61 வயதாகிறது. இவரது கணவர் சோமப்பா(65). இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் வேங்கட லட்சுமி, பெங்களூரு பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில்,"என் கணவர், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டு விட்டார். அவருடன் வாழ முயற்சித்தேன். அதற்காக அவரை தொடர்புகொண்டபோது, அதிக வரதட்சணை கேட்டு துன்புறுத்தினார். அவரது இரண்டாவது மனைவியும் சேர்ந்து கொண்டு, என்னை கொடுமைப்படுத்தினார். இந்த வயதில் வரதட்சணைக்கு எங்கு போவேன். என் கணவர் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த கோர்ட், சோமப்பா வசிக்கும் பகுதியில் உள்ள ஜே.சி.நகர் போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகளை அழைத்து, இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது. 61 வயது பெண், தனது கணவர் மீது வரதட்சணை புகார் கொடுத்த விவகாரம், பெங்களுருவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- செய்தி: தினமலர்
அடுத்து மனைவி இறந்து பத்து வருடங்கள் கழித்து அவருடைய பேய் வந்து வரதட்சிணை புகார் கொடுக்கும்; அதன்படி கணவனும் கைது செய்யப்படுவான்! நடந்தாலும் ஆச்சரியமில்லை. திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள் இதற்கெல்லாம் தயாராக இருக்கவேண்டும்.

வணக்கத்திற்குறிய தாய்க்குலம்

நாசரேத்: மகளை தன் கள்ளக் காதலனுக்கே மணம் முடித்து வைக்க முயன்ற தாயைத் தடுக்க முடியாததால் மணமுடைந்து தூக்கில் தொங்கினார் மகன்.

நெல்லை அருகே நாசரேத்தில் இச் சம்பவம் நடந்துள்ளது.நாசரேத் ஜனகராஜ் தெருவை சேர்ந்தவர் கலைச் செல்வன். இவரது மனைவி செல்லத்தாய் என்ற ராணி. இவர்களுக்கு பாக்கியராஜ் என்றொரு மகன் உள்ளார்.

கலைச்செல்வனை விட்டு சில ஆண்டுகளுக்குமுன் பிரிந்தார் செல்லத்தாய். பின்னர் தங்கத்துரை என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லிசா, ஆஷா என்ற இரு மகள்கள் உள்ளனர்.இதற்கிடையில் மனைவி வேறொருவரை திருமணம் செய்ததால் மனமுடைந்த முதல் கணவர் கலைச்செல்வன் சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.அதன் பிறகு அவரது மகன் பாக்கியராஜ், தாயுடன் இருக்கப் பிடிக்காமல் மதுரையில் உள்ள ஒரு பழைய இரும்பு கடையில் வேலை செய்து வந்தார். 2 மாதத்திற்கு முன்புதான் பாக்கியராஜ் மீண்டும் ஊர் திரும்பினார்.ஊரில் தனது தாய்க்கு பஞ்சாயத்து கவுன்சிலர் உள்பட பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அப்படி கள்ளத் தொடர்பு வைத்திருந்தவர்களில் ஒருவர் செல்லத்தாயின் மகள் லிசாவை தனக்கு திருமணம் செய்து தர கேட்டுள்ளார். அதற்கு செல்லதாயும் சம்மதித்துள்ளார்.இதற்கு பாக்கியராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்படவே தங்கை லிசா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுச் சென்று விட்டாராம். இதனால் மனமுடைந்த பாக்கியராஜ் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து நாசரேத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செய்தி: தட்ஸ் தமிழ்

நன்றி: என் பக்கம்

திருமணமா தூக்கு தண்டனையா!

வரதட்சணை கொடுமைக்கு தூக்குத் தண்டனை?- மத்திய அரசு பரிசீலனை

செய்தி: நியூ இந்தியா நியூஸ்


இந்தியாவில் வரதட்சணை கொடுமைக்கு பலியாகும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது. இது தொடர்பாக பெண்கள் தேசிய கமிஷன் ஆய்வு செய்தது. முடிவில் அது அறிக்கை
ஒன்றை தயார் செய்து பெண்கள் மேம்பாட்டு அமைச்சகத்திடம் கொடுத்துள்ளது. அந்த அறிக்கையில் வரதட்சணை கொடுமையை கட்டுப்படுத்தி, தடுக்க எத்தகைய நடவடிக்கைகள் எடுக்க
வேண்டும் என்று பல்வேறு பரிந்துறைகளை பெண்கள் தேசிய கமிஷன் வரையறுத்துக் கொடுத்துள்ளது. அதில் முக்கிய அம்சமாக வரதட்சணை கொடுமை செய்யும் கணவன், மாமனார், மாமியார், நாத்தனாருக்கு தண்டனை காலத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது வரதட்சணை கொடுமை செய்ததாக கைது செய்யப்படுபவர்களுக்கு அதிக பட்சமாக 7 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை 10 ஆண்டு தண்டனையாக மாற்ற வேண்டும். வரதட்சணை கொடுமை மிக கொடூரமான கொலையாக இருக்கும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை அல்லது தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை மத்திய பெண்கள் மேம்பாட்டு அமைச்சகம் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. வரதட்சணை சாவுகளை
தடுக்க இத்தகைய கடுமையான சட்டம் உதவும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக அரசியல் சட்டத்தின் 304 (பி). பிரிவை திருத்தம் செய்ய ஆய்வு நடந்து வருகிறது.அரசு ஊழியர்கள்
தங்கள் திருமணத்தின் போது எவ்வளவு நகை, பணம் வாங்கினார்கள் என்பதை அரசுக்கு தனி ஆவணத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற பரிந்துரையும் தீவிர ஆய்வில் உள்ளது.

திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட நகை, பணம் குறித்து மனைவி, மற்றும் மாமனாரிடம் ஆவணத்தில் கையெழுத்து பெற்று அரசு ஊழியர் கொடுக்க வேண்டும் என்று ஒரு கருத்து கூறப்பட்டுள்ளது.அரசு ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி போடும் இந்த நடவடிக்கைகளுக்காக வரதட்சணை தடுப்பு விதியில் புதிதாக 8 சி. என்ற பிரிவை உருவாக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவை அமலுக்கு வந்தால் வரதட்சணை பலி கணிசமாக
குறையும்.

இப்போதே பொய் கேசு போட்டு கணவன்மார்களையும் அவர்கள்தம் குடும்பத்தினரையும் பாடாய்ப் படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த பரிந்துரையை அமுல்படுத்திய பின் திருமணத்திற்குப் பின் கணவன்மார்கள் எல்லோரும் தூக்குக் கயிற்றை நினைத்து பயப்பட்டு மனைவியின் காலடியில் கிடக்கவேண்டியதுதான். கணவனின் தாயாரும் மருமகளின் காலைக் கழுவி காலத்தை ஓட்ட வேண்டியதுதான்!

இந்திய ஆண்களே, இத்தகைய கொடுமைகளிலிருந்து தப்பவேண்டுமானால் இந்தியப் பெண்களை திருமணம் செய்துகொள்ளாதீர்கள். இந்தியாவிலும் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.

ஆணின் உயிர் என்ன மட்டமா?

இரண்டு தற்கொலைகள்!
---------------------------------
செய்தி - 1

வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபருக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 24). ஆட்டோ டிரைவர். இவருக்கு கடந்த 8-3-2007 அன்று திருமணம் நடந்தது. மனைவி காஞ்சனா தேவி. திருமணத்தின் போது நகை-பணம் மற்றும் வீட்டு பொருட்கள், சீதனம் தரப்பட்டது. இருப்பினும் வரதட்சணையாக புதிய ஆட்டோ, பிரிட்ஜ், டி.வி. போன்றவற்றை வாங்கி வருமாறு மனைவியை சரவணன் துன்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த காஞ்சனா தேவி மறு மாதமே 16-4-2007 அன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. நீதிபதி எம்.சேகர் முன்னிலையில் நடந்த இந்த வழக்கில் வக்கீல் ஸ்ரீதர் ஆஜராகி வாதிட்டார். முடிவில் நீதிபதி, சரவணனுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார். தற்கொலை செய்து கொள்ள தூண்டிய குற்றத்திற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 5 அயிரம் அபராதமும் வரதட்சணை கொடுமைக்காக 8 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் சித்திரவதை செய்த குற்றத்திற்காக 2 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தார். (செய்தி: தினமலர்)

செய்தி - 2

அய்யப்பன் சென்னையிலுள்ள ஒரு ஆட்டோ ஓட்டுனர். அவருடைய மனைவி முத்துலட்சுமி ஒரு சிறிய தகறாரில் கணவனைத் திட்டிவிட்டு, அவனைப் பற்றி பெண்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்போகிறேன் என்று அச்சுறுத்திவிட்டு பிறந்த வீட்டுக்குச் சென்றிருக்கிறார். பிறகு அய்யப்பன் வீட்டிலில்லாத நேரத்தில் சில போலிஸ்காரர்கள் அவரைப் பற்றி அக்கம் பக்கத்தில் விசாரித்திருக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட அய்யப்பன் அவமானம் தாங்காமல் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துவிட்டார். (செய்தி: டைம்ஸ் ஆஃப் இந்தியா 02-08-2008)

இந்த இரண்டு செய்திகளையும் பாருங்கள். மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக கணவனுக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கிவிட்டார்கள். இந்த அய்யப்பனை தற்கொலைக்குத் தூண்டிய அவருடைய மனைவி மற்றும், உடந்தையான அவளுடைய குடும்பத்தினர், காவல் துறையினர் ஆகியோரை எந்த சட்டம் கேட்கப் போகிறது??

கணவனைக் கொன்ற செந்திலா


சென்ற இடுகையில் குறிப்பிட்டபடி கட்டிய கணவனை கள்ளக் காதலனோடு சேர்ந்து கொலை செய்த பேதைபெண் இவர்தான்! அவள் கழுத்தில் தொங்கும் மங்கல நாணைப் பாருங்கள். அந்த முகத்தைப் பார்த்தால் எவ்வளவு பரிதாபமான தோற்றத்தில் இருக்கிறது பாருங்கள்! இது போன்ற பொய்த் தோற்றங்களைக் கண்டுதான் ஆண்கள் ஏமாந்துவிடுகிறார்கள். பின் பொய் கேசுகளில் மாட்டிக்கொண்டு சீரழிகிறார்கள்; அல்லது இதுபோன்ற செந்திலாக்கள் கையில் சிக்கி பரலோகம் போகிறார்கள்!

இப்போது அந்த செந்திலாவின் வாக்குமூலத்தைப் பார்ப்போம்:

"கள்ளக்காதலனுடன் கைதான செந்திலா வாக்குமூலத்தில் கூறியதாவது: நான் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளேன். நாட்டரசன் கோட்டை அருகிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை பார்த்தேன். அங்கு மேலாளராக பணிபுரிந்த புவனேஸ்வரனுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகினோம்.


இந்நிலையில், எனக்கு வீட்டில் திருமண ஏற்பாடு நடந்தது. இதை, புவனேஸ்வரனிடம் தெரிவித்தேன். அதற்கு அவர், "திருமணம் செய்து
கொள், பின்னால் பார்த்து கொள்ளலாம்" என கூறினார். காஞ்சிரத்தைச் சேர்ந்த
பொன்னுமுத்துக்கும், எனக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும், நானும் புவனேஸ்வரனும் மொபைல் போனில் தொடர்ந்து பேசி வந்தோம்.

திருமணமாகி பல நாட்களாகியும் தொடவிடாமல் ஒதுங்கிய எனக்கு, கணவரது "செக்ஸ் டார்ச்சர்" அதிகமாக இருந்தது. இதனால், "அவரை ஏதாவது ஒரு வழி செய்யுங்கள்' என புவனேஸ்வரனிடம் சொன்னேன். அவர் கொடுத்த "ஐடியா"படி, ஜூலை 1ம் தேதி பொன்னுமுத்துவை காளையார் கோவிலில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். "இங்கு நல்ல மருத்துவ மனை இல்லை" என்று கூறி, அங்கிருந்து அவரை மீண்டும் சிவகங்கைக்கு பஸ்சில் அழைத்துச் சென்றேன். பஸ் ஸ்டாண்டிற்கு பின்புறமுள்ள துர்க்கை அம்மன் கோவில் பக்கம் சென்றோம்.


என்னுடன் பணியாற்றிய கார்த்தி அங்கு டூவீலரில் வந்தார். அவரை கணவரிடம் அறிமுகம் செய்தேன். சிறிது தூரத்தில் நின்றிருந்த டாடா சுமோ காருக்கு கார்த்தி எங்களை அழைத்துச் சென்றார். காரில் புவனேஸ்வரன், சோமசுந்தரம், ராஜேஷ், மலைச்சாமி ஆகியோர் இருந்தனர். அவர்களையும் கணவருக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.

கணவரிடம் அவர்கள் சகஜமாக பேசி, எங்களுக்கு கொடைக்கானலில் "ஹனிமூன்" ஏற்பாடு செய்திருப்பதாகவும், வீட்டிற்கு போனில் சொல்லி கொள்ளலாம் எனவும் கூறினர். மறுத்த கணவரை, சமாதானம் செய்து காரில் ஏற்றினர். கார்த்தி அங்கிருந்து டூ வீலரில் சென்றுவிட்டார். காரை டிரைவர் பாண்டி ஓட்டினார். கார் திருப்புத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. சந்தேகமடைந்த எனது கணவர் தகராறு செய்ததால், அவரை அனைவரும்
தாக்கினர்.

கரும்பு பயிருக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குளிர்பானத்தில் கலக்கி
கொடுத்து பொன்னுமுத்துவை குடிக்க சென்னோம். மறுத்த அவரை அடித்து துன்புறுத்தி குடிக்க செய்தோம். அவர் மயங்கிய நிலையில் இருந்தபோது, கையில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க "பிரேஸ்லெட்,' இரண்டு சவரன் தங்க சங்கிலி, மோதிரத்தை கழற்றி, வழியில் விற்று செலவு செய்தோம்.
திருச்சி வழியாக விழுப்புரம் சென்றோம். விழுப்புரத்திலிருந்து 18 கி.மீ., தொலைவிலுள்ள பெரியதச்சூர் காட்டுப் பகுதியிலுள்ள சவுக்கு தோப்பில், மயங்கிய நிலையில் இருந்த பொன்னுமுத்துவை கழுத்தை நெரித்து கொலை
செய்து, அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தோம். மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகிலுள்ள கடவூரில் புவனேஸ்வரனின் நண்பர் வீட்டில் தங்கியிருந்தோம். நேற்று முன்தினம், மதுரை மாட்டுத்தாவணி செல்லும் வழியில் போலீசார் எங்களை கைது செய்தனர்."

இவ்வாறு செந்திலா கூறினார்.

தற்போதைய செய்தி:

கள்ளக்காதலியுடன் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்த புவனேஸ்வரனின் "பாஸ்போர்ட்" மற்றும் "ஏர் டிக்கெட்' பறிமுதல் செய்யப்பட்டது. கொலைக்கு பயன்படுத்திய சுமோ கார், டூ வீலர், பொன்னுமுத்துவிடம் பறிக்கப்பட்ட செயின், மோதிரம் மீட்கப்பட்டது. கொலையாளிகளை கூண்டோடு பிடித்த தனிப்படை போலீசாரை, கண்ணன் எஸ்.பி., பாராட்டி பரிசு வழங்கினார்.