பாரதி காணாத புதுமைப் பெண்கள் !!! இந்திய குடும்ப குத்து (ம்) விளக்கிற்கு ஒரு இரவிற்கு கணவனின் பாதி சொத்து உரிமை கோருவது பெண்ணுரிமை பேசும் இந்திய பத்தினிகள் !!!!

நெல்லையில் 3 வயது குழந்தை, கள்ளக்காதலனுடன் ரயில் முன்பு பாய்ந்து பெண் தற்கொலை
 
நெல்லை: நெல்லையில் பெண் ஒருவர் தனது 3 வயது குழந்தை மற்றும் கள்ளக்கதாலனுடன் சேர்ந்து ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள இருக்கன்துறை வேப்பம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். அவரது மனைவி சரஸ்வதி (30). அவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை இருந்தது.சரஸ்வதிக்கும் அப்பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் முத்துகுமார்(26) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இது பற்றி தெரிய வந்ததும் தனபால் தனது மனைவியை கண்டித்தார். ஆனால் அவர் தனது கள்ளக்காதலுடன் பழகுவதை நிறுத்திக்கொள்ளவில்லை.இந்நிலையில் சரஸ்வதி தனது குழந்தையை தூக்கிக் கொண்டு முத்துகுமாருடன் நேற்று ஊரைவிட்டு ஓடிவிட்டார். இதையடுத்து தனபால் தனது மனைவியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நாங்குநேரி வாகைக்குளம் ரயில்வே கேட் அருகே குழந்தையுடன் 2 பேர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்ததில் இறந்தவர்கள் சரஸ்வதி, அவரது குழந்தை மற்றும் முத்துகுமார் என்பது தெரிய வந்தது. உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்தவுடன் சரஸ்வதியும், முத்துகுமாரும் இன்று அதிகாலை நாகர்கோவிலில் இருந்து மும்பை நோக்கி சென்ற ரயில் முன்பு குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/17/tamilnadu-illicit-affair-woman-jumps-before-a-train-with-baby-177295.html