நெல்லை: நெல்லையில் கள்ள காதலி வீட்டில் விஏஓவை சிறை வைத்து விட்டு போலீசுக்கு தகவல்தெரிவித்தார் அவரது மனைவி. இதையடுத்து போலீசார் வந்து அவரை மீட்டனர்.
தேனியை சேர்ந்தவர் முத்து. தூத்துக்குடி மாவட்டம் மருதன் வாழ்வு கிராம நிர்வாக அலுவலகத்தில் விஏஓவாக பணியாற்றி வருகிறார். இவருக்கு மாலா என்ற மனைவி உள்ளார். மேலும் 3 மாத ஆண் குழந்தையும் உள்ளது. இவர்கள் பாளை கேடிசி நகரில் குடியிருந்து வருகின்றனர்.
தூத்துக்குடி பிரையன்ட் நகரை சேர்ந்த நடராஜன் மனைவி சத்யா. இவருக்கு 4 வயதில் மகன் உள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன் நடராஜன் திடீரென இறந்து விட்டார். இறப்பு சான்றிதழ் மற்றும் விதவை உதவி தொகை போன்ற சான்றிதழ்கள் பெற சத்யா விஏஓ அலுவலகத்திற்கு சென்று வந்துள்ளார். அப்போது முத்துவுக்கு்ம், சத்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து பாளை பாரதி நகரில் வீடு வாடைக்கு எடுத்து சத்யாவை அவர் அங்கு குடியமர்த்தினார். மனைவிக்கு தெரியாமல் சத்யா வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார்.
இந்த விபரம் மனைவி மாலாவுக்கு தெரிய வந்தது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் இரவு மாலாவுக்கு தெரியாமல் சத்யா வீட்டுக்கு சென்றுள்ளார். இரவு கணவர் வீட்டுக்கு வராததால் அவர் சத்யா வீட்டுக்குதான் போயிருப்பார் என நினைத்த மாலை நேராக சத்யாவின் வீட்டுக்கு வந்தார்.
ஜன்னல் வழியாக பார்த்தபோது உள்ளே தனது கணவர் இருப்பது தெரிந்தது. இதையடுத்து வெளிப்புறமாக கதவை பூட்டிய அவர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். பொதுமககளும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து கதவை திறந்து அவரை மீட்டனர். இதையடுத்து விஏஓ முத்துவையும், அவரது கள்ளகாதலி சத்யாவையும் விசாரணைக்கு போலீசார் அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
http://tamil.oneindia.in/news/2013/06/12/tamilnadu-vao-locked-his-lover-house-his-wife-177009.html

0 மறுமொழிகள்:
உங்கள் கருத்தைத் தெரிவிக்க