போதையேறி... புத்தி மாறி... பெற்ற குழந்தையை 21 இடங்களில் குத்திக் கொன்ற தாய்(பேய்)!!!!!!!!!!!!!!!!!!!!

நியூயார்க்: குடி போதையில் போலீஸிடம் சிக்கிக் கொள்வோமோ என்ற பயத்தில் தனது 5 மாத குழந்தையை சரமாரியாக குத்திக் கொன்றுள்ளார் அமெரிக்க தாய் ஒருவர்.அமெரிக்கா, இல்லினாய்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த இம்பர்லின் பலோனஸ் என்ற பெண்ணுக்கு இசாக் என்ற 5 மாத குழந்தை இருந்தது. ஏற்கனவே குடி போதைக்கு அடிமையான இம்பர்லின், சம்பவத்தன்றும் தன் குழந்தை இசாக்கை தூக்கிக் கொண்டு குடிக்கச் சென்றுள்ளார்.அமெரிக்காவில் குடிக்கும் இடங்களுக்கு குழந்தைகளை தூக்கி வரக் கூடாது என்ற சட்டம் அமலில் உள்ளது. அப்படி அதை மீறுபவர்களின் குழந்தையை போலீஸார் தூக்கிச் சென்று விடுவர்.இந்தச் சட்டத்தை நன்கு அறிந்திருந்தும், இம்பர்லின் தனது 5 மாத கைக்குழந்தை இசாக்கை, கூக்கவுண்டியில் உள்ள லிகைஸ்ன் சதுக்கத்தில் ரோட்டோர ஓட்டலுக்கு அழைதுச் சென்றுள்ளார். வயிறு முட்ட குடித்து விட்டு இம்பர்லின் புறப்பட தயாரான போது, எதிர்பாராத விதமாக அங்கே போலீஸ் வந்துவிட்டது.குழந்தையும் அழத் தொடங்கியதால், என்ன செய்வது எனத் தெரியாமல் குழப்பத்தில், அருகிலிருந்த கத்தியை எடுத்து குழந்தையை 21 இடங்களில் குத்துயுள்ளார் இம்பர்லின். அத்தோடு நில்லாமல் கழுத்தையும் நெரித்துள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே இசாக் பரிதாபமாக பலியானான்.இதனால், இம்பர்லினை கைது செய்தது போலீஸ். தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் அந்த பேய்... சாரி, தாய்.

http://tamil.oneindia.in/news/2013/06/09/world-mom-killed-son-because-she-feared-cops-would-take-him-176885.html