கள்ளக்காதலனைக் கொன்று மூட்டை கட்டி பைக்கில் 100 கி.மீ தூக்கிச் சென்ற குடும்ப குத்து(ம்) விளக்கு !!!!!!!!!!!

சென்னை: கேட்கவே கிறுகிறுக்கிறது சென்னையைச் சேர்ந்த சுஜாதா என்ற பெண்ணின் செயல்.. தனது 2வது கணவரின் நண்பரை கைக்குள் போட்டுக்கொண்டு அவர் மூலம் தனது கள்ளக்காதலனைக் கொலை செய்து உடலைப் பல துண்டுகளாக வெட்டி மூட்டை கட்டி அதை தனது கையில் சுமந்து கொண்டு 100 கிலோமீட்டர் தொலைவுக்குப் பயணம் செய்து போட்டு விட்டு வந்துள்ளார் இந்தப் பெண்.சென்னையைச் சேர்ந்த முட்டை வியாபாரியான காளிமுத்து என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு உடல் பல துண்டுகளாக வெட்டி வீசப்பட்டது. இந்த வழக்கில் காளிமுத்துவின் கள்ளக்காதலியான சுஜாதா குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.போலீஸ் விசாரணையில் அவரது பயங்கரமான இன்னொரு முகம் தெரிய வந்துள்ளது. சுஜாதாவுக்கு நிறையக் கள்ளக்காதலர்கள். அவர்களில் ஒருவர்தான் இந்த காளிமுத்து. இது போக தனது 2வது கணவர் முருகேசனின் நெருங்கிய நண்பரான வேலுவையும் தனது நட்பு வட்டாரத்தில் வைத்திருந்தார் சுஜாதா.வேலு ஒரு திருடன். அதாவது ஆடு திருடன். மேலும் பெரிய அளவில் ஈடுபடாமல் சின்னச் சின்ன திருட்டுக்களில் மட்டும் ஈடுபட்டு வந்துள்ளார். வேலுவை ஒரு நாள் கூப்பிட்ட சுஜாதா இப்படியே போனால் எப்படி நீ உருப்படுவது... நான் சொல்வது போல செய். பெரிய ஆளாகி விடலாம் என்று சூடேற்றியுள்ளார்.அதைக் கேட்ட வேலு, சொல்லுஎன்ன செய்யனும் என்றார். அதற்கு சுஜாதா, என்னைத் தேடி வரும் காளிமுத்துவைப் போட்டுத் தள்ளு. அவரிடம் நிறைய பணம், நகை இருக்கிறது. அப்படியே அள்ளிக் கொண்டு போய் செட்டிலாகி விடலாம் என்று கூறியுள்ளார்.சுஜாதாவின் ஐஸ் வார்த்தைகளில் உருகிப் போனார் வேலு. ஆனால் அவருக்கு ஒரு சந்தேகம். உடலை என்ன செய்வது என்றுகேட்டார். அதற்கு சுஜாதா, உடலை துண்டு துண்டாக்கி அதை ஆந்திராவில் உள்ளகாட்டுப் பகுதிக்குக் கொண்டு போய் எரித்து விடலாம் என்றார். நான் வேண்டுமானால் உடலைவெட்டி சாக்குப் பையில் போட்டு அதைத் தூக்கிக் கொண்டு உன்னுடன் பைக்கில் வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.இந்தக் கொடூரமான திட்டத்துக்கு முருகேசனும் சம்மதம் தெரிவித்து ஜாயிண்ட் ஆகியுள்ளார். அதன்படி திட்டமிட்டு சுஜாதாவின் வேப்பம்பட்டு வீட்டில் வைத்து காளிமுத்துவைக் கொலை செய்தனர். பின்னர் மூன்று பேரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு பகுதியாக காளிமுத்து உடலை வெட்டினர். பின்னர் சாக்குப் பையில் போட்டனர்.முருகேசன் பைக்கை ஓட்ட காளிமுத்து உடல் பாகங்கள் இருந்த சாக்குப் பையை தூக்கிக் கொண்டு பின்னால் உட்கார்ந்து கொண்டார் சுஜாதா. கூடவே இன்னொரு பைக்கில் வேலு வந்துள்ளார். கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் தூரம் இப்படிப் பைக்கில் பிணத்தோடு போயுள்ளனர்.ஒரு பெண் கள்ளக்காதலனின் உடலை துண்டாக்கி கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டர் தூரம் பைக்கில் சுமந்து சென்ற செயல் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 http://tamil.oneindia.in/news/2013/06/09/tamilnadu-woman-kills-her-paramour-with-the-husband-176879.html