காட்டுக்குள் நடுராத்தியில் கள்ளக்காதலனுடன் கந்தரகோலம்... மனைவியைக் கொன்றார் கணவர்!!!!!!!!!!!!!!!!

நெல்லை: நடுராத்திரியில் வீட்டைவிட்டு வெளியேறி காட்டுப் பகுதியில் கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவித்த மனைவியைப் பார்த்து வெறியான கணவர், கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கியப்பன். இவருடைய மனைவி பெயர் செல்வி. 22 வயதான இவருக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் அரை நிர்வாண நிலையில் கழுத்து நெரிபட்ட நிலையில் கோவநேரி கிராம காட்டுப் பகுதியில் செல்வி பிணமாகக் கிடந்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இசக்கியப்பன் தலைமறைவாகி விட்டதால் அவர்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகித்தனர்.அவரைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வந்தனர்.அவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.போலீஸாரிடம் இசக்கியப்பன் கூறுகையில், செல்வியும், நானும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தோம். சமீப காலமாக செல்வியின் போக்கு எனக்கு பிடிக்கவில்லை. செல்வியின் அக்காள் வீடும் உள்ளூரில்தான் உள்ளது. அவளுடைய அக்காள் கணவர் குமரேசன் எனது வீட்டுக்கு அடிக்கடி வந்தார்.என் பிள்ளைகளை தூக்கி வைத்து விளையாடுவார். நான் வீட்டில் இல்லாத நேரங்களிலும் வந்து சென்று இருக்கிறார். முதலில் இதை நான் தவறாக நினைக்கவில்லை. நாளடைவில் அவருக்கும், என்னுடைய மனைவி செல்விக்கும் பழக்கம் ஏற்பட்டது. நான் வீட்டில் இல்லாத போது குமரேசனும், செல்வியும் உல்லாசமாக இருந்தது பற்றி அக்கம்பக்கத்தில் பேசத் தொடங்கினார்கள்.எனக்கும் இதுபற்றி தெரியவந்தது. செல்வியை நான் கண்டித்தேன். எனது வீட்டுக்கு வரக்கூடாது என்று குமரேசனையும் எச்சரித்தேன். நான் எவ்வளவோ சொல்லியும் கள்ளத்தொடர்பை செல்வி கைவிடவில்லை. பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து புத்திமதியும் கூறிப்பார்த்தேன். அவள் கேட்கவில்லை. இதனால் எனக்கும், செல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.சம்பவத்தன்று இரவில் செல்வியும், குமரேசனும் ரகசியமாக சந்தித்துப் பேசினார்கள். பின்னர் செல்வியை கோவநேரி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அதை நான் தெரிந்து கொண்டேன். அவர்களைத் தேடி நானும் சென்றேன்.காட்டுப் பகுதியில் ஒரு இடத்தில் அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்ததை பார்த்துவிட்டேன். இதனால் 2 பேர் மீதும் ஆத்திரம் அடைந்தேன். என்னைப் பார்த்ததும் குமரேசன் அங்கிருந்து ஓடிவிட்டார். அரைநிர்வாண கோலத்தில் நின்ற செல்வியை அடித்து உதைத்தேன். கழுத்தை நெரித்தேன். சற்று நேரத்தில் அவள் பேச்சுமூச்சு இல்லாமல் கீழே விழுந்தாள். செல்வி இறந்துவிட்டாள் என்று தெரிந்து கொண்டேன்.பிணத்தை அங்கேயே போட்டுவிட்டு, சற்று தூரம் சென்ற போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. செல்வி உடலில் இருந்த ஆடைகளை அகற்றிவிட்டால், கற்பழிப்பு முயற்சியில் அவளை யாரோ கொன்றுவிட்டதாக சம்பவத்தை திசை திருப்பி விடலாம் என்று நினைத்தேன். மீண்டும் திரும்பி வந்து ஆடைகளை களைந்து விட்டு காட்டுப்பகுதியில் பிணத்தை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டேன் என்றார் இசக்கியப்பன்.

 http://tamil.oneindia.in/news/2013/06/09/tamilnadu-husband-kills-wife-having-relationsship-176864.html