இந்திய நீதி மன்றங்களில் சவூதி போன்று நடு நிலைமை வந்தால் தான் தவறுகளை குறைக்க முடியும் ????விடுவார்களா பெண்ணுரிமை பேசும் இந்திய பத்தினிகள் ????

கணவரை விட்டு பிரிய கனடா பெண்ணுக்கு உதவிய 2 சவூதி பெண்களுக்கு 10 மாதம் சிறை!!!!!!
 
சவூதி: கணவரை பிரிந்து செல்ல கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு உதவியதற்காக 2 சவூதி பெண்களுக்கு 10 மாத சிறை தண்டனை கிடைத்துள்ளது.கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சவூதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து குழந்தைகள் பெற்றார். அவருக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அப்பெண் தனது கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் சவூதியில் இருந்து வெளியேறி கனடாவுக்கு செல்ல திட்டமிட்டார்.இதற்கு சவூதியைச் சேர்ந்த பாய்சா அல் அயூனி மற்றும் வாஜிஹா அல் ஹ்வாய்தர் ஆகிய 2 பெண்கள் உதவ முயன்றனர். இது குறித்து அறிந்த அப்பெண்ணின் கணவர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் அந்த மூன்று பெண்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் சவூதி சட்டத்தை மீறி கணவரை விட்டுப் பிரிய ஒரு பெண்ணிற்கு உதவ முன்வந்த பாய்சா மற்றும் வாஜிஹாவுக்கு 10 மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை தீர்ப்பளித்தது.