காதல்ல, கள்ளக்காதல்….நல்ல காதல்னு இருக்கா என்ன? ஏன் ஒரு பொம்பளை கொலை செய்ற அளவு போறானு யாராவது யோசிச்சு பார்த்தீங்களா??கள்ளகாதல் கொலைக்கு நியாயம் கற்பித்த இக்கால கற்புக்கரசி கண்ணகி !!!!!!

வினவு தளத்தில் வந்துள்ள செய்தி...

தமிழகத்து தேனீர்க் கடைகளில் வாங்கப்படும் தினத்தந்தியில் தினமும் கள்ளக்காதல் குறித்த செய்தியும் ஒரு கொலையும் வாசகர்களால் அதிகம் படிப்பதற்கென்றே இடம் பெற்றிருக்கும். கள்ளக்காதல் தோற்றுவிக்கும் கிளுகிளுப்புக்களிலிருந்து படித்தவர் முதல் பாமரர் வரை தப்புவதில்லை. பரபரப்பிலும் கவர்ச்சியிலும் நிலை கொள்ளும் சிந்தனை அதில் கவிந்திருக்கும் குடும்ப உறவின் துயரம் பற்றி ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. கள்ளக்காதல் செய்தியில் ஊடுறுவும் ஆண்மனம் தன்னையும் அந்தக் காதலனாக கற்பனை செய்யவும் தவறுவதில்லை.
அப்படியானால் படிப்பவர்களிடமும் வாழ்க்கை என்பது சலித்துப் போய் வேறு உறவுகளுக்கு ஏங்குகிறது என்று இதைப் புரிந்து கொள்ளலாமா?  தொடர்ந்து படிக்க    http://www.vinavu.com/2008/09/26/loveil/