பொய் வழக்கு என்று தெரிந்தும்.பொய் வழக்கு போட்டவர்களுக்கு தண்டனை கொடுக்காத நீ(நி )தி மன்றமும் காவல் துறையும் இருந்தும் பயனில்லை!!!!!!

பாலியல் பலாத்கார வழக்கிலிருந்து 82 வயது முதியவர் விடுவிப்பு : நீதிபதி பரபரப்பு உத்தரவு!!!!!
 
புதுடில்லி: டில்லியில், 82 வயது முதியவர் மீது, 18 வயது பெண் தொடர்ந்த, பாலியல் பலாத்கார வழக்கை தள்ளுபடி செய்து, முதியவரை விடுவித்த கோர்ட், வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனங்களை கண்காணிக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

வீட்டு வேலைக்கு...: கடந்த, 2011ம் ஆண்டு, கிருஷ்ணலால் சாவ்லா என்ற, 82 வயது, உடல் நலமில்லாத முதியவர் வீட்டில், 18 வயது பெண், வீட்டு வேலைக்கு பணியமர்த்தப்பட்டார். வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம், 11 மாத ஒப்பந்தத்தில், அந்த பெண்ணை, சாவ்லா
வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தது. இந்நிலையில், 2011, ஜூலை மாதம், ஒப்பந்தம் முடிந்ததால், அந்தப் பெண், சாவ்லா வீட்டுக்கு வரவில்லை. ஆகஸ்ட் மாதம், ஆட்களை வேலைக்கு அனுப்பும் நிறுவனத்தின் உரிமையாளர், அந்தப் பெண்ணை அழைத்து வந்து, முதியவரிடம், 25 ஆயிரம் ரூபாய்
கூடுதலாக தருமாறு கேட்டுள்ளார்.
தர முடியாது என, முதியவரும், அவரின் மனைவியும் கூறினர். அப்போது ஏற்பட்ட தகராறில், அந்தப் பெண்ணை, முதியவரின் மனைவி தாக்கியதில், அந்தப் பெண் கண்ணில் லேசான காயம் ஏற்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து, சாவ்லா வீட்டின் கதவை தட்டிய போலீசார், அந்தப் பெண்ணை, பல முறை, வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி, சாவ்லாவை கைது செய்தனர்.

கண்காணிக்க உத்தரவு : இந்த வழக்கு, இரண்டு ஆண்டுகளாக, கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. நேற்று நீதிபதி, நிவேதிதா சர்மா தீர்ப்பு கூறினார். முதியவரை விடுவித்து, அவர் பிறப்பித்த உத்தரவு: இந்த புதுமையான வழக்கு, சில மாற்றங்களை எதிர்பார்க்கிறது. உடல் நலம் இல்லாதவர்கள், வேலை செய்ய முடியாதவர்கள் மற்றும் முதியவர்கள் வீடுகளுக்கு, வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனங்களின் செயல்பாடுகளை, கண்காணிக்க வேண்டியது அவசியம். இந்த வழக்கில், சாவ்லாவை மிரட்டிய நிறுவனம் போல், ஏராளமான நிறுவனங்கள் உள்ளன; அவற்றின் பிடியில்
அப்பாவிகள் பலரும் உள்ளனர். முதியவர் சாவ்லாவின் உடல் நிலை, தோற்றத்தைப் பார்க்கும் போது, அவரால், இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முடியாது என்பதும், கண்டிப்பாக, பலமுறை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ய முடியாது என்பதும் தெரிய வருகிறது. விசாரணையில், அந்த வேலைக்கார பெண்ணும், வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனமும், மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளது தெரிய வருகிறது. அதையடுத்து, முதியவர் சாவ்லா மீதான வழக்கு, ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி நிவேதிதா உத்தரவிட்டார். மேலும், மத்திய, மாநில தொழிலாளர் நலத் துறை, டில்லி மாநில அரசு, தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் கமிஷன், டில்லி போலீஸ் கமிஷனுருக்கு, தீர்ப்பு நகலை அனுப்பி, வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனங்களை கண் காணித்து, ஒழுங்குமுறை செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.