ஆண் உயிர் தாழ்ந்ததா!

நம் நாட்டின் சட்டங்களின்படி ஒரு மணமான பெண் தற்கொலை செய்துகொண்டால் உடனே அதற்கு அவளுடைய கணவன்தான் காரணம் என்று முடிவு செய்து அவனையும் அவனுடைய பெற்றோரையும் கைது செய்து விடுவார்கள். ஆனால் அந்த கணவன் மனையின் நடத்தை காரணமாக தற்கொலை செய்துகொண்டால், மனைவிக்கு ஒரு கொசுகூட கடிக்காது. இது போன்று பல விசித்திரங்கள் கொண்ட நாடு நம்முடையது!

இதோ, இன்றைய செய்தியை படியுங்கள்:-

திருமணமான ஏழு மாதத்தில் சோகம் : மனைவி கண்டிப்பு, கணவன் தற்கொலை

மீஞ்சூர்: குடிப்பழக்கத்தை கைவிடுமாறு கூறி மனைவி கண்டித்ததால், மனமுடைந்த கணவன் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார். மீஞ்சூர் அடுத்த பட்டமந்திரி கிராமத்தை சேர்ந்தவர் ஆசைத்தம்பிமகன் செந்தில்குமார் (24). கொத்தனார். இவர் வேலைக்குச் சென்று திரும்பும்போது, அன்றைய கூலி தொகையில் பெரும் பகுதியை மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்தார். இதை அவரது மனைவி ஹேமாவதி கண்டித்தார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், 27ம் தேதி இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த செந்தில்குமாரை கண்டதும் அவரது மனைவி ஹேமாவதி கோபத்தில் கண்டித்துள்ளார்.


இதனால் மனமுடைந்த செந்தில் குமார் வீட்டில் இருந்த மண்ணெண் ணெய் உடலில் ஊற்றிக் கொண்டு தன்னைத் தானே தீயிட்டு கொளுத்திக்கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவர்சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவர்களுக்கு ஏழு மாதத்திற்கு முன் தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

தாலியே தேவை இல்லை - ஆனால் தம்பதிகள்

இந்த வாரக் குமுதம் இதழில் வெளிவந்துள்ள கவர் ஸ்டோரி இது:


சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை. நாற்பதாயிரத்துக்கும் அதிகமான சம்பளம். ஃப்ரீயா இருக்கணும். முடிஞ்சவரை என்ஜாய் பண்ணணும். இரண்டு இளம்பெண்கள். கூடவே அலுவலக ஆண் நண்பர்கள். ஒன்றாகச் சேர்ந்து அபார்ட்மெண்ட்டில் `குடும்பம்' அமைக்கிறார்கள்.

லிவிங் டூகெதர். 'தாலியே தேவையில்ல... நீதான் எம் பொஞ்சாதி'னு ஒரு பாட்டு வருமே. அதே சங்கதிதான். எதையும் ருசி பார்க்கத் துடிக்கும் சாஃப்ட்வேர் ஊழியர்களின் இந்த 'ஜஸ்ட் லைக் தட்' செக்ஸ் வாழ்க்கைதான் இப்போதைய லேட்டஸ்ட் பரபரப்பு.

"லேடீஸ் ஹாஸ்டல் செம போர். நமக்குன்னு டி.வி. வச்சுக்க முடியாது. சத்தமா பாட்டுக் கேட்க முடியாது. 'லேப்டாப்' மாதிரியான காஸ்ட்லி பொருட்களுக்கும் பாதுகாப்பு இல்ல. நைட்டுல சீக்கிரமா வந்துரணும், பாய் ஃப்ரெண்ட்ஸுங்க பார்க்க வரக்கூடாதுனு ஏகப்பட்ட கண்டிஷன். முப்பதாயிரம் சம்பளம் வாங்கி எதுக்காக இப்படி கஷ்டப்படணும்? ஸோ... அபார்ட்மெண்ட்தான் வசதி. இருபதாயிரம் வாடகை. நாலு லட்சம் அட்வான்ஸ். ஆபிஸ் நண்பர்களோட ஷேர் பண்ணிகிட்டு ஒண்ணா தங்குறோம். இதுல தப்பு என்ன இருக்கு?'' என்கிறார் பூரணி. பிரபல ஐ.டி கம்பெனிகளின் சாஃப்ட்வேர் டெவலப்பர்.

வேளச்சேரியில் கொத்துக் கொத்தாய் நிறைய அடுக்குமாடிக் கட்டங்கள். அதிகபட்சமாய் பதினைந்து மாடிகள் கூட உண்டு. அங்குள்ள ஒரு அபார்ட்மெண்டில் சுகந்திக்கு துணி துவைப்பது, வீடு கழுவுவது என வீட்டு வேலை. ``எல்லாமே பெரிய எடத்துப் புள்ளைங்க சார்... பொண்ணுங்க. பசங்கனு கும்பலா குடும்பம் நடத்திக் கிட்டிருக்காங்க'' என்கிறார் அதிர்ச்சியாக.

இப்படிப் போகிறது கதை. ஆனால் ஆண்களே, நீங்க ஜாலியா இருந்திடலாம்னு நெனைக்காதீங்க! பெண்கள் எப்படி வேணா இருக்கலாம். ஆனால் ஆண்கள் பாடு ஆபத்து. ஏன்னா கேட்கறீங்க? இதோ இன்றைக்கு தினமலரில் வந்துள்ள செய்தியைப் படிங்க:


கால் சென்டர் பெண் ஊழியர் கற்பழிப்பு: காதலன் உட்பட இருவர் கைது

சென்னை: கால் சென்டரில் பணிபுரிந்தவரை ஆசை வார்த்தை கூறி கற்பழித்ததாக பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் காதலன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை, பெரம்பூர் பந்தர் கார்டனைச் சேர்ந்தவர் உமா. இவரது மகள் சந்திரா(25). (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) வேளச்சேரியில் உள்ள கால் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் மாம்பாக்கத்தைச் சேர்ந்த அகமது (28) என்பவரும் பணிபுரிந்து வருகிறார். ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்ததால் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இரண்டு வருடமாக காதலித்து பல இடங்களுக்கும் சென்று வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்திராவுக்கு பிறந்த நாள்.

அகமது தனது நண்பர் சுரேஷ் என்பவருடன் மடிப் பாக்கத்தில் உள்ள மற்றொரு நண்பரின் வீட்டிற்கு சந்திராவை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மது விருந்துடன் கேக் வெட்டி கொண்டாடினர். அன்றிரவு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் வீடு திரும்பியதும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சந்திரா கூறியுள்ளார். ஆனால், திருமணம் செய்வதற்கு அகமது ஒத்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள் ளது. இது குறித்து உமா செம்பியம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி கற்பழித்ததாக அகமதுவையும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சுரேஷையும் கைது செய்து எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

எப்படி இருக்கிறது கதை. முழுதும் உடன்பட்டு உல்லாசமாக இருந்தாளாம். அது எப்படி கற்பழிப்பாகும் என்பது புரியவில்லை!

ஒரு ஆணை ஒரு பெண் தன்னுடன் உல்லாசமாக இருக்கும்படி வற்புறுத்தி அழைத்தால், "எந்தவித எதிர்பார்ப்புமின்றி முழு சம்மதத்துடன்தான் இன்னாருடன் கலவியில் ஈடுபடுகிறேன்" என்று சாட்சிகள் முன்னிலையில் எழுதி வாங்கிக் கொண்டு, ஆடியோ, வீடியோ ரெகார்டு செய்துகொண்ட பின்னர் மேல் நடவடிக்கைகளி ஈடுபட்டால்தான் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது போலிருக்கிறது! இல்லாவிடில் அனைத்து ஆணெதிர்ப்புச் சட்டங்களும் ஆணின்மேல் பாயும் அபாயம் இருக்கிறது.

கற்பழிப்புச் சட்டம் அடிப்படையில் இப்படிச் சொல்கிறது:

As per Section.375 of IPC a man is said to commit the offence of rape with a woman under the following six circumstances:

1. Sexual intercourse against the victims will,

2. Without the victims consent,

3. With her consent, when her consent has been obtained by putting her or any person that she may be interested in fear of death or hurt,

4. With her consent, when the man knows that he is not her husband,

5. With her consent, when at the time of giving such consent she was intoxicated, or is suffering from unsoundness of mind and does not understand the nature and consequences of that to which she gives consent,

6. With or without her consent when she is under sixteen years of age.

ஆனால் அதை எப்படி வேண்டுமானாலும் கோர்ட்டுக்கள் விளக்கம் கொடுக்கலாம். ஆனால் பொதுவாக எல்லாம் பெண்களுக்கு சாதகமாகத்தான் இருக்கும். இங்கு சென்று பாருங்கள்:

http://www.legalserviceindia.com/articles/rape_laws.htm

ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

கள்ள தொடர்பை கைவிட மறுத்த தாய்

கள்ள தொடர்பை கைவிட மறுத்த தாய் மீது அம்மிக்கல்லை தூக்கி போட்ட வாலிபர் - போலீஸ் தேடுகிறது
செய்தி: தினமலர்

ராயபுரம், செப்.24-

கள்ள தொடர்பை கைவிட மறுத்த தாய் மீது அம்மிக்கல்லை தூக்கிப்போட்ட வாலிபரை போலீஸ் தேடுகிறது.

கள்ள தொடர்பு

சென்னை தண்டையார் பேட்டை திலகர் நகரில் வசித்து வருபவர், லட்சுமி (வயது 41). இவரது மகன் வெற்றி (22). லட்சுமியின் கணவர் ஸ்ரீதர், 15 ஆண்டுகளுக்கு முன் அவளை பிரிந்து சென்று விட்டார்.

அதன் பின் லட்சுமிக்கு அந்த பகுதியை சேர்ந்த சிலருடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தொடர்பை விட்டு விடும் படி, லட்சுமியிடம், வெற்றி கூறினார். ஆனால் லட்சுமி மறுத்தார்.

இதனால் ஏற்பட்ட தகராறில், வீட்டில் இருந்த அம்மிக்கல்லை தூக்கி, லட்சுமியின் மீது வெற்றி போட்டார்.

இதனால் கால் முறிந்த லட்சுமி, ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்ல முத்து வழக்கு பதிவு செய்து, வெற்றியை தேடி வருகிறார்.

மனைவியிடம் அறை வாங்கும் கணவன்!

விளம்பர வீடியோ படம் எடுப்பவர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். நாட்டு நடப்புக்களை நன்கு அறிந்தவர்கள். இதன் கீழ் நீங்கள் காணும் "கிட்பிளை" பிளைவுட் விளம்பரத்தில் ஒரு அம்மாஞ்சி கணவனை புது மணப்பெண் முதலிரவின்போது "ஏன் கிட்பிளை வாங்கிப் பொருத்தவில்லை" என்று கோபமாகக் கேட்டு ஓங்கி ஒரு அறை வைக்கிறாள். இத்தோடு விட்டாளே! அடுத்த விளம்பரத்தில் அவள் தன் காலால் மிதிமிதியென்று மிதிப்பதுபோல் காண்பிக்ககூட செய்வார்கள்! எதிர்த்துப் பேசினால் 498A, குடும்ப வன்முறைச் சட்டம், வரதட்சிணை ஒழிப்புச் சட்டம் போன்ற ஆயுதங்களைக் கையிலெடுத்து புருஷணை அழித்து விடுவாளே!


ஆண்மைக் குறைவு என்னும் ஆயுதம்

ஒரு பெண் தன் கணவனைத் தாக்குவதற்கு எவ்வித ஆயுதம் கையில் கிடைத்தாலும் விடமாட்டாள். சமூகமும் சட்டங்களும் அவள் சொல்வதைத்தான் கேட்கும். "ஐயோ, பாவம், பெண்ணல்லவா" என்று உருகுவார்கள். அவர்கள் மனத்தை இளகச் செய்ய பெண்ணானவள் தன் கண்களிலிருந்து கண்ணீரை பொலபொலவென்று கேட்ட மாத்திரத்தில் கொட்டுவாள். போதாதற்கு பெண்கள் நலம் காக்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு பல NGO இயக்கங்கள் கோஷ்டம் போட்டுக் கொண்டிருக்கின்றன. அவை வெளி நாட்டிலிருந்து டாலர்களைப் பெற்றுக்கொண்டு நம் பாரம்பரிய குடும்ப முறையை ஒழிப்பதற்காகவே கங்கணம் கட்டிக்கொண்டு ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கின்றன.

செய்தித்தாள்களும் வெகுஜன ஊடகங்களும் கூட பெண்கள் கொடுக்கும் பொய்ப் புரட்டுப் புகார்களை மட்டும் விலாவாரியாக வெளியிடுகின்றனவேயன்றி ஆண்கள் பக்க நியாயத்தைப் பற்றி மூச்சு விடுவதில்லை. ஏனெனில் அது பரபரப்பாக இருக்காது.

இதன் கீழ் நீங்கள் காணும் செய்தி இன்றைய தினத்தந்தியில் வெளிவந்தது. அதை ஊன்றிப் படித்தீர்களானல் அந்தப் பெண்ணின் கூற்றினுள் புதைந்திருக்கும் முரண்பாடுகள் தெரியவரும். எப்படியிருந்தால் என்ன, மனைவி சொன்னால் கணவன் குற்றவாளிதானே. அவனை கைது செய்து சிறையில் அடைத்தாகி விட்டது.

இந்திய ஆண்களே, வேண்டாம் இந்த விபரீதத் திருமணம் என்னும் புதைகுழி. ஜாக்கிரதை!

-------------------------------------
குழந்தை பிறக்காததால் குட்டு உடைந்தது. ஆண்மைக் குறைவை மறைப்பதற்காக மனைவியை சித்ரவதை செய்த கணவர் கைது. சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்

தினத்தந்தி - சென்னை, செப்.18-9-2008

ஆண்மை குறைவை மறைப்பதற்காக மனைவியை சித்ரவதை செய்த கணவர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

சென்னை, விருகம்பாக்கம், வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 35). பி.காம். பட்டதாரியான இவர், தனியார் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பெயர் விஜயா (30). இவர், போரூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

கடந்த 2 ஆண்டுகளாக கணவன்-மனைவியாக இனிய இல்லற வாழ்க்கை நடத்திய விஜயா-பார்த்தசாரதி தம்பதியிடையே திடீரென்று மோதல் ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்த நிலையில், விஜயா, சென்னை தியாகராயநகர் துணை கமிஷனர் முத்துசாமியை சந்தித்து கணவர் பார்த்தசாரதி மீது பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆண்மை குறைவு

பார்த்தசாரதிக்கும், எனக்கும் ஊரறிய கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனது பெற்றோர் நல்லமுறையில் வரதட்சணை, சீர்வரிசை கொடுத்து திருமணத்தை நடத்தினார்கள். எங்கள் குடும்ப வாழ்க்கை ஆரம்பத்திலிருந்தே நல்லபடியாக இல்லை.

என் கணவர் என்னோடு உறவு வைத்துக்கொள்வதற்கு தயங்கினார். 6 மாதம் வரையில் எங்களுக்கிடையே `செக்ஸ்' உறவு சரியாக நடக்கவில்லை. நானும் அதை பெரிதுபடுத்தவில்லை. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் (அப்படிப் போடு!) என்ற பழமொழியை மனதில் வைத்து வாழ்ந்து வந்தேன். ஆனால், எனது கணவருக்கு ஆண்மை குறைவு இருக்கலாம் என்று சந்தேகப்பட்டேன். இருந்தாலும் அதுபற்றி அவரிடம் வெளிப்படையாக பேசமுடியவில்லை.

ஆனால், ஒரு நாள் என் கணவரே அவருக்கு ஆண்மை குறைவு இருப்பதை ஒப்புக்கொண்டார். விஷயத்தை வெளியில் சொல்லி அவமானப்படுத்த வேண்டாம் என்றும் அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார்.

இதனால் விஷயத்தை வெளியில் சொல்லாமல் நான் அவரோடு கடந்த 2 ஆண்டுகளாக குடித்தனம் நடத்தி வந்தேன். ஆண்மை குறைவு இல்லாதது மட்டுமல்லாமல், அவரால் எனக்கு குழந்தை பாக்கியம் கொடுக்க முடியாது என்பதும் எனக்கு தெரிய வந்தது. ஆண்மை இல்லாததை மறைத்து அவர், என்னை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். டாக்டரிடம் சிகிச்சை பெற்று ஆண்மை குறைவை சரிசெய்துவிடலாம் என்று நினைத்தோம். ஆனால், டாக்டரிடம் சிகிச்சை பெறுவதற்கு எனது கணவர் தயங்கினார்.

சித்ரவதை

`டெஸ்ட் டினிப்' முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். அல்லது ஏதாவது குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளலாம் என்று எனது கணவர் ஆலோசனை கூறினார். ஆனால், அவரது கருத்தை நான் ஏற்கவில்லை. `டெஸ்ட் டினிப்' குழந்தையை எனது வயிற்றில் சுமக்கமாட்டேன் என்று பிடிவாதமாக கூறிவிட்டேன். நாளடைவில் ஆண்மை இல்லாத பிரச்சினை வெளியில் தெரிந்துவிடுமோ என்று எனது கணவர் அச்சப்பட்டார்.

அந்த விஷயம் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக என்னிடம் குறை இருப்பதுபோல எனது கணவர் வெளியில் பேச ஆரம்பித்தார். என்னை அடித்து, உதைத்து சித்ரவதை செய்தார். நடத்தையிலும் சந்தேகப்பட்டார். இதனால் அவரோடு இனிமேல் சந்தோஷமாக வாழமுடியாது என்று முடிவு செய்து அவரை பிரிந்துவிட்டேன்.

நான் ஆசிரியை தொழில் செய்து சம்பாதித்த பணத்தில்தான் எனது கணவர் வீடு கட்டிய கடனை அடைத்தார். இனிமேல் அவரோடு வாழமுடியாது என்பதால் அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, என்னை ஏமாற்றி திருமணம் செய்ததற்காக தக்க தண்டனை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

- இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்து.

கைதானார்

இந்த புகார் மனு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்கும்படி வடபழனி அனைத்து மகளிர் போலீசாருக்கு, துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவிட்டார். உதவி கமிஷனர் மனோகரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் ரமாமணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்கள். பார்த்தசாரதி கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.

பாவம், பேதைப் பெண்!

டில்லிக்கு அருகாமையிலுள்ள கூர்கான்வ் என்னுமிடத்தில் வசிக்கும் ஷில்பி என்னும் பெண் தன் மாமனார் மற்றும் மாமியாரைக் கொல்ல கொலையாட்களை ஏற்பாடு செய்தது தெரியவந்து அவள் தற்போது அந்தக் குற்றத்திற்குத் துணை போன தன் தாய் மற்றும் சகோதரர்களுடன் கம்பி எண்ணுகிறாள். அந்த ஷில்பி தன் கணவனின் பெற்றோரிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்கத் திட்டமிட்டாள். மாமனாரின் பெயர் கர்னல் ராஜீவ் குமார் கோயல். ஷில்பா அந்தக் கொலைக்காக அவளுடைய கார் டிரைவரிடம் ரூ. 50 லட்சம் கூலியாகப் பேசி முன்பணமாக ரூ.15,000 கொடுத்திருக்கிறாள். இது எப்படியோ வெளியே தெரிந்துவிட்டது. தகுந்த சாட்சியங்களுடன் கேஸ் பதிவாகி இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாட்டிக்கொண்ட ஷில்பி என்ன செய்திருக்கிறாள் தெரியுமா - தன் மாமனார், மாமியார் மேல் வரதட்சிணை கேசு போட்டிருக்கிறாள் (Sec 498A of IPC).

திருமணம் என்பது ஒரு "டிக் டிக்" என்று அடித்துக் கொண்டிருக்கும் டைம் பாம் - அது எந்த நேரமும் 498-A , குடும்ப வன்முறைச் சட்டம், வரத்ட்சிணை ஒழிப்புச் சட்டம் போன்ற வடிவில் மேலெழும்பி தங்களை தாக்கும் என்பதை இந்திய ஆண்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்!

திருமணம் எனும் தெய்வீக பந்தம்

குமுதம் ஜோதிடம் ஆசிரியர் "ஏ.எம்.ஆர்." அவர்களின் தலையங்கம்:

செப்டம்பர் 1, 2008! திங்கட்கிழமை!!

அவசரம் அவசரமாக அலுவலகத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன்.
எனது அவசரத்தையும் மீறிய படபடப்புடன் ஒரு பெண்மணி எனது வீட்டிற்கு வந்தார். அழுது அழுது அவரது கண்கள் சிவந்திருந்ததைப் பார்த்தவுடனேயே என்னால் உணர முடிந்தது. கூடவே 25 அல்லது 26 வயது மதிக்கக்கூடிய ஓர் இளம் பெண். அழுதுகொண்டே வந்த அந்தப் பெண்மணியின் மகள்தான் அந்த இளம்பெண் என்பதைப் பிறகு தெரிந்துகொண்டேன். சிறிது நேரம் கண்ணீர் விட்டுப் புலம்பிய பிறகு, தன்னிலைக்கு வந்தார் அப்பெண்மணி. எனக்கோ அலுவலகத்திற்குச் செல்லவேண்டிய அவசரம். அப்பெண்மணிக்கு ஆறுதலாகச் சில வார்த்தைகள் சொல்லி அமர வைத்தேன். அருகில் அவரது மகள் நின்றுகொண்டே இருந்தாள். அப்பெண்ணையும் உட்காரும்படி கூறினேன்.
அந்த அம்மணி பேசினார். ``நிறைய செலவு செய்து இவளுக்கு நன்றாகத் திருமணம் செய்து கொடுத்தோம். திருமணமாகி சில மாதங்களே ஆகின்றன. `மாப்பிள்ளையுடன் இருக்கப் பிடிக்கவில்லை' என்று கூறி இவள் திரும்பி வந்துவிட்டாள். `என்ன நடந்தது?' என்று கேட்டால் எதுவும் சொல்ல மறுக்கிறாள். தாங்கள்தான் என் பெண்ணிற்கு புத்திமதி கூறி அவள் வாழ்வை நல்லபடி செய்து தரவேண்டும்'' என்றார். பெண்ணிடம் பேசினேன். ``எனக்குப் பிடிக்கவில்லை! வேறு காரணங்கள் எதுவு-மில்லை.'' வேறு எதுவும் கூற மறுத்துவிட்டார் அப்பெண்.

அப்பெண்ணின் ஜாதகத்தை ஆராய்ந்து, சில பரிகாரங்களைக் கூறி அனுப்பி வைத்தேன். அதே சிந்தனையில் ஆழ்ந்தவனாக அலுவலகம் சென்றேன். அந்தத் தாயின் சோகம் நிறைந்த முகமே என் மனக்கண் முன் நின்றது. ஆயிரமாயிரம் உணர்ச்சிகள் பொங்கிவரும் பிரவாகமாக அந்த அன்னையின் பார்வையிலிருந்து என்னை நோக்கிப் பெருகி வருவதைப் போல் உணர்ந்தேன். தனது வயிற்றில் பிறந்த இப்பெண்ணின் நல்வாழ்விற்காக எத்தனை பாடுபட்டிருப்பார்கள்? அப்பெண்ணின் துணிவையும், அறியாமையையும் நினைத்து என் நெஞ்சம் புண்ணாகியது. தற்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை எமக்கு வரும் ஏராளமான கடிதங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
இதற்கு என்ன காரணம்?

``திருமணம்'' என்னும் புனித பந்தத்தைத் தற்கால இளைஞர்களும், பெண்களும் உணர்ந்து கொள்ளாததே, ஏராளமான குடும்பங்களில் இத்தகைய பிரச்சினைகள் இன்று ஏற்பட்டு வருவதற்கு முக்கியக் காரணமாகும். சிறு வயதிலிருந்தே இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் ஒழுக்கம், உடலாலும், உள்ளத்தாலும் தூய்மை, நல்ல எண்ணங்கள், தெய்வபக்தி, கற்பு ஆகியவற்றைப் போதித்து, வளர்க்க வேண்டியதன் அவசியத்தை மனுதர்ம சாஸ்திரம், அர்த்த சாஸ்திரம், தர்ம சாஸ்திரம்போன்ற பிரசித்தி பெற்ற நூல்கள் வலியுறுத்துகின்றன.
விவாகம் என்பது சாதாரண சடங்கு அல்ல. திருமணத்தின்போது என்ன நடக்கிறது - யார், யார் முன்னின்று தூய்மையான அத்தெய்வீக பந்தத்தை ஏற்படுத்தித் தருகிறார்கள் என்ற சூட்சுமங்களை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். அவ்விதம் அறிந்துகொண்டால் திருமணம் என்னும் தெய்வீக உறவின் புனிதத்தை அனைவரும் - முக்கியமாக நமது இளைஞர்களும், பெண்களும் புரிந்துகொள்வார்கள்.மனைவியின் உயர்வு!
மனைவிக்கு `அகம் உடையாள்' என்றொரு சிறப்புப் பெயர் உண்டு. அதாவது தான் கைப்பிடிக்கும் கணவரின் மனம் முழுமைக்கும் உரியவள் - அதாவது கணவரின் மனதை முழுமையாகப் பெற்றவள் என்பது பொருள். இதுபோன்றே கணவனுக்கு `அகம் உடையான்' என்ற சிறப்பு உண்டு. `அகம்' என்றால் மனம் என்று பொருள். மனைவியின் மனதை முழுமையாகப் பெற்றவன் என்பதால் அகம் உடையான் என்று கணவனுக்குப் பெயர் ஏற்பட்டது.

எத்தனை செல்வமிருந்தாலும், எத்தகைய உயர் பதவியில் இருந்தாலும், எத்தகைய அழகனாக இருந்தாலும், படிப்பில் வானளாவ உயர்ந்திருந்தாலும், உத்தமியான மனைவி அமைந்தால் மட்டுமே இத்தனை பாக்கியங்களையும் மனிதன் அனுபவிக்க முடியும். ஆதலால்தான் தமிழன்னை ஔவைபிராட்டி `இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை!' என அருளியுள்ளார். கணவருடைய மனமறிந்து வாழ்வில் ஏற்படும் சோதனைகளைப் பொறுமையுடன் ஏற்று, மனம் தளரும் கணவருக்கு நம்பிக்கையும், தைரியமும், உற்சாகமும் ஊட்டி, சோதனை காலத்தை நல்லபடி கடப்பதற்கு மனைவியால் மட்டுமே உதவமுடியும். நோய்வாய்பட்டிருக்கும்போது ஏற்படும் உடல் துன்பங்களுக்கு அருமருந்தாக இருப்பவள் மனைவி மட்டுமே. விவாக மேடை!
திருமணத்தின்போது வந்திருப்பவர்கள் உறவினர்களும், நண்பர்களும் மட்டும்தான் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். இது உண்மை அல்ல. இவர்கள் வருவதற்கு முன்பே, விவாக மேடையில் நாம் முதன் முதலில் வரவேற்று அர்க்கியம், பாத்யம், ஆசமனீயம் ஆகியவற்றைச் சமர்ப்பித்து, நமஸ்கரித்து, பக்தி, மரியாதையுடன் உபசரித்து, ஆசனமளித்து, அமரச் செய்வது நமது பித்ருக்களையும், பித்ரு பத்தினிகளையும்தான்! இந்த மிக, மிக முக்கியமான பித்ரு பூஜைக்குத்தான் `நாந்தி சிரார்த்தம்' என்று பெயர். சிரார்த்தம், தர்ப்பணம், பித்ருக்களின் திதி பூஜைகள் அசுபமானவை அல்ல. பித்ருக்கள் விவாக மேடையில் அமர்ந்த பிறகு, நாம் மந்திரரூபமாக மும்மூர்த்திகளையும், வருணன், அக்னி, சூரியன் உள்ளிட்ட நவக்கிரகங்கள், நம் குல மகரிஷிகள் ஆகியோரையும் அழைத்து ஆசனமளித்து அமரச் செய்கிறோம். அவர்கள் முன்னிலையில்தான் திருமணமே நடைபெறுகிறது. ஆதலால்தான் நாம் திருமண மேடைக்குக் காலணிகள் அணிந்து கொண்டு செல்லக்கூடாது.

திருமணம் என்னும் புனித பந்தத்தைத் தற்காலத்தில் இளைஞர்களும், பெண்களும் துச்சமாக மதித்து ஒரே விநாடியில் தூக்கியெறிந்து முறித்துவிடுகின்றனர். அத்தகைய முறிவிற்குக் காரணமாக இருப்பவர்கள் பிள்ளை வீட்டாராக இருந்தாலும் சரி, பெண் வீட்டினராக இருந்தாலும் சரி, இப்பிறவியிலும் அடுத்து வரப்போகும் பிறவிகளிலும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். பெரியோர்களை மதிக்காது தன்னிச்சையாக ஒருவனையோ அல்லது ஒருத்தியையோ திருமணம் செய்துகொள்வது திருமணமாகிவிடாது. அது Just living together as a ‘Man & Womanதான். கணவர்-மனைவியாக இணைந்து வாழும் புனித பந்தத்தை அது தராது. ராமன்சீதை, சத்தியவான்-சாவித்திரி, ஹரிச்சந்திரன்-சந்திரமதி, அத்திரி மகரிஷி-அனுசூயை, நளன்-தமயந்தி, கோவலன்கண்ணகி போன்ற தெய்வ தம்பதியர் மிகக் கொடூரமான துன்பங்களை அனுபவித்தபோதும்கூட இணைந்து, ஒழுக்கம், கற்பு ஆகியவற்றின் பலத்தால் துன்பம் நீங்கி நல்வாழ்வு பெற்றதையும், அதனால் இப்பாரத பூமியே புண்ணிய பூமியாக விளங்கியதையும் புராதன நூல்கள் விளக்கியுள்ளன. கற்புடைய மங்கையரை மும்மூர்த்திகளும் வணங்குகிறார்கள். நாகரிகம் என்ற மோகத்தில் தன்னிச்சையாக நடந்துகொள்ளும் அநாகரிகத்தை விட்டுவிட்டு, நமது பாரத நெறிமுறைக்குத் திரும்பும்படி நம் இளைஞர்களையும், பெண்களையும் அன்புடன் வேண்டுகிறேன். அது ஒன்றே மகிழ்ச்சியான, நல்வாழ்வைத் தரும்!

வெறி பிடித்த பெண்கள் - தனித்து வசிக்கும் ஆண்கள்

அப்பாவி கணவர்களையும் அவர்தம் பெற்றோரையும் கொடுங்கோன்மை சட்டங்கள் மூலம் பயங்கரவாதத்தினால் தாக்கும் பெண்கள் நிறைந்த நம் நாட்டில் இதன்கீழ் காணும் செய்தியில் குறிப்பிட்டுள்ள நிலை தொடங்க நீண்ட நாட்கள் இல்லை. இப்போதே படித்த இளைஞர்கள், குறிப்பாக மென்பொருள் துறையில் இருப்பவர்கள் திருமணமென்றாலே காத தூரம் ஓடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பெண்மை என்பதே ஒரு வக்கிரம் என்னும் நிலைப்பாட்டை நம் பாரம்பரிய "மனை மாட்சி"யின் அழிவினால் ஏற்படுத்தியுள்ளார்கள்.

இனி செய்தி:

லாஸ் ஏஞ்சலஸ்: திருமணத்துக்கு பிறகு மனைவியை பிரிந்து வாழ்ந்தாலும், வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படுத்திக் கொள்வதற்காக, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் புதிய கலாசாரம் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் மியாமியை சேர்ந்தவர் டாக்டர் டேனியல் கவுர். தனக்கு குழந்தை வேண்டும் என்பது இவரது நெடுநாளைய ஆசை. இவரது மருத்துவப் பள்ளி மற்றும் மருத்துவமனை மூலம் ஏகத்துக்கும் சம்பாத்தியம். வேலையை பார்த்துக் கொள்ளவே நேரம் போதவில்லை. மனைவி பிரிந்துசென்று விட்டார். இப்போது கவுருக்கு வயது 46. குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற, தனது நீண்ட கால கனவை செயல்படுத்த முடிவு செய்தார். வாடகைத் தாய் மூலம், தற்போது ஆண் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

இதுவரை, ஆண்களுடன் வாழப்பிடிக்காத பெண்கள் தான், செயற்கைக் கருவூட்டல் மூலம், குழந்தை பெற்றுக் கொள்வது வழக்கமாக இருந்தது. இப்போது, தனியே வசிக்கும் ஆண்களும், குழந்தை பெற்றுக் கொள்ளும் புதிய கலாசாரம் அறிமுகமாகி உள்ளது. தனக்கென்று ஒரு குடும்பம், ஒரு பிணைப்பு வேண்டும் என்று, தனித்து வாழும் ஆண்களும் விரும்புகின்றனர். இதனால், அவர்கள் வாடகைத் தாய் மூலம் தனது குழந்தையையே பெற்றுக் கொள்கின்றனர்.

கடந்த மாதம் பாப் பாடகர் ரிக்கி மார்ட்டின், வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுக் கொண்டார். இப்போது தனது குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் வசித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன், தனித்து வாழும் ஆண்கள், குழந்தையை தத்தெடுத்து வளர்க்கத் துவங்கினர். இப்போது தங்களது குழந்தையையே பெற்றுக் கொள்ள துவங்கியுள்ளனர். தனித்து வாழும் ஆண்கள், பெரும்பாலும் ஓரினச் சேர்க்கையாளர்களாக உள்ளனர். ஒழுக்கமாக வசிக்கும் ஆண்களும் உண்டு. இவர்கள் பெண்களை விரும்பாதவர்களாக உள்ளனர். மனைவி என்று ஒரு உறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்பாமல், அதே நேரம் குழந்தையும் பெற்றுக் கொள்ள விரும்புகின்றனர். குழந்தை பெற்றுக் கொள்ள இவர்கள் 40 லட்ச ரூபாய் செலவிடுகின்றனர்.

வில்லங்க மனைவிகள் - அபாயத்தில் ஆண்கள்!


(நன்றி: குமுதம்)திருமணமான முதல் வாரத்திலேயே பணத்துக்காக கணவனால் விரட்டியடிக்கப்படும் பெண்கள். தினமும் குடித்துவிட்டு வருகிற கணவனிடம் அடிவாங்கும் அபலைகள். கணவனின் ஒட்டுமொத்த குடும்பத்தால் திட்டம்போட்டு தீர்த்துக் கட்டப்படும் மனைவிகள். இவர்களைப் போன்ற துரதிர்ஷ்டக்காரப் பெண்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு உருவாக்கப்பட்டவைதான் குடும்ப வன்முறைச் சட்டமும் வரதட்சணை தடுப்புச் சட்டமும். இந்தச் சட்டங்களால் பல பெண்களின் வாழ்க்கைப் பிரச்னை தீர்ந்திருக்கின்றது. ஆனால் இன்று வரும் தகவல்கள் நமக்கு அதிர்ச்சி கொடுக்கின்றன. பல பெண்கள் தங்கள் அப்பாவிக் கணவர்களைப் பழிவாங்குவதற்குத்தான் இந்தச் சட்டங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்கின்றன புள்ளி விவரங்கள். உதாரணத்துக்கு ஒரு சின்ன தகவல். 2005-ம் ஆண்டு மட்டும் இந்த சட்டங்களின் கீழ் ஐம்பத்தைந்தாயிரம் ஆண்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அதில் இருபத்தைந்து சதவிகித கேஸ்கள் முதல் கட்ட விசாரணையிலேயே தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. யோசித்துப் பாருங்கள், அந்தப் பரிதாப ஆண்களின் நிலைமையை. போலீஸ், கோர்ட், கேஸ், அலைச்சல், அவமானம், பின்பு நிரபராதி என்ற பட்டம்.


``வரதட்சணை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுறதை தவிர்ப்பதற்காக ஒரு வருடத்தில் சென்னை ஹைகோர்ட்டில் மட்டும் சுமார் 2500 பேர் முன்ஜாமீன் எடுக்குறாங்க. இதில் ஒரு சதவிகிதத் துக்கும் குறைவான வழக்குகளில்தான் புகார் உண்மைனு நிரூபணமாகி, குற்றம் நிரூபிக்கப்படுது. மற்றது எல்லாமே பொய்ப்புகார்களால் போடப்பட்ட வழக்குகள்'' என்கிறார், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர்.

மனைவி கொடுத்த பொய்யான புகாரால் இன்று வாழ்க்கையையே தொலைத்த ஜெயபாலனின் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) கதை ஓர் உதாரணம். ஈரோட்டைச் சேர்ந்த ஜெயபாலனுக்கு 2002-ல் திருமணம் நடந்தது. மனைவியுடன் தொடக்கத்திலிருந்தே பிரச்னைதான். ``என் மனைவி புகுந்த வீட்டுல கொஞ்சம் சிரிச்சுப் பேசினாலும், அவளோட தலைக்குமேல் ஏறிடுவாங்கனு நெனைக்கிற டைப் என் மனைவி. ஏதாவது வீட்டு வேலை செய்யச் சொன்னா, எங்க குடும்பமே சேர்ந்து கொடுமைப்படுத்துற மாதிரி பேசுவா. எங்களுக்குள்ள அடிக்கடி சண்டை வர ஆரம்பிச்சுது. ஆடி மாசத்துக்கு பிறந்த வீட்டுக்குப் போன என் மனைவி திரும்பி வரவே இல்லை'' என விரக்தியுடன் சொல்கிறார் ஜெயபாலன்.

கணவரை விட்டுப் பிரிந்த ஒரு வருடத்துக்குப் பிறகு ஆற அமர யோசித்து, ஜெயபாலனின் மனைவி போலீஸில் வரதட்சணைப் புகார் அளித்த சம்பவம் பெருங்கொடுமை. ``என் குடும்பத்துல மிச்சமிருந்த நிம்மதியும் மொத்தமா போயிடுச்சு. ஏதோ பணத்தாசை பிடிச்சு அலையுற கும்பல் மாதிரி எங்களை எல்லோரும் பார்த்தாங்க. உண்மையில், என் பிரச்னைக்கும் வரதட்சணைக்கும் தொடர்பே கிடையாது. இது என் மனைவியோட குடும்பம் என்னைப் ழிவாங்குறதுக்காகக் கொடுத்த பொய்ப்புகார்னு நிரூபணம் ஆக நாலு வருஷம் கோர்ட்டுக்கு அலைய வேண்டியிருந்தது. நான் வேலை பார்க்குற பெங்களூரிலிருந்து, வழக்கு நடக்குற கோயம்புத்தூர் கோர்ட்டுக்கு இதுவரைக்கும் ஐம்பது முறையாவது வந்திருப்பேன்'' என்று சொல்லும் ஜெயபாலன், தற்போது விவாகரத்து வழக்குக்காக அலைந்துகொண்டிருக்கிறார்.
கணவருடன் பிரச்னை தோன்றி விட்டால், அவரது அம்மா, அப்பா உட்பட ஒட்டுமொத்த குடும்பத்தையே நீதிமன்றத்துக்கு இழுத்தால்தான் சில பெண்களுக்குத் திருப்தி.


ஓசூரில் வசித்து வந்த ஷ்யாம் முகர்ஜிக்கும் அவரது மனைவி லீலாவுக்கும் இடையே பத்து வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு கருத்து வேறுபாடு. ஷ்யாமை விட்டுப் பிரிந்து சென்ற லீலா திடீரென ஒருநாள் குடும்ப வன்முறைச் சட்டத்தின்கீழ் புகார் செய்தார். லீலா புகாரில் சேர்த்திருந்த ஷ்யாமின் அம்மாவுக்கு வயது 80. அப்பா தொண்ணூறை நெருங்கிக்கொண்டிருப்பவர். ``ஓசூரில் எங்கூட வாழ்ந்த லீலாவை கொல்கத்தாவிலுள்ள எங்க அம்மா, அப்பா எப்படி துன்புறுத்த முடியும்? அவங்க எழுந்து நடக்குறதுக்கே மத்தவங்க துணை தேவை. என் தங்கையின் கணவருக்கு இதில் என்ன சம்பந்தம்? குடும்ப வன்முறைச் சட்டத்தின்படி, ஒரு பெண் இந்தியாவிலுள்ள எந்த இடத்திலும் புகார் பண்ணலாம். இதைப் பயன்படுத்தி, லீலா தற்சமயம் வசிக்குற புனேயிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துருக்கா. இப்போ வழக்கு விசாரணைக்கு உட்படும்போதெல்லாம் நான் ஓசூரிலிருந்தும், என்னோட பேரண்ட்ஸ் கொல்கத்தாவிலிருந்தும் புனே கோர்ட்டுக்குப் போகணும்'' என முடிக்கும் ஷ்யாமின் குரலில் வேதனை ஒலிக்கிறது.

சட்டங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, கணவர்களை டார்ச்சர் பண்ணுகிற சில பெண்களுக்கும் நம் போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் இடையே அப்படியொரு `அண்டர்ஸ்டேண்டிங்!' பல கேஸ்களில் போலீஸாரே நேரடியாகத் தலையிட்டு `கட்டப்பஞ்சாயத்து' செய்வதும், வசூல்வேட்டை நடத்துவதும் சர்வ சாதாரணமாகி விட்டன. அதுவும் பெண் பெரிய இடம் என்றால் கணவர் காலி. பெரும்பாலான பெண்கள் கணவருடன் மீண்டும் சேர்வதற்கோ பிரச்னையின்றிப் பிரிவதற்கோ உதவும் குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் தங்கள் புகாரைப் பதிவு செய்வதில்லை. கணவரைக் கம்பி எண்ண வைக்க மட்டுமே வழிகாட்டும் இந்திய குற்றவியல் சட்டத்தின் 498 (ஏ) பிரிவின் கீழ்தான் புகார் கொடுக்கிறார்கள்.

அதென்ன 498(ஏ)?

``கணவன் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினாலும், உடல், மன ரீதியாக சித்திரவதை செய்தாலும் மனைவி ஐ.பி.சி. 498(ஏ)யின் கீழ் போலீஸில் நேரடியாக புகார் செய்ய முடியும். வாரன்ட் இல்லாமலேயே கணவரைக் கைது செய்ய முடியும்ங்கிறதால, பழி வாங்க நினைக்கும் பல பெண்களின் ஒரே சாய்ஸ் இதுதான். பல புகார்களில் போலீஸ் எஃப்.ஐ. ஆர். போடறதில்லை. கணவரைக் கைது செஞ்சா, 24 மணி நேரத்துல மாஜிஸ்திரேட் முன்னாடி நிறுத்தியாகணும். அதனால் போலீஸ் அவரைக் கைது செய்யாமலேயே, அதிரடியா ஸ்டேஷனுக்கு வரவழைச்சு, கட்டப்பஞ்சாயத்துல இறங்கிடுறாங்க'' என ஆதங்கத்துடன் சொல்கிறார் வழக்கறிஞர் மோகன்.

குடும்ப வன்முறைச் சட்டத்தையும் 498(ஏ)யையும் தவறாகப் பயன்படுத்தும் பெண்களுக்கு ஒரு தீர்ப்பில் உச்சநீதி மன்றம் விடுத்த எச்சரிக்கை இது, ``புலி வருது, புலி வருது என உங்கள் இஷ்டத்துக்குப் பொய் சொல்லி, உண்மையிலேயே புலி வந்து நிற்கும் போது, உதவிக்கு யாரும் வராமல் செய்துவிடாதீர்கள்!''

கேபிள் டி.வி. சரியாகத் தெரியா விட்டால்கூட, கணவன் மீது சித்திரவதை புகார் கொடுக்கிற வில்லங்க மனைவிகள் திருந்துவார்களா?.

-ஆனந்த் செல்லையா

ஆண்கள் உரிமைக்கு ஒரு சங்கம்

பெண்களின் போலியான புகார்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காகவே 2007-ல் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட "ஆண்கள்உரிமை பாதுகாப்பு இயக்க"த்துக்கு இளைஞர்களிடையே அமோக வரவேற்பு. தமிழகம் முழுதும் ஏறக்குறைய 4 லட்சம் பேர் இதில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த அமைப்பை நிறுவியவர் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் டீன் ஆகப் பணிபுரிந்தவரும், பிரபல தோல் மருத்துவ நிபுணருமான டாக்டர் இளங்கோவன். ``குடும்ப வன்முறை சட்டத்தைப் பயன்படுத்தி, கணவர் மேல் போலியான புகார்கள் கொடுக்குற பெண்களுக்கு நம் சட்டங்களில் எந்தத் தண்டனையும் இல்லை. பொய் சொன்ன பெண்களுக்கு தீர்ப்பில் ரெண்டு நிமிஷம் அட்வைஸ் செஞ்சிட்டு விட்டுடுறாங்க. குற்றம் சாட்டப்பட்ட கணவரை ஐந்தாறு வருஷம் கழிச்சு நிரபராதினு நிரூபிச்சு, என்ன பிரயோஜனம்? அவர் இழந்த நிம்மதி திரும்பக் கிடைக்குமா? வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறை புகார்களைத் தீர விசாரிக்க தனி கமிட்டி அமைக்கணும். பொய் சொன்ன பெண்களுக்கு அபராதமும் தண்டனையும் விதிச்சால்தான் இவங்க திருந்துவாங்க'' என வலியுறுத்துகிறார் இவர்.
குடும்பப் பாதுகாப்புக்கு அதிகாரி!


மனைவியிடமிருந்து வரும் கணவனுக்கு எதிரான புகார்களை விசாரிப்பதில், தமிழகத்துக்கும் மற்ற மாநிலங்களுக்கும் இடையே தலைகீழான வித்தியாசம். மற்ற மாநிலங்களில் குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் இத்தகைய புகார்களை ஒரு பெண் `குடும்பப் பாதுகாப்பு அலுவலர்" என்ற சமூகநலத்துறையைச் சேர்ந்த அதிகாரியிடம்தான் கொடுக்க முடியும். பிரச்னையைப் பாதுகாப்பு அலுவலர் இரு நாட்களுக்குள் விசாரித்து, மாஜிஸ்டிரேட்டிடம் அறிக்கை கொடுத்துவிட வேண்டும். போலீஸ் கெடுபிடிகளுக்கு இந்த முறையில் வாய்ப்பு இல்லை. பெண்ணின் புகார் பொய்யாக இருக்கும் பட்சத்தில், ஆரம்பத்திலேயே போலிவழக்குகள்இதன் மூலம் தடுக்கப்பட முடியும். ஆனால் தமிழகத்தில் இந்த முறை இல்லை. எடுத்ததுமே போலீசிடம் சென்று விடுகிறார்கள். ``குடும்பப் பாதுகாப்பு அலுவலர்கள் தமிழகத்திலும் நியமிக்கப்பட வேண்டும். ஏனென்றால் முதலில் போலீசிடம் புகார் போகும்போது, அவர்கள் கட்டப் பஞ்சாயத்தில் இறங்க வாய்ப்பு இருக்கிறது'' என்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த "ஆண்கள் உரிமை பாதுகாப்பு இயக்க" உறுப்பினர்

498A பற்றிய ஜூனியர் விகடன் கட்டுரை

கிளிக் செய்து பெரிதாக்கி வாசியுங்கள்.


இந்திய குடும்ப பண்பாட்டு முறையை சட்ட வன்முறையிலிருந்து காப்போம்!

கணவன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது ஏற்றப்படும் பொய் வழக்குகள், அதன்பேரில் அவர்கள் கொடுங்கோன்மையாக கைது செய்யப்பட்டு, யாதொரு விசாரணையுமின்றி சிறையிலடைக்கப்படுதல் போன்ற அநாகரிகமான, அநியாயமான, காட்டுமிராண்டித்தனமான, பயங்கரவாத நிகழ்வுகளை சட்டரீதியாக எதிர் கொள்ள "இந்திய குடும்ப வாழ்வு முறையைக் காப்போர்" (Save Indan Family Foundation) இயக்கம் ஒன்றை பாதிக்கப்பட்டோர் சேர்ந்து தொடங்கியுள்ளனர்.

அவர்களின் நோக்கம் மற்றும் செயல்பாடு பற்றிய முதல் செய்தி வெளியீட்டை உங்களுக்கு அளிக்கிறோம். அனைவரும் அதை வாசித்து மற்றும் பலருக்கு விநியோகித்து இந்த இயக்கத்தை ஊக்குவிக்குமாறு வேண்டுகிறோம்.

இந்த செய்தி மடலை இங்கிருந்து தரவிறக்கம் (download) செய்து கொள்ளலாம்.

நன்றி.

கைதுசெய்த கணவனை ஏன் வெளியே விட்டாய்?

கைது செய்யப்பட்ட கணவனையும் அவரது வீட்டாரையும் ஏன் ஜாமீனில் வெளியே விட்டீர்கள் என்று பெண்வீட்டார், கபூர்தாலாவில் செவ்வாய் அன்று சுமார் 6 மணி நேரம் SSPயின் வீட்டு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கபூர்தாலா : தன் கணவன் மீதும் இன்னும் சிலர் மீதும் புகார் கொடுத்த ஒரு பெண்ணும் அவரது வீட்டாரும், கபூர்தாலாவில் செவ்வாய் அன்று சுமார் 6 மணி நேரம் SSPயின் வீட்டு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், SSP திரு ராகேஷ் அகர்வால் ஆவர்களோ, குற்றம் சுமத்தப்பட்டவரை வெளியே விட்டதில் எந்த முறைகேடும் இல்லை. பெண் வீட்டார், போலீஸை நெருக்க முயல்கின்றனர் என்று கூறினார். திரு அகர்வால் " ...குற்றம் சுமத்தப்பட்டவர்கள், தாங்கள் நிரபராதி என்றும், உண்மையை நிலைநாட்ட தங்களுக்கு உதவி வேண்டும் .." என்று கூறினர் என்றார். மேலும் SSP கூறியதாவது ..." முதல் நாள் இரவு 10 மணி அளவில் என் வீட்டுக்கு வந்தனர். அவர்களை அடுத்த நாள் அலுவலகம் வரச்சொன்னேன்..ஆனால் அதற்குள்ளே ஆர்ப்பாட்டம் தொடங்கி விட்டனர், ..." என்றார்

----

செய்தி: Times of India