பாதிக்கப்பட்ட கணவர்கள் தினம்!

26-08-2007 அன்று புது டில்லியின் "ஜந்தர் மந்தர்" என்னுமிடத்தில் இ.பி.கோ 498a மற்றும் குடும்ப வன்முறை போன்ற ஒருதலைப்பட்சமான சட்டங்களால் பலி வாங்கப்பட்ட கணவர்கள் ஒன்றுகூடி, அதுபோன்ற சட்டங்களை தவறான வழிகளில் பயன்படுத்தி பொய் வழக்குகள் போட்டு, கணவன்மார்களையும், அவர்கள்தம் குடும்பத்தினரையும் (வயதான தாய், தந்தையினர், சகோதரிகள், குழந்தைகள் உட்பட) விசாரணையேயில்லாமல் சிறையில் தள்ளி கொடுமைப் படுத்தும் நடைமுறை ஒழியவேண்டும் என்று "எதிர்ப்பு நாள்" கூட்டம் நடத்தினார்கள்.

இதில் கலந்துகொண்ட பரிதாபமான கேசுகளில் பலர் ஐ.ஐ.டி, ஐ.ஐஎம் போன்ற கல்லூரிகளில் படித்து பெரிய பதவிகளை வகிப்பவர்கள் மற்றும் பொறியாளர்கள், டாக்டர்கள், வக்கீல்கள், என்.ஆர்.ஐ-கள் ஆகியோர் அடங்குவர்.

இந்த எதிர்ப்பு நாளை முன்னணியில் இருந்து நடத்தியவர்கள் "இந்திய குடும்ப முறையைக் காப்போர் அமைப்பை"ச் சார்ந்தவர்கள் (Save Indian Family foundation).

இத்தகைய சட்டங்கள் போடா, குண்டர்கள் சட்டம் போன்றவைகளைவிட மிகக் கொடுமையானவை; ஒரு பெண் வெறுமனே "என்னைக் கொடுமைப் படுத்தி விட்டார்கள்" என்று சொன்னால் போதும். எந்தவித விசாரணையோ, தரவுகளோ, ஆவணங்களோ இல்லாமல் உடனே கைது செய்து விடுகிறார்கள். இது போன்ற கொடுங்கோல் சட்டம் இந்தியாவில் வேறேதும் இல்லை என்பதை அவர்கள் எடுத்துரைத்தனர். அந்தப் பெண் சொன்னால் என்பதற்காக 80 வயது தொண்டு கிழவர்களையும் கிழவிகளைகளையும், கையில் சிறு சிசுவுடனிருக்கும் கணவனின் சகோதரிகளையும், ஏன், 5, 6 வயது பச்சிளம் பாலகர்களையும் (அவர்களும் கொடுமைப் படுத்தினார்களாம்!) நள்ளிரவில் கைது செய்யும் கொடுமையும் நடந்து வருகிறது.

இந்த நிலை நீடித்தால் திருமணம் என்னும் வாழ்க்கைமுறை மேலேயே ஆண்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என்பது திண்ணம்!

டில்லி "ஹிந்துஸ்தான் டைம்ஸ்" நாளிதழில் வெளியான இந்த "எதிர்ப்பு நாள்" பற்றிய செய்தியை இங்கு காணலாம்:-



1 மறுமொழி:

Anonymous said...

மனைவிமார்கள் தவறிழைக்கும் பட்சத்தில் அதை ஆதாரபூர்வமாக நிரூபிக்கும் வாய்ப்பிருந்தால் தப்பிக்க வழியுண்டு.

என் நண்பனொருவன் மணமான சில நாட்களிலேயே அவன் மனைவியுடன் சண்டையிட நேர்ந்தது பற்றி சொன்னான். மணமான புதிதில் இருவரும் சில வாரங்கள் பிரிந்திருக்க நேர்ந்த போது, yahoo chat-ல் தீவிரமாக சண்டையிட்டுக்கொண்டார்களாம். அதிலும் தொடர்ந்த மின்னஞ்சல்களிலும் அப்பெண் சற்று கடினமான வார்த்தைகளை பிரயோகித்திருக்கிறார். (ஒருமுறை, 'என் அம்மாவிற்காக படுகுழியில் விழுந்துவிட்டேன்' என்னும் அளவிற்கு) நண்பனோ சமாதானமாகவே பேசியிருக்கிறாரன்.

அவர்கள் சேர்ந்த பிறகும் அவ்வப்போது அல்ப விஷயங்களுக்கெல்லாம் சண்டை தொடர்ந்தபடியே இருக்கவே, நண்பனும் பொறுமையாக காரணத்தை ஆராயவேண்டி அவன் மனைவியின் மின்னஞ்சல்களை ஆய்ந்தபோதுதான் தெரியவந்திருக்கிறது விஷயம், அப்பெண் மணமாவதற்குமுன் வேறொருவனை காதலித்ததும் ஏதோ காரணங்களால் (பெற்றோரின் நிர்ப்பந்தம் அல்லது வேறெதோ) கைகூடாத ஆத்திரமே நண்பன் தலைமேல் விடிந்திருக்கிறது என்பது. மணமான பின்னரும் அப்பெண் முன்னாள் காதலரோடு தொடர்பில் இருந்திருக்கிறார். அதும் எந்தளவு ? அவன் 'dear, baby' என்றெல்லாம் விளித்து மின்னஞ்சல் அனுப்பும் அளவிற்கு.

நல்லவேளையாக இந்த மின்னஞ்சல்கள் மற்றும் மணமான உடனேயே chat மற்றும் மின்னஞ்சல்கள் மூலமாக போட்டுக்கொண்ட சண்டைகள் அனைத்தையும் ஒரு CD-ல் பதிவு செய்துகொண்டான்; print-out-ம் எடுத்துக்கொண்டான்.

விஷயம் நீதிமன்றத்திற்கு போனது. அப்பெண்ணோ இவன் மேலும் குடும்பத்தின்மேலும் வரதட்சணை மற்றும் கொடுமைப்படுத்தல் வழக்கு தொடர்ந்தார்.

இவன் தன் தரப்பு நியாயங்களை சொல்லி பெண்ணின் முன்னாள் காதல் பற்றியும் அது தன் தலைமீது விடிந்தது பற்றியும் சொல்ல, அப்பெண்ணோ இவன் ஆதாரம் வைத்திருக்கும் விஷயம் தெரியாமல், இவன் தன் தவறை மறைக்க பொய் சொல்கிறான் எனவும், இவன் அமைதியாக print-outs எல்லாவற்றையும் நீதிபதியிடமே கொடுத்து படிக்க சொல்ல, அதிர்ஷ்டவசமாக ஒரு மின்னஞ்சலில் இவன் வீட்டில் யாரும் வரதட்சணை கேட்கவில்லை என்பது அவருக்கு தெரியும் என்றே சொல்லியிருக்க, நீதிபதி அதை வட்டமிட்டு அப்பெண்ணிடமும் பெண்ணின் பெற்றோரிடமும் காட்டி படிக்க சொல்ல, முகம் வெளுத்துப்போயினர் பெண்ணின் குடும்பத்தினர்.

பிறகென்ன ? பெண் வீட்டாருக்கு பலத்த கண்டனமும், உடனடி விவாகரத்தும், நண்பனுக்கு கிடைத்த நிம்மதியும்.