498a சட்டம் என்ன சொல்கிறது

இந்தியன் பீனல் கோட் செக்ஷன் 498a என்னும் குற்றவியல் சட்டம் குறிப்பிடும் குற்றம் இது:


ஒரு மணமான பெண்ணின் கணவனோ, கணவனின் உறவினர்களோ, அந்தப் பென்ணை (மனதளவில்கூட) துன்புறுத்தினதாக அந்தப் பெண் கருதினால், குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு மூன்று வருட சிறைத் தணடனையும், அபராதமும் விதிக்கப்படும்


"ஆகா, இது எவ்வளவு தேவையானதொரு சட்டம். எவ்வளவு பெண்கள் நம் நாட்டில் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இந்த சட்டம் மட்டும் இல்லையெனில் அவர்களுக்கு விடிவேது?"

இப்படித்தான் தோன்றுகிறது இல்லையா உங்களுக்கு? ஆமாம், பெண் என்றால் பேயும் இரங்குமே!!

ஆனால் அந்த சட்டம் குறிப்பிடும் குற்றத்தின் அடிப்படை வரையறைகளை சற்று நோக்கினால் அதன் பயங்கரம் உங்களுக்குப் புலப்படும்:

  • It is cognizable (வாரண்ட், விசாரணை ஏதுமின்றி கைது செய்யலாம்)
  • It is non-bailable (இதற்கு ஜாமீன் கிடையாது)
  • It is non-compoundable (கம்ப்ளெயிண்டை திரும்பப் பெற முடியாது)

அதாவது ஒரு பெண் ஒரு பேப்பரை எடுத்து, "என் கணவர், அவருடைய 80 வயது தாய், 85 வயது தந்தை, 25 வயது தங்கை, அவளுடைய 3 வயது குழந்தை எல்லோரும் சேர்ந்து கொடுமை செய்தனர்" என்று எழுதி இந்தியாவிலுள்ள எந்த காவல் நிலையத்தில் கொடுத்தாலும் புகாரில் குறிப்பிடப்பட்ட அனைவரையும் கொஞ்சமும் ஈவு, இரக்கமின்றி கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்கள்.

இதனால் இன்று திருமணம் என்னும் பந்தமே அறுபட்டுப் போகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தவிர, பல வக்கீல்கள் இந்த 498அ பிரிவில் கேஸ் போடுவதற்கென்றே இருக்கிறார்கள். மணமான பெண்களின் பெற்றோர்கள் கணவன்மார்களிடமிருந்து கணிசமான துகையை பிடுங்குவதற்கு இதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும் என்.ஆர்.ஐ குடும்பங்களும், இந்தியாவிலுள்ள மென்பொருள் துறையில் பணியற்றும் பையன்களின் திருமணங்களும் பெருமளவில் சீரழிந்து கொண்டிருக்கின்றன.

இந்திய உச்ச நீதி மன்றம் ஒரு தீர்ப்பில் இந்த சட்டம் நடைமுறை படுத்தப்படும் தவறான போகைப் பற்றி, "இது ஒரு சட்ட ரீதியான தீவிரவாதம்" (It is a legal Terrorism) என்று குறிப்பிட்டுள்ளார்!

இந்த சட்டத்தால் பதிக்கப்பட்ட பலரின் சோகக் கதைகளையும், அதன் தீவிரத்தைப் பற்றியும் இனிவரும் பதிவுகளில் விவரிப்போம்!

1 மறுமொழி:

')) said...

தமிழில் சட்டம் குறித்த வலைப்பூவிற்கு நல்வரவு.

-சுந்தரராஜன்