சில வருடங்கள் முன்பெல்லாம் பெண் குழந்தை பிறந்தால், "ஐயகோ, பெண்ணாகப் பிறந்துவிட்டதே, என்ன செய்வேன்? எப்படிக் காப்பாற்றுவேன்? எப்படி மணம் செய்து கொடுப்பேன்?" என்பதுபோன்ற கவலைகளால் சூழப்பட்டு பெற்றோர்கள் மகிழ்ச்சியின்றி துவண்டு விடுவார்கள். பெண் பிறந்தாலே துன்பம்தான் என்பது நம் இந்திய சமூகத்தின் கட்டமைக்கப்பட்ட விதியாக இருந்தது.
ஆனால் காலம் மாறிவிட்டது. பெண்ணைப் பெற்றவர்கள் இனிமேல் கவலையே படவேண்டாம். ஏன் அப்படி அடித்துச் சொல்கிறேன்? காரணங்களை நோக்குவோம்:-
- பெண்கள் எல்லோருமே இப்போதெல்லாம் நன்கு மேற்படிப்பு படிக்கிறார்கள். ஆண்களைவிட நன்றாக தேறுகிறார்கள். இதுநாள்வரை ஆண்களின் டொமைனாக இருந்த துறைகளில்கூட பெண்கள் நுழைந்து சாதனைகள் புரியத் தொடங்கிவிட்டனர்.
- பெண்கள் தொட்டாற் சுணுங்கியாக இருந்த காலம் போய், இப்போதெல்லாம் அவர்கள் மிக மனத்துணிவும், அபரிமிதமான துணிச்சலும் மிக்கவர்களாக ஆகிவிட்டனர். தனியாக வெளிநாடு சென்று வேலை பார்க்கவோ, இரவில் பணிக்குச் செல்லவோ சிறிதளவும் தய்ங்குவதில்லை. பெற்றோர்களும் அதை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை.
- பெண்களுக்கு மென்பொருள் துறையிலும் கால் செண்டர் போன்ற BPO துறைகளிலும் எளிதில் வேலை கிடைப்பது மட்டுமின்றி, அவர்கள் ஆண்களைவிட அதிகமாகவே சம்பளம் வாங்கத் தொடங்கி விட்டனர்.
- பெண்களின் எண்ணிக்கை விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. பெண் சிசு கொலை, அபார்ஷன், குடும்பக் காட்டுப்பாடு போன்ற காரணங்களினாலோ, அல்லது வேறு இயற்கையான காரணங்களாலோ, தற்போது இந்தியாவில் எல்லா சமூகங்களிலும் ஆண்களைவிட பெண்கள் குறைவாக உள்ளனர். இதனால் திருமணத்திற்கு பெண் கிடைப்பது சுலபமாக இல்லை. வரதட்சிணை என்பது இனிமேல் வரலாற்றுப் புத்தகத்தில் படித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமாக இருக்கும்! "மணமகள் தேவை" விளம்பரங்கள் "மணமகன் தேவை"யை விட இரண்டு பங்கு இருக்கிறது!
- சட்டங்கள் அனைத்தும் பெண்களுக்கு சாதகமாகவும், ஆண்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பெரும் பாதகமாகவும் இருக்கின்றன.
- குறிப்பாக Section 498a of IPC மற்றும் Domestic Violence Act போன்றவைகளை வைத்து ஆண்களையும், அவர்களைச் சார்ந்தோரையும் எவ்வளவு வேண்டுமானாலும் துன்புறுத்தலாம். ஒரு காகிதத்தை எடுத்து இவர்கள் என்னை வரதட்சிணை கேட்டு துன்புறுத்தினர் என்று லிஸ்டு போட்டு ஏதேனுமொரு காவல் நிலையத்திற்கு அனுப்பினால் போதும் அந்த ஜாபிதாவில் கண்ட நபர்கள் அனைவரையும் அரெஸ்டு செய்து விடுவார்கள். 80 வயதான தாத்தா, பாட்டி, நிறைமாத கர்ப்பிணி, 3 வயது குழந்தை - யாராயிருந்தாலென்ன!
- பெண்கள் இஷ்டமிருந்தால் கணவனுடன் வாழலாம்; இல்லாவிட்டால் தன் பிறந்த வீட்டிலேயே இருக்கலாம். அல்லது தன் வீட்டிற்கு கணவ்னின் பேற்றோரோ, உடன் பிறப்புக்களோ நுழையக்கூடாது என்று கட்டாயப் படுத்தலாம். கணவன் ஏதாவது முனகினால், இருக்கவே இருக்கிறது 498a!!
ஆகையால் இந்தியப் பெண்களில் பலர் தன்னிஷ்டப்படி இருக்கலாம் என்று துணிந்து விட்டனர். திருமணமுறையாவது, மண்ணாங்கட்டியாவது! அந்தக் காலத்து கட்டுப் பெட்டித்தனமெல்லாம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.
ஆண்களைப் பெற்றவர்களே, உங்களை நினைத்தால் பரிதாப்மாக இருக்கிறது!!
என்றைக்கு 498a என்னும் நச்சுப் பாம்பு உங்களைத் தீண்டப் போகிறதோ!!
0 மறுமொழிகள்:
உங்கள் கருத்தைத் தெரிவிக்க