498a எதிர்ப்பு தினக் காட்சிகள்

டில்லியில் நடந்த எதிர்ப்பு தினத்தின் சில காட்சிகளை இங்கே காணலாம். முழுவதும் காண இங்கே செல்லுங்கள்.




பாதிக்கப்பட்ட கணவர்கள் தினம்!

26-08-2007 அன்று புது டில்லியின் "ஜந்தர் மந்தர்" என்னுமிடத்தில் இ.பி.கோ 498a மற்றும் குடும்ப வன்முறை போன்ற ஒருதலைப்பட்சமான சட்டங்களால் பலி வாங்கப்பட்ட கணவர்கள் ஒன்றுகூடி, அதுபோன்ற சட்டங்களை தவறான வழிகளில் பயன்படுத்தி பொய் வழக்குகள் போட்டு, கணவன்மார்களையும், அவர்கள்தம் குடும்பத்தினரையும் (வயதான தாய், தந்தையினர், சகோதரிகள், குழந்தைகள் உட்பட) விசாரணையேயில்லாமல் சிறையில் தள்ளி கொடுமைப் படுத்தும் நடைமுறை ஒழியவேண்டும் என்று "எதிர்ப்பு நாள்" கூட்டம் நடத்தினார்கள்.

இதில் கலந்துகொண்ட பரிதாபமான கேசுகளில் பலர் ஐ.ஐ.டி, ஐ.ஐஎம் போன்ற கல்லூரிகளில் படித்து பெரிய பதவிகளை வகிப்பவர்கள் மற்றும் பொறியாளர்கள், டாக்டர்கள், வக்கீல்கள், என்.ஆர்.ஐ-கள் ஆகியோர் அடங்குவர்.

இந்த எதிர்ப்பு நாளை முன்னணியில் இருந்து நடத்தியவர்கள் "இந்திய குடும்ப முறையைக் காப்போர் அமைப்பை"ச் சார்ந்தவர்கள் (Save Indian Family foundation).

இத்தகைய சட்டங்கள் போடா, குண்டர்கள் சட்டம் போன்றவைகளைவிட மிகக் கொடுமையானவை; ஒரு பெண் வெறுமனே "என்னைக் கொடுமைப் படுத்தி விட்டார்கள்" என்று சொன்னால் போதும். எந்தவித விசாரணையோ, தரவுகளோ, ஆவணங்களோ இல்லாமல் உடனே கைது செய்து விடுகிறார்கள். இது போன்ற கொடுங்கோல் சட்டம் இந்தியாவில் வேறேதும் இல்லை என்பதை அவர்கள் எடுத்துரைத்தனர். அந்தப் பெண் சொன்னால் என்பதற்காக 80 வயது தொண்டு கிழவர்களையும் கிழவிகளைகளையும், கையில் சிறு சிசுவுடனிருக்கும் கணவனின் சகோதரிகளையும், ஏன், 5, 6 வயது பச்சிளம் பாலகர்களையும் (அவர்களும் கொடுமைப் படுத்தினார்களாம்!) நள்ளிரவில் கைது செய்யும் கொடுமையும் நடந்து வருகிறது.

இந்த நிலை நீடித்தால் திருமணம் என்னும் வாழ்க்கைமுறை மேலேயே ஆண்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என்பது திண்ணம்!

டில்லி "ஹிந்துஸ்தான் டைம்ஸ்" நாளிதழில் வெளியான இந்த "எதிர்ப்பு நாள்" பற்றிய செய்தியை இங்கு காணலாம்:-



பெண்களைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்!

சில வருடங்கள் முன்பெல்லாம் பெண் குழந்தை பிறந்தால், "ஐயகோ, பெண்ணாகப் பிறந்துவிட்டதே, என்ன செய்வேன்? எப்படிக் காப்பாற்றுவேன்? எப்படி மணம் செய்து கொடுப்பேன்?" என்பதுபோன்ற கவலைகளால் சூழப்பட்டு பெற்றோர்கள் மகிழ்ச்சியின்றி துவண்டு விடுவார்கள். பெண் பிறந்தாலே துன்பம்தான் என்பது நம் இந்திய சமூகத்தின் கட்டமைக்கப்பட்ட விதியாக இருந்தது.

ஆனால் காலம் மாறிவிட்டது. பெண்ணைப் பெற்றவர்கள் இனிமேல் கவலையே படவேண்டாம். ஏன் அப்படி அடித்துச் சொல்கிறேன்? காரணங்களை நோக்குவோம்:-

  • பெண்கள் எல்லோருமே இப்போதெல்லாம் நன்கு மேற்படிப்பு படிக்கிறார்கள். ஆண்களைவிட நன்றாக தேறுகிறார்கள். இதுநாள்வரை ஆண்களின் டொமைனாக இருந்த துறைகளில்கூட பெண்கள் நுழைந்து சாதனைகள் புரியத் தொடங்கிவிட்டனர்.
  • பெண்கள் தொட்டாற் சுணுங்கியாக இருந்த காலம் போய், இப்போதெல்லாம் அவர்கள் மிக மனத்துணிவும், அபரிமிதமான துணிச்சலும் மிக்கவர்களாக ஆகிவிட்டனர். தனியாக வெளிநாடு சென்று வேலை பார்க்கவோ, இரவில் பணிக்குச் செல்லவோ சிறிதளவும் தய்ங்குவதில்லை. பெற்றோர்களும் அதை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை.
  • பெண்களுக்கு மென்பொருள் துறையிலும் கால் செண்டர் போன்ற BPO துறைகளிலும் எளிதில் வேலை கிடைப்பது மட்டுமின்றி, அவர்கள் ஆண்களைவிட அதிகமாகவே சம்பளம் வாங்கத் தொடங்கி விட்டனர்.
  • பெண்களின் எண்ணிக்கை விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. பெண் சிசு கொலை, அபார்ஷன், குடும்பக் காட்டுப்பாடு போன்ற காரணங்களினாலோ, அல்லது வேறு இயற்கையான காரணங்களாலோ, தற்போது இந்தியாவில் எல்லா சமூகங்களிலும் ஆண்களைவிட பெண்கள் குறைவாக உள்ளனர். இதனால் திருமணத்திற்கு பெண் கிடைப்பது சுலபமாக இல்லை. வரதட்சிணை என்பது இனிமேல் வரலாற்றுப் புத்தகத்தில் படித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமாக இருக்கும்! "மணமகள் தேவை" விளம்பரங்கள் "மணமகன் தேவை"யை விட இரண்டு பங்கு இருக்கிறது!
  • சட்டங்கள் அனைத்தும் பெண்களுக்கு சாதகமாகவும், ஆண்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பெரும் பாதகமாகவும் இருக்கின்றன.
  • குறிப்பாக Section 498a of IPC மற்றும் Domestic Violence Act போன்றவைகளை வைத்து ஆண்களையும், அவர்களைச் சார்ந்தோரையும் எவ்வளவு வேண்டுமானாலும் துன்புறுத்தலாம். ஒரு காகிதத்தை எடுத்து இவர்கள் என்னை வரதட்சிணை கேட்டு துன்புறுத்தினர் என்று லிஸ்டு போட்டு ஏதேனுமொரு காவல் நிலையத்திற்கு அனுப்பினால் போதும் அந்த ஜாபிதாவில் கண்ட நபர்கள் அனைவரையும் அரெஸ்டு செய்து விடுவார்கள். 80 வயதான தாத்தா, பாட்டி, நிறைமாத கர்ப்பிணி, 3 வயது குழந்தை - யாராயிருந்தாலென்ன!
  • பெண்கள் இஷ்டமிருந்தால் கணவனுடன் வாழலாம்; இல்லாவிட்டால் தன் பிறந்த வீட்டிலேயே இருக்கலாம். அல்லது தன் வீட்டிற்கு கணவ்னின் பேற்றோரோ, உடன் பிறப்புக்களோ நுழையக்கூடாது என்று கட்டாயப் படுத்தலாம். கணவன் ஏதாவது முனகினால், இருக்கவே இருக்கிறது 498a!!

ஆகையால் இந்தியப் பெண்களில் பலர் தன்னிஷ்டப்படி இருக்கலாம் என்று துணிந்து விட்டனர். திருமணமுறையாவது, மண்ணாங்கட்டியாவது! அந்தக் காலத்து கட்டுப் பெட்டித்தனமெல்லாம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

ஆண்களைப் பெற்றவர்களே, உங்களை நினைத்தால் பரிதாப்மாக இருக்கிறது!!

என்றைக்கு 498a என்னும் நச்சுப் பாம்பு உங்களைத் தீண்டப் போகிறதோ!!

குடும்ப வாழ்க்கையை வெறுக்கும் பெண்கள்

நடுத்தர மற்றும் மேல் தட்டு மக்களிடையே படித்து கால் செண்டரிலும் மெபொருள் துறையிலும் ஏராளமாக சம்பாதிக்கும் பெண்கள் பலர் தற்போது கணவனுடன் இணைந்து குடும்பம் நடத்துவதை ஒரு அவமானகரமான விஷயமாகக் கருதத் தொடங்கிவிட்டனர்.

இந்த சீர்கேடு பிராமணர்கள் போன்ற சாதிகளில் அதிகம் நடக்கின்றன. அதுவும் திருமணத்திற்குப்பின், "பிறந்த வீட்டோடுதான் இருப்பேன். வேண்டுமானால் நீ என்னோடு சேர்ந்து இருந்து கொள்" என்று கணவனிடம் எக்காளமிடும் போக்கு அதிகமாகி விட்டது. ஓறிரு குழந்தைகள் பிறந்த பின்னும் இதுபோல் வக்ரம் பிடித்து சிலர் அலைகின்றனர். தன் சுயநலத்துக்காக தன் குழந்தைகளின் மனநலத்தையும், எதிர்காலத்தையும் பணயம் வைக்கும் இத்தகைய பெண்களால் திருமணம் என்னும் முறையே பொருளற்றுப் போகும் நிலை ஏற்படுகின்றது.

இது ஒரு மிக விசனத்துக்குறிய ஒரு சீர்கேடு!

498a சட்டம் என்ன சொல்கிறது

இந்தியன் பீனல் கோட் செக்ஷன் 498a என்னும் குற்றவியல் சட்டம் குறிப்பிடும் குற்றம் இது:


ஒரு மணமான பெண்ணின் கணவனோ, கணவனின் உறவினர்களோ, அந்தப் பென்ணை (மனதளவில்கூட) துன்புறுத்தினதாக அந்தப் பெண் கருதினால், குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு மூன்று வருட சிறைத் தணடனையும், அபராதமும் விதிக்கப்படும்


"ஆகா, இது எவ்வளவு தேவையானதொரு சட்டம். எவ்வளவு பெண்கள் நம் நாட்டில் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இந்த சட்டம் மட்டும் இல்லையெனில் அவர்களுக்கு விடிவேது?"

இப்படித்தான் தோன்றுகிறது இல்லையா உங்களுக்கு? ஆமாம், பெண் என்றால் பேயும் இரங்குமே!!

ஆனால் அந்த சட்டம் குறிப்பிடும் குற்றத்தின் அடிப்படை வரையறைகளை சற்று நோக்கினால் அதன் பயங்கரம் உங்களுக்குப் புலப்படும்:

  • It is cognizable (வாரண்ட், விசாரணை ஏதுமின்றி கைது செய்யலாம்)
  • It is non-bailable (இதற்கு ஜாமீன் கிடையாது)
  • It is non-compoundable (கம்ப்ளெயிண்டை திரும்பப் பெற முடியாது)

அதாவது ஒரு பெண் ஒரு பேப்பரை எடுத்து, "என் கணவர், அவருடைய 80 வயது தாய், 85 வயது தந்தை, 25 வயது தங்கை, அவளுடைய 3 வயது குழந்தை எல்லோரும் சேர்ந்து கொடுமை செய்தனர்" என்று எழுதி இந்தியாவிலுள்ள எந்த காவல் நிலையத்தில் கொடுத்தாலும் புகாரில் குறிப்பிடப்பட்ட அனைவரையும் கொஞ்சமும் ஈவு, இரக்கமின்றி கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்கள்.

இதனால் இன்று திருமணம் என்னும் பந்தமே அறுபட்டுப் போகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தவிர, பல வக்கீல்கள் இந்த 498அ பிரிவில் கேஸ் போடுவதற்கென்றே இருக்கிறார்கள். மணமான பெண்களின் பெற்றோர்கள் கணவன்மார்களிடமிருந்து கணிசமான துகையை பிடுங்குவதற்கு இதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும் என்.ஆர்.ஐ குடும்பங்களும், இந்தியாவிலுள்ள மென்பொருள் துறையில் பணியற்றும் பையன்களின் திருமணங்களும் பெருமளவில் சீரழிந்து கொண்டிருக்கின்றன.

இந்திய உச்ச நீதி மன்றம் ஒரு தீர்ப்பில் இந்த சட்டம் நடைமுறை படுத்தப்படும் தவறான போகைப் பற்றி, "இது ஒரு சட்ட ரீதியான தீவிரவாதம்" (It is a legal Terrorism) என்று குறிப்பிட்டுள்ளார்!

இந்த சட்டத்தால் பதிக்கப்பட்ட பலரின் சோகக் கதைகளையும், அதன் தீவிரத்தைப் பற்றியும் இனிவரும் பதிவுகளில் விவரிப்போம்!

சிறுவர்களுக்கு நேர்ந்த கொடுமை!

கான்பூரில் 8 வயது அஜய் என்னும் சிறுவனும் 4 வயது விஷால் என்ற சிறுவனும் தங்களை காவல்துறையினர் கைது செய்துவிடுவார்களோ என்று பயந்து சென்ற ஜூன் 29 முதல் பள்ளிக்குச் செல்லாமல் தலைமறைவாக உள்ளனர்.

அவர்கள் மேல் சாட்டப்பட்டுள்ள குற்றம் என்ன தெரிய்மா? அவர்கள் தங்களின் அண்ணியை வரதட்சிணை கேட்டு கொடுமை செய்தார்களாம்!!

இந்தக் கொடுமை அடுக்குமா ஐயா? இதுதான் இந்திய சட்ட நடைமுறையா? இனிமேல் நம் நாட்டில் ஆண்கள் துணிவாக மணம் செய்துகொள்ள முடியுமா? "திருமணம்" என்னும் பந்தத்தின் மேலேயே ஆண்களுக்கு ஒரு வெறுப்பு வந்துவிடாதா?

யோசியுங்கள்!

இந்த செய்தியின் சுட்டி இதோ.

பெண்களின் அராஜகம்

~ நன்றி - தினமலர்