4 பெண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை காமவெறியால் கற்பழித்தது அம்பலமானது லக்னோவில். இந்திய அரசும் & சட்டங்களும் பெண்களை காயடிக்குமா??? அல்லது பெண் பத்தினிகளின் கால் தொட்டு வணங்குமா??? என்ன தண்டனை???

ஆண்கள் பெண்களை மயக்கி கூட்டி கொண்டு போகிறார்கள். பெண்களுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்ற பெரிய மனுஷங்க கொஞ்சம் இந்த செய்தியை படிக்கணும்.

லக்னோ: லக்னோவில் கல்வி பயில வந்த மாணவியை, ஹாஸ்டலில் சக மாணவிகள் நான்கு பேர் குடித்துவிட்டு, தொடர்ந்து பாலியல் சித்ரவதை செய்து வந்த அவலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.ஆண்களால் தான் பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் என மக்கள் ஒருபுறம் அதற்காகப் போராடிக் கொண்டிருக்க, பெண்களாலேயே பெண்களுக்கு பாலியல் சித்ரவதைகள் அரங்கேறியிருப்பது அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது.சக மாணவியை காமக் கண்களோடு பார்த்ததோடு, பாலியல் சித்ரவதையும் கொடுத்து உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்திய குற்றவாளிகளும் கல்லூரி மாணவிகள் தான்.

பாட்னாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் லக்னோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்க சேர்ந்துள்ளார். ஹாஸ்டலில் தங்கிப் படிக்க முடிவெடுத்த அப்பெண்ணுக்கு அங்ங்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
 
ஹாஸ்டலில் உடன் தங்கியிருந்த நான்கு பெண்கள் ஹாஸ்டல் அறையிலேயே குடித்து கும்மாளமிட்டு வந்துள்ளனர். இவர்களுக்கு அவர்களது வகுப்பு ஆசிரியர் ஒருவரே தொடர்ந்து ‘சரக்கு' வாங்கிக் கொடுத்து வந்துள்ளார்.
 
முதலில் குடி, கும்மாளம் என்று மட்டும் இருந்தவர்கள், படிப்படியாக சகமாணவியான எம்பிஏ மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தத் தொடங்கியுள்ளனர். ரூமில் செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதோடு, அம்மாணவி அதை வெளியில் சொல்லி விடாமல் இருக்க அவருக்கு பாதுகாப்பு அரணாக செல்வார்களாம்.
 
உடலளவிலும், மனதளவிலும் மிகவும் பாதிக்கப்பட்ட அப்பெண்ணை வெளியில் இது குறித்து பேச விடாமல் தொடர்ந்து தடுத்து வந்துள்ளனர் அப்பெண்கள். நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அப்பெண்கள், பாதிக்கப் பட்ட பெண்ணை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
 
வகுப்பிலும் வேறு யாரோடும் பேசிக் கொண்டு விடாதபடி கவனமாக கண்காணித்து வந்துள்ளனர். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அப்பெண் ஒரு கட்டத்தில் பொங்கியெழுந்து விட்டார்.
 
தனக்கு நடக்கும் கொடுமைகளை எழுத்துப்பூர்வமாக ஹாஸ்டல் வார்டனிடம் புகாராக அளித்துள்ளார் அந்த அபலைப்பெண். குற்றம் புரிந்த அந்த நான்கு கல்லூரிப் பெண்களுக்கும் கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல்துறை என்னவிதமான தண்டனைகள் வழங்க இருக்கிறது என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
 
ஒரு கற்பழிப்புக்கு இந்திய சட்டத்தை திருத்தி எழுதிய அரசும் & நீதி மன்றமும்,ஒரு பெண் பொய் புகார் கொடுத்தாலே ஆண்களை கைது செய்யும் காவல் துறையும் !!!தவறு செய்யும்& பொய் வழக்கு போடும் பெண்களை தண்டிக்காமல் இருந்து கொண்டே மௌனம் சாதிப்பது எதனால்????

Read more at: http://tamil.oneindia.in/news/2013/08/09/india-lucknow-four-girls-sexually-exploit-hostel-inmate-for-days-180878.html#slide278242