கள்ளக்காதலனுடன் சேர்ந்து கட்டிய கணவனை கொன்ற ஒரிஜினல் உத்தம பத்தினி !!!!! திருத்தணியில் பரபரப்பு நாம் தமிழர் கட்சி பிரமுகர் சரமாரி வெட்டி படுகொலை!!!

சென்னை :  திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி இணை செயலாளராக இருந்தவர் பசும்பொன் ராஜா (32). இவர், திருத்தணி பெரிய தெருவில் வசிக்கிறார். திருத்தணியில் கூரியர் சர்வீஸ் மற்றும் கோணி வியாபாரம் செய்துவந்தார். தனது கூரியர் சர்வீசில் வேலை செய்த  சரண்யா (24) என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.  கோணி வாங்குவதற்காக நண்பருடன் ஆந்திரா வுக்கு செல்வதாக கடந்த ஞாயிறன்று மனைவியிடம் கூறிவிட்டு பசும்பொன்ராஜா சென்றார். இதன்பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. பசும்பொன்ராஜா செல்போனுக்கு மனைவி தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.  இது சம்பந்தமாக திருத்தணி காவல்நிலையத்தில் சரண்யா புகார் கொடுத் தார். போலீசார் பசும்பொன்ராஜாவை தேடி வந்தனர்.

 இந்நிலையில், திருத்தணி அருகே அகூர் கிராமத்தில் உள்ள நெல் விதை கிடங்கு அருகே தலை, கழுத்தில் வெட்டுக்காயத்துடன் ஒருவர் இறந்து கிடப்பதாக திருத்தணி போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி ரூபேஷ்குமார் மீனா, ஏ.டி.எஸ்.பி செந்தில்குமார், டிஎஸ்பி. கோபாலன், இன்ஸ்பெக்டர்கள் வீமராஜ், கங்காதரன் ஆகியோர் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.

 இறந்து கிடந்தவர் பசும்பொன்ராஜா என தெரிந் தது. இதுபற்றி அறிந்ததும் சரண்யா சென்று, கணவர் உடலை பார்த்து கதறி அழுதார். பின், பசும்பொன்ராஜா உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாய் ரூபி வந்து மோப்பம் பிடித்து, முருகூர் கிராமம் வரை ஓடிச்சென்று நின்றுவிட்டது. இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இந்நிலையில் பசும்பொன்ராஜா கொலை செய்யப்பட்டதை அறிந்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார். அவர் கூறுகையில், இது அரசியலுக்காக நடந்த கொலை அல்ல. போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்வார்கள் என நம்புகிறேன். பசும்பொன்ராஜா துடிப்பான இளைஞர், கட்சிக்காக அயராது பாடுபட்டவர். அவருடைய இறப்பிற்கு வீரவணக்கம் செலுத்தவே மருத்துவமனை வந்தேன் என்றார். ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட செயலாளர் ரமேஷ் உடனிருந்தனர்.

பசும்பொன் ராஜா சடலம் பிரேத பரிசோதனைக்கு பின்னர் மாலை 5.30க்கு பெற்றோர் ஜெயராமன்,சீதாவிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் போலீசார் பசும்பொன்ராஜாவின் மனைவி சரண்யாவை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவரது கள்ள காதலன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. அதனால், கள்ள காதலன்  மற்றும் கொலை யில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இன்ஸ்பெக்டர்கள் வீமராஜ், கங்காதரன், எஸ்.ஐக்கள் டில்லிபாபு, மூர்த்தி, கன்னியப்பன் ஈடுபட்டுள்ளனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=58181