நாகரிக உலகம் தங்கள் உறவு முறையை தங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க இயலாத கொடுமை ................
மதுரை: அண்ணன் தங்கை உறவு வரும் இருவர் காதலித்துள்ளனர். இந்தப் பொருந்தாக் காதலுக்கு உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.மங்களக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயதான பாபு. அதே ஊரைச் சேர்ந்தவர் 16 வயதான பாண்டியம்மாள். இருவரும் உறவினர்கள், உறவு முறையில் அண்ணன் தங்கை ஆவார்கள்.ஆனால் இருவரும் காதல் கொண்டனர். உறவு முறை பற்றிக் கவலைப்படாமல் காதலித்து வந்தனர். இந்த விவகாரம் இரு குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்குத் தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தனர். இது பொருந்தாக் காதல் என்று கண்டித்தனர்.இதனால் மனம் உடைந்தனர் இருவரும். வாழ்க்கையில் இருவரும் சேரவே முடியாது என்ற நிலையை உணர்ந்த அவர்கள் விஷம் குடித்து உயிரிழந்தனர்.போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more at: http://tamil.oneindia.in/news/2013/07/28/tamilnadu-lovers-commit-suicide-near-madurai-180017.html
Read more at: http://tamil.oneindia.in/news/2013/07/28/tamilnadu-lovers-commit-suicide-near-madurai-180017.html