பெண்கள் நாட்டின் கண்கள்!!: அத்தை மகனை கொலை செய்ய பத்தாம் வகுப்பு மாணவனை கூலிப்படையாக்கிய கல்லூரி மாணவி!
கொலை செய்ய தூண்டியது காதல் ; கல்லூரி மாணவி உட்பட 5 பேர் கைது
மே 01,2013 தினமலர்
திருப்பூர்: திருப்பூர் அருகே, காதலனுடன் வாழ வேண்டும் என்பதற்காக, அத்தை மகனை கொலை செய்ய தூண்டிய கல்லூரி மாணவி உட்பட, ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தகுட்டன், 27; கட்டட தொழிலாளி. இவருக்கும், இவரது மாமா மகள், அவிநாசியைச் சேர்ந்த, சத்யா, 23, என்பவருக்கும், வரும், 6ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. சத்யா, திருப்பூரில் உள்ள கல்லூரியில், இரண்டாமாண்டு எம்.ஏ., படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த, 25ம் தேதி, குண்டடம், சித்தூர் பிரிவு அருகே, ஆனந்தகுட்டன், கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவர் அணிந்திருந்த செயின், மோதிரம், மொபைல் போன் எதுவும் திருடப்படவில்லை.
இன்ஸ்பெக்டர்கள் ரங்கராஜன், ஹேமா தலைமையில், தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சத்யா, திருப்பூர் செவந்தாம்பாளையத்தைச் சேர்ந்த, ஆட்டோ டிரைவர் மணிகண்டனை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆறு மாதங்களுக்கு முன், அத்தை மகன் ஆனந்தகுட்டனுடன், திருமணம் நிச்சயிக்கப்பட்டது. காதலனை மறக்க முடியாத சத்யா, ஆனந்தகுட்டனை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த, 25ம் தேதி, திருப்பூருக்கு, ஆனந்தகுட்டனை வரவழைத்து, திருமண விஷயம் எனக் கூறி, மணிகண்டனுடன், ஆட்டோவில் அனுப்பி வைத்துள்ளார். அவர்களுடன், ஜெய்நகரைச் சேர்ந்த, கல்லூரி மாணவர்கள் சதீஷ்குமார், 21, விவேக், 21 மற்றும் 10ம் வகுப்பு மாணவன் ரஞ்சித்குமார், 16 ஆகியோரும் சென்றுள்ளனர்.
கோமங்கலம் அருகே, ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில், மணிகண்டன், இரும்பு ராடால், ஆனந்தகுட்டனை தலையில் அடித்தும், கயிற்றால் கழுத்தை இறுக்கியும், கொலை செய்துள்ளார். உடன் வந்த, மூன்று பேரின் உதவியுடன், உடலை ஆட்டோவில் ஏற்றி, குண்டடம் அருகே வீசி சென்றுள்ளார். இவர்கள், ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு, தாராபுரம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெண்கள் நாட்டின் கண்கள்!!: அத்தை மகனை கொலை செய்ய பத்தாம் வகுப்பு மாணவனை கூலிப்படையாக்கிய கல்லூரி மாணவி!
இந்தியாவில் பரவி வரும் தீர்க்க முடியாத வியாதி - கணவர்கள் மட்டும் பலியாகும் பரிதாபம்
மருந்தே இல்லாத மிகக் கொடிய வியாதிகளான எய்ட்ஸூக்கும், புற்று நோய்க்கும்கூட மருந்து கண்டுபிடித்துவிடலாம் ஆனால் இந்தியாவில் இந்திய சட்டத்தின் ஆதரவுடன் பல ஆண்டுகளாக பரவி வரும் கள்ளக்காதலுக்கு முடிவை யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது போலிருக்கிறது. இதற்கு யாராவது முடிவு கட்டும்வரை அப்பாவிக் கணவன்கள் பலியாவதை கடவுளாலும் தடுக்க முடியாது.
செய்தி-1
கள்ளத் தொடர்பை கண்டித்த கணவர் கொலை: மனைவியுடன் 3 பேர் கைது: ஊராட்சி தலைவருக்கு வலை
ஆகஸ்ட் 17,2012 தினமலர்
விருத்தாசலம்:கள்ளத் தொடர்பை கண்டித்த கணவரை கொலை செய்த மனைவி உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஊராட்சி தலைவர் உட்பட இருவரை தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் சல்லடை ஏரியில், கடந்த மாதம் 25ம் தேதி காலை, 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் முகம் எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார் . விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
அடையாளம் தெரிந்தது:இறந்து கிடந்தவர் வேப்பூர் புதுக்காலனியைச் சேர்ந்த துரைசாமி, 35; லாரி டிரைவர் என்பது நேற்று முன்தினம் தெரிந்தது. இக்கொலை வழக்கு தொடர்பாக நேற்று காலை வி.ஏ.ஓ., பால”ப்ரமணியன் மூலம் வேப்பூர் போலீசில் சரணடைந்த துரைசாமியின் மனைவி தேவி, 34, விருத்தாசலம் அடுத்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த முத்துலிங்கம், 35 ஆகியோர் விருத்தாசலம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
கள்ளத்தொடர்பு:விசாரணையில், விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி தாலுகா, கூத்தக்குடியில் துரைசாமி, மனைவி தேவி, மகன்கள் பிரசாந்த், 12, சவுந்தர், 11 வசித்து வந்தனர். தேவிக்கும், கூத்தக்குடி ஊராட்சி தலைவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகருமான மதியழகன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அதனை மாமியார், உறவினர்கள் கண்டித்தனர்.இதனையடுத்து துரைசாமி குடும்பத்துடன், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், கடலூர் மாவட்டம், வேப்பூர் புதுகாலனியில் குடியேறினார். துரைசாமி லாரி டிரைவர் என்பதால் வாரக்கணக்கில் வெளியூர் சென்று விடுவதால் தேவி, மதியழகன் தொடர்பு நீடித்தது. இதனை துரைசாமி கண்டித்தார்.
கொலை செய்ய திட்டம்:ஆத்திரமடைந்த தேவி, மதியழகனுடன் சேர்ந்து கணவர் துரைசாமியை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த 24ம் தேதி இரவு, தேவி தனது கணவர் துரைசாமிக்கு அளவுக்கு அதிகமாக மது ஊற்றிக் கொடுத்தார். போதை தலைக்கேறி துரைசாமி மயங்கி விழுந்தார்.பின்னர் தேவி, மதியழகன், கூத்தக்குடியைச் சேர்ந்த தென்னர”, 21, கெங்கராம்பாளையத்தைச் சேர்ந்த கொடியழகன், ஆட்டோ டிரைவர் முத்துலிங்கம், 35, ஆகியோர் துரைசாமியின் தலையில் தடியால் தாக்கி, கழுத்தை துண்டால் இறுக்கி கொலை செய்தனர்.
முகம், இடது கை எரிப்பு:பின்னர், துரைசாமி உடலை, முத்துலிங்கம் ஆட்டோவில் ஏற்றி, விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் சல்லடை ஏரிக்கு கொண்டு வந்து போட்டனர். அடையாளம் தெரியாமல் இருக்க, அவர் அணிந்திருந்த கைலியைக்கழற்றி, அதில் டீசல் ஊற்றி நனைத்து, அவரது முகத்தில் சுற்றி தீயிட்டு எரித்தனர். இடது கையில் பச்சை குத்தியிருந்த பெயரை மறைக்க, அருகில் கிடந்த தென்னை மட்டைகளை வைத்து கையையும் சேர்த்து எரித்தனர். பாதி எரிந்த கையில் கே.துரைசாமி, தேவி என பச்சை குத்தியிருந்தது தெரிந்தது.
சுட்டிக்காட்டிய தினமலர்:துரைசாமி கையில் பச்சை குத்தியிருந்த பெயரை "தினமலர்' நாளிதழ் சுட்டிக் காட்டியது. கணவரின் பெயர் அடையாளம் தெரிந்ததால், அச்சமடைந்த தேவி மற்றும் ஆட்டோ டிரைவர் முத்துலிங்கம் இருவரும் நேற்று சரணடைந்தனர். இதனையடுத்து தேவி, முத்துலிங்கம், தென்னரசு ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஊராட்சி தலைவர் மதியழகன் மற்றும் கொடியழகனை தேடி வருகின்றனர்.
செய்தி-2
தினத்தந்தி கோவை,ஆக.16-2012
இதுகுறித்து போலீசில் கூறியதாவது:-
கள்ளக்காதல்
-----------------------
கோவை வடவள்ளி அருகே உள்ள கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருடைய மகன் அருண்குமார்(வயது30). ஒர்க்ஷாப் தொழிலாளி. இவருடைய மனைவி மேகலா(25). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. அருண்குமார், சிந்து என்ற ஹரீஷ் என்ற வாலிபருடன் பழகினார். இதனால் ஹரீஷ் அடிக்கடி அருண்குமாரின் வீட்டுக்கு வந்து செல்வார். இதனால் மேகலாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. அருண்குமார் வீட்டில் இல்லாத நேரங்களில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும், கணவன் அருண்குமார் மனைவியையும், கள்ளக்காதலன் ஹரீசையும் கண்டித்தார்.
தீவைத்தனர்
-----------------------
இந்தநிலையில் கடந்தசில நாட்களுக்கு முன்பு உடல் கருகிய நிலையில் அருண்குமார் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் விசாரணை நடத்தியபோது தீவிபத்து ஏற்பட்டு உடல் கருகியதாக கூறிய அருண்குமார், பின்னர் மரண வாக்குமூலத்தில் மனைவியும், கள்ளக்காதலன் ஹரீசும் சேர்ந்து தன் உடல் மீது மண்எண்ணை ஊற்றி தீவைத்ததாக தெரிவித்தார். இதனால் இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.
இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து நேற்று மாலை மேகலா, கள்ளக்காதலன் ஹரீஷ் ஆகியோரை பிடித்து வந்து விசாரணை நடத்தினார்கள். கணவரின் மரணவாக்கு மூலத்தின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அருண்குமார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கள்ளக்காதல் விவகாரத்தில் நடைபெற்ற கொலை முயற்சி சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எங்கே செல்கிறது குடும்பம்?
ஏப்ரல் 13,2012 தினமலர்
உசிலம்பட்டி : கருமாத்தூர் அருகே கருவேப்பிலை கிராமத்தில் சித்தியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த அண்ணன் மகனை கண்டித்த சித்தப்பாவை, கொலை செய்த அண்ணன் மகன், அவரது தாய்,சித்தி ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஏப். 8 ல், கருவேப்பிலை கிராமத்தைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டி 38 என்பவர் தோட்டத்தில் படுத்திருந்த போது தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இது குறித்து உசிலம்பட்டி டி.எஸ்.பி., குமார், செக்காணூரணி இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் கள்ளத்தொடர்பின் காரணமாக அவரது அண்ணன் பாண்டி மகன் பிரசாத் 19, மனைவி பராசக்தி 35, அண்ணன் மனைவி பூமா 40
ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது .
அண்ணன் இறந்த பின் அவரது மனைவி பூமாவும் அவரது மகன் பிரசாத்தும் அலெக்ஸ்பாண்டியுடன் வசித்து வந்தனர். பிரசாத் பாலிடெக்னிக்கில் 3ம் ஆண்டு படிக்கிறார்.
பிரசாத்திற்கும் அவரது சித்தி பராசக்திக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த விசயம் தெரிந்த அலெக்ஸ்பாண்டி தனது மனைவியையும், அண்ணன் மகனையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரசாத், சித்தி பராசக்தி, தாய் பூமாவுடன் சேர்ந்து சித்தப்பாவை கொலை செய்ய திட்டமிட்டார். ஏப். 7 இரவில் தோட்டத்தில் நெல் நாற்று பிடுங்கச் செல்வதாக பராசக்தியும், பூமாவும் அலெக்ஸ்பாண்டியை அழைத்துச் சென்றனர்.
இரவு அங்கு வந்த பிரசாத், தாய், சித்தி இணைந்து தூங்கிக் கொண்டிருந்த அலெக்ஸ்பாண்டியின் தலையில் கல்லை போட்டு கொன்றதாக ஒப்புக்கொண்டனர். மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
கணவனின் குடும்பத்தை கூட்டமாக பொய் வழக்கில் சிக்கவைக்கும் இளம் மருமகள்கள்
பொய் வரதட்சணை வழக்குகளின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றது. பின்வரும் செய்தியில் பாருங்கள். மருமகளின் நகைகளை அடகுவைக்க கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பமும் அடகுகடைக்குச் சென்றார்களாம். உங்களால் நம்பமுடிகிறதா?
வரதட்சணை கேட்டு பட்டதாரி பெண் சித்ரவதை
சென்னை இன்ஜினியருக்கு வலைவீச்சு
ஏப்ரல் 16,2012 Dinamalar
தேனி மாவட்டம் ஊஞ்சாம்பட்டி, சரவணக்குடில் பகுதியை சேர்ந்தவர் நதியா, 25; பி.இ., படித்துள்ளார். இவருக்கும், சென்னை டாடா இண்டஸ்ட்ரீசில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வரும் கார்த்திக்கிற்கும், 2010 ஜூன் 24ல் திருமணம் நடந்தது. 65 சவரன் நகையும், 2.50 லட்ச ரூபாய் மதிப்புள்ள சீர் வரிசைகளும் கொடுத்தனர்.
திருமணமான மூன்றாவது மாதத்தில், வீடு வாங்குவதற்காக பீரோவில் வைத்திருந்த நதியாவின் நகைகளை எடுத்து, கணவன் கார்த்திக், அவரது தந்தை மனோகரன், தாய் ராஜதிலகம், தங்கை சுகாசினி, அவரது கணவர் ராஜா ஆகியோர் அடகு வைத்தனர். மேலும், கூடுதல் வரதட்சணையாக 10 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டினர். பணம் கொடுக்காவிட்டால், விவாகரத்து செய்வதாகக் கூறி வெற்றுப் பேப்பரில் கையெழுத்து கேட்டு அடித்து துன்புறுத்தினர்.
தேனி அனைத்து மகளிர் போலீசில் நதியா புகார் செய்தார். போலீசார், கார்த்திக் உட்பட ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். சாப்ட்வேர் இன்ஜினியரை கைது செய்வதற்காக போலீசார் சென்னை சென்றுள்ளனர்.
கூகிள் கம்பெனி கூடவா இப்படி!!
நேற்று வந்த மடல் இப்படிச் சொல்கிறது:
“Your blog at http://tamil498a.blogspot.com/ has been reviewed and confirmed as in violation of our Terms of Service for: NONE. In accordance to these terms, we've removed the blog and the URL is no longer accessible.”
:))
மீட்சி பெற்றது இந்தப் பதிவு
தமிழிஷ் டாட் காம் தளத்திற்கு இணைப்பு கொடுத்த காரணத்தைக் கூறி எரிதமென்று வகைப் படுத்தப்பட்டு முடக்கி வைக்கப்பட்ட இந்த வலைப்பதிவு இப்போது தானாகவே மீண்டும் கண்ணெதிரெ தோன்றத் தொடங்கிவிட்டது.
சுமார் இரண்டு மாதங்களாக மடக்கிப் போடப்பட்டது இந்தப் பதிவு. ஆனால் இதற்குக் காரணமான தமிழிஷ் நல்ல பிள்ளையாக உடனே உயிர் பெற்றுவிட்டதுதான் ஒரு முரண்!
ஆகையால் உங்கள் பதிவில் எந்த தளத்திற்கும் இணைப்பு கொடுக்காதீர்கள். சரியான மென்பொருள் அமைப்பினால் தமிழ்மணம்.காம் தளத்தினால் எந்த ஒரு பிரச்னையும் இதுவரை தோன்றவில்லை என்பதை அறியமுடிகிறது. மற்ற தளங்களைப் பற்றி இதுபோல் அறுதியிட்டுக் கூறமுடியாது. எச்சரிக்கையுடன் இருப்பது நலம்.
தற்போது இந்த வலைப்பதிவு www.தமிழ்498a.காம் என்னும் முகவரியில் தொடர்ந்து இயங்குகிறது. அங்கு சென்று அண்மைய இடுகைகளைப் பார்வையிடும்படி வாசகர்களை வேண்டுகிறோம்!
நன்றி!
குறிச்சொற்கள் 498a, www.tamil498a.com, ஆண்பாவம், வரதட்சணை
எல்லா திருமணங்களையும் இனி பதிவு செய்ய வேண்டும் - அரசு உத்தரவு
இன்றைய முக்கிய செய்தி:-
"அனைத்து திருமணங்களும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். உரிய நாளுக்குள் பதிவு செய்யாவிட்டால் அல்லது தவறான தகவல் அளித்தால் குற்ற வழக்கு தொடரப்படும்” என்று பதிவுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 24ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது.
திருமணப் பதிவு விண்ணப்பத்தின் முக்கிய பகுதி வரதட்சணை பற்றியது. அந்தப் படிவத்தில் கணவன், மனைவி இருவரும் ”வரதட்சணை கேட்கவோ, கொடுக்கவோ, பெறவோ” இல்லை என்று வாக்குமூலமளித்து சாட்சியங்கள் முன் கையொப்பமிடவேண்டும். அதன் பிறகே திருமணம் பதிவு செய்யப்படும்.
9. We hereby declare:-
...
(v) no dowry was demanded, given and taken.
இதனால் கணவன்மார்களுக்கு ஒரு நன்மை, இனிமேல் கெடுமதிப் பெண்கள் திடீரென்று நினைத்துக்கொண்டு தற்போது பொய் 498A புகார்களில் சொல்வதுபோல், “திருமணத்தன்று ஒரு கோடி ரூபாய் வரதட்சணை கொடுத்தேன்” என்று அண்டப்புளுகு புளுக முடியாது. ஆனால், இதையும் தாண்டி இந்த சட்டத்தில் இண்டு இடுக்கு கண்டுபிடித்து, வேறு வித பொய்ப் புகார்கள் கொடுப்பதற்கு வழிவகைகள் தேடி வன்கொடுமை செய்யலாம், அதற்கென்றெ இருக்கும் ஸ்பெஷலிஸ்ட் வக்கீல்கள் இதற்குத் துணை போகலாம். பொய் சொல்பவர்களையும், சோரம் போகிறவர்களையும் சட்டம் போட்டு முழுவதும் தடுக்க இயலாது.
ஆனால் இந்த அரசாணை ஒரு “ஸ்பீட் பிரேக்கர்”. அவ்வளவுதான்!
இனி இந்த செய்தியின் மேல்விவரம்:-
தமிழக அரசின் பதிவுத் துறை தலைவர் சிவக்குமார் வெளியிட்டுள்ள உத்தரவு:தமிழக அரசு இந்த ஆண்டு இயற்றிய திருமணங்கள் பதிவுச் சட்டப்படி, பல மதங்களைச் சேர்ந்த இந்திய குடிமக்கள், நவம்பர் 24ம் தேதி முதல், தமிழகத்தில் நடக்கும் அனைத்து திருமணங்களையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். பல்வேறு மதச் சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந்தாலும், இந்தச் சட்டத்தின் மூன்றாவது பிரிவின் கீழும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.இந்த சட்டப்படி, பதிவுத் துறைத் தலைவர், தலைமை திருமணப் பதிவாளராகவும், மாவட்ட பதிவாளர்கள் அனைவரும் மாவட்ட திருமணப் பதிவாளர்களாகவும், சார்பதிவாளர்கள் அனைவரும் திருமணப் பதிவாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.திருமணப் பதிவுக்கான விண்ணப்பங்கள் இலவசமாக, அனைத்து பதிவு அலுவலகங்களிலும் வழங்கப்படும்.
கட்டாய திருமணப் பதிவுக்கான விவரங்கள் மற்றும் படிவங்கள், துறையின் இணையதளத்தில் (www.tnreginet.net) வெளியிடப்பட்டுள்ளன. இதிலிருந்து விவரங்களை அறிந்து, படிவங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.திருமணப் பதிவுக்கான படிவம் மற்றும் விண்ணப்பத்தில் எவ்வித அடித்தலோ அல்லது பிழைகளோ இன்றி பூர்த்தி செய்து, மணமக்கள், திருமணம் நடத்தி வைத்தவர் மற்றும் இரு சாட்சிகளின் கையெழுத்துடன், திருமணம் நடந்ததற்கான ஆதாரம், இருப்பிட மற்றும் வயது தொடர்பான ஆதார ஆவணங்களுடன், திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் 100 ரூபாய் கட்டணத்துடன் (90 நாட்களுக்கு மேலானால், 150 ரூபாய் கட்டணம்) திருமணம் நடந்த எல்லைக்கு உட்பட்ட சார்பதிவாளரிடம் அளிக்க வேண்டும். அல்லது அஞ்சல் வழி அனுப்ப வேண்டும்.
திருமணத்துக்கான சாட்சிகளின் முகவரி மற்றும் ஆள் அறிவதற்கான அடையாள சான்று நகல்கள் இணைக்க வேண்டும். விண்ணப்பமும், ஆதாரங்களும் முறையாக இருந்தால், சம்பந்தப்பட்ட திருமணப் பதிவாளர், மனுதாரருக்கு ஒப்புதல் அளிப்பார். உரிய வகையில் இல்லாத மனுக்கள், குறைகளை சரிசெய்து திரும்ப அளிக்குமாறு மனுதாரரிடம் திரும்ப அளிக்கப்படும்.மணமக்கள் அல்லது சாட்சிகளின் அடையாளங்கள் குறித்தும், அவர்கள் அளித்த தகவல்களின் உண்மைத்தன்மை குறித்தும் சந்தேகம் ஏற்பட்டால், மணமக்களுக்கு வாய்ப்பளித்து, விசாரணைக்குப் பின், திருமணப் பதிவாளர் திருப்தி அடையாவிட்டால், அத்தகைய திருமணப் பதிவுகள் அவரால் மறுக்கப்படும்.இந்த மறுப்பு உத்தரவு மீது, சம்பந்தப்பட்ட நபர்கள், உத்தரவு பெற்ற 30 நாட்களுக்குள் மாவட்ட பதிவாளரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
அந்த மேல்முறையீடு மீது மாவட்ட பதிவாளர் பிறப்பிக்கும் உத்தரவு திருப்தி இல்லையெனில், 30 நாட்களுக்குள் பதிவுத் துறைத் தலைவருக்கு மேல்முறையீடு செய்யலாம். பதிவுத் துறை தலைவரின் உத்தரவே இறுதியானது.திருமணங்கள் பதிவுச் சட்டம் அமலுக்கு வந்துள்ள நவம்பர் 24ம் தேதி முதல் நடக்கும் அனைத்து திருமணங்களும், எந்த ஜாதி மற்றும் மதமாயிருப்பினும், உரிய நாளில் பதிவு செய்யாவிட்டாலோ, தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிந்தாலோ, விதி மீறல் இருந்தாலோ, சம்பந்தப்பட்ட நபர் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டு, நிரூபிக்கப்பட்டால், அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு பதிவுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
குறிச்சொற்கள் 498a, advocates, aimwa, biased laws, dowry, marriage, registration, பொய் வழக்கு, வரதட்சணை