எங்கே செல்கிறது குடும்பம்?

Linkஏப்ரல் 13,2012 தினமலர்


உசிலம்பட்டி : கருமாத்தூர் அருகே கருவேப்பிலை கிராமத்தில் சித்தியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த அண்ணன் மகனை கண்டித்த சித்தப்பாவை, கொலை செய்த அண்ணன் மகன், அவரது தாய்,சித்தி ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஏப். 8 ல், கருவேப்பிலை கிராமத்தைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டி 38 என்பவர் தோட்டத்தில் படுத்திருந்த போது தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இது குறித்து உசிலம்பட்டி டி.எஸ்.பி., குமார், செக்காணூரணி இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் கள்ளத்தொடர்பின் காரணமாக அவரது அண்ணன் பாண்டி மகன் பிரசாத் 19, மனைவி பராசக்தி 35, அண்ணன் மனைவி பூமா 40
ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது .

இவர்களிடம் நடத்திய விசாரணையில், அலெக்ஸ்பாண்டியின் மனைவி பராசக்தி. அலெக்ஸ்பாண்டியின் அண்ணன் பாண்டி. அவரது மனைவி பூமா. பாண்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

அண்ணன் இறந்த பின் அவரது மனைவி பூமாவும் அவரது மகன் பிரசாத்தும் அலெக்ஸ்பாண்டியுடன் வசித்து வந்தனர். பிரசாத் பாலிடெக்னிக்கில் 3ம் ஆண்டு படிக்கிறார்.

பிரசாத்திற்கும் அவரது சித்தி பராசக்திக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த விசயம் தெரிந்த அலெக்ஸ்பாண்டி தனது மனைவியையும், அண்ணன் மகனையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரசாத், சித்தி பராசக்தி, தாய் பூமாவுடன் சேர்ந்து சித்தப்பாவை கொலை செய்ய திட்டமிட்டார். ஏப். 7 இரவில் தோட்டத்தில் நெல் நாற்று பிடுங்கச் செல்வதாக பராசக்தியும், பூமாவும் அலெக்ஸ்பாண்டியை அழைத்துச் சென்றனர்.

இரவு அங்கு வந்த பிரசாத், தாய், சித்தி இணைந்து தூங்கிக் கொண்டிருந்த அலெக்ஸ்பாண்டியின் தலையில் கல்லை போட்டு கொன்றதாக ஒப்புக்கொண்டனர். மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

2 மறுமொழிகள்:

')) said...

பதிவர்களின் பணிவான கவனத்திற்கு
பதிவை இணைத்தால் பரிசு... தமிழ் திரட்டி அதிரடி
மாதந்தோறும் ஒரு பதிவருக்கு பரிசு வழங்குவது என்பதை, திரட்டி உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்துகிறது http://www.hotlinksin.com.

ஏற்கனவே பதிவுகளை பல்வேறு திரட்டிகளில் பதிவுகளை இணைக்கும் நாம் http://www.hotlinksin.com திரட்டியிலும் நம் பதிவுகளை இணைத்துவிடுவோம். அத்துடன் http://www.hotlinksin.com திரட்டிக்கு லிங்க் தருவதற்கான கோடிங்கை உங்கள் சைடு பாரில் இணைத்துவிடுங்கள்.

')) said...

// எங்கே செல்கிறது குடும்பம்? //

ம் என்னாதிது உங்களுக்கு ​தெரியாதா? எல்லாம் ​பொய் 498A dowry caseல உள்​ளே ​செல்கிறது
// சித்தியுடன் கள்ளத்தொடர்பு கண்டித்த சித்தப்பா கொலை //

​கொ​லை​செய்த கள்ளக்காதலன் மற்றும் கற்புக்கரசிக்கு வ​லை (என்னா மீன் வ​லையா?)

இ​தெல்லாம் எங்களுக்கு ​​கைவந்த க​லை