மருந்தே இல்லாத மிகக் கொடிய வியாதிகளான எய்ட்ஸூக்கும், புற்று நோய்க்கும்கூட மருந்து கண்டுபிடித்துவிடலாம் ஆனால் இந்தியாவில் இந்திய சட்டத்தின் ஆதரவுடன் பல ஆண்டுகளாக பரவி வரும் கள்ளக்காதலுக்கு முடிவை யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது போலிருக்கிறது. இதற்கு யாராவது முடிவு கட்டும்வரை அப்பாவிக் கணவன்கள் பலியாவதை கடவுளாலும் தடுக்க முடியாது.
செய்தி-1
கள்ளத் தொடர்பை கண்டித்த கணவர் கொலை: மனைவியுடன் 3 பேர் கைது: ஊராட்சி தலைவருக்கு வலை
ஆகஸ்ட் 17,2012 தினமலர்
விருத்தாசலம்:கள்ளத் தொடர்பை கண்டித்த கணவரை கொலை செய்த மனைவி உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஊராட்சி தலைவர் உட்பட இருவரை தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் சல்லடை ஏரியில், கடந்த மாதம் 25ம் தேதி காலை, 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் முகம் எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார் . விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
அடையாளம் தெரிந்தது:இறந்து கிடந்தவர் வேப்பூர் புதுக்காலனியைச் சேர்ந்த துரைசாமி, 35; லாரி டிரைவர் என்பது நேற்று முன்தினம் தெரிந்தது. இக்கொலை வழக்கு தொடர்பாக நேற்று காலை வி.ஏ.ஓ., பால”ப்ரமணியன் மூலம் வேப்பூர் போலீசில் சரணடைந்த துரைசாமியின் மனைவி தேவி, 34, விருத்தாசலம் அடுத்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த முத்துலிங்கம், 35 ஆகியோர் விருத்தாசலம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
கள்ளத்தொடர்பு:விசாரணையில், விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி தாலுகா, கூத்தக்குடியில் துரைசாமி, மனைவி தேவி, மகன்கள் பிரசாந்த், 12, சவுந்தர், 11 வசித்து வந்தனர். தேவிக்கும், கூத்தக்குடி ஊராட்சி தலைவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகருமான மதியழகன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அதனை மாமியார், உறவினர்கள் கண்டித்தனர்.இதனையடுத்து துரைசாமி குடும்பத்துடன், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், கடலூர் மாவட்டம், வேப்பூர் புதுகாலனியில் குடியேறினார். துரைசாமி லாரி டிரைவர் என்பதால் வாரக்கணக்கில் வெளியூர் சென்று விடுவதால் தேவி, மதியழகன் தொடர்பு நீடித்தது. இதனை துரைசாமி கண்டித்தார்.
கொலை செய்ய திட்டம்:ஆத்திரமடைந்த தேவி, மதியழகனுடன் சேர்ந்து கணவர் துரைசாமியை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த 24ம் தேதி இரவு, தேவி தனது கணவர் துரைசாமிக்கு அளவுக்கு அதிகமாக மது ஊற்றிக் கொடுத்தார். போதை தலைக்கேறி துரைசாமி மயங்கி விழுந்தார்.பின்னர் தேவி, மதியழகன், கூத்தக்குடியைச் சேர்ந்த தென்னர”, 21, கெங்கராம்பாளையத்தைச் சேர்ந்த கொடியழகன், ஆட்டோ டிரைவர் முத்துலிங்கம், 35, ஆகியோர் துரைசாமியின் தலையில் தடியால் தாக்கி, கழுத்தை துண்டால் இறுக்கி கொலை செய்தனர்.
முகம், இடது கை எரிப்பு:பின்னர், துரைசாமி உடலை, முத்துலிங்கம் ஆட்டோவில் ஏற்றி, விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் சல்லடை ஏரிக்கு கொண்டு வந்து போட்டனர். அடையாளம் தெரியாமல் இருக்க, அவர் அணிந்திருந்த கைலியைக்கழற்றி, அதில் டீசல் ஊற்றி நனைத்து, அவரது முகத்தில் சுற்றி தீயிட்டு எரித்தனர். இடது கையில் பச்சை குத்தியிருந்த பெயரை மறைக்க, அருகில் கிடந்த தென்னை மட்டைகளை வைத்து கையையும் சேர்த்து எரித்தனர். பாதி எரிந்த கையில் கே.துரைசாமி, தேவி என பச்சை குத்தியிருந்தது தெரிந்தது.
சுட்டிக்காட்டிய தினமலர்:துரைசாமி கையில் பச்சை குத்தியிருந்த பெயரை "தினமலர்' நாளிதழ் சுட்டிக் காட்டியது. கணவரின் பெயர் அடையாளம் தெரிந்ததால், அச்சமடைந்த தேவி மற்றும் ஆட்டோ டிரைவர் முத்துலிங்கம் இருவரும் நேற்று சரணடைந்தனர். இதனையடுத்து தேவி, முத்துலிங்கம், தென்னரசு ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஊராட்சி தலைவர் மதியழகன் மற்றும் கொடியழகனை தேடி வருகின்றனர்.
செய்தி-2
தினத்தந்தி 2012
இதுகுறித்து போலீசில் கூறியதாவது:-
கள்ளக்காதல்
-----------------------
கோவை வடவள்ளி அருகே உள்ள கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருடைய மகன் அருண்குமார்(வயது30). ஒர்க்ஷாப் தொழிலாளி. இவருடைய மனைவி மேகலா(25). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. அருண்குமார், சிந்து என்ற ஹரீஷ் என்ற வாலிபருடன் பழகினார். இதனால் ஹரீஷ் அடிக்கடி அருண்குமாரின் வீட்டுக்கு வந்து செல்வார். இதனால் மேகலாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. அருண்குமார் வீட்டில் இல்லாத நேரங்களில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும், கணவன் அருண்குமார் மனைவியையும், கள்ளக்காதலன் ஹரீசையும் கண்டித்தார்.
தீவைத்தனர்
-----------------------
இந்தநிலையில் கடந்தசில நாட்களுக்கு முன்பு உடல் கருகிய நிலையில் அருண்குமார் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் விசாரணை நடத்தியபோது தீவிபத்து ஏற்பட்டு உடல் கருகியதாக கூறிய அருண்குமார், பின்னர் மரண வாக்குமூலத்தில் மனைவியும், கள்ளக்காதலன் ஹரீசும் சேர்ந்து தன் உடல் மீது மண்எண்ணை ஊற்றி தீவைத்ததாக தெரிவித்தார். இதனால் இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.
இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து நேற்று மாலை மேகலா, கள்ளக்காதலன் ஹரீஷ் ஆகியோரை பிடித்து வந்து விசாரணை நடத்தினார்கள். கணவரின் மரணவாக்கு மூலத்தின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அருண்குமார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கள்ளக்காதல் விவகாரத்தில் நடைபெற்ற கொலை முயற்சி சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.