இன்று உலக ஆண்கள் தினம் சென்னையில் அகில இந்திய ஆண்கள் நலச் சங்கம் (AIMWA)மற்றும் ஆண்கள் உரிமை பாதுகாப்புச் சங்கம் இவற்றின் ஆதரவில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கோரிக்கைகளைக் கொண்ட கையேடுகள் நகரத்தில் பல இடங்களில் வினியோகிக்கப் பட்டன. பின்னர் "மெமோரியல் ஹால்" எதிரில் தர்ணா மற்றும் கோஷமிடுதலும் நடைபெற்றது. அவற்றின் முழு விவரங்கள் படங்களுடன் நாளை வெளிவரும்.
இன்று வினியோகிக்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய கையேட்டை இங்கு காணலாம்:
அகில இந்திய ஆண்கள் நலச் சங்கத்தின் உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களை இதன்கீழ் காணலாம். மனைவியின் கொடுமையாலும் வன்முறையாலும் பாதிக்கப்படும் ஆண்களும் அவர்களது பெற்றோர், உடன்பிறந்தோர் மற்றும் உறவினர்களும் இந்த எண்களில் தொடர்பு கொண்டு இலவச உதவி பெறலாம்.
முக்கிய அறிவிப்பு:
இவர்கள் அனைவரும் இது போன்ற கொடுங்கோன்மைச் சட்டங்களின் தவறான பயன்பாட்டாலும் பொய் வழக்குகளாலும் கெடுமதி கொண்ட மனைவிகளின் கைகளில் சிக்கி பாதிக்கப்பட்ட தன்னார்வலர்கள். வக்கீல்களல்ல!
உலக ஆண்கள் நாள் தர்ணா
குறிச்சொற்கள் 125, 498a, adultery, aimwa, anti-male, biased laws, child custody, dv act, extortion, harassment, misuse, பொய் வழக்கு, வரதட்சணை
ஆண்களுக்கென்று ஒரு நாள்!
அகில உலக ஆண்கள் தினம் (International Men's Day) நாளை (19-11-2009) அன்று கொண்டாடப்படுகிறது. இது 1999-இல் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள டிரினிடாட் & டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டது. ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இது விளங்குகிறது.
உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும் ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இது கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு நினைவு படுத்தும் நாளாகவும் அமைகிறது.
இவ்வாண்டுக்கான உலக ஆண்கள் தினம் (International Men's Day) 2009 நவம்பர் 19-ம் நாள் இந்தியா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அனுசரிக்கிறார்கள். அன்றைய தினம் இந்தியாவில் டில்லி, மும்பை, லக்னௌ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை போன்ற பல நகரங்களில் தர்ணாவும் ஊர்வலமும் நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
ஆண்களுக்கென்று ஏன் ஒரு தனியான நாள் கொண்டாடப்பட வேண்டும் என்னும் கேள்வி இன்னும் சிலருக்கு எழுகிறது. சிறப்பான செயல்பாடுகள் அனைத்துமே பெண்களை முன்னிறுத்தித்தான் செய்யப்பட வேண்டும் என்னும் மனப்போக்கு மக்கள் மனத்தில் ஆழப் பதிந்து நிற்கிறது. ஆணுக்கும் பிரச்னைகள் உண்டு, அவனுக்கும் தீமைகள் இழைக்கப் படுகின்றன என்பதை அங்கீகரிக்கவே ஒரு போராட்டம் நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது!
சென்னையில் நாளை (19-11-2009) அன்று காலை அகில இந்திய ஆண்கள் நல சங்கம் - "AIMWA" (All India Men's Welfare Association) சில ஆண்கள் கல்லூரிகளுக்குச் சென்று கொள்கை விளக்கக் கையேடுகளை வினியோகம் செய்வர். பிறகு கார், மற்றும் இரு சக்கர ஊர்தியில் ஊர்வலமாகச் சென்று "ஆண்கள் பாதுகாப்பு இயக்கம்" நிகழ்த்தப் போகும் தர்ணாவில் கலந்து கொள்வர்.
இந்த தர்ணா நாளை (19-11-2009) காலை 11-00 மணி முதல் 12-00 மணி வரை சென்னை பார்க் டவுன் "மெமோரியல் ஹால்" எதிரில் நிகழ இருக்கிறது. இந்த இடம் சென்னை பொது மருத்துவ மனைக்கு எதிரிலும், இன்னொரு பக்கம் பார்க் டவுன் அஞ்சல் நிலையத்திற்கு எதிரிலும் உள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் சென்று பங்கெடுத்துக் கொள்ளலாம்.
நாளை இது பற்றி ஒரு செய்திக் குறிப்பும் வெளியாகும்.
நன்றி.
குறிச்சொற்கள் 125, 498a, aimwa, biased laws, child custody, crisp, imd, men's day, misuse, ஆண்கள் தினம், ஆண்கள் நாள், பொய் வழக்கு
ஒட்டுமொத்த குடும்பத்தின் மீதும் 498A
இதற்கு முந்தைய இடுகையைப் படித்தீர்கள் அல்லவா. அதுபோல் 498A பொய் வழக்கில் எக்ஸ்ட்ராவாக சிறிது அஜால்குஜால் மசாலா சேர்க்கும் அளவிற்கு கற்பனை வளமில்லாத ஒரு வக்கீலை இந்த நங்கை மடவன்னம் அணுகியதால் கீழ்க்காணும் ஸ்டாண்டர்ட் டெம்பிளேட் புகார்தான் போட்டிருக்கிறார்.
ஆனால் இந்த 498A டெம்பிளேட்தான் 95% பொய்க் கேசுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? இன்னும் 498A பேய் பிடிக்கவில்லையா? கவலையை விடுங்கள் இந்த சீக்கு தற்போது பன்றிக் காய்ச்சலைவிட வெகுவேகமாகப் பரவி வருகிறது. ஆனால் ஒரு வேறுபாடு. காய்ச்சல் ஒருத்தர் ஒருத்தராகத்தான் பிடிக்கும். ஆனால் 498A கேசு குடும்பத்தில் உள்ள மொத்தப் பேரையும் ஹோல்சேலாக ஒரே கட்டில் அடைத்துவிடும்!
இப்பொது செய்தியைப் படித்துவிட்டு "பெண்கள் பாவம், ஒரு பாவமும் அறியாத பேதைகள்" என்று உரக்க கோஷமிடுங்கள்!
சாத்தூர் கோர்ட்டில் புகார்;
கூடுதல் வரதட்சணை வாங்கிவர மறுத்த புதுப்பெண் சித்ரவதை
கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
விருதுநகர், நவ.6 - 2009. தினத்தந்தி
சாத்தூர் அருகே கூடுதல் வரதட்சணை வாங்கி வர மறுத்த புதுப்பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
சாத்தூர் அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 30). இவர் சாத்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனக்கும், சென்னை திருவான்மியூரை சேர்ந்த மளிகைக் கடை வியாபாரி ராமச்சந்திரன் என்பவக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது எனது பெற்றோர் 10 பவுன் நகை மற்றும் சீர்வரிசை செய்தனர்.
ஆனால் கடந்த சில மாதங்களாக எனது கணவர் கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு என்னிடம் வற்புறுத்தி வந்தார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் எனக்கு சாப்பாடு போடாமல் சித்ரவதை செய்தார். எனவே இந்த சித்ரவதைகளை தாங்க முடியாமல் நான் எனது தாய் வீட்டுக்கு வந்து விட்டேன். இந்த சித்ரவதைக்கு உடந்தையாக மாமனார் காசிபெருமாள், மாமியார் சரோஜா, நாத்தனார் கலாராணி, அவரது கணவர் சங்கர் ஆகியோர் உள்ளனர். எனவே இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மகாலட்சுமி தனது மனுவில் கூறியிருந்தார்.
5 பேர் மீது வழக்கு
வழக்கை விசாரித்த மாஜிஸ் திரேட்டு, இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சாத்தூர் அனைத்து மகளிர் போலீசுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் ராமச்சந்திரன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, extortion, misuse, ஆண்பாவம், பொய் வழக்கு
இப்படியும் வழக்கு போடுவார்கள், உஷார்!
திருவண்ணாமலையில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவிக்கு கொலை மிரட்டல்.
கணவன் மீது போலீசில் புகார்
திருவண்ணாமலை, அக்.30- 2009 - தினத்தந்தி
திருவண்ணாமலை அருகே உல்லாசத்துக்கு மறுத்த மனைவியை கொலை செய்து விடுவதாக மிரட்டிய கணவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அடுத்த பெருமணம் கிராமத்தை சேர்ந்தவர் அரிகரன் (வயது 25). இவருக்கும் ஜெயலட்சுமி (19) என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் ஜெயலட்சுமி திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
கொலை மிரட்டல்
எனது கணவர் அரிகரன் தினமும் குடித்து விட்டு என்னை அடித்து துன்புறுத்துகிறார். நேரம் காலம் பார்க்காமல் உல்லாசத்துக்கு அழைக்கிறார், மறுத்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்.
இதனால் அவரை விட்டு பிரிந்து தாய் வீட்டுக்கு வந்து விட்டேன். கணவர் வீட்டில் உள்ள எனது சீர்வரிசை பொருட்களை மீட்டு தர வேண்டும்.
5 பேர் மீது வழக்கு
என்னை சித்ரவதை செய்த கணவர் அரிகரன், அதற்கு துணையாக இருந்த மாமனார் வீராசாமி, மாமியார் பூங்கோதை, அரிகரனின் தம்பி சரவணன், அவரது மனைவி விமலா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்டவாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
குறிச்சொற்கள் 498a, biased laws, dv act, extortion, misuse, பொய் வழக்கு
விபரீத கள்ளக்தாதல்!
வக்கீலின் மனைவி கட்சிக்காரருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு ஓடிய கதையைப் படித்தோம்.
இப்போது பெண் போலீஸ் ஆயுள் தண்டனைக் கைதியுடன் கொண்ட கள்ளக்காதலின் விளைவாக கொலையுண்டிருக்கிறார்.
பின்னே, கள்ளக்காதலில் நல்லதா விளையும்!
இந்தச் செய்திதான் இன்றைய செய்தித்தாள்களில் தலைப்பு நியூஸ். தினத்தந்தி இதன் விவரங்களை மூன்று பகுதிகளாக வெளியிட்டுள்ளது. அவற்றை உள்ளது உள்ளபடி இங்கு வெளியிட்டு அதை கள்ளக்காதலுக்குக் காரணம் ஆண்களே என்று வலியுறுத்துவதற்காக இயக்கம் துவங்க இருக்கும் ஆச்சி மனோரமாவுக்கு சமர்ப்பிக்கிறேன்!
தினத்தந்தி. நாள் நவ.5 - 2009
பகுதி - 1
சேலம் பெண்கள் சிறை காவலராக இருந்தவர் மாயம்:
பெண் போலீஸ் கற்பழித்து கொலை
ஜெயிலில், கைதியுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் விபரீதம்
சேலம் சிறை காவலாக பணிபுரிந்த பெண் போலீஸ் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். ஜெயிலில், ஆயுள்தண்டனை கைதியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொடூர கொலை நடந்துள்ளது.
காயத்ரி மாலா
சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் கிளை சிறையில் முதல் நிலை காவலராக (போலீஸ்) பணியாற்றி வந்தவர், எஸ்.காயத்ரி மாலா (வயது 33). கோவையை சேர்ந்தவர். காயத்ரி மாலாவுக்கும், மதுரை மத்திய சிறையில் சப்-ஜெயிலராக பணியாற்றி வரும் தமிழ்ச் செல்வன் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
தமிழ்ச்செல்வன், காயத்ரி மாலா இருவருமே ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றவர்கள். கடந்த 2002-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக வேலைக்கு சேர்ந்த காயத்ரி மாலா, பதவி உயர்வு பெற்று, 8 மாதங்களுக்கு முன்பு கோவையில் இருந்து சேலத்திற்கு வந்தார். சேலத்தில் அய்யந்திரு மாளிகை ஹவுசிங் போர்டு குடியிருப்பில் காயத்ரி மாலா வசித்து வந்தார்.
திடீர் மாயம்
கோவை வரதராஜபுரம் ஆர்.வி.எல். நகரில் காயத்ரி மாலாவுக்கு சொந்தமாக வீடு உள்ளது. காயத்ரி மாலாவுக்கும், அவரது 2-வது கணவர் தமிழ்ச்செல்வனுக்கும் பிறந்த 4 வயது மகள் லட்சுமி பிரபா கோவையில் பெற்றோர் வீட்டில் இருப்பதால் வாரம் ஒரு முறை காயத்ரி மாலா கோவைக்கு சென்று தனது மகளை பார்த்து வருவது வழக்கம்.
கடந்த சனிக்கிழமை இரவு 7 மணிக்கு சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்த காயத்ரி மாலா, அங்கிருந்து கோவைக்கு பஸ்சில் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் கோவைக்கு செல்லவில்லை. திடீரென்று மாயமான அவருடைய செல்போன் இணைப்பும் துண்டிக்கப்பட்டு இருந்தது.
ஏரிக்கரையில் பிணம்
இது குறித்து, சேலம் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சங்ககிரி அருகே உள்ள ஆவாரம்பாளையம் ஏரிக்கரையில் ரெயில் பாதைக்கு சற்று தொலைவில் உள்ள ஒரு முட்புதரில் இருந்து துர்நாற்றம் வீசியது. நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள், அங்கு அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் பிணம் தலைகுப்புற கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த பெண் அணிந்து இருந்த சுடிதார் விலக்கப்பட்டு, சுடிதாரின் டாப்சும் கழற்றப்பட்ட நிலையில் அந்த பெண் அரை நிர்வாண கோலத்தில் கிடந்தார். மேலும் அந்த பெண்ணின் தலையில் சுமார் 25 கிலோ எடை கொண்ட பெரிய பாறாங்கல்லும் வைக்கப்பட்டு கிடந்தது. இது குறித்து சங்ககிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அடையாளம் தெரிந்தது
சங்ககிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால் முகத்தில் பெரிய கல் வைக்கப்பட்டு, முகம் சிதைக்கப்பட்டு இருந்ததால் பிணமாக கிடந்தவர் யார் என்று அடையாளம் உடனடியாக தெரியவில்லை. இதனால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் முடிவில் இறந்து கிடந்தது மாயமான காயத்ரி மாலாவாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து காயத்ரி மாலாவின் பெற்றோருக்கும், கணவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து காயத்ரி மாலாவின் தந்தை, தம்பி, அவரது மனைவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை பார்த்து இறந்து கிடப்பது காயத்ரி மாலாதான் என்று அடையாளம் காட்டினார்கள். காயத்ரி மாலாவின் கணவர் தமிழ்செல்வனும் சம்பவ இடத்திற்கு வந்து காயத்ரி மாலாவை அடையாளம் காட்டினார். பின்னர் காயத்ரி மாலாவின் பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கற்பழித்து கொலையா?
காயத்ரி மாலா கோவைக்கு சென்றபோது அவருடன் யாராவது சென்றார்களா? அவர் கொண்டு சென்ற பை, அவரது செல்போன் போன்றவை என்ன ஆனது? போன்ற விவரங்கள் தெரிய வில்லை. அவரது ஆடைகள் அகற்றப்பட்டு கிடந்ததால் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகமும் எழுந்தது.
அவரை கொலை செய்தது யார்? ஒருவரா? அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதா? என்பது போன்ற கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
ஆயுள் தண்டனை கைதி
விசாரணையில், கோவையை சேர்ந்த சரவணன் என்ற சரவணகுமார் (32) என்ற ஆயுள் தண்டனை கைதி, காயத்ரி மாலாவை கொலை செய்ததும், அவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்த திடுக்கிடும் தகவலும் அம்பலம் ஆனது.
காயத்ரி மாலா, கடந்த 2002-ம் ஆண்டில் கோவை மத்திய சிறையில் காவலராக வேலை பார்த்து வந்தார். அப்போது திருச்செங்கோடு ரிக் உரிமையாளர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணகுமார் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
கள்ளக்காதல்
அப்போது காவலர் காயத்ரி மாலாவுக்கும், சரவணகுமாருக்கும் அறிமுகம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அதன்பிறகு தனது முதல் கணவரை காயத்ரி மாலா விவாகரத்து செய்தார். இதற்கிடையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சிக்காக வேலூர் சிறைக்கு சென்ற காயத்ரி மாலாவுக்கும், அங்கு பயிற்சியாளராக வந்த மதுரை சப்-ஜெயிலர் தமிழ்ச்செல்வனுக்கும் காதல் ஏற்பட்டு, காயத்ரிமாலா கர்ப்பம் ஆனார்.
பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுடைய 4 வயது மகள் பிரபா லட்சுமி, கோவையில் உள்ள காயத்ரி மாலாவின் பெற்றோர் வீட்டில் இருக்கிறாள். இந்த நிலையில், ஆயுள் தண்டனை கைதி சரவணகுமாருடன் இருந்த கள்ளக்காதலையும் காயத்ரிமாலா கைவிடவில்லை. கடந்த 7 ஆண்டுகளாக அவர்களுடைய தொடர்பு நீடித்து வந்தது.
தலைமறைவு சந்திப்பு
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் கோவை சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த சரவணகுமார், மீண்டும் சிறைக்கு திரும்பாமல் தலைமறைவாகிவிட்டார். சேலம் மாவட்டம், ஓமலூரில் அவர் தங்கி இருந்தார். காயத்ரிமாலாவும் சேலம் சிறையில் பணிபுரிந்து வந்ததால், இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று கோவை சென்று பெற்றோரையும் மகளையும் பார்த்துவர காயத்ரிமாலா விரும்பினார். அப்போது சரவணகுமார் தனது செல்போனில் தொடர்பு கொண்டு தான் சங்ககிரியில் இருப்பதாகவும் எனவே சங்ககிரியில் இறங்கி தன்னை சந்திக்கும்படியும் காயத்ரிமாலாவிடம் தெரிவித்தார்.
கல்லால் தாக்கி கொலை
அதன்படி, கோவை செல்லும் வழியில் காயத்ரி மாலா சங்ககிரியில் இறங்கி சரவணகுமாரை சந்தித்து பேசினார். பின்னர் அங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆவாரம்பாளையம் ஏரிக்கரைக்குச் சென்று இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
அதன்பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரம் அடைந்த சரவணகுமார், பெரிய பாறாங்கல்லை தலையில் தூக்கிப்போட்டு காயத்ரி மாலாவை கொலை செய்ததாக போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
செல்போன் மூலம் துப்பு
சரவணகுமார் எடுத்துச்சென்ற காயத்ரிமாலாவின் செல்போன், தாலி செயின், கைக்கெடிகாரம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். அந்த செல்போன் மூலம் இந்த வழக்கில் போலீசார் துப்பு துலக்கி கொலையாளியை பிடித்து உள்ளனர்.
இந்த வழக்கில் 48 மணி நேரத்தில் துப்பு துலக்கிய சேலம் பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான தனி போலீஸ் படையினரை போலீஸ் கமிஷனர் சுனில்குமார்சிங் பாராட்டினார்.
=========
பகுதி - 2
ஜெயிலில் பெண் போலீசுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி?
கைதான கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்
"பெண் போலீஸ் காயத்ரி மாலாவுடன் ஜெயிலில் தொடர்பு ஏற்பட்டது எப்படி?'' என்று, கைதான கொலையாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேலம் பெண்கள் கிளைசிறை காவலர் காயத்ரிமாலா கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட சரவண குமார், சேலம் பள்ளப்பட்டி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
கர்ப்பிணி மனைவி
"எனது பெயர் சரவணன் என்கிற சரவணகுமார் (வயது 32). ஓமலூரை அடுத்த செங்கரடில் வசித்து வருகிறேன். எனக்கு திருமணம் ஆகி வெள்ளையம்மாள் என்ற மனைவி இருக்கிறார். எனக்கு ஒரு குழந்தை உள்ளது. தற்போது எனது மனைவி 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
கடந்த 1997-ம் ஆண்டு திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலைய எல்லையில் ரிக் வாகன உரிமையாளர் செங்கோட கவுண்டர் என்பவரை கொலை செய்த வழக்கில் எனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு நான் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன்.
சாப்பாடு வண்டியை தள்ளி செல்வேன்
அங்கு எனது நன்னடத்தை காரணமாக எனக்கு சாப்பாடு வண்டியை தள்ளி செல்லும் வேலை தரப்பட்டது. நான் கோவை பெண்கள் சிறைக்கு சாப்பாடு வண்டியை தினமும் தள்ளி செல்வேன். அப்போது எனக்கும் பெண்கள் சிறையில் பணிபுரிந்து வந்த காயத்ரிமாலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் கள்ளத்தொடர்பாக மாறியது. கோவை மத்திய சிறையில் இருந்த நான் அவ்வப்போது நான் பரோலில் வீட்டுக்கு சென்று வந்தேன். ஆரம்பத்தில் போலீஸ் பாதுகாப்புடன் நான் சென்று வந்தேன். பின்னர் எனது நன்னடத்தை காரணமாக நான் தனியாகவே பரோலில் சென்று வீட்டில் உள்ளவர்களை பார்த்து விட்டு மீண்டும் சிறைக்கு வர அனுமதித்தார்கள்.
பரோலில் வந்து தலைமறைவு
இந்த கால கட்டத்தில் நான் காயத்ரி மாலாவுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தேன். இந்த நிலையில் கடந்த 15.2.2009 அன்று பரோலில் வீட்டுக்கு வந்த நான் மீண்டும் கோவை சிறைக்கு செல்லவில்லை. இதனால் 24-ந் தேதி என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதன் பிறகும் நான் காயத்ரி மாலாவுடன் உல்லாச வாழக்கையை தொடர்ந்து வந்தேன். இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி அவர் என்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். தான் கோவைக்கு செல்வதாக தனது கணவரிடம் கூறி விட்டதாகவும், நீ சங்ககிரிக்கு வா என்று கூறினார். அதன்படி நானும் சங்ககிரி பஸ் நிலையத்திற்கு முன்னதாகவே சென்று காயத்ரிமாலா வருகைக்காக காத்திருந்தேன்.
உல்லாசமாக இருக்க வற்புறுத்தினார்
பஸ்சில் அவர் வந்த நேரத்தில் நான் அவரிடம் 3 முறை தொடர்பு கொண்டு பேசினேன். அதே போல அவரும் என்னிடம் 3 முறை தொடர்பு கொண்டு பேசினார். சங்ககிரி பஸ் நிலையத்தில் காயத்ரிமாலா வந்து இறங்கியதும் 2 பேரும் சங்ககிரியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் ரெயில்வே பாதை அருகில் உள்ள ஆவாரம்பாளையம் ஏரிக்கு சென்றோம்.
அங்குதான் நாங்கள் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருப்பது வழக்கம். அதே போல 31-ந் தேதியும் நாங்கள் அங்கு உல்லாசமாக இருந்தோம். அப்போது நான் காயத்ரிமாலாவிடம் ரூ.5 ஆயிரம் கேட்டேன். அதற்கு அவர், `ரூ.5 ஆயிரம் தருகிறேன். ஆனால் நீ வாரம் ஒரு முறை என்னை சந்தித்து உல்லாசமாக இருக்க வேண்டும்' என்று நிர்பந்தித்தார்.
மிரட்டியதால் கொன்றேன்
அதற்கு நான், `எனது மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார். என்னால் வாரம் ஒரு முறை வர முடியாது' என்று கூறினேன். அதை கேட்ட காயத்ரிமாலா, `நீ கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவன். இப்போது பரோலில் வெளியே வந்து விட்டு தலைமறைவாக இருக்கிறாய். நான் நினைத்தால் உன்னை போலீசில் மாட்டி விட்டு மீண்டும் சிறையில் அடைத்து விடுவேன். ஒழுங்காக நான் சொல்வதை கேள்' என்று மிரட்டினார்.
இவ்வாறு அவர் கூறியதும் எனக்கு ஆத்திரம் வந்தது. எங்கே நான் தலைமறைவாக இருப்பதை காயத்ரிமாலா சொல்லி விடுவாரோ என நினைத்தேன். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி காயத்ரிமாலாவின் தலையில் கல்லை தூக்கிப்போட்டேன்.
செல்போன் காட்டி கொடுத்தது
இதில் அவர் மயங்கினார். அதன் பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின், தோடு, கைகெடிகாரம் மற்றும் செல்போன் போன்றவற்றை திருடினேன். பின்னர் அங்குள்ள புதரில் காயத்ரிமாலாவின் உடலை இழுத்துப்போட்டு அவரின் தலையில் பெரிய கல்லை போட்டு விட்டு ஓடி விட்டேன்.
காயத்ரிமாலாவை கொன்று விட்டு நான் கருப்பூர் அருகே செங்கரடில் உள்ள எனது வீட்டிற்கு சென்று விட்டேன். இந்த நிலையில் காயத்ரிமாலா காணாமல் போனது பற்றி அவரின் தந்தை பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் காயத்ரிமாலாவின் செல்போன் எண்ணை கொண்டு யாருக்கெல்லாம் பேசினார்? என விசாரித்தார்கள். அதில் நான் அவரிடம் பேசி இருப்பது தெரிய வந்தது. இதன் பின்னர் போலீசார் என்னை பிடித்து விசாரித்தனர். இதனால் வேறு வழியின்றி நான் காயத்ரிமாலாவை கொன்றதை ஒப்புக் கொண்டேன்.''
இவ்வாறு சரவணகுமார் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
==========
பகுதி - 3
கொலை செய்யப்பட்ட பெண் காவலர் காயத்ரி மாலா, விவாகரத்து பெற்று மறுமணம் செய்தவர்
கொலை செய்யப்பட்ட பெண் காவலர் காயத்ரி மாலா, துணை ஜெயிலர் தமிழ்ச் செல்வனை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே திருமணம் ஆனவர். முதல் கணவரை விவாகரத்து செய்தபின் தமிழ்ச்செல்வனை மறுமணம் செய்து கொண்டார். முதல் கணவர் மூலம் காயத்ரிமாலாவுக்கு பிறந்த 12 வயது மகள், கோவையில் படித்து வருகிறாள்.
இதேபோல், தமிழ்ச் செல்வனும் கோமளா என்ற பெண்ணை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். அவருக்கு என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் ஒரு மகனும் 10-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.
இதற்கிடையில், 2-வது மனைவி காயத்ரி மாலா மூலம் தமிழ்ச்செல்வனுக்குப் பிறந்த 4 வயது மகள், கோவையில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டில் இருக்கிறாள். சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த காயத்ரி மாலா, வெளியே வக்கீல் ஒருவருடனும் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.
என்னை 'டார்ச்சர்' செய்யும் பெண்ணை என்ன செய்வது?
ஹலோ தோழியே ..! (தினமலர் 2-11-2009)
என்னை 'டார்ச்சர்' செய்யும் பெண்ணை என்ன செய்வது?
பெண்கள் தான் ஆண்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று சொல்வது தவறு; ஆண்கள் பலரும், பெண்களால் பாதிக்கப்படுகின்றனர் என்ற அர்த்தத்தில், பாதிக்கப்பட்ட வாசகர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். இனி அவர்...
எனக்கு திருமணமாகி எட்டு மாதமாகிறது. நான் எம்.ஏ., எம்.பில்., முடித்துள்ளேன். பெண் பார்க்கும் போது, அவளது வெள்ளை நிறத்தில் மயங்கிய நான், மற்றவற்றை பற்றி விசாரிக்கத் தவறிவிட்டேன். பெண் டிகிரி படித்திருப்பதாக கூறினர். எனக்கு அப்பா, அம்மா கிடையாது. அதனால், என்னை எதைப் பற்றியும் யோசிக்க விடாமல் அவசர அவசரமாக தேதியை குறித்து திருமணம் செய்து வைத்தனர்.
முதலிரவிலேயே எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவள் கன்னித்தன்மையோடு இல்லை. விசாரித்த போது, அவள் ஏற்கனவே திருமணமானவள் என்பது தெரியவந்தது. எட்டாவது மட்டுமே படித்து இருக்கிறாள். அவர்களது கிராமத்திலேயே ஒருவனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இவள் அவனை, "டார்ச்சர்' செய்து, அவனை பைத்தியக்காரனாக்கிவிட்டு ஓடி வந்துவிட்டாளாம். இதைப்பற்றி, திருமணத்துக்கு முன் யாரும் என்னிடம் எதுவும் கூறவில்லை.
இருந்தும், தாலி கட்டிய பாவத்திற்காக அவளோடு வாழ்ந்தேன். ஆனால், தற்போது, என்னையும், "டார்ச்சர்' செய்கிறாள். இவளைப் போன்ற பெண்களுடன், எந்த ஆணாலும் வாழமுடியாது. ஒவ்வொரு நாளும் நரக வேதனையாக உள்ளது. இனியும் இவளுடன் சேர்ந்து வாழமுடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
இப்படிப்பட்ட பெண்களும் இருக்கத்தானே செய்கின்றனர்? பின், ஏன் இந்த சமூகம் எதற்கெடுத்தாலும் ஆண்களையே குறை சொல்கிறது? இவளை நான் விவாகரத்து செய்வது முறைதானே? இதில் தவறொன்றும் இல்லையே! வழிகாட்டுங்கள் தோழிகளே' என்று, பெயர் வெளியிட விரும்பாத வாசகர் ஒருவர் கடிதம் எழுதியிருக்கிறார்.
என்ன தோழியே... இந்த வாசகருக்கு வழிகாட்ட விருப்பமா? எடுங்கள் பேனாவை! எழுதுங்கள் எங்களுக்கு...
ஹலோ தோழியே, தினமலர், 219, அண்ணா சாலை சென்னை 600 002.
குறிச்சொற்கள் anti-male, biased laws, harassment, husbands, maintenance, manorama, misuse, பொய் வழக்கு
அநாதையாய் விடப்பட்ட ஆண் குழந்தை
தொடங்கிவிட்டது ஆணழிப்பு மனப்பான்மையின் வெற்றி!
தற்போது மணமாகும் வயதில் ஆண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர், அன்றாடம் நடக்கும் பொய் வரதட்சணை வழக்குகள், கைது, சிறைவாசம், மிரட்டல் பணம் பறிப்பு, கள்ளக்காதல் கொலைகள், ஆணின் பெற்றோரை சோத்துக்கு வழியில்லாமல் நடுத்தெருவில் நிறுத்தும் அவலங்கள், ஆண்களை அவர்கள் ஆணாகப் பிறந்ததாலேயே குற்றவாளியாகக் கருதும் நீதிபதிகள், இவற்றால் கதிகலங்கி திருமணம் என்றாலே காத தூரம் ஓடும் நிலைக்குத் தள்ளப்படுவதால் இனிமேல் "வேண்டாமய்யா ஆண்குழந்தை" என்னும் மனநிலைக்கு வந்துவிட்டனர் பெற்றோர்.
தூத்துக்குடியில் பிறந்த நிலையில் ஒரு ஆண் குழந்ததயை தவிக்க விட்டு ஓடிய தாயைப் பற்றி முந்தைய இடுகையொன்றில் பார்த்தோம்.
இப்போது இந்தச் செய்தியைப் படியுங்கள்:-
ராமேஸ்வரம் கோயிலில் அனாதையாக கிடந்த குழந்தை.
செய்தி: தினமலர். 2.11.2009
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் கோயிலில் நேற்று அதிகாலை சுவாமி சன்னதி அருகே யாரோ ஒரு தாய் பிறந்த 25 நாட்கள் ஆன ஆண் குழந்தையை பையில் போட்டு, விட்டு சென்றுள்ளார். கோயில் ஊழியர் மகாலட்சுமி பையில் குழந்தை இருப்பதை கண்டு குழந்தையை எடுத்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். குழந்தையை கேட்டு யாரும் வராத காரணத்தால் கோயில் ஊழியர் மகாலட்சுமியின் மகள் பேபி, "தானே குழந்தையை வளர்ப்பதாக" கூறியதையடுத்து போலீசார் குழந்தையை பேபியிடம் ஒப்படைத்தனர். பேபிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளநிலையில் இந்த குழந்தையை தனது சொந்த குழந்தை போல் வளர்க்க உள்ளதாக கூறினார்.
குறிச்சொற்கள் 498a, adultery, anti-male, biased laws, child custody, dv act, extortion, maintenance, manorama, misuse, கள்ளக்காதல், பொய் வழக்கு
ஆகா, இவளல்லவோ தெய்வீகப் பெண்!
நிச்சயமாக இந்தப் புதுமைப் பெண்ணுக்கு கோயில் எழுப்ப வேண்டும். ஏனெனில் நம் நாட்டில் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களின் உன்னத நிலையை அப்பட்டமாக வெளிக்காட்டிய கைங்கரியத்தை இவர் செய்துள்ளார். இவளை திருமண சீர்திருத்த இயக்கத்தின் தலைவியாக அமர்த்த நாம் பரிந்துரை செய்யலாம்!
தினமும் நாம் (குறைந்தது அரை டசன் கேசுகளாவது) செய்தித்தாள்களில் வாசிக்கும் செய்தி இதுபோல்தான் இருக்கும். அதாவது - ஒரு அப்பாவிப் பெண்ணைக் காதலித்து கைவிட்டு விட்டான் ஒரு போக்கிரி ஆண். அந்த அபலை காவல் நிலையத்தில் கண்ணீரும் கம்பலையுமாக புகார் கொடுத்தாள். அவளுக்கு ஆதரவாக பெண்கள் இயக்கத் தலைவியும் சென்றார். உடனே அந்த ஆணைக் கைது செய்து சிறையிலடைத்தார்கள்.
அந்தப் பெண் தன் பேட்டியில், "நான் ஒரு உன்னத தமிழ்ப்பெண். என்னைக் காதலித்த அந்த ஆணுடன்தான் நான் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவேன். அவனுடன் திருமணம் நடக்க அவனுடைய பெற்றோர்கள்தான் தடையாக உள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் காதலர் நான் இன்னொருவனுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கிறார். அந்த நபர் என் நண்பர்தான். அவருடன் இரவில் நெடுநேரம் செல்ஃபோனில் பேசிக்கொண்டிருப்பேன். அதைப்போய் ஒரு குற்றமாகக் கருதி என் காதலர் என்னுடன் சண்டை போட்டார். அதனால்தான் புகார் கொடுத்தேன்" என்றார்.
- இப்படித்தான் இதுபோன்ற காமக் கதைகள் ஓடும். உடனே நம் பெண்ணியவாதிகளும் ஜொள்ளியவாதிகளும், "ஐயகோ, அந்தப் பெண்னை கைவிட்டுவிட்டானே காமாந்தகாரன், சண்டாளன், இவனை என்ன செய்தாலும் தகும்" என்று கும்மியடித்து கோலாட்டம் போடுவார்கள்.
சரி அந்த முட்டாள் ஆணின் மீது கேசு போட்டு கைது செய்கிறார்களே, அது எந்தக் குற்றப் பிரிவின் கீழ் என்று விசாரித்தால், கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான வன்முறை, ஏமாற்றல், கற்பழிப்பு, பெண்களை பொது இடத்தில் மானபங்கம் செய்தல் இதுபோன்று ஆண்களை ஆண்களாக அவர்கள் பிறந்தத்தற்காகவே குற்றவாளியாக்குவதற்காக கட்டமைக்கப்பட்டிருக்கும் 40-க்கும் அதிகமான சட்டங்களில் சிலவற்றைப் போட்டு ஊத்தி மூடி விடுவார்கள்.
ஆனால், அதேபோல் ஒரு பெண் ஒருவனைக் காதல் செய்து விட்டு இன்னொருவனோடு ஓடினால், அதுவும் ஒருவனோடு திருமணம் நிச்சயம் ஆனபிறகு அந்தத் திருமண நாளன்றும், அல்லது திருமணம் முடிந்த பின்பும் இன்னொருவனோடு ஓடினால் அந்தப் பெண்மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?
ஒரு புண்ணாக்கும் முடியாது. அந்தக் கணவன் வாயில் விரல் போட்டு சப்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான்!
சந்தேகமிருந்தால் "தேவதையைக் கண்டேன்" என்னும் திரைப் படத்தில் தனுஷ் பேசுவதை இந்த வலைப்பதிவில் பாருங்கள்.
ஆகையால் இளைஞர்களே, நீங்கள் கட்டாயம் திருமணம் செய்து கொள்ளுங்கள், இதோ இந்த உன்னதப் பெண்ணின் பண்பாடு செறிந்த நடவடிக்கையைக் கண்ட பெருமிதத்துடன்!!
செய்தி - தினமலர். அக்டோபர் 29,2009.
கள்ளக்காதலுடன் ஓடிய தாயை பார்த்ததும் அழுத குழந்தைகள்.
திண்டுக்கல் : கள்ளக்காதலனுடன் பத்து மாதங்களுக்கு முன்பு ஓடிப்போன தாயை கோர்ட்டில் பார்த்ததும், அவரது இரண்டு ஆண் குழந்தைகளும் கதறி அழுது தங்களுடன் வருமாறு அழைத்தனர்.
திண்டுக்கல் அருகேயுள்ள கள்ளிமந்தையம் செரியன்நகரைச் சேர்ந்தவர் சாமுவேல் (35). இவருக்கும் உஷா (27) என்பவருக்கும், ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. சாம்பிரசன்னா (5), சுதன் (3) என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நர்ஸ் வேலை பார்த்த உஷா தான் படிக்கும் போதே காதலித்த பிரகாஷ் என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் ஓடிப்போனார். (திருமணத்துக்கு முன்பே ஒருவனைக் காதலித்தவள் இன்னொருவனுடன் திருமணம் செய்து கொண்டு அவன் வாழ்க்கையை ஏன் கெடுக்கிறாள்? இதற்கு எல்லாம் தெரிந்த "டோண்டு" தான் பதில் சொல்ல வேண்டும்)
இது குறித்து சாமுவேல் கள்ளிமந்தையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
சாமுவேல் தனது நண்பர்கள், உறவினர்களுடன் சென்று திருவாரூரில் காதலனுடன் தங்கியிருந்த உஷாவை அழைத்து வந்து கள்ளிமந்தையம் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். போலீசார் நேற்று உஷாவை திண்டுக்கல் ஜே.எம்.,1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டில், கணவனுடன் செல்ல மறுத்த உஷா, தன் தாய் வீட்டிற்கு செல்வதாக தெரிவித்தார்.
கோர்ட் முடிந்து வாசலுக்கு வந்த தாயைப் பார்த்ததும், இரு குழந்தைகளும் கதறி அழுதன. ""அம்மா நம்ம வீட்டுக்கு வாம்மா, அப்பாவுடன் சேர்ந்து நாலு பேரும் ஒன்றாக இருக்கலாம்'' என அழைத்தனர். இதனை கேட்டு கோர்ட் ஊழியர்களும், அங்கிருந்தவர்களும் கண் கலங்கினர். ஆனாலும் உஷா தன் கணவனுடன் செல்ல மறுத்து விட்டார்.
"உஷா காதலனுடன் செல்வதற்காகவே என்னுடன் வர மறுக்கிறார்." அவரை அழைத்து வந்த காதலன் பிரகாஷ் கோர்ட்டிற்கு வந்திருப்பதாக சாமுவேல் தெரிவித்தார்.
உஷாவிடம் கேட்ட போது, "என் கணவர் என்னிடம் பணம் கேட்டு அடித்து தகராறு செய்ததால் நான் வெறுத்துப்போய் தாய் வீட்டிற்கு செல்கிறேன். (அட்ரா சக்கை! இதைச் சொன்னால்தானே கேள்வி கேட்கும் கணவனை 498A போட்டு பயமுறுத்தி, அடக்கி வைத்து கள்ளக் காதலுக்கும் சேர்த்து அவனிடமிருந்து மிரட்டிப் பணம் பறிக்க முடியும்! கணவனிடம் சேர்ந்து குடும்பம் நடத்த ஒப்பாமல் ஓடிப்போகும் மனைவிகள், கணவர்களிடமிருந்து பணம் பறிக்க 40+ வித சட்டங்கள் உள்ளன. நீதிபதிகளும், அவள் அதற்கு சட்டடப்படி தகுதியுள்ளவளா என்றெல்லாம் ஆராய்வதற்கு முன்னமையே, "முதலில் மனைவி கேட்ட பணத்தைக் கொடு" என்று தீர்ப்பு அளித்து வருகிறார்கள். பிறகென்ன, கொண்டாட்டம்தான்! கள்ளக் காதல் மனைவிகளுக்கு சட்டங்கள், போலீஸ், பெண்ணியவாதிகள், நீதிபதிகள் போன்றோர் உபயத்தினால் கணவன் காசில் தினந்தோறும் தீபாவளிதான்!. கேடுகெட்ட சமுதாயமய்யா இது!!) எனக்கு படிக்கும் காலத்தில் இருந்தே காதலன் இருப்பது என் குடும்பத்தாருக்கும்,கணவன் குடும்பத்தாருக்கும் தெரியும். தற்போது காதலன் வேறு பெண்ணை மணந்து அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால், அவருடன் செல்ல வாய்ப்பு இல்லை. நான் என் தாய் வீட்டில் தங்கப்போகிறேன்,'' என்றார். (ஆகா, இவளல்லவா, பாரதி கண்ட புதுமைப் பெண்! வாழ்க மனோரமாவின் இயக்கம்!)
=========================
"ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, பெண்கள் ஆனந்த முழுச் சுதந்திரம் அடைந்து விட்டார்கள் என்று ..."
குறிச்சொற்கள் 498a, adultery, anti-male, biased laws, desertion, harassment, husbands, lust, misuse, ஆண்பாவம், கள்ளக்காதல், மனோரமா, வெறி
ஐயோ பாவம் செம்மலை!
1.
அதிமுக மாஜி அமைச்சர் மனைவி-மருமகள் அடிதடி
சனிக்கிழமை, டிசம்பர் 15, 2007
சேலம்: அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செம்மலை குடும்பத்தில் மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே நடந்த சண்டை வீதிக்கு வந்து கைகலப்பில் முடிந்தது.
சேலத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை. இவர் மனைவி புஷ்பா. இவர்களது மகன் எழில் அமுதனுக்கும், மேட்டூரைச் சேர்ந்த டிஎஸ்பி முத்துசாமி மகள் வாணி பிரீதாவுக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் தனது மாமியார் புஷ்பாவும், கணவரும் ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்துவதாக மேட்டூர் மகளிர் காவல் நிலையத்தில் வாணி பிரீதா புகார் செய்தார். அந்த வழக்கு சூரமங்கலத்திற்கு மாற்றப்பட்டது.
அதன் பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அந்த வழக்கு ஈரோடு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் எழில்அமுதன்-வாணி பிரீதா இருவரும் விவகாரத்து கேட்டு தொடர்ந்த வழக்கு சேலம் குடும்ப நல நீதிமன்றத்திற்கு வந்தது.
இந்த வழக்கு விசாரணைக்காக இருதரப்பினரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். அப்போது வாணி பிரீதாவுக்கும், அவரது மாமியார் புஷ்பாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கடைசியில் அடிதடியில் முடிந்தது.
இதில் மாமியாரும்-மருமகளும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். பின்னர் உடன் வந்திருந்த உறவினர்கள் அவர்களை சமாதனப்படுத்தி அழைத்து சென்றனர்.
இதனால் சேலம் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
http://thatstamil.oneindia.in/news/2007/12/01/tn-minister-wife-and-daughter-inlaw-exchange-blows.html
2.
வரதட்சணை கொடுமை வழக்கு: அ.தி.மு.க. எம்.பி. குடும்பத்துடன் ஆஜர்
வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்பாக சேலம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. செம்மலை, தனது மனைவி மற்றும் மகனுடன் சேலம் மகளிர் கோர்ட்டில் ஆஜரானார்.
அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய சேலம் தொகுதி எம்.பி.யுமான செம்மலையின் 2 வது மகன் எழில் அமுதன். இவருக்கும், சேலம் மாவட்டம் குஞ்சாண்டிழூரை சேர்ந்த முத்துசாமியின் மகள் வாணி பிரிதாவுக்கும் கடந்த 2004 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் வாணி பிரிதா, தன்னுடைய கணவர் எழில் அமுதன், மாமியார் புஷ்பா, மாமனார் செம்மலை ஆகியோர் மீது மேட்டூர் போலீசில், வரதட்சணை கொடுமை புகார் செய்தார்.
புகார் அடிப்படையில் செம்மலை எம்.பி., அவருடைய மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் மீது சேலம் அனைத்து மகளிர் கோர்ட்டில் வரதட்சணை கொடுமை வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்தது.
இந்த நிலையில் நேற்று காலை மகளிர் கோர்ட்டு நீதிபதி கோபால் முன்னிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.
செம்மலை எம்.பி., அவருடைய மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் நேற்று கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். அப்போது சாட்சிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன.
அப்போது செம்மலை எம்.பி. இந்த வழக்கு பொய்யான வழக்கு என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கு என்றும் பதில் அளித்தார். இந்த பதில்கள் பதிவு செய்யப்பட்டன. அதேபோல் அவருடைய மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் அளித்த பதில்களும் பதிவு செய்யப்பட்டன.
பின்னர் இந்த வழக்கு விசாரணை 14 ந் தேதிக்கு (நாளை) தள்ளி வைக்கப்பட்டது.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18458
3.
சேலம், அக் 23-
சேலம் பேர்லேண்ட்ஸ் பகுதியில் வசித்து வருபவர் செம்மலை எம்.பி. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான இவர் மீதும், இவரது மனைவி புஷ்பா, கணவர் எழில்அமுதன் மீதும் அவரது மருமகள் வாணிபிரித்தா வரதட்சணை புகார் கூறி இருந்தார்.
இந்த மனு மீது முதலில் மேட்டூர் போலீசார் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு ஈரோட்டுக்கு மாற்றப்பட்டது.
பிறகு சேலம் சூரமங்கலம் மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதன் பின்னர் இந்த வழக்கு விசாரணை சேலம் மகளிர் கோர்ட்டில் நடந்தது.
இதனால் இன்று கோர்ட்டுக்கு செம்மலை எம்.பி, மற்றும் மனைவி குடும்பத்தினர் வந்து இருந்தனர். இதை நீதிபதி கோபால் விசாரித்து இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் செம்மலை எம்.பி. உள்பட அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பில் கூறி இருந்தார்.
இதை கேட்ட செம்மலை எம்.பி மற்றும் அவரது வீட்டார் மகிழ்ச்சி அடைந்தனர்.
பின்னர் செம்மலை எம்.பி கூறியதாவது:-
இந்த தீர்ப்பு குடும்ப கவுரவத்திற்கு கிடைத்த நல்ல அத்தாட்சி. எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறி இருந்ததை மக்களும் நம்ப வில்லை, நீதிமன்றமும் நம்பவில்லை. எங்களுக்கு ஏற்பட்ட மன உளச்சலுக்கு இந்த தீர்ப்பு நல்ல மருந்து.
இவ்வாறு அவர் கூறினார்.
மருமகள் வாணிப்பிரித்தா கூறும்போது, மன வேறுபாடு காரணமாக அப்போது பிரச்சினை ஏற்பட்டது. கெட்ட நேரத்தில் நடந்த சம்பவம். இப்போது மன வேறுபாடுகளை நீங்கி கணவருடன் சேர்ந்து வாழ்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
(அடுத்த முறை 498A வழக்கு போடும்போது "டைட்"டாகப் போடுவார்!)
http://www.maalaimalar.com/2009/10/23164357/SLM05231009.html
குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, misuse, ஆண்பாவம், பொய் வழக்கு, வரதட்சணை
நீதிக்கு முரணான சட்டத்தின் மூன்றாண்டு நிறைவு!
ஆம். இந்த நூற்றாண்டில் முட்டாள்தனத்தின் சிகரமாக விளங்குவது "பெண்கள் வன்முறைத் தடுப்புச் சட்டம்" (The Protection Of Women From Domestic Violence Act - "D.V. Act"). பெண்களைக் காப்பாற்றும் ஒரு புனிதமான நோக்கில் இயற்றப் பட்டதாக அதன் பெயரைப் பார்த்தவுடன் தோன்றும் இந்தச் சட்டம் உண்மையில் பெண்களைக் கொடுமை செய்து தங்களுக்குச் சொந்தமான இருப்பிடத்தையே கெடுமதியினருக்கு தாரை வார்த்துவிட்டு நடுத்தெருவில் நிற்க வைக்கும் ஒரு உன்னத(!)ச் சட்டம் என்பது அதன் பயன்பாட்டின் விளவுகளைப் பர்த்தால் தெளிவாக விளங்கும்!
இந்தக் கொடுங்கோன்மைச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு, திருமணமான இளைஞர்களையும் அவர்களைப் பெற்றெடுத்த பாவத்தைச் செய்த பெற்றோர்களையும் தன் சொத்து சுகம் அனைத்தையும் திமிர் பிடித்தலையும் பணக்காரப் பெண்களிடம் இழந்து, தற்கொலைக்குத் தள்ளும் செயலாக்கத்தைத் தொடங்கி இன்றோடு 3 ஆண்டுகள் நிறைகின்றன.
இந்த மூன்று ஆண்டுகளில் இந்த சட்டத்தைக் கையிலெடுத்து சில கெடுமதிப் பெண்களும் அவர்களின் அநியாயத்திற்குத் துணை போகும் வக்கீல்களும் நாசமாக்கிய குடும்பங்கள் அநேகம்.
இந்த சட்டத்தின் அதி உன்னதமான வரையறை என்ன தெரியுமா? "குடும்பத்தில் வன்முறையை கணவன் தான் செய்வான். அவன்மீதும், அவனுடைய ரத்த உறவுகள் மீதும் தான் இச்சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியும்" என்பது! மனைவி எந்தவிதக் கொடுமை செய்தாலும் அதைக் கருத்தில் கொள்ள வாய்ப்பே கிடையாது இச்சட்டத்தில். ஏனெனில் வன்முறையில் பாதிக்கப்படுபவள் மனைவிதான் என்று அறுதியிட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதைவிட நடைமுறைக்குப் புறம்பான சட்டத்தை இயற்ற முடியுமா?
சரி, இந்தச் சட்டத்தை இதுபோல் இயற்றி அதைத் தீவிரமாக அமலாக்கம் செய்ததன் நோக்கம் என்ன? அவர்கள் பொதுவில் தம்பட்டம் அடிப்பது போல் நம் நாட்டு அபலைப் பெண்கள் அன்றாடம் அனுபவிக்கும் குடும்ப வன்முறையிலிருந்து நிவாரணம் அளிப்பதற்காகவா? உண்மையில் குடிகாரப் புருஷன் கையால் அன்றாடம் வன்முறையைச் சந்திக்கும் அடிமட்டப் பெண்களுக்கு இதனால் நிவாரணம் கிட்டியுள்ளதா? அதெப்படிக் கிட்டும்? அவர்கள் வக்கீல்களுக்கு ஃபீசாக அள்ளி அள்ளிக் கொடுக்க முடியுமா? அவர்களுடைய கணவன்மார்களிடமிருந்து இந்தச் சட்டத்தை வைத்து கணிசமான துகையை கறக்க முடியுமா? அவர்களிடமிருப்பதோ குடிசை வீடுதான். கணவனுடைய பெற்றோரும் அன்றாடம் காய்ச்சியாக இருப்பார்கள். பிறகு அவர்களிடமிருந்து என்ன பெயரும்? அதனால் இந்த சட்டத்தின் டார்கெட் மத்தியதர மற்றும் உயர் மத்திய தர வகுப்பினர்தான். அந்தப் பாவம் செய்தவர்கள்தான் இந்தக் கொடுங்கோன்மைச் சட்டத்தால் பீடிக்கப்பட்டு கோர்ட்டு வராண்டாவில் லோலோவென்று அலைந்து கொண்டு தங்கள் பொன்னான இளமைக் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்!
இந்த D.V. Act சட்டத்தைப் பற்றிய சில விவரங்கள்:-
இந்தச் சட்டம் திருமணம் ஆன பெண்களுக்கு மட்டுமின்றி, "குடும்பம் போல்" சேர்ந்து இருக்கும் உள்ள அனைத்து உறவுகளுக்கும் பொருந்தும் - அது ஒருசில மணி நேரங்களேயானும் சரி! இந்த விளக்கத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் அளித்துள்ளார். அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பைப் பற்றி (M.Palani Vs Meenakshi) பிறிதொரு இடுகையில் பார்ப்போம்!
இது முழுக்க முழுக்க வக்கீல்களால் தயாரிக்கப்பட்டு அவர்களுடைய எண்ணப்பாங்கின்படி கட்டமைக்கப்பட்டது.
இது அமேரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் லாப நோக்கில் அமைக்கப்பட்டது.
இந்த சட்டத்தின் அடிப்படை அமைப்பின்படி ஒரு மனைவி (அல்லது சிறிது நேரம் ஒரு ஆணுடன் உறவு கொண்டு இருந்த பெண்) கணவன் மற்றும் கணவனின் ரத்த உறவுகள் எதைச் செய்தாலும், செய்யாமல் இருந்தாலும் அதை வன்முறையாகக் கருதி புகார் கொடுக்கலாம். அதாவது பேசினால் "பேசி வன்முறை செய்தான்" என்கலாம்; பேசாவிட்டால் "பேசாமல் கொடுமை செய்தான்" என்கலாம்! அந்தப் பெண் தண்ணி போட காசு கொடுக்கவில்லையென்றால் வன்முறை; இரவு ஏன் நேரம் கழித்து பார்ட்டிக்குப் போய் வருகிறாய் என்றால் வன்முறை; கண்டவனோடு உனக்கு என்ன உறவு என்று கெட்டால் வன்முறை; அவளுடைய "கருமேனியை சிவப்பாக்கும் கிரீமை" வாங்கி வரவில்லை யென்றால் அது பொருளாதாரம் சர்ந்த வன்முறை - இப்படி அடுக்கிக் கொண்டே போகிறார்கள். இதுபோல் பற்பல கேசுகள் இந்த மூன்றாண்டுகளில் பதியப்பட்டுள்ளன!
இதில் இன்னும் பல வேடிக்கைகள் உள்ளன. நீங்கள் ஒரு ஆணாகவோ, அல்லது உங்கள் வீட்டில் ஒரு ஆண்மகன் இருந்தாலோ இதைப் படிக்கப் படிக்க பகீரென்று இருக்கும்.
இந்தச் சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் தீர்வுகள் இரண்டு வகை:
1. புகார் கொடுத்த பெண்ணுக்கு உறைவிடம். அதாவது அந்தப் பெண்ணின் மேல்தான் தவறாக இருந்தாலும், அவள் பொய்ப் புகார் கொடுத்திருந்தாலும், அவள்தான் உங்கள் மீது வன்முறை செய்திருந்தாலும், அவள் புகார் கொடுத்தால் நீங்கள் உங்களுக்குச் சொந்தமான வீட்டிலிருந்து வெளியேறி, அதை அவளுக்கு தாரை வார்த்துவிட வேண்டும். இதைக் கேட்டால் உங்களுக்கு இது உண்மையாக இருக்குமோ என்ற நம்பிக்கையின்மை வருகிறது அல்லவா? இப்படித்தான் இந்தச் சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் தீர்ப்புகள் அமைகின்றன. ஐயமிருந்தால் கூகிளில் தேடிப்பாருங்கள். அல்லது உங்களுக்குத் தெரிந்த வக்கீலிடம் கேட்டுப் பாருங்கள்!
2. "பணம்". ஆம் ஐயா! "பணம் கொடு, கணவனே, மனைவி கேட்ட பணம் கொடு" -இதுதான் இச்சட்டத்தின் தாரக மந்திரம்! "அவள் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிடு. இல்லாவிட்டால் சிறைக்குப் போ!"
"ஐயா, அவள்தான் ஒரு காரணமுமில்லாமல் வீட்டைவிட்டு ஓடிப்போய் பொய்ப் புகார் கொடுத்திருக்கிறாள். கள்ளக் காதலுக்காகப் பணம் கேட்கிறாள்"
"அதெல்லாம் நான் கேட்கத் தயாரில்லை. இந்தச் சட்டப்படி மனைவி புகார் கொடுத்துள்ளார். அவள் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிடு"
"ஐயா, என்னை விட அவள் நான்கு மடங்கு அதிகம் சம்பாதிக்கிறாள். என்னையும் என் வயதான பெற்றோரையும் கொடுமைப் படுத்தி வாழ்க்கையை நரகமாக்கியிருக்கிறாள்"
"அதற்கெல்லாம் இந்த சட்டத்தில் நிவாரணம் கிடையாது. அவள் கேட்கும் பணத்தை உடனே கொடுக்க வில்லையெனில் ஜெயிலுக்குப் போ!"
இதுதானய்யா இந்த்ச் சட்டத்தைக் கையிலெடுத்து நடக்கும் நீதி(!) மன்றத் தீர்ப்புகள்!
இன்னொரு முக்கிய முட்டாள்தனம்:
மனைவி (மற்றும் மனைவி போன்றவள்) பொய்ப் புகார் கொடுத்தால் அவள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று திட்டவட்டமாக இந்தச் சட்டத்தில் வரையறுத்துள்ளார்கள்! இதுபோல் அநியாயம் எங்காவது நடக்குமா?
மற்றொரு பொய்யான கட்டுக்கதை:
இதை சிவில் சட்டம் என்று பெயரிட்டுவிட்டு, கிரிமினல் கோர்ட்டில் பதிவு செய்து தீர்ப்புகள் அளிக்கப்படும்படி அமைத்திருக்கிறார்கள். இதுபோன்ற புனைசுருட்டு எந்த நாகரிகமடைந்த நாட்டிலும் நடக்காது!
இந்த கொடுங்கோன்மை சட்டத்தின் நடைமுறையை (case laws), மற்றும் அதன் தாக்கத்தை நீங்கள் முழுதாக அறிந்து கொண்டால் நம் நாட்டிற்கு ஆஃப்கானிய தாலிபான் ஆட்சி வந்தால் தேவலை என்று எண்ணத் தொடங்கினால் ஆச்சரியப் படுவதற்கில்லை!
சரி. இப்போது இந்தச் சட்டத்தில் சிறிதும் வன்முறையே செய்ய இயலா புனிதர்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் நம் பெண் குலத்திலகங்களின் கைவண்ணங்கள் சிலவற்றைக் காணுங்கள்:
1.
வீட்டை காலி செய்ய சொன்ன வீட்டு உரிமையாளருக்கு கொலை மிரட்டல் செய்த பெண் கைது
திருவண்ணாமலை, அக்.25- 2009. செய்தி - தினத்தந்தி
திருவண்ணாமலையில் வீட்டை காலிசெய்ய சொன்ன வீட்டு உரிமை யாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வீட்டை காலி செய்ய
திருவண்ணாமலை கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் மாதவன் (வயது60). இவருடைய வீட்டில் பழனி என்பவர் தனது மனைவியுடன் கடந்த 4 மாதங்களாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
வீட்டு உரிமையாளரிடம் மாதவி அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பக்கத்தில் உள்ளவர்களிடம் மாதவனை பற்றி அவதூராக பேசியதாக தெரிகிறது. இதனால் வீட்டை காலிசெய்யும்படி மாதவன் கூறி உள்ளார்.
கொலை மிரட்டல்
இதனால் ஆத்திரம் அடைந்த தேவி காய்கறி வெட்டும் அரிவாள்மனையை எடுத்துவந்து மாதவனை கொலைசெய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் மாதவன் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2.
சூலத்தால் குத்தி குழந்தை கொலை : குடும்ப தகராறில் தாயும் தற்கொலை
அக்டோபர் 24, 2009. தினமலர்
சிறுபாக்கம் : குடும்பத் தகராறில், இரண்டு குழந்தைகளை சூலத்தால் குத்திக் கிழித்த தாய், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரு வயது குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்தது. நான்கு வயது சிறுவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த, டி.புடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோமதுரை. விவசாயி. இவரது மனைவி சுதா (28). இவர்களது மகள் பெரியநாயகி ( 11), நந்திமங்கலத்தில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி படித்து வருகிறார். மகன்கள் சுதாகர் (4) சுபாஷ் (1) பெற்றோருடன் வசித்து வந்தனர்.
இரண்டு மாதங்களுக்கு முன், கணவருடன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு நந்திமங்கலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்ற சுதா, அங்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டு அங்கேயே தங்கிவிட்டார். கோமதுரை மாமனார் வீட்டுக்கு சென்று சமாதானம் செய்து, சுதாவை நேற்று முன்தினம் அழைத்து வந்துள்ளார். வீட்டிற்கு வந்ததும் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த சுதா, நேற்று காலை தனது மகன்கள் சுதாகர் (4) சுபாஷ் (1) இருவரையும், அதே ஊரில் உள்ள குரவனார்கோவிலுக்கு அழைத்து சென்றார். அங்கு, சாமி முன் நட்டு வைத்திருந்த சூலத்தை பிடுங்கி இரண்டு குழந்தைகளின் வயிற்றில் குத்தினார். படுகாயமடைந்த இரண்டு குழந்தைகளும், துடிதுடித்து கதறினர். சுதா அருகில் இருந்த கருவேலம் மரத்தில் தனது சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடிவந்து பார்த்தபோது, படுகாயமடைந்த குழந்தை சுபாஷ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தான். சிறுவன் சுதாகர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். சிறுவனை கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பெற்ற தாயே குழந்தைகளை சூலத்தால் குத்தி, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், டி.புடையூர் கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
3.
கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி; நகைகள் கொள்ளை
என்ஜினீயர் மனைவியின் 7 மாத கர்ப்பிணி தோழி கைது
பரபரப்பு வாக்குமூலம்
சென்னை, அக்.23- 2009. தினத்தந்தி
சென்னையில் என்ஜினீயர் மனைவியின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற அவரது கர்ப்பிணி தோழி கைது செய்யப்பட்டார். அவர் கொள்ளையடித்து சென்ற நகைகளும் மீட்கப்பட்டது.
கொலை முயற்சி
சென்னை ஜாபர்கான்பேட்டை ஆர்.வி.நகர் 75-வது தெருவில் வசிப்பவர் சந்துரு என்ற ராஜகோபால் (வயது 28). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள கம்ப்னிட்டர் கம்பெனி ஒன்றில் பணிபுரிகிறார். இவரது மனைவி பெயர் சுபஸ்ரீ (25). இவர்களுக்கு 11/2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. தினமும் ராஜகோபால் வேலைக்கு சென்றபிறகு வீட்டில் கை குழந்தையோடு சுபஸ்ரீ தனியாக இருப்பார். வேலைக்காரி வந்து வீட்டு வேலைகளை செய்வார்.
நேற்று முன்தினம் மாலையில் சுபஸ்ரீ தனியாக இருக்கும்போது அவரை கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி நடந்தது. அவர் மயங்கி விழுந்து கிடந்தார். சுபஸ்ரீ அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டில் உள்ள 40 சவரன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த சுபஸ்ரீயை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த பிறகு சுபஸ்ரீ உயிர் பிழைத்துக்கொண்டார்.
குற்றவாளிகள் யார்?
இந்த கொலை முயற்சி மற்றும் நகை கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடித்து கைது செய்யும்படி கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். இணை கமிஷனர் சக்திவேலு, துணை கமிஷனர் சம்பத்குமார் ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் பரந்தாமன், இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் தலைமையில் இதற்காக தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் சம்பவ நடந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சுபஸ்ரீயின் வீட்டுக்கு தாடி வைத்த ஒருவர் உள்பட 3 ஆண்களும், சுடிதார் அணிந்திருந்த பெண் ஒருவரும் வந்து நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்ததாக தெரிய வந்தது. அவர்கள் யார்? என்று போலீசார் விசாரித்தனர். சுபஸ்ரீயின் செல்போனில் யார், யார் பேசியுள்ளனர் என்று ஆய்வு செய்யப்பட்டது.
பள்ளி தோழி
போலீசாரின் தீவிர விசாரணையில், சுபஸ்ரீயை கொல்ல முயற்சித்து அவரது நகைகளை கொள்ளையடித்தவர்கள் யார் என்று கண்டறியப்பட்டது. சுபஸ்ரீயின் வீட்டுக்கு வந்திருந்த சுடிதார் அணிந்த பெண்ணும், அவருடன் வந்திருந்த 3 ஆண்களும்தான் குற்றவாளிகள் என்று தெரிய வந்தது. சுடிதார் அணிந்த பெண்ணின் பெயர் முத்தரசி (27). அவருடன் தாடியுடன் வந்திருந்த வாலிபரின் பெயர் சரவணன் என்பதாகும். சரவணனும், முத்தரசியும் கணவன்-மனைவி ஆவார்கள். திருவேற்காட்டில் அவர்கள் வசித்து வந்தனர்.
முத்தரசி, சுபஸ்ரீயின் பள்ளி தோழி ஆவார். அவரை நேற்று காலையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், சுபஸ்ரீயை கொல்ல முயற்சித்து நகைகளை கொள்ளையடித்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். கொள்ளைப்போன நகைகளின் ஒருபகுதி அவரிடமிருந்து மீட்கப்பட்டது. சுபஸ்ரீயை கொல்ல முயன்று நகைகளை கொள்ளையடித்தது ஏன்? என்று முத்தரசி போலீசில் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
ஒன்றாக படித்தோம்
நானும், சுபஸ்ரீயும் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம். நெருக்கமான தோழிகளாக பழகினோம். 10-ம் வகுப்பில் சுபஸ்ரீ பெயிலாகி விட்டாள். இதனால் அவள் படிப்பை நிறுத்திவிட்டாள். நான் தொடர்ந்து படித்தேன்.
மதுரையில் உள்ள சட்ட கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது நான் சரியாக படிக்கவில்லை என்று குற்றம்சுமத்தி என்னை கல்லூரியில் இருந்து நீக்கிவிட்டார்கள். நான் சிறு, சிறு திருட்டு வேலைகள் செய்ததும் கல்லூரியில் இருந்து நீக்குவதற்கு இது ஒரு காரணமாகும். அதன்பிறகு எனது பெற்றோர் சரவணனுக்கு என்னை திருமணம் செய்து வைத்தனர். சரவணன் 10-ம் வகுப்பு பெயிலானவர்.சென்னை துறைமுகத்தில் அவர் தற்காலிக ஊழியராக வேலை பார்த்தார். 6 மாதத்திற்கு முன்பு அந்த வேலை பறிபோய் விட்டது. இதனால் நாங்கள் குடும்பம் நடத்த கஷ்டப்பட்டோம். எனது நகைகளை அடகுவைத்து அதில் வந்த பணத்தை வைத்து குடும்பத்தை நடத்தினோம். இந்த நிலையில் நான் கர்ப்பமானேன். எனது கணவருக்கு வேலை தேடி பார்த்தும் வேலை கிடைக்கவில்லை.
எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். இந்த நிலையில் சுபஸ்ரீயோடு எனக்கு மீண்டும் பழக்கம் தொடர ஆரம்பித்தது. ஒருமுறை அவரது வீட்டுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு வந்தேன். அப்போது அவர் வசதியாக வாழ்வதை தெரிந்து கொண்டேன். சுபஸ்ரீ வீட்டில் பகலில் தனியாக இருப்பதையும் அறிந்துகொண்டேன். சுபஸ்ரீயை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டோம். அதற்கான சமயம் பார்த்து காத்திருந்தோம்.
சீமந்த விழா
இந்த நிலையில் எனக்கு கர்ப்பம் 7 மாதம் ஆகிவிட்டது. சீமந்த விழா நடத்த முடிவு செய்திருந்தோம். சீமந்த விழாவுக்கு அழைப்பதுபோல சுபஸ்ரீயின் வீட்டுக்கு சென்று பின்னர் அவரை மிரட்டி பணம், நகைகளை பறிக்க முடிவு செய்தோம். திட்டமிட்டப்படி புதன்கிழமை அன்று காலை 11.30 மணிக்கு முதலில் சுபஸ்ரீ வீட்டுக்கு சென்றோம். நானும், எனது கணவரும் வீட்டுக்குள் சென்றோம். எங்களோடு வந்திருந்த கணவரின் நண்பர்கள் வீட்டுக்கு வெளியில் நின்று கொண்டனர்.
நாங்கள் சென்றபோது வீட்டில் வேலைக்காரி இருந்தாள். சுபஸ்ரீயிடம் எனக்கு சீமந்த விழா நடத்தப்போகிறோம். அதற்கு நீ கண்டிப்பாக வரவேண்டும். என்னுடைய நகைகள் எல்லாம் அடகு வைக்கப்பட்டுள்ளது. எனவே சீமந்த விழாவில் அணிவதற்கு உன்னுடைய நகைகளை 2 நாட்கள் இரவலுக்கு தரவேண்டும் என்று கேட்டேன். அதற்கு சுபஸ்ரீ முதலில் மறுத்தாள். பின்னர் மாலையில் வந்தால் தருவதாக கூறினாள்.
பின்னர் நாங்கள் இருவரும் வந்துவிட்டோம். பிற்பகல் 2.30 மணியளவில் மீண்டும் சுபஸ்ரீயின் வீட்டுக்கு சென்றோம். அப்போது அவருடைய கணவர் வீட்டில் மதிய சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். கணவரிடம் சுபஸ்ரீ என்னை அறிமுகப்படுத்தி வைத்தாள். கணவர் வீட்டில் இருந்ததால் மாலை 4 மணிக்கு மீண்டும் வருவதாக சொல்லிவிட்டு வந்துவிட்டோம். மாலை 4 மணிக்கு மீண்டும் சென்றோம். அப்போது சுபஸ்ரீ மட்டும் தனியாக இருந்தாள். நானும், எனது கணவரும், கணவரின் நண்பர்கள் 2 பேரும் சுபஸ்ரீயோடு பேசிக்கொண்டிருந்தோம். எங்களுக்கு டீ போட்டுக்கொடுத்து உபசரித்தாள். சீமந்த விழாவில் அணிந்துகொள்ள காலையில் நகைகளை தருவதாக சொன்ன சுபஸ்ரீ மாலையில் நகைகளை தர மறுத்தாள். நான் அவளோடு எவ்வளவோ பேசிப்பார்த்தும் நகைகளை தரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.
கழுத்தை நெரித்தோம்
இதனால் கோபம்கொண்ட நான், அவளை படுக்கை அறைக்கு இழுத்து சென்று கட்டிலில் தள்ளி அடித்து உதைத்தேன். நகைகளை தராவிட்டால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினேன். சுபஸ்ரீ அதற்கும் பணியவில்லை. இதனால் நான் எனது துப்பட்டவால் அவளது கழுத்தை இறுக்கினேன். சத்தம்போடாமல் இருக்க எனது கணவர் சுபஸ்ரீயின் வாயை பொத்தினார். இதில் சுபஸ்ரீ மூச்சு பேச்சு இல்லாமல் அப்படியே சாய்ந்துவிட்டாள்.
அவள் இறந்துவிட்டாள் என்று கருதி அவள் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டோம். அன்றையதினம் இரவு எனக்கு சீமந்த விழா நடந்தது. அப்போது சுபஸ்ரீயிடம் கொள்ளையடித்த நகைகளை நான் அணிந்துகொண்டேன். விழா முடிந்து எல்லோரும் தூங்கிக்கொண்டிருக்கும்போது அதிகாலையில் போலீசார் என்னை பிடித்துவிட்டனர்.
இவ்வாறு முத்தரசி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
======================
இப்போதைக்கு இது போதும். மேன்மேலும் நூற்றுக் கணக்கில் வந்து கொண்டேயிருக்கும், மெல்லியலாளர்களாகிய பெண்குலங்களின் கொடூரமான வன்முறைத் தாண்டவங்களை மீண்டும் இன்னொரு இடுகையில் பார்ப்போம்!
குறிச்சொற்கள் anti-male, arrest, biased laws, dv act, extortion, harassment, husbands, lawyer, maintenance, misuse, victims, பொய் வழக்கு, ராமாத்தாள்
மருமகள்கள் சித்திரவதையிலிருந்து மாமியார்களைக் காக்க ஒரு சங்கம்
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 20, 2009. செய்தி: தட்ஸ்தமிழ்
ஹைதராபாத்: மருமகள்கள் சித்திரவதையிலிரு்நது தங்களைக் காத்துக் கொள்வதற்காக ஆந்திராவில் மாமியார்கள் சேர்ந்து தனிச் சங்கம் கண்டுள்ளனர்.
வரதட்சணைக் கொடுமை வழக்குகளில் முதலில் சிக்குவது கணவன்மார்கள்தான். அதற்கு அடுத்த டார்கெட் மாமியார்கள்.
ஆனால் வரதட்சணைக் கொடுமை சட்டத்தை பல பெண்கள் தவறாகப் பயன்படுத்தி கணவர்களையும், மாமியார்களையும், அவர்களது குடும்பத்தினரையும் சிறையில் தள்ளி விடுவதாக சமீப காலமாக புகார்கள் வருகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவன்மார்கள் சங்கம் தொடங்கப்பட்டது. மாநாடு கூட நடத்தினர்.
இந்த நிலையில் ஆந்திராவில் மாமியார்கள் சேர்ந்து ஒரு சங்கம் ஆரம்பித்துள்ளனர்.
இதுகுறித்து சங்கத்தின் அமைப்பாளர்களான பத்மஜா, உமா ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சமீபகாலமாக மருமகள்களால் ஏராளமான மாமியார்கள் வீடுகளில் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். பல மாமியார்களுக்கு சரியான நேரத்திற்கு உணவு கூட கிடைப்பதில்லை.
மருமகள்கள் பலர் மாமியாரை கடுமையாக சித்ரவதை செய்து விட்டு போலீசில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக போலீசில் சிக்க வைத்து வருகிறார்கள்.
இந்த கொடுமைகளுக் கெல்லாம் முடிவு கட்டத்தான் நாங்கள் மாமியார் பாதுகாப்புச்சங்கத்தை தொடங்கி உள்ளோம்.
தற்போது 30 பேர் உறுப்பினர்களாகி உள்ளனர். விரைவில் ஆயிரம் பேர் வரை உறுப்பினராக சேர்க்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.
தங்களது பிரச்சினைகள் உள்ளிட்டவை தொடர்பாக மாமியார்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களையும் இந்த சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அவை - 9704683163, 9573605415
===========
விரைவிலேயே இச்சங்கத்தின் கிளை தமிழ் நாட்டிலும் துவக்கப்பட இருக்கிறது. அது பற்றிய அறிவிப்பை எதிர்பாருங்கள்!
குறிச்சொற்கள் 125, 498a, anti-male, biased laws, child custody, desertion, divorce, dv act, harassment, manorama, misuse, ஆண்பாவம், பொய் வழக்கு, மாமியார்
திருமணமாகி 16 ஆண்டுக்குப்பின் வந்ததே 498A வழக்கு!
"எங்கோ யாருக்கோ என்னவோ வரதட்சணை வழக்கு நடக்குது, நமக்கென்ன அக்கறை. நம்ப பொண்டாட்டியா, சேச்சே, அது மாதிரி கேசெல்லாம் போடமாட்டா, இது என்னவோ லூசு உளறிகிட்டு கெடக்குது"
இதுபோலத்தான் இந்த வலைப்பதிவை வாசிக்கும் பல எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் கெக்கேலி கொட்டி சிரித்துவிட்டு, பெரண்டு படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்!
ஆனால் அவர்களுக்குத் தெரியாது, இந்த வழக்கு பூதங்களின் வீச்சும் தாக்கமும்.
காதல் மணம் புரிந்து கொண்டு 15 ஆண்டுகள் மகிழ்ச்சியான மண வாழ்வில் இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னும், ஒரு நாள் கணவன் தன் வயதான பெற்றோரை உடன் அழைத்துக் கொள்ளப் போகிறேன் என்று சொன்ன மாத்திரத்தில் குழந்தைகளோடு வீட்டை விட்டு ஓடிப் போய் 498A கேசு போட்ட நிகழ்வுகளை நேரில் கண்டிருக்கிறோம்.
அதனால், யாரும் தங்களுக்கு இது நடக்காது என்று குறட்டை விட்டுக் கொண்டிருக்க வேண்டாம். பொய் கேசு போட்டு பழி வாங்குவதற்கு சுலபமாக வழி வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், என்றைக்கு வேண்டுமானாலும் உங்களை இது போன்ற வழக்குகள் தீண்டலாம். The enemy will choose the time and place of attack!
இப்போது இந்த 498A கேசைப் பற்றிப் படியுங்கள்:
தேனி அருகே வரதட்சணை கேட்டு பெண்ணிடம் கொடுமை
கணவர் கைது
தேனி,அக்.15- 2009. செய்தி - தினத்தந்தி
தேனி அருகே பெண் ஒருவரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக அந்த பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வரதட்சணை கொடுமை
தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டி ரைஸ்மில் தெருவில் வசித்து வருபவர் ராஜா. இவரது மனைவி வீரலட்சுமி (வயது 31). இவர் களுக்கு திருமணம் ஆகி 16 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜவுளி வியாபாரம் செய்வதற்காக வீரலட்சுமி தனது 221/2பவுன் தங்க நகையை கணவரிடம் கொடுத்துள்ளார்.
ஆனால் ஜவுளி வியாபாரம் செய்த ராஜாவுக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, மீண்டும் வேறு தொழில் செய்ய வேண்டும் என்று கூறி ரூ.50 ஆயிரம் பணத்தை தனது மனைவி வீரலட்சுமியின் பெற்றோரிடம் வாங்கி வா என்று ராஜா வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் பணம் வாங்கி வராவிட்டால் தீ வைத்து கொளுத்தி விடுவேன் என்றும் அவர் மிரட்டியதாக தெரிகிறது.
கைது
இதுகுறித்து வீரலட்சுமி தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குறிச்சொற்கள் 498a, anti-male, arrest, biased laws, misuse, ஆண்பாவம், பொய் வழக்கு
எம்.பி வரை எம்பியிருக்கும் 498A கேசுகள்!
முன்னாள் அமைச்சரும் இன்னாள் எம்.பியுமான செம்மலை மற்றும் அவர் குடும்பத்தினர் மீது 498A கேசு தொடுத்துள்ளனர்.
எம்.பி வரை படர்ந்துள்ள 498A பாம்பு சீக்கிறமே அமைச்சர்கள், நீதிபதிகள் போன்று சமூகத்தில் அனைத்து நிலைகளில் உள்ள பல பெரிய மனிதர்களையும் பீடித்த பின்னர்தான், பொய்க் கேசு போடுவதற்கென்றே அமைக்கப்பட்டுள்ள Sec 498A of IPC, Domestic Violence Act, Sec 125 of CrPC போன்ற கொடுங்கோன்மை சட்டங்களிலிருந்து மக்களுக்கு விமோசனம் கிடைக்கும்.
இப்போதெல்லாம் உங்களுக்கு யாரையாவது பிடிக்கவில்லை, அவர்களைப் பழி வாங்க வேண்டுமென்று தோன்றினால் அதற்கு சும்மா அடிச்சான், பிடிச்சான் போன்ற ஜுஜுபி கேசெல்லாம் வேலைக்கு ஆகாது! அதுக்குத்தான் கைவசம் நல்ல தீபாவளி லட்டு கணக்காக பொம்பளை சம்பந்தமான பல சட்டங்களைப் போட்டு வைத்திருக்கிறார்களே ஐயா! சமீபத்தில் தினமலர் செய்தி ஆசிரியரை எந்த சட்டத்தில் கைது செய்தார்கள் பார்த்தீர்கள் இல்லையா - பெண்கள் வன்கொடுமை சட்டத்தில்! அது தான் கூரான ஈட்டி. அதுபோல் 498A மற்றும் குடும்ப வன்முறைச் சட்டம் - இப்படி எதேனும் ஒரு பெண் கொடுமை தொடர்பான சட்டத்தை ஏவி விட்டால், ஆசாமி காலி!
குடும்ப வன்முறைச் சட்டம் (Prevention of domestic violence against women act) ஒரு கந்தல் சட்டம். இதை வைத்துக் கொண்டு யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சிக்க வைக்கலாம். உதாரணத்திற்கு திருவாளர் டோண்டு தன் வீட்டில் மௌனமாக வலைப்பதிவு எழுதிக் கொண்டு குடும்ப வன்முறை செய்கிறார் என்று நீங்கள் (அவருக்குச் சம்பந்தமில்லாதவர்) புகார் கொடுக்கலாம். அதன் மீது ஆக்ஷன் எடுப்பார்கள். இது போல் நிகழ்ந்த சில கேசுகளைப் பற்றி சீக்கிறமே விரிவாக எழுதுகிறேன்.
இப்போதைக்கு செம்மலையின் நிலையைப் பாருங்கள்:-
வரதட்சணை கொடுமை வழக்கு.
அ.தி.மு.க. எம்.பி. செம்மலை மனைவி, மகனுடன் கோர்ட்டில் ஆஜர்.
சேலம், அக்.13- 2009. செய்தி - தினத்தந்தி.
சேலம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. செம்மலை, மனைவி மற்றும் மகனுடன் சேலம் மகளிர் கோர்ட்டில் ஆஜரானார். வரதட்சணை கொடுமை வழக்கில் அவரிடம் விசாரணை நடந்தது.
அ.தி.மு.க. எம்.பி.
அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய சேலம் தொகுதி எம்.பி.யுமான செம்மலையின் 2-வது மகன் எழில் அமுதன். இவருக்கும், சேலம் மாவட்டம் குஞ்சாண்டினிரை சேர்ந்த முத்துசாமியின் மகள் வாணி பிரிதாவுக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் வாணி பிரிதா, தன்னுடைய கணவர் எழில் அமுதன், மாமியார் புஷ்பா, மாமனார் செம்மலை ஆகியோர் மீது மேட்டூர் போலீசில், வரதட்சணை கொடுமை புகார் செய்தார். இந்த புகார் தொடர்பான விசாரணை சேலம் சூரமங்கலம் மகளிர் போலீசாராலும், பின்னர் ஈரோடு மகளிர் போலீசாராலும் நடத்தப்பட்டது.
விசாரணையை தொடர்ந்து செம்மலை எம்.பி., அவருடைய மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் மீது சேலம் அனைத்து மகளிர் கோர்ட்டில் வரதட்சணை கொடுமை வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்தது.
இந்த நிலையில் நேற்று காலை மகளிர் கோர்ட்டு நீதிபதி கோபால் முன்னிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.
கோர்ட்டில் ஆஜர்
செம்மலை எம்.பி., அவருடைய மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் நேற்று கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். அப்போது சாட்சிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன.
அப்போது செம்மலை எம்.பி. இந்த வழக்கு பொய்யான வழக்கு என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கு என்றும் பதில் அளித்தார். இந்த பதில்கள் பதிவு செய்யப்பட்டன. அதேபோல் அவருடைய மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் அளித்த பதில்களும் பதிவு செய்யப்பட்டன.
விசாரணை தள்ளி வைப்பு
பின்னர் இந்த வழக்கு விசாரணை 14-ந் தேதிக்கு (நாளை) தள்ளி வைக்கப்பட்டது.
குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, dv act, law, M.P, maintenance, misuse, குடும்வ வன்முறை, செம்மலை, பொய் வழக்கு
கள்ளக்காதல் வலைப் பின்னல்கள்
கள்ளக்காதல் மற்றும் அனைத்து வகை தகாத உறவுகளுக்கும் திருமணம் பெண்களுக்கு ஒரு பரிபூரண பாதுகாப்பை அளிக்கிறது. கணவன் என்னும் பெயரில் ஒரு சோப்ளாங்கி இப்படிப்பட்ட பெண்களுக்கு அவசியம் தேவை. எதற்கு? சிலவுக்குப் பணம் கொடுக்க, இன்னார் மனைவி என்று சமூகத்தில் அந்தஸ்து பெற, தம் பெற்றோர்கள் கடமை (பிரச்னை) தீர, தனக்கு அடுத்த தங்கை இருந்தால் அவளுக்கு திருமணம் முடிக்க, மற்றும் மணமானவள் என்னும் போர்வையில் பிறருக்கு சந்தேகம் எழாத வகையில் எந்த ஆணுடனும் சகஜமாகப் பழக... இப்படி பலவகை உபயோகங்கள் கணவன் என்னும் பதவியில் ஒரு முட்டாள் இருப்பது!
ஆனால் அந்தக் கணவனுக்கோ? அது அவன்தம் உடலில் புரையோடிப் போயிருக்கும் ஒரு கொடூரமான கான்சர் வியாதி. வெட்டி எறியவும் இயலாது. கூட வைத்திருக்கவும் முடியாது. விவாக ரத்து கேட்டால் நீதிபதிகள் கொடுக்கமாட்டார்கள். பெண்கள் பக்கம்தான் பேசுவார்கள். கள்ளக் காதல் சட்டங்கள் பெண்களுக்குச் சாதகமாக இருக்கின்றன. மேலும் கள்ளக் காதல் சட்டப்படி அதில் ஈடுபடும் பெண் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. தன் மனைவி இன்னொருவனுடன் கணவன் கண் முன்னாலேயே செக்ஸில் ஈடு பட்டால் கூட அவன் சட்டப்படி மனைவி மீது ஒன்றும் செய்ய முடியாது. ஆம். அப்படித்தான் சட்டங்கள் உள்ளன. அப்போ, கணவன் கதி? தினம் தினம் நொந்து அழுகிச் சாக வேண்டியதுதான்! மனைவியிடம் ரொம்ப முறைத்தால் அவள் செக்ஷன் 498A of IPC, Domestic Vilolence Act, Sexual harassment act, maintenance என்று பெண்களுக்குச் சாதகமாக, ஆண்களுக்கு எதிராக, ஒருதலைப் பட்சமாக இயற்றப்பட்டிருக்கும் 40+ வித சட்டங்களை அந்தக் கணவன் மீதும் மற்றும் அவனைப் பெற்ற பாவத்தையும் உடன் பிறந்த பாவத்தையும் செய்திருக்கும் அவனுடய ரத்த உறவுகள் மீதும் ஏவி விட்டு விடுவாள். இதுபோன்ற "ஒரு சார்பு நிலை" (biased, blatantly one-sided and women-centric) சட்டங்கள் திருமணம் என்னும் உறவு முறையையே ஆண்களைப் பொறுத்தவரை நூறு விஷப் பாம்புகளை உடலில் சுற்றிக் கொள்வது போல் மாற்றி விட்டன!
ஒன்றை மட்டும் மட்டும் அறுதியிட்டுச் சொல்கிறேன். கவனமாகக் கேளுங்கள்:
ஒரு பெண் தன் கனவனை விடுத்து இன்னொருவனுடன் செக்ஸ் உறவு கொள்ள ஆசைப்பட்டு அந்த இன்ப சுகத்தை அடைந்தே தீருவதாக மனத்தில் முடிவு செய்து விட்டால் அதை இவ்வுலகில் எந்த சக்தியாலும் தடுக்க இயலாது. அவள் எப்படியாவது கட்டாயம் சாதித்து விடுவாள். அந்த சுகத்தை அவள் அனுபவிக்க யார் தடையாக இருந்தாலும் அத்தடையை எவ்வகையிலேனும் நீக்கி விடுவாள். இது இயற்கை அவர்களுக்கு அளித்திருக்கும் சக்தி.
இப்போது லேட்டஸ்ட் செய்தி ஒன்று:
சென்னை பாட்டு டீச்சர் மற்றும் சிறு பையன் கொலை வழக்கில் அடுக்கடுக்காக கள்ளக் காதல்கள் பல காவல் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளன.
இதைப் படியுங்கள்: (10-10-2009. தினமலர்)
சென்னை : சென்னை அசோக் நகரில் வசித்துவந்த விஜயா (எ) அனந்தலட்சுமி, அவரது மகன் சூரஜ்ராஜ் ஆகியோரை, நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த வழக்கில், வேல் முருகன் என்பவர் கைது செய்யப்பட்டார்.அவரது "தோழி" நேற்று கைது செய்யப்பட்டார்.
சென்னை அசோக்நகர் இரட்டைக் கொலை வழக்கில், தன்னுடன் "நெருங்கிய தொடர்புடைய" தன்யாவின்(35) நகைகளை அடகிலிருந்து மீட்டுத் தரவே கொலை செய்ததாக, போலீசில் வேல் முருகன் வாக்குமூலம் அளித்திருந்தார். கேரளாவைச் சேர்ந்த தன்யா, சென்னை ஜாபர்கான் பேட்டையில் கணவருடன் வசித்து வந்தார். கணவர், அந்தப் பகுதியில் டீக்கடை நடத்திவந்தார். தன்யாவுக்கும், வேல் முருகனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதுவே நெருக்கமானது.
வேலையில்லாமல் சுற்றித் திரிந்த வேல் முருகன், தன்யாவின் நகைகளை அடகு வைத்து, அதில் கிடைத்த பணத்தில் உல்லாசமாக செலவு செய்து வந்தார். ஓணம் பண்டிகையை முன்னிட்டு, தன்யாவின் குடும்பத்தினர், கேரளாவில் சொந்த ஊருக்குச் சென்றனர். கணவரோ, நகைகளோடுதான் தன்யா கேரளாவுக்கு வரவேண்டும் என்று நிபந்தனை விதித்துவிட்டார். வேறு வழியில்லாத தன்யா, தன்னிடம் வாங்கிய நகைகளை திருப்பித் தராவிட்டால், தற்கொலை செய்துகொள்வேன் என வேல்முருகனிடம் எச்சரித்தார்.
வேல்முருகன், அசோக் நகரில் தன்னுடன் ஏற்கனவே "நெருக்கமான" தொடர்பில் இருந்த விஜயாவிடம் பணம் கேட்பதற்காகச் சென்றார். அங்கு வாக்குவாதம் முற்றி, இரட்டைக் கொலையில் முடிந்தது. இந்தத் தகவலைச் சேகரித்த போலீசார், சென்னை ஜாபர்கான் பேட்டையில் குடியிருந்த, வேல்முருகனின் தோழி தன்யாவை கைது செய்தனர்.
குறிச்சொற்கள் 125, 498a, anti-male, biased laws, lust, maintenance, manorama, misuse, கள்ளக்காதல், பொய் வழக்கு, மனோரமா
பொங்கிப் பெருகுது 498A கேசுகள்!
தொடரட்டும் பொய் 498A கேசுகளின் அறுவடை!
கூடிய சீக்கிறமே இந்திய ஜனத்தொகையில் பாதி இத்தகைய கேசுகளில் சிக்கி அல்லாடும் காலம் வரும். அப்பொதுதான் இந்தியா முழு வளர்ச்சி அடைந்துவிட்டதாகக் கருத முடியும்!
================
1.
சின்னமனூர் அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை
சென்னை போலீஸ்காரர் மீது வழக்குபதிவு
உத்தமபாளையம்,செப்.29- 2009
சின்னமனூர் அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக சென்னையில் பணிபுரியும் போலீஸ்காரர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
போலீஸ்காரர்
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள வெள்ளையம்மாள்புரத்தில் தெற்கு தெருவில் வசித்து வருபவர் தெய்வ கணேசன்(வயது 36). இவர் சென்னையில் போலீஸ் காரராக பணிபுரிந்து வருகி றார். இவருக்கும் வெள்ளை யம்மாள்புரம் தெற்கு தெரு வினை சேர்ந்த பிரியதர் சிணி(22) என்பவருக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடை பெற்றது.
அப்போது 36 பவுன்தங்க நகையை வரதட்சணையாக பெண்வீட்டார் வழங்கி உள்ளனர். பின்னர் ஒரு ஆண்டு கூட்டுக்குடும்பமாக இருந்து விட்டு, அதன்பிறகு மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இருந்த போது, ஆசிரியர் பயிற்சி பெறுவதற்கு ரூ.1 லட்சம் பணத்தை உனது பெற்றோரிடம் வாங்கிவா என்று தெய்வகணேசன் பிரியதர்சிணியிடம் கூறி அவரின் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி உள்ளார்.
ஆனால் பிரியதர்சிணியின் பெற்றோர், திருமணத்திற்கு செலவு செய்து விட்டோம் பணம் இல்லை என்று சொன்னதால், திருமணத்தின் போது 100 பவுன் தங்க நகை பேசி போடவில்லை, 60 பவுன் நகையும், ரூ.40 ஆயிரம் பணமும் வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என்று பிரியதர்சிணியை அவரது கணவர் தெய்வகணேசனும், மாமியார் லீலாவதி(55) ஆகியோர் தினமும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
வரதட்சணை கொடுமை புகார்
இதனை அடுத்து பிரியதர்சிணி உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அவர் தனது புகாரில், தனது கணவரும்,மாமியாரும் வரதட்சணை கேட்டு தினமும் கொடுமைப்படுத்தியதாகவும், என் மீது அவர்கள் மண் எண்ணையை ஊற்றி தீவைக்க முயற்சித்த போது, தப்பி வந்து போலீசில் புகார் அளிப்ப தாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்பேரில் உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து தெய்வகணேசன் மற்றும் லீலாவதியை தேடி வருகின்றனர்.
===============================
2.
காதலியிடம் வரதட்சணை கேட்ட வாலிபர் கைது
காரைக்குடி,செப்.27- 2009
காதலியிடம் வரதட்சணை கேட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி அமரகாரத் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 24). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் மணிகண்டன் ஊருக்கு வந்தபோது, அவருக்கும் அதே தெருவை சேர்ந்த ரேகா (23) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.
இருவரும் தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்துக்கொண்டனர். கடந்த ஜுன் மாதம் இருவரும் திருமயத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் அவரவர் வீட்டிலேயே வசித்து வந்தனர்.
தனது தங்கைக்கு திருமணம் ஆனவுடன் உன்னை என் வீட்டுக்கு அழைத்து செல்கிறேன் என்று மணிகண்டன் கூறினாராம். இதற்கிடையில் ரேகா தன்னை அழைத்துச் செல்லும்படி மணிகண்டனிடம் கூறியுள்ளார். அதற்கு மணிகண்டன் 25பவுன்
தங்கநகை கொண்டு வந்தால்தான் அழைத்து செல்வேன் கூறியதாக தெரிகிறது.
இது குறித்து ரேகா காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் அமலராணி வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தார்.
===================
3.
காதலித்து திருமணம் செய்த 2 மாதத்தில் அழகு இல்லை எனக்கூறி, மனைவியிடம் வரதட்சணை கேட்ட கணவன் சித்ரவதை செய்ததாக கைது
கோவை,செப்.26- 2009
கோவையில் திருமணமான 2 மாதத்தில் அழகு இல்லை எனக்கூறி காதல் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவனை போலீசார் கைது செய்தனர்.
கோவை செல்வபுரம் தெற்கு உக்கடம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவரது மகன் விக்னேஷ் (வயது 22). பெயிண்டர். இவர் கோவை குனியமுத்தூர் பிள்ளையார்புரம் கஸ்தூரி கார்டனை சேர்ந்த காவேரியை (19) காதலித்தார். அவர் ஒரு பிளாஸ்டிக் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இருவரும் கடந்த இரு மாதத்துக்கு முன்பு காதல் திருமணம் துகொண்டனர். இருவரது காதலை விக்னேஷின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதையடுத்து இருவரும் பிள்ளையார் புரத்தில் உள்ள காவேரியின் வீட்டில் அவரது தாய், தங்கையுடன் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் விக்னேஷ் திடீரென மனைவி காவேரியிடம் `நீ அழகாக இல்லை. உன்னை காதலித்து திருமணம் செய்ததால் எந்த பயனும் இல்லை. அதனால் உன் அம்மாவிடம் கூறி மோட்டார் சைக்கிளை வரதட்சணையாக வாங்கி வரவேண்டும்'
என்று கூறி மிரட்டியதாக தெரிகிறது. மேலும் காவேரியை அவர் சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.
அவரது தொந்தரவு தாங்கமுடியாமல் காவேரி வீட்டில் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். படுகாயம் அடைந்த அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக கோவை குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர்.
================
4.
இன்னொரு வழக்கு
கேரள மாநிலம் கோவில்கடவு ஸ்ரீ ஜெயலட்சுமி ஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜ். இவரது மகள் ஸ்ரீ ஜெயா. இவருக்கும் கோவை சுந்தராபுரம் இடையர்பாளையத்தை சேர்ந்த மூக்காண்டி மகன் ராஜா (32)வுக்கும் கடந்த 2005-ம் ஆண்டு ஜுன் மாதம் திருமணம் நடந்தது. அப்போது பெண்வீட்டார் தரப்பில் ராஜாவுக்கு 75 பவுன் நகையும், ரூ.1 லட்சம் ரொக்கப்பணமும் வரதட்சணையாக கொடுத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் ராஜா தனது மனைவியிடம் ரூ.4 லட்சம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஸ்ரீ ஜெயாவின் கணவர் ராஜா, அவரது மாமியார் பிரமுயம்மாள், மைத்துணர் ராஜாரத்தினம், சுகுணா ஆகிய 4 பேர் மீது வரதட்சணை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
==============
5.
வரதட்சணைக் கொடுமை - மனைவியை துன்புறுத்தியதாக கன்னட பாடகர் கைது
திங்கள்கிழமை, செப்டம்பர் 28, 2009
வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய பிரபல கன்னட பின்னணி பாடகர் ஹேமந்த் கைது செய்யப்பட்டார்.
இவருக்கும், பிரியதர்ஷினி என்பவருக்கும் 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறி பிரிஷயதர்ஷினி தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
மேலும், கணவருடன், மாமியார், நாத்தனாரும் இவரை துன்புறுத்தியதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் பெங்களூர் பசவன்குடி மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை புகார் கொடுத்தார்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீஸார் ஹேமந்தை கைது செய்தனர்.
குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, harassment, husbands, law, misuse, ஆண்பாவம், பொய் வழக்கு
சினேகாவின் பொய்யால் அப்பாவிக்கு தர்ம அடி
திருச்சியில் மனைவியுடன் நகை வாங்க வந்த ஒரு ஆணை அவர் தன் இடுப்பைக கிள்ளியதாக பொய் சொல்லி சுட்டிக் காட்டினார் நடிகை சினேகா. நடிகை சொன்னால் போதாதா! உடனே அந்தக் கடைச் சிப்பந்திகள் அந்த ஆள்மீது கண்டபடி தர்ம அடி போட்டனர்.
இது பற்றி அந்த நபரின் மனைவி ஷர்மிளா கோட்டை போலீசில் புகார் செய்துள்ளார். அதில் தனது கணவர் எந்த தவறும் செய்யவில்லை என்றும், கணவரை கண்மூடித்தனமாக தாக்கிய கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் கடை ஊழியர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சுரேஷ்குமாரின் மனைவி ஷர்மிளா கூறுகையில்,
நானும், என் கணவர் சுரேஷ்குமாரும் தீபாவளி பர்ச்சேசுக்காக சின்னக்கடைவீதி சென்றோம். அப்போது, நடிகை சினேகா பங்கேற்ற நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தோம்.
திடீரென, "புளூ கலர் சட்டை போட்டவர், என் இடுப்பைக் கிள்ளினார்" என, சினேகா கூறியதாகத் தெரிகிறது. விழா நடந்த இடத்தில் இருந்து, 200 மீட்டர் தொலைவில் என்னுடன் நின்றிருந்த என் கணவர் சுரேஷ்குமாரை, கடை ஊழியர்கள் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில், என் கணவர் சட்டை கிழந்தது. "தவறு ஏதும் செய்யாத என் கணவரை அடிக்காதீர்கள்" என நான் அழுதும், கடை ஊழியர்கள் தொடர்ந்து தாக்கினர்.
"இதைப் பார்த்து ஏன் அடிக்கிறீர்கள்?' என கேட்ட போலீசையும், கடை ஊழியர்கள் தள்ளி விட்டனர். என் கணவர் மீது பொய்யான புகார் கூறிய நடிகை சினேகா, கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மூவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரவுள்ளேன்.
நடிகை சினேகா செல்லுமிடங்களில் எல்லாம் பப்ளிசிட்டிக்காக இதுபோன்று நடந்து கொள்கிறார், என்றார்.
இது பற்றி தினமலர் வெளியுட்டுள்ள செய்தியின் முந்தைய பகுதி இது:-
நடிகை சினேகாவின் இடுப்பை கிள்ளி சில்மிஷம் செய்த விவகாரத்தில் பரபரப்பான லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருச்சி சின்னக்கடைவீதியில் உள்ள நகைக்கடையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக நடிகை சினேகா திருச்சி சென்றிருந்தார். நகைக்கடை விழாவில் கலந்து கொண்ட சினேகாவை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் நகைக் கடை முன் திரண்டிருந்தார்கள். விழா முடிந்ததும் கடை மேடையிலிருந்து, நடிகை சினேகா கீழே இறங்கினார். அப்போது, கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர், திடீரென சினேகாவின் இடுப்பை கிள்ளினார். இதை சற்றும் எதிர்பார்க்காத சினேகா, கடை உரிமையாளரிடம், இடுப்பை கிள்ளிய நபரை அடையாளம் காட்டி, கிளம்பிச் சென்றார். இதையடுத்து அங்கிருந்து தப்ப முயன்ற அந்த வாலிபரை கடை ஊழியர்கள் தர்ம அடி கொடுத்து கடைக்கு இழுத்து வந்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார், "வாலிபரை எதற்கு அடிக்கிறீர்கள்?' எனக் கேட்டனர். ஆனால் கடை ஊழியர்கள் போலீசாருக்கு பதிலளிக்காமல், போலீசாரை ஒருமையில் திட்டி, வாலிபரை இழுத்துச் சென்றனர். பின்னர் வெளியே வந்த வாலிபரிடம் போலீசார் விசாரித்தனர். அவர், திருச்சி மேலசிந்தாமணியை சேர்ந்த சுரேஷ்குமார் (34) என்பதும், சினேகாவின் இடுப்பை கிள்ளிய விவரமும் தெரிந்தது.
இதையடுத்து சுரேஷ்குமாரையும், தங்களை ஒருமையில் திட்டிய பாதுகாப்பு பணியாளர்களையும் போலீசார் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் கடை உரிமையாளர்கள் சமாதானப்படுத்தியதால் (அது எந்தவித "சமாதானமாக இருக்கும் என்பதை நீங்கள் சுலபமாக யூகித்துக் கொள்ளலாம்!) அவர்களை விட்டு விட்டு போலீசார் சென்று விட்டனர்.
இதே செய்தியை தினத்தந்தி சிறிது நடுநிலையாக வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
திருச்சி, செப்.25- 2009==============================
திருச்சியில் நடிகை சினேகாவிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபரை அடித்து உதைத்த நகைகடை காவலாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சியில் உள்ள ஒரு நகைகடையில் நேற்று நடந்த விழாவில் பிரபல நடிகை சினேகா கலந்து கொண்டார். நடிகை சினேகா நகைக்கடைக்கு வந்தபோது அங்கு திரண்டு இருந்த ரசிகர்கள் அவரை பார்ப்பதற்காக முன்னோக்கி சென்றனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
அப்போது நெரிசலில் அங்கிருந்த ஒரு வாலிபர் சினேகாவின் இடுப்பை கிள்ளி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சினேகா இதுபற்றி அங்கிருந்த காவலாளிகளிடம் தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை நீலநிற சட்டை போட்டவர் என்று அடையாளம் காட்டியதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து நீலநிற சட்டை அணிந்திருந்த ஒரு வாலிபரை கண்டுபிடித்த காவலாளிகள் அவரை இழுத்து சென்று அடித்து உதைத்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அந்த வாலிபர் தாக்கப்படுவதை தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், கடை காவலாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன் பின்பு தாக்கப்பட்ட வாலிபரையும், கடை காவலாளிகள் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த வாலிபர் திருச்சி காவேரி நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 34) என்றும், அங்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் என்றும் தெரியவந்தது.
இந்த நிலையில் சுரேஷ்குமாரின் மனைவி சர்மிளா கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:-
நான் எனது கணவருடன் 24-9-2009 அன்று காலை சின்னக்கடை வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தோம். அப்போது அங்கு நடிகை சினேகா வந்து இருப்பதாக சொன்னார்கள். அவரை பார்க்கலாம் என்று நான் சொன்னதால் எனது கணவர் வண்டியை ஓரமாக நிறுத்தினார். நாங்கள் ரோட்டு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம். அப்போது நகைக்கடையில் வேலை பார்க்கும் 3 பேர் வேகமாக ஓடி வந்து எனது கணவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்தார்கள். உடனே நான் சத்தம் போட்டேன். அதன் பிறகு எனது கணவரை விட்டு விட்டனர். எனது கணவரை தாக்கிய 3 பேர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ்குமாரை தாக்கியதாக நகைக்கடை காவலாளிகள் சார்லஸ் (37) அலங்கராஜ் (27) சரவணன் (31) ஆகிய 3 பேர் மீது கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து சுரேஷ்குமாரின் மனைவி சர்மிளா நிருபர்களிடம் கூறியதாவது:-
இச்சம்பவத்தால் எனது கணவர் சுரேஷ்குமார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். தவறு செய்யாத என் கணவர் மீது தாக்குதல் நடத்த காரணமான, நடிகை சினேகா மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மன உளைச்சலால் என் கணவர் ஏதாவது செய்து கொண்டால், அதற்கு சினேகா தான் பொறுப்பு. என் கணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து சினேகா மீது மான நஷ்ட வழக்கும் தொடர உள்ளேன்.
சினிமா நடிகைகளுக்கு ஏன் இவ்வளவு மவுசு! அவர்கள் தளுக்கி, மினுக்கி, இல்லாததை இருப்பதாக பொய்த் தோற்றங்களைக் காட்டினால்தான் அவர்களின் பிழைப்பு ஓடும். அவர்களில் பலர் மேக்கப் இல்லாமல் பார்த்தால் பயங்கரமாக இருப்பார்கள்.
அது தவிர, ஒரு பெண் "ஐயோ, என்னைக் கிள்கிறானே", "என் மேல் இடித்து விட்டானே" அல்லது "என்னைக் கையைப் பிடித்து இழுத்து விட்டானே" என்று பொது இடங்களில் கூச்சல் போட்டால் போதும், உடனே வரிந்து கட்டிக் கொண்டு வந்துவிடுவார்கள் நம் ஜொள்ளு கேசுகள். என்ன ஏது என்று விசாரிக்காமல் தர்ம அடி கொடுக்கத் தொடங்கிவிடுவார்கள்.
ஏன் தான் இப்படி அலைகிறார்களோ!
[படம்: நன்றி - தினத்தந்தி]
40 வயதுக்காரிக்கு 20 வயது கள்ளக்காதலன்!
கள்ளக்காதல் படுத்தும் பாடு!
20 வயது லாரி கிளீனருடன் ஓடிய 40 வயது பெண் கவுன்சிலர்
"கணவர் வேண்டாம்... காதலனே போதும்'' என்று போலீசாரிடம் எழுதிக் கொடுத்தார்
பெங்களூர், செப்.24- 2009. தினத்தந்தி
கணவர், குழந்தைகளை விட்டு விட்டு கிராம பஞ்சாயத்து பெண் கவுன்சிலர் ஒருவர், தன்னை விட 20 வயது குறைந்த லாரி கிளீனரான தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.
பஞ்சாயத்து பெண் உறுப்பினர்
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் சனிவார சந்தே கிராம பஞ்சாயத்து உறுப்பினராக இருப்பவர் மஞ்சுளா (வயது 40). இவருக்கும், ரவி என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 14 மற்றும் 10 வயதில் 2 பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு மஞ்சுளா வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை கணவர் ரவியும், உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
வாலிபருடன் ஓட்டம்
இதற்கிடையே, மஞ்சுளாவுக்கும், 20 வயதான லாரி கிளீனர் சீனிவாஸ் என்ற வாலிபருக்கும் ஏற்கனவே கள்ளக்காதல் இருந்தது. மஞ்சுளா தனது இளம் காதலர் சீனிவாசுடன் செல்வதற்காக வீட்டை விட்டு ஓடியது தெரிய வந்தது.
சீனிவாஸ் லாரி உரிமையாளரின் பணத்தை திருடிக்கொண்டு அந்த பணத்தில் மஞ்சுளாவை கூட்டிக்கொண்டு பெங்களூருக்கு வந்தார். இங்கு அவர்கள் லாட்ஜில் அறை எடுத்து தங்கிக் கொண்டு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர்.
ஓட்டலில் தங்கினர்
பின்னர் கள்ளக்காதல் ஜோடி பெங்களூரில் இருந்து குஷால் நகருக்கு சென்றனர். அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர்.
இதற்கிடையே, லாரி உரிமையாளர் தனது பணத்தை திருடிச் சென்ற சீனிவாசை பற்றி விசாரித்தார். அப்போது சீனிவாஸ், மஞ்சுளாவுடன் உல்லாசமாக சுற்றித்திரிவது தெரியவந்தது. உடனடியாக அவர் இதுபற்றி மஞ்சுளாவின் கணவர் ரவிக்கு தகவல் தெரிவித்தார்.
பொதுமக்களிடம் பிடிபட்டனர்
இதனால் அதிர்ச்சி அடைந்த ரவி தனது உறவினர் மற்றும் ஊர் பெரியவர்களுடன் குஷால் நகரில் உள்ள ஓட்டலுக்கு சென்று, அங்கு சீனிவாசுடன் தங்கி இருந்த மஞ்சுளாவை மடக்கி பிடித்தார்.
மஞ்சுளாவை கணவர் ரவியுடன் சேர்ந்து வாழும்படி பெரியவர்கள் அறிவுரை கூறினர். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மஞ்சுளா தனது நிலையில் இருந்து சற்றும் இறங்கி வரவில்லை. வாழ்ந்தால் சீனிவாசுடனே வாழ்வேன் என்று உறுதியாக கூறி விட்டார். குழந்தைகளை என்னுடன் அனுப்ப வேண்டாம், நீங்களே வளர்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறி விட்டார்.
கணவருடன் வாழ பிடிக்கவில்லை
இதையடுத்து, மஞ்சுளாவையும், சீனிவாசையும் அவர்கள் அழைத்துக் கொண்டு போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்கு போலீசார் மஞ்சுளாவிடம் பேசினர். ஆனாலும், அதிலும் மஞ்சுளா மசியவில்லை. தனது இளம் காதலருடன் சேர்ந்து வாழ்வதில் உறுதியாக இருந்தார்.
`எனக்கு கணவர் ரவியுடன் சேர்ந்து வாழ்வதற்கு விருப்பம் இல்லை. நான் எனது காதலர் சீனிவாசுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன்' என்று பொதுமக்கள் முன்னிலையில் போலீசாரிடம் எழுதி கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து, மஞ்சுளா, அவரது இளம் காதலர் சீனிவாசுடன் அங்கிருந்து சென்றார். அவரது கணவர் ரவி தனது 2 குழந்தைகளுடன் சோகத்துடன் வீட்டுக்கு திரும்பினார்
===============
இதையே அந்த ஆண் செய்திருந்தால் அவன்மீது ஆயிரக் கணக்கான கேசுகளைப் போட்டு உள்ளே தள்ளியிருப்பார்கள். மேலும் அந்தப் பெண்குலத் திலகம் அவன்மீது ஜீவனாம்சக் கேசு போடுவாள். உடனே நம் நீதிபதிகள், "அவள் பாவம், கள்ளக் காதலனுடன் சேர்ந்து குடும்பம் நடத்தப் பணம் வேண்டாமா, நீ உன் கிட்னியை விற்றாவது ஜீவனாம்சம் கொடுக்கத்தான் வேண்டும்" என்று தீர்ப்பு அளிப்பார்.
தேவையா இந்தத் திருமணங்கள்!
பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்
பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கெடுபிடி
புதுடில்லி: செப்டம்பர் 20,2009
"பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையைத் தவிர்க்க, பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தை, அனைத்து மாநிலங்களும், தீவிரமாக அமல்படுத்த வேண்டும்' என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
வடமாநிலங்களில் நடக்கும் கட்டாயத் திருமணத்தைத் தடுத்தால், அங்கு பெண்கள் தற்கொலையும், கவுரவத்தைக் காப்பாற்றுவதற்காக நடக்கும் கொலைகளையும் தவிர்க்க முடியும். பெண்களைப் பாதுகாக்க, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், தற்போதைய நிலைமை மோசமாகவே உள்ளது. கற்பழிப்பு மற்றும் வன்முறையால் பெண்கள் உயிரிழக்கையில், அதற்கான முதல் தகவல் அறிக்கையை, காவல் நிலையங்கள் பதிவு செய்வதே இல்லை என, புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. பெண்களுக்கு எதிரான எந்தக் குற்றத்திற்கும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காவல் நிலையங்கள் தயங்கக் கூடாது.
குற்றம் நடந்த மூன்று மாதங்களுக்குள், பாரபட்சமற்ற புலனாய்வின் அடிப்படையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட வேண்டும். புலனாய்வுக்கான தகவல்களைப் பெறுவதில் எந்தக் குறைபாடும் இல்லாமல் பார்த்துக் கொள்வது, காவல் துறை மற்றும் நிர்வாகத்தினரின் கடமை. காவல் துறையில் பெண்களை அமர்த்துவதில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவியரைப் பாதுகாக்கும் வகையில், குற்றம் அதிகம் நடக்கும் இடங்களை அடையாளம் கண்டு, அங்கு கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்.
மாணவியர் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க, விரைவு மற்றும் குடும்ப நல கோர்ட்டுகளை அமைக்க வேண்டும். பெண் குழந்தைகள் இறப்பைத் தடுக்க, காவல் துறையினர், சுகாதாரத் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும். கற்பழிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்கு முக்கியத்துவம் தந்து, அவர்களுக்கு அறிவுரை வழங்க, உளவியல் படித்தவர்களைப் பணியமர்த்த வேண்டும். இவை உட்பட, மேலும் 31 நடவடிக்கைகளை, விரைந்து எடுக்குமாறு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் ஒரு கிராமத்தில், ஒரே கோத்திரம் கொண்ட பெண்ணை மணந்ததற்காக, கட்டப் பஞ்சாயத்து நடத்தப்பட்டு, அந்த உத்தரவின் பேரில் ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்தே, பெண்கள் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
http://www.dinamalar.com/new/General_detail.asp?news_id=17154
கருத்து யுத்தம் வீடியோ
காணுங்கள். உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்!
குறிச்சொற்கள் 125, 498a, advocates, arrest, biased laws, CrPC, divorce, dv act, harassment, law, misuse, police officer, ஆண்பாவம், பொய் வழக்கு, வரதட்சணை
மருமகளுக்கு உரிமைகள் மட்டுமே, கடமையேதும் கிடையாது!
மருமகளிடம் வாடகை வசூலிக்க ஐகோர்ட் தடை
செப்டம்பர் 15,2009. தினமலர் செய்தி
புதுடில்லி: "தங்களுக்கு சொந்தமான வீட்டில் வசிக்கும் மருமகளிடம், கணவன் வீட்டார் வாடகை கேட்கக்கூடாது' என, கோர்ட் தெரிவித்துள்ளது.
டில்லியை சேர்ந்தவர் கவிதா; இவருக்கு இரண்டு குழந்தைகள். கணவர் இவருடன் வாழவில்லை.
எனினும், மாமனாருக்கு சொந் தமான மூன்றடுக்குமாடி முதல் தளத்தில், கவிதா வசித்து வந்தார். கணவன் உடன் இல்லாத நிலையில், கவிதாவிடம் வீட்டு வாடகை கேட்டு மாமனாரும், மாமியாரும் நச்சரித் தனர். இதை எதிர்த்து, கோர்ட் டில் வழக்கு தொடர்ந்தார் கவிதா. இந்த வழக்கை விசாரித்த கீழ் கோர்ட், வீட்டுக்கு மாத வாடகையாக, 3, 250 ரூபாய் செலுத் தும் படி, கவிதாவுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கவிதா, டில்லி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பாஷின், "திருமணமானதும், பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண், அந்த வீட்டின் ஒரு அங்கத்தினராகி விடுகிறாள். கவிதாவுடன் அவர் கணவர் சேர்ந்து வாழாத போதும், புகுந்த வீட்டில் அவரும் ஒரு உறுப்பினர் தான். எனவே, அவரிடம் வாடகை வசூலிக்கக் கூடாது' என, உத்தரவிட்டுள்ளார்.
குறிச்சொற்கள் dv act, father, fools, harassment, husbands, maintenance, misuse, அராஜகம், ஆண்பாவம், ஓரவஞ்சனை, பொய் வழக்கு