நீதிக்கு முரணான சட்டத்தின் மூன்றாண்டு நிறைவு!

ஆம். இந்த நூற்றாண்டில் முட்டாள்தனத்தின் சிகரமாக விளங்குவது "பெண்கள் வன்முறைத் தடுப்புச் சட்டம்" (The Protection Of Women From Domestic Violence Act - "D.V. Act"). பெண்களைக் காப்பாற்றும் ஒரு புனிதமான நோக்கில் இயற்றப் பட்டதாக அதன் பெயரைப் பார்த்தவுடன் தோன்றும் இந்தச் சட்டம் உண்மையில் பெண்களைக் கொடுமை செய்து தங்களுக்குச் சொந்தமான இருப்பிடத்தையே கெடுமதியினருக்கு தாரை வார்த்துவிட்டு நடுத்தெருவில் நிற்க வைக்கும் ஒரு உன்னத(!)ச் சட்டம் என்பது அதன் பயன்பாட்டின் விளவுகளைப் பர்த்தால் தெளிவாக விளங்கும்!

இந்தக் கொடுங்கோன்மைச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு, திருமணமான இளைஞர்களையும் அவர்களைப் பெற்றெடுத்த பாவத்தைச் செய்த பெற்றோர்களையும் தன் சொத்து சுகம் அனைத்தையும் திமிர் பிடித்தலையும் பணக்காரப் பெண்களிடம் இழந்து, தற்கொலைக்குத் தள்ளும் செயலாக்கத்தைத் தொடங்கி இன்றோடு 3 ஆண்டுகள் நிறைகின்றன.

இந்த மூன்று ஆண்டுகளில் இந்த சட்டத்தைக் கையிலெடுத்து சில கெடுமதிப் பெண்களும் அவர்களின் அநியாயத்திற்குத் துணை போகும் வக்கீல்களும் நாசமாக்கிய குடும்பங்கள் அநேகம்.

இந்த சட்டத்தின் அதி உன்னதமான வரையறை என்ன தெரியுமா? "குடும்பத்தில் வன்முறையை கணவன் தான் செய்வான். அவன்மீதும், அவனுடைய ரத்த உறவுகள் மீதும் தான் இச்சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியும்" என்பது! மனைவி எந்தவிதக் கொடுமை செய்தாலும் அதைக் கருத்தில் கொள்ள வாய்ப்பே கிடையாது இச்சட்டத்தில். ஏனெனில் வன்முறையில் பாதிக்கப்படுபவள் மனைவிதான் என்று அறுதியிட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதைவிட நடைமுறைக்குப் புறம்பான சட்டத்தை இயற்ற முடியுமா?

சரி, இந்தச் சட்டத்தை இதுபோல் இயற்றி அதைத் தீவிரமாக அமலாக்கம் செய்ததன் நோக்கம் என்ன? அவர்கள் பொதுவில் தம்பட்டம் அடிப்பது போல் நம் நாட்டு அபலைப் பெண்கள் அன்றாடம் அனுபவிக்கும் குடும்ப வன்முறையிலிருந்து நிவாரணம் அளிப்பதற்காகவா? உண்மையில் குடிகாரப் புருஷன் கையால் அன்றாடம் வன்முறையைச் சந்திக்கும் அடிமட்டப் பெண்களுக்கு இதனால் நிவாரணம் கிட்டியுள்ளதா? அதெப்படிக் கிட்டும்? அவர்கள் வக்கீல்களுக்கு ஃபீசாக அள்ளி அள்ளிக் கொடுக்க முடியுமா? அவர்களுடைய கணவன்மார்களிடமிருந்து இந்தச் சட்டத்தை வைத்து கணிசமான துகையை கறக்க முடியுமா? அவர்களிடமிருப்பதோ குடிசை வீடுதான். கணவனுடைய பெற்றோரும் அன்றாடம் காய்ச்சியாக இருப்பார்கள். பிறகு அவர்களிடமிருந்து என்ன பெயரும்? அதனால் இந்த சட்டத்தின் டார்கெட் மத்தியதர மற்றும் உயர் மத்திய தர வகுப்பினர்தான். அந்தப் பாவம் செய்தவர்கள்தான் இந்தக் கொடுங்கோன்மைச் சட்டத்தால் பீடிக்கப்பட்டு கோர்ட்டு வராண்டாவில் லோலோவென்று அலைந்து கொண்டு தங்கள் பொன்னான இளமைக் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்!

இந்த D.V. Act சட்டத்தைப் பற்றிய சில விவரங்கள்:-

இந்தச் சட்டம் திருமணம் ஆன பெண்களுக்கு மட்டுமின்றி, "குடும்பம் போல்" சேர்ந்து இருக்கும் உள்ள அனைத்து உறவுகளுக்கும் பொருந்தும் - அது ஒருசில மணி நேரங்களேயானும் சரி! இந்த விளக்கத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் அளித்துள்ளார். அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பைப் பற்றி (M.Palani Vs Meenakshi) பிறிதொரு இடுகையில் பார்ப்போம்!

இது முழுக்க முழுக்க வக்கீல்களால் தயாரிக்கப்பட்டு அவர்களுடைய எண்ணப்பாங்கின்படி கட்டமைக்கப்பட்டது.

இது அமேரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் லாப நோக்கில் அமைக்கப்பட்டது.

இந்த சட்டத்தின் அடிப்படை அமைப்பின்படி ஒரு மனைவி (அல்லது சிறிது நேரம் ஒரு ஆணுடன் உறவு கொண்டு இருந்த பெண்) கணவன் மற்றும் கணவனின் ரத்த உறவுகள் எதைச் செய்தாலும், செய்யாமல் இருந்தாலும் அதை வன்முறையாகக் கருதி புகார் கொடுக்கலாம். அதாவது பேசினால் "பேசி வன்முறை செய்தான்" என்கலாம்; பேசாவிட்டால் "பேசாமல் கொடுமை செய்தான்" என்கலாம்! அந்தப் பெண் தண்ணி போட காசு கொடுக்கவில்லையென்றால் வன்முறை; இரவு ஏன் நேரம் கழித்து பார்ட்டிக்குப் போய் வருகிறாய் என்றால் வன்முறை; கண்டவனோடு உனக்கு என்ன உறவு என்று கெட்டால் வன்முறை; அவளுடைய "கருமேனியை சிவப்பாக்கும் கிரீமை" வாங்கி வரவில்லை யென்றால் அது பொருளாதாரம் சர்ந்த வன்முறை - இப்படி அடுக்கிக் கொண்டே போகிறார்கள். இதுபோல் பற்பல கேசுகள் இந்த மூன்றாண்டுகளில் பதியப்பட்டுள்ளன!

இதில் இன்னும் பல வேடிக்கைகள் உள்ளன. நீங்கள் ஒரு ஆணாகவோ, அல்லது உங்கள் வீட்டில் ஒரு ஆண்மகன் இருந்தாலோ இதைப் படிக்கப் படிக்க பகீரென்று இருக்கும்.

இந்தச் சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் தீர்வுகள் இரண்டு வகை:

1. புகார் கொடுத்த பெண்ணுக்கு உறைவிடம். அதாவது அந்தப் பெண்ணின் மேல்தான் தவறாக இருந்தாலும், அவள் பொய்ப் புகார் கொடுத்திருந்தாலும், அவள்தான் உங்கள் மீது வன்முறை செய்திருந்தாலும், அவள் புகார் கொடுத்தால் நீங்கள் உங்களுக்குச் சொந்தமான வீட்டிலிருந்து வெளியேறி, அதை அவளுக்கு தாரை வார்த்துவிட வேண்டும். இதைக் கேட்டால் உங்களுக்கு இது உண்மையாக இருக்குமோ என்ற நம்பிக்கையின்மை வருகிறது அல்லவா? இப்படித்தான் இந்தச் சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் தீர்ப்புகள் அமைகின்றன. ஐயமிருந்தால் கூகிளில் தேடிப்பாருங்கள். அல்லது உங்களுக்குத் தெரிந்த வக்கீலிடம் கேட்டுப் பாருங்கள்!

2. "பணம்". ஆம் ஐயா! "பணம் கொடு, கணவனே, மனைவி கேட்ட பணம் கொடு" -இதுதான் இச்சட்டத்தின் தாரக மந்திரம்! "அவள் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிடு. இல்லாவிட்டால் சிறைக்குப் போ!"

"ஐயா, அவள்தான் ஒரு காரணமுமில்லாமல் வீட்டைவிட்டு ஓடிப்போய் பொய்ப் புகார் கொடுத்திருக்கிறாள். கள்ளக் காதலுக்காகப் பணம் கேட்கிறாள்"

"அதெல்லாம் நான் கேட்கத் தயாரில்லை. இந்தச் சட்டப்படி மனைவி புகார் கொடுத்துள்ளார். அவள் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிடு"

"ஐயா, என்னை விட அவள் நான்கு மடங்கு அதிகம் சம்பாதிக்கிறாள். என்னையும் என் வயதான பெற்றோரையும் கொடுமைப் படுத்தி வாழ்க்கையை நரகமாக்கியிருக்கிறாள்"

"அதற்கெல்லாம் இந்த சட்டத்தில் நிவாரணம் கிடையாது. அவள் கேட்கும் பணத்தை உடனே கொடுக்க வில்லையெனில் ஜெயிலுக்குப் போ!"

இதுதானய்யா இந்த்ச் சட்டத்தைக் கையிலெடுத்து நடக்கும் நீதி(!) மன்றத் தீர்ப்புகள்!

இன்னொரு முக்கிய முட்டாள்தனம்:

மனைவி (மற்றும் மனைவி போன்றவள்) பொய்ப் புகார் கொடுத்தால் அவள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று திட்டவட்டமாக இந்தச் சட்டத்தில் வரையறுத்துள்ளார்கள்! இதுபோல் அநியாயம் எங்காவது நடக்குமா?

மற்றொரு பொய்யான கட்டுக்கதை:

இதை சிவில் சட்டம் என்று பெயரிட்டுவிட்டு, கிரிமினல் கோர்ட்டில் பதிவு செய்து தீர்ப்புகள் அளிக்கப்படும்படி அமைத்திருக்கிறார்கள். இதுபோன்ற புனைசுருட்டு எந்த நாகரிகமடைந்த நாட்டிலும் நடக்காது!

இந்த கொடுங்கோன்மை சட்டத்தின் நடைமுறையை (case laws), மற்றும் அதன் தாக்கத்தை நீங்கள் முழுதாக அறிந்து கொண்டால் நம் நாட்டிற்கு ஆஃப்கானிய தாலிபான் ஆட்சி வந்தால் தேவலை என்று எண்ணத் தொடங்கினால் ஆச்சரியப் படுவதற்கில்லை!

சரி. இப்போது இந்தச் சட்டத்தில் சிறிதும் வன்முறையே செய்ய இயலா புனிதர்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் நம் பெண் குலத்திலகங்களின் கைவண்ணங்கள் சிலவற்றைக் காணுங்கள்:

1.
வீட்டை காலி செய்ய சொன்ன வீட்டு உரிமையாளருக்கு கொலை மிரட்டல் செய்த பெண் கைது

திருவண்ணாமலை, அக்.25- 2009. செய்தி - தினத்தந்தி

திருவண்ணாமலையில் வீட்டை காலிசெய்ய சொன்ன வீட்டு உரிமை யாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வீட்டை காலி செய்ய

திருவண்ணாமலை கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் மாதவன் (வயது60). இவருடைய வீட்டில் பழனி என்பவர் தனது மனைவியுடன் கடந்த 4 மாதங்களாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

வீட்டு உரிமையாளரிடம் மாதவி அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பக்கத்தில் உள்ளவர்களிடம் மாதவனை பற்றி அவதூராக பேசியதாக தெரிகிறது. இதனால் வீட்டை காலிசெய்யும்படி மாதவன் கூறி உள்ளார்.

கொலை மிரட்டல்

இதனால் ஆத்திரம் அடைந்த தேவி காய்கறி வெட்டும் அரிவாள்மனையை எடுத்துவந்து மாதவனை கொலைசெய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் மாதவன் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2.
சூலத்தால் குத்தி குழந்தை கொலை : குடும்ப தகராறில் தாயும் தற்கொலை

அக்டோபர் 24, 2009. தினமலர்

சிறுபாக்கம் : குடும்பத் தகராறில், இரண்டு குழந்தைகளை சூலத்தால் குத்திக் கிழித்த தாய், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரு வயது குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்தது. நான்கு வயது சிறுவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த, டி.புடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோமதுரை. விவசாயி. இவரது மனைவி சுதா (28). இவர்களது மகள் பெரியநாயகி ( 11), நந்திமங்கலத்தில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி படித்து வருகிறார். மகன்கள் சுதாகர் (4) சுபாஷ் (1) பெற்றோருடன் வசித்து வந்தனர்.

இரண்டு மாதங்களுக்கு முன், கணவருடன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு நந்திமங்கலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்ற சுதா, அங்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டு அங்கேயே தங்கிவிட்டார். கோமதுரை மாமனார் வீட்டுக்கு சென்று சமாதானம் செய்து, சுதாவை நேற்று முன்தினம் அழைத்து வந்துள்ளார். வீட்டிற்கு வந்ததும் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த சுதா, நேற்று காலை தனது மகன்கள் சுதாகர் (4) சுபாஷ் (1) இருவரையும், அதே ஊரில் உள்ள குரவனார்கோவிலுக்கு அழைத்து சென்றார். அங்கு, சாமி முன் நட்டு வைத்திருந்த சூலத்தை பிடுங்கி இரண்டு குழந்தைகளின் வயிற்றில் குத்தினார். படுகாயமடைந்த இரண்டு குழந்தைகளும், துடிதுடித்து கதறினர். சுதா அருகில் இருந்த கருவேலம் மரத்தில் தனது சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடிவந்து பார்த்தபோது, படுகாயமடைந்த குழந்தை சுபாஷ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தான். சிறுவன் சுதாகர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். சிறுவனை கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பெற்ற தாயே குழந்தைகளை சூலத்தால் குத்தி, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், டி.புடையூர் கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

3.
கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி; நகைகள் கொள்ளை
என்ஜினீயர் மனைவியின் 7 மாத கர்ப்பிணி தோழி கைது
பரபரப்பு வாக்குமூலம்

சென்னை, அக்.23- 2009. தினத்தந்தி

சென்னையில் என்ஜினீயர் மனைவியின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற அவரது கர்ப்பிணி தோழி கைது செய்யப்பட்டார். அவர் கொள்ளையடித்து சென்ற நகைகளும் மீட்கப்பட்டது.

கொலை முயற்சி

சென்னை ஜாபர்கான்பேட்டை ஆர்.வி.நகர் 75-வது தெருவில் வசிப்பவர் சந்துரு என்ற ராஜகோபால் (வயது 28). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள கம்ப்னிட்டர் கம்பெனி ஒன்றில் பணிபுரிகிறார். இவரது மனைவி பெயர் சுபஸ்ரீ (25). இவர்களுக்கு 11/2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. தினமும் ராஜகோபால் வேலைக்கு சென்றபிறகு வீட்டில் கை குழந்தையோடு சுபஸ்ரீ தனியாக இருப்பார். வேலைக்காரி வந்து வீட்டு வேலைகளை செய்வார்.

நேற்று முன்தினம் மாலையில் சுபஸ்ரீ தனியாக இருக்கும்போது அவரை கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி நடந்தது. அவர் மயங்கி விழுந்து கிடந்தார். சுபஸ்ரீ அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டில் உள்ள 40 சவரன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த சுபஸ்ரீயை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த பிறகு சுபஸ்ரீ உயிர் பிழைத்துக்கொண்டார்.

குற்றவாளிகள் யார்?

இந்த கொலை முயற்சி மற்றும் நகை கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடித்து கைது செய்யும்படி கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். இணை கமிஷனர் சக்திவேலு, துணை கமிஷனர் சம்பத்குமார் ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் பரந்தாமன், இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் தலைமையில் இதற்காக தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் சம்பவ நடந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சுபஸ்ரீயின் வீட்டுக்கு தாடி வைத்த ஒருவர் உள்பட 3 ஆண்களும், சுடிதார் அணிந்திருந்த பெண் ஒருவரும் வந்து நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்ததாக தெரிய வந்தது. அவர்கள் யார்? என்று போலீசார் விசாரித்தனர். சுபஸ்ரீயின் செல்போனில் யார், யார் பேசியுள்ளனர் என்று ஆய்வு செய்யப்பட்டது.

பள்ளி தோழி

போலீசாரின் தீவிர விசாரணையில், சுபஸ்ரீயை கொல்ல முயற்சித்து அவரது நகைகளை கொள்ளையடித்தவர்கள் யார் என்று கண்டறியப்பட்டது. சுபஸ்ரீயின் வீட்டுக்கு வந்திருந்த சுடிதார் அணிந்த பெண்ணும், அவருடன் வந்திருந்த 3 ஆண்களும்தான் குற்றவாளிகள் என்று தெரிய வந்தது. சுடிதார் அணிந்த பெண்ணின் பெயர் முத்தரசி (27). அவருடன் தாடியுடன் வந்திருந்த வாலிபரின் பெயர் சரவணன் என்பதாகும். சரவணனும், முத்தரசியும் கணவன்-மனைவி ஆவார்கள். திருவேற்காட்டில் அவர்கள் வசித்து வந்தனர்.

முத்தரசி, சுபஸ்ரீயின் பள்ளி தோழி ஆவார். அவரை நேற்று காலையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், சுபஸ்ரீயை கொல்ல முயற்சித்து நகைகளை கொள்ளையடித்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். கொள்ளைப்போன நகைகளின் ஒருபகுதி அவரிடமிருந்து மீட்கப்பட்டது. சுபஸ்ரீயை கொல்ல முயன்று நகைகளை கொள்ளையடித்தது ஏன்? என்று முத்தரசி போலீசில் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

ஒன்றாக படித்தோம்

நானும், சுபஸ்ரீயும் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம். நெருக்கமான தோழிகளாக பழகினோம். 10-ம் வகுப்பில் சுபஸ்ரீ பெயிலாகி விட்டாள். இதனால் அவள் படிப்பை நிறுத்திவிட்டாள். நான் தொடர்ந்து படித்தேன்.

மதுரையில் உள்ள சட்ட கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது நான் சரியாக படிக்கவில்லை என்று குற்றம்சுமத்தி என்னை கல்லூரியில் இருந்து நீக்கிவிட்டார்கள். நான் சிறு, சிறு திருட்டு வேலைகள் செய்ததும் கல்லூரியில் இருந்து நீக்குவதற்கு இது ஒரு காரணமாகும். அதன்பிறகு எனது பெற்றோர் சரவணனுக்கு என்னை திருமணம் செய்து வைத்தனர். சரவணன் 10-ம் வகுப்பு பெயிலானவர்.சென்னை துறைமுகத்தில் அவர் தற்காலிக ஊழியராக வேலை பார்த்தார். 6 மாதத்திற்கு முன்பு அந்த வேலை பறிபோய் விட்டது. இதனால் நாங்கள் குடும்பம் நடத்த கஷ்டப்பட்டோம். எனது நகைகளை அடகுவைத்து அதில் வந்த பணத்தை வைத்து குடும்பத்தை நடத்தினோம். இந்த நிலையில் நான் கர்ப்பமானேன். எனது கணவருக்கு வேலை தேடி பார்த்தும் வேலை கிடைக்கவில்லை.

எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். இந்த நிலையில் சுபஸ்ரீயோடு எனக்கு மீண்டும் பழக்கம் தொடர ஆரம்பித்தது. ஒருமுறை அவரது வீட்டுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு வந்தேன். அப்போது அவர் வசதியாக வாழ்வதை தெரிந்து கொண்டேன். சுபஸ்ரீ வீட்டில் பகலில் தனியாக இருப்பதையும் அறிந்துகொண்டேன். சுபஸ்ரீயை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டோம். அதற்கான சமயம் பார்த்து காத்திருந்தோம்.

சீமந்த விழா

இந்த நிலையில் எனக்கு கர்ப்பம் 7 மாதம் ஆகிவிட்டது. சீமந்த விழா நடத்த முடிவு செய்திருந்தோம். சீமந்த விழாவுக்கு அழைப்பதுபோல சுபஸ்ரீயின் வீட்டுக்கு சென்று பின்னர் அவரை மிரட்டி பணம், நகைகளை பறிக்க முடிவு செய்தோம். திட்டமிட்டப்படி புதன்கிழமை அன்று காலை 11.30 மணிக்கு முதலில் சுபஸ்ரீ வீட்டுக்கு சென்றோம். நானும், எனது கணவரும் வீட்டுக்குள் சென்றோம். எங்களோடு வந்திருந்த கணவரின் நண்பர்கள் வீட்டுக்கு வெளியில் நின்று கொண்டனர்.

நாங்கள் சென்றபோது வீட்டில் வேலைக்காரி இருந்தாள். சுபஸ்ரீயிடம் எனக்கு சீமந்த விழா நடத்தப்போகிறோம். அதற்கு நீ கண்டிப்பாக வரவேண்டும். என்னுடைய நகைகள் எல்லாம் அடகு வைக்கப்பட்டுள்ளது. எனவே சீமந்த விழாவில் அணிவதற்கு உன்னுடைய நகைகளை 2 நாட்கள் இரவலுக்கு தரவேண்டும் என்று கேட்டேன். அதற்கு சுபஸ்ரீ முதலில் மறுத்தாள். பின்னர் மாலையில் வந்தால் தருவதாக கூறினாள்.

பின்னர் நாங்கள் இருவரும் வந்துவிட்டோம். பிற்பகல் 2.30 மணியளவில் மீண்டும் சுபஸ்ரீயின் வீட்டுக்கு சென்றோம். அப்போது அவருடைய கணவர் வீட்டில் மதிய சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். கணவரிடம் சுபஸ்ரீ என்னை அறிமுகப்படுத்தி வைத்தாள். கணவர் வீட்டில் இருந்ததால் மாலை 4 மணிக்கு மீண்டும் வருவதாக சொல்லிவிட்டு வந்துவிட்டோம். மாலை 4 மணிக்கு மீண்டும் சென்றோம். அப்போது சுபஸ்ரீ மட்டும் தனியாக இருந்தாள். நானும், எனது கணவரும், கணவரின் நண்பர்கள் 2 பேரும் சுபஸ்ரீயோடு பேசிக்கொண்டிருந்தோம். எங்களுக்கு டீ போட்டுக்கொடுத்து உபசரித்தாள். சீமந்த விழாவில் அணிந்துகொள்ள காலையில் நகைகளை தருவதாக சொன்ன சுபஸ்ரீ மாலையில் நகைகளை தர மறுத்தாள். நான் அவளோடு எவ்வளவோ பேசிப்பார்த்தும் நகைகளை தரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.

கழுத்தை நெரித்தோம்

இதனால் கோபம்கொண்ட நான், அவளை படுக்கை அறைக்கு இழுத்து சென்று கட்டிலில் தள்ளி அடித்து உதைத்தேன். நகைகளை தராவிட்டால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினேன். சுபஸ்ரீ அதற்கும் பணியவில்லை. இதனால் நான் எனது துப்பட்டவால் அவளது கழுத்தை இறுக்கினேன். சத்தம்போடாமல் இருக்க எனது கணவர் சுபஸ்ரீயின் வாயை பொத்தினார். இதில் சுபஸ்ரீ மூச்சு பேச்சு இல்லாமல் அப்படியே சாய்ந்துவிட்டாள்.

அவள் இறந்துவிட்டாள் என்று கருதி அவள் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டோம். அன்றையதினம் இரவு எனக்கு சீமந்த விழா நடந்தது. அப்போது சுபஸ்ரீயிடம் கொள்ளையடித்த நகைகளை நான் அணிந்துகொண்டேன். விழா முடிந்து எல்லோரும் தூங்கிக்கொண்டிருக்கும்போது அதிகாலையில் போலீசார் என்னை பிடித்துவிட்டனர்.

இவ்வாறு முத்தரசி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

======================

இப்போதைக்கு இது போதும். மேன்மேலும் நூற்றுக் கணக்கில் வந்து கொண்டேயிருக்கும், மெல்லியலாளர்களாகிய பெண்குலங்களின் கொடூரமான வன்முறைத் தாண்டவங்களை மீண்டும் இன்னொரு இடுகையில் பார்ப்போம்!

2 மறுமொழிகள்:

')) said...

இதோ இன்னொரு "மென்மையான" பெண்ணின் திருவிளையாடல்:

தஞ்சாவூர்: (தினமலர்)

தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த புரோட்டா மாஸ்டரை எரித்து கொல்ல முயன்ற மாணவி கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கொத்தமங்கலம் ஏரித்தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகள் சத்யா (13). இவர் பள்ளங்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

பள்ளங்கோவில் கோட்டகம் பகுதியில் ஒரு ஹோட்டரில் புரோட்டா மாஸ்டராக அதே பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் (28) என்பவர் வேலை செய்து வருகிறார்.

இவர் வேலை செய்யும் ஹோட்டல் வழியாக சத்யா சென்று வந்தபோது, இவர்களுக்குள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் காதல் ஏற்பட்டது. ராமதாஸின் நண்பர்கள், "சத்யா மிகவும் சிறிய பெண்ணாக இருப்பதால் அவரை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்,' என கேள்வி எழுப்பியதால், சத்யாவிடம் இருந்து ராமதாஸ் சற்று ஒதுங்கினார்.இதை அறிந்து சத்யா, தன்னை ராமதாஸ் ஒதுக்குவதாகவும், வேறு யாருடனும் பழக்கம் ஏற்பட்டுவிட்டதோ என அஞ்சி அவரை தொடர்ந்து சந்தித்து பேசினார்.

கடந்த இரு தினங்களுக்கு முன் நேரில் சந்தித்து, "தனது வீட்டுக்கு வரும்படி,' சத்யா ராமதாஸை வலியுறுத்தினார். அதன்படி நேற்று முன்தினம் சத்யா வீட்டுக்கு ராமதாஸ் சென்றபோது, திருமணம் செய்து கொள்வது தொடர்பாக இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது.

அப்போது, நடந்த சம்பவத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டார்.அவர் கவலைக்கிடமாக இருப்பதால், திருத்துறைப்பூண்டி மாஜிஸ்திரேட்டிடம் அவர் வாக்குமூலம் வழங்கினார். அதில், "தானும், சத்யாவும் காதலித்தோம். அவரது வீட்டுக்கு சென்றபோது தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நான் கூறிறேன். அதை அவர் ஏற்க மறுத்தார். அதனால், நான் தற்கொலை செய்து கொள்வேன் எனக்கூறி என் மீது மண்ணெண்ணெய் ஊற்றி மிரட்டினேன். அப்போது, "நீ இருப்பதைவிட சாவதே மேல்,' எனக்கூறி என் மீது சத்யா தீக்குச்சியை பற்றி வைத்து வீசினார். தீப்பற்றி காயம் அடைந்தேன்,' என வாக்குமூலம் கொடுத்தார்.இந்த வாக்குமூலத்தின்படி, திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், எஸ்.ஐ., முரளி ஆகியோர் விசாரித்து சத்யாவை கைது செய்தனர்.

')) said...

//புகார் கொடுத்த பெண்ணுக்கு உறைவிடம். அதாவது அந்தப் பெண்ணின் மேல்தான் தவறாக இருந்தாலும், அவள் பொய்ப் புகார் கொடுத்திருந்தாலும், அவள்தான் உங்கள் மீது வன்முறை செய்திருந்தாலும், அவள் புகார் கொடுத்தால் நீங்கள் உங்களுக்குச் சொந்தமான வீட்டிலிருந்து வெளியேறி, அதை அவளுக்கு தாரை வார்த்துவிட வேண்டும். இதைக் கேட்டால் உங்களுக்கு இது உண்மையாக இருக்குமோ என்ற நம்பிக்கையின்மை வருகிறது அல்லவா? இப்படித்தான் இந்தச் சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் தீர்ப்புகள் அமைகின்றன. ஐயமிருந்தால் கூகிளில் தேடிப்பாருங்கள். அல்லது உங்களுக்குத் தெரிந்த வக்கீலிடம் கேட்டுப் பாருங்கள்!//


ஐயா இது நூத்துக்கு நூறு உண்மை... 498ஏ பொய்வழக்கு கொடுத்த என் மனைவி தற்பொழுது என் வீட்டையும் அபகரித்து ஆக்கிரமித்து வருகின்றார்.. ஆனால் ஏன் என்றுகேட்க முடியாது
என் உழைப்பில் வாங்கிய வீட்டில் தற்பொழுது யாரோ ஒருவர் குடியிருக்கின்றார்..

SARAVANAN
NO. 45/2 PLOT C 1ST FLOOR,
VIVEKANANTHA STREET EXTN.
SRINIVASA NAGAR,
NEW PERUNGALATHUR
CHENNAI 63

மேற்கொண்ட முகவரியில் உன் உழைப்பில் வாங்கிய வீட்டை என் 498ஏ மனைவி குடும்பத்தார் மூலம் யாரோ ஒருவர் ஆக்கிரமித்து குடியிருக்கின்றனர்...

இது போல் வீடு, வாசல், வேலை, பெற்றக்குழந்தையை இழந்தவர்கள் ஏராளம் ஏராளம்...