Showing posts with label advocates. Show all posts
Showing posts with label advocates. Show all posts

எல்லா திருமணங்களையும் இனி பதிவு செய்ய வேண்டும் - அரசு உத்தரவு

இன்றைய முக்கிய செய்தி:-

"அனைத்து திருமணங்களும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். உரிய நாளுக்குள் பதிவு செய்யாவிட்டால் அல்லது தவறான தகவல் அளித்தால் குற்ற வழக்கு தொடரப்படும்” என்று பதிவுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 24ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது.


திருமணப் பதிவு விண்ணப்பத்தின் முக்கிய பகுதி வரதட்சணை பற்றியது. அந்தப் படிவத்தில் கணவன், மனைவி இருவரும் ”வரதட்சணை கேட்கவோ, கொடுக்கவோ, பெறவோ” இல்லை என்று வாக்குமூலமளித்து சாட்சியங்கள் முன் கையொப்பமிடவேண்டும். அதன் பிறகே திருமணம் பதிவு செய்யப்படும்.

9. We hereby declare:-
...
(v) no dowry was demanded, given and taken.


இதனால் கணவன்மார்களுக்கு ஒரு நன்மை, இனிமேல் கெடுமதிப் பெண்கள் திடீரென்று நினைத்துக்கொண்டு தற்போது பொய் 498A புகார்களில் சொல்வதுபோல், “திருமணத்தன்று ஒரு கோடி ரூபாய் வரதட்சணை கொடுத்தேன்” என்று அண்டப்புளுகு புளுக முடியாது. ஆனால், இதையும் தாண்டி இந்த சட்டத்தில் இண்டு இடுக்கு கண்டுபிடித்து, வேறு வித பொய்ப் புகார்கள் கொடுப்பதற்கு வழிவகைகள் தேடி வன்கொடுமை செய்யலாம், அதற்கென்றெ இருக்கும் ஸ்பெஷலிஸ்ட் வக்கீல்கள் இதற்குத் துணை போகலாம். பொய் சொல்பவர்களையும், சோரம் போகிறவர்களையும் சட்டம் போட்டு முழுவதும் தடுக்க இயலாது.

ஆனால் இந்த அரசாணை ஒரு “ஸ்பீட் பிரேக்கர்”. அவ்வளவுதான்!

இனி இந்த செய்தியின் மேல்விவரம்:-

தமிழக அரசின் பதிவுத் துறை தலைவர் சிவக்குமார் வெளியிட்டுள்ள உத்தரவு:தமிழக அரசு இந்த ஆண்டு இயற்றிய திருமணங்கள் பதிவுச் சட்டப்படி, பல மதங்களைச் சேர்ந்த இந்திய குடிமக்கள், நவம்பர் 24ம் தேதி முதல், தமிழகத்தில் நடக்கும் அனைத்து திருமணங்களையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். பல்வேறு மதச் சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந்தாலும், இந்தச் சட்டத்தின் மூன்றாவது பிரிவின் கீழும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.இந்த சட்டப்படி, பதிவுத் துறைத் தலைவர், தலைமை திருமணப் பதிவாளராகவும், மாவட்ட பதிவாளர்கள் அனைவரும் மாவட்ட திருமணப் பதிவாளர்களாகவும், சார்பதிவாளர்கள் அனைவரும் திருமணப் பதிவாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.திருமணப் பதிவுக்கான விண்ணப்பங்கள் இலவசமாக, அனைத்து பதிவு அலுவலகங்களிலும் வழங்கப்படும்.

கட்டாய திருமணப் பதிவுக்கான விவரங்கள் மற்றும் படிவங்கள், துறையின் இணையதளத்தில் (www.tnreginet.net) வெளியிடப்பட்டுள்ளன. இதிலிருந்து விவரங்களை அறிந்து, படிவங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.திருமணப் பதிவுக்கான படிவம் மற்றும் விண்ணப்பத்தில் எவ்வித அடித்தலோ அல்லது பிழைகளோ இன்றி பூர்த்தி செய்து, மணமக்கள், திருமணம் நடத்தி வைத்தவர் மற்றும் இரு சாட்சிகளின் கையெழுத்துடன், திருமணம் நடந்ததற்கான ஆதாரம், இருப்பிட மற்றும் வயது தொடர்பான ஆதார ஆவணங்களுடன், திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் 100 ரூபாய் கட்டணத்துடன் (90 நாட்களுக்கு மேலானால், 150 ரூபாய் கட்டணம்) திருமணம் நடந்த எல்லைக்கு உட்பட்ட சார்பதிவாளரிடம் அளிக்க வேண்டும். அல்லது அஞ்சல் வழி அனுப்ப வேண்டும்.

திருமணத்துக்கான சாட்சிகளின் முகவரி மற்றும் ஆள் அறிவதற்கான அடையாள சான்று நகல்கள் இணைக்க வேண்டும். விண்ணப்பமும், ஆதாரங்களும் முறையாக இருந்தால், சம்பந்தப்பட்ட திருமணப் பதிவாளர், மனுதாரருக்கு ஒப்புதல் அளிப்பார். உரிய வகையில் இல்லாத மனுக்கள், குறைகளை சரிசெய்து திரும்ப அளிக்குமாறு மனுதாரரிடம் திரும்ப அளிக்கப்படும்.மணமக்கள் அல்லது சாட்சிகளின் அடையாளங்கள் குறித்தும், அவர்கள் அளித்த தகவல்களின் உண்மைத்தன்மை குறித்தும் சந்தேகம் ஏற்பட்டால், மணமக்களுக்கு வாய்ப்பளித்து, விசாரணைக்குப் பின், திருமணப் பதிவாளர் திருப்தி அடையாவிட்டால், அத்தகைய திருமணப் பதிவுகள் அவரால் மறுக்கப்படும்.இந்த மறுப்பு உத்தரவு மீது, சம்பந்தப்பட்ட நபர்கள், உத்தரவு பெற்ற 30 நாட்களுக்குள் மாவட்ட பதிவாளரிடம் மேல்முறையீடு செய்யலாம்.

அந்த மேல்முறையீடு மீது மாவட்ட பதிவாளர் பிறப்பிக்கும் உத்தரவு திருப்தி இல்லையெனில், 30 நாட்களுக்குள் பதிவுத் துறைத் தலைவருக்கு மேல்முறையீடு செய்யலாம். பதிவுத் துறை தலைவரின் உத்தரவே இறுதியானது.திருமணங்கள் பதிவுச் சட்டம் அமலுக்கு வந்துள்ள நவம்பர் 24ம் தேதி முதல் நடக்கும் அனைத்து திருமணங்களும், எந்த ஜாதி மற்றும் மதமாயிருப்பினும், உரிய நாளில் பதிவு செய்யாவிட்டாலோ, தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிந்தாலோ, விதி மீறல் இருந்தாலோ, சம்பந்தப்பட்ட நபர் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டு, நிரூபிக்கப்பட்டால், அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு பதிவுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

வக்கீலின் மனைவி கட்சிக்காரருடன் ஓட்டம்!

இது புதுசு!

28 வயதான வக்கீலின் மனைவி 20 வயது வாலிபனான தனது கணவரின் கட்சிக்காரருடன் ஓடிப் போய்விட்டார்.

கும்பகோணம் கல்யாணராமன் தெருவில் வசிப்பவர் வக்கீல் பாலமுருகன். இவர் கும்பகோணம் பார் அசோசியேஷன் செயலராகவும், அஇஅதிமுக வக்கீல் அணிச் செயலராகவும் பதவி வகிக்கிறார்.

இவருடைய மனைவியின் பெயர் சரோஜினி (வயது 28). இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

இந்த வக்கீலின் வீட்டுக்கு மேலக்காவேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்னும் 20 வயது இளைஞர் ஒரு வழக்கு தொடர்பாக, கடந்த ஆறு மாத காலமாக அடிக்கடி வந்து சந்தித்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த இளைஞருக்கும் வக்கீல் மனைவி சரோஜினிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

அந்த வக்கீலின் மனைவி சரோஜினி, சுப்பிரமணியன் என்னும் அந்த இளைஞருடன் ஓடிப்போய் விட்டாள் (மன்னிக்கவும், "விட்டார்". கள்ளக் காதலில் ஈடுபடும் பெண் குலத்திலகங்களை மரியாதையுடன் விளிக்கவேண்டும் அல்லவா!) என்று வக்கீல் கணவர் பாலமுருகன் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் கட்சிக்காரர் சுப்பிரமணியன் மீது, வக்கீல் மனைவியை கடத்திச் சென்றதாக வழக்குப் பதிவு செய்து அந்த ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர்.

இதில் ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். கள்ளக்காதல் (adultery), இழுத்துக் கொண்டு ஓடுதல் (elopement) இதுபோன்ற புகார்களின் மேல் அதில் சம்பந்தப் பட்டுள்ள ஆண் மேல்தான் வழக்குப் பதிவு செய்யமுடியும். கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களுக்கு முழுதாக சட்டங்களிலிருந்து விதிவிலக்கு அளிப்பட்டுள்ளது நம் நாட்டில்.

உங்கள் மனைவி உங்கள் கண்ணெதிரிலேயே இன்னொருவனுடன் செக்ஸில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் கூட அந்த ஆணுக்கு எதிராகத்தான் நீங்கள் வழக்கு தொடுக்கலாமேயன்றி உங்கள் மனைவியின்மீது எந்தவித நடவடிக்கையையும் எடுக்க இயலாது; அதற்கு இந்திய சட்டங்களில் இடமில்லை. சந்தேகமிருந்தால் சட்டம் தெரிந்த யாரையாவது கேட்டுத் தெளிவு பெறுங்கள். மேலும் அதைக் காரணம் காட்டி விவாகரத்து கூட பெற முடியாது. மனைவி சொல்வதைத்தான் நீதிபதிகள் நம்புவார்கள். "நான் பத்தினித் தெய்வம். என் கணவர் ஒரு சந்தேகப் பிராணி. என்மேல் அபாண்டமாக பழி சுமத்துகிறார். இந்த அபலையின் பரிதாப நிலையைப் பாருங்கள்" என்று நீதிபதியின் முன் கண்ணீர் சிந்தி ஒரு டிராமா போடுவாள். அவவ்ளவுதான். அப்படியே உருகி அவள் கேட்டபடி தீர்ப்பு வழங்குவார்கள். உடனே பெண்ணியவாதிகளும் ஜொள்ளியவாதிகளும் சேர்ந்து கோரசாக "ஐயோ பாவம், அந்த அபலைப் பெண். இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் எத்தகைய கொடுமைகளுக்கு அவள் ஆளாகிறாள்" என்று கட்டிப் பிடித்து அழுவார்கள். அவ்வளவுதான். கணவனின் புகார் அம்பேல்!

அப்படியே கணவனுக்கு வீரம் வந்து கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவியிடம் அவன் அதுபற்றி கேள்வி கேட்டால், அவள் உடனே 498A, D.V. Act, Sec 125 of CrPC போன்ற ஆயுதங்களைக் கையிலெடுத்து உங்களையும், உங்கள் வயதான பெற்றோரையும் கைது செய்ய வைத்து, உங்களுக்குச் சொந்தமான வீடு, பணம் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு நடுத்தெருவில் நிறுத்தி விடுவாள்!

எதிர்வரும் காலம் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு மிகச் சிரமமான காலம் தான்!

அது சரி. இதுபோன்ற வக்கீல்களும் நீதிபதிகளும் சேர்ந்துதானே கணவனிடம் பணத்தைப் பிடுங்கி ஓடிப்போன மனைவியிடம் கொடுக்க வைக்கிறார்கள்!

இப்போது வக்கீலின் முறை ஆகி விட்டது. அடுத்தது யார்?

(செய்தி: Deccan Chronicle)

பணம் பறிப்பதெற்கென்றே ஒரு சட்டம்!

இ.பி.கோ செக்ஷன் 498A யில் கட்டமைக்கப்பட்டுள்ள முக்கிய பகுதிகள்தான் அதன் பரவலான துஷ்பிரயோகத்திற்கு வழி வகுக்கின்றன:

1. சுவிட்சைப் போட்டவுடனேயே லைட் எரிவது போல் புகார் கொடுத்தவுடனேயே எந்தவித விசாரணையுமின்றி கணவரும், மாமியாரும், நாத்தனாரும் (ஆகா, ஜாலி!!) கைது செய்யப் படுவார்கள். ஆங்! மாமனாரை விட்டுட்டேனே! என்ன திமிர் புடிச்சவன்யா அந்த ஆளு. போடு உள்ளார! நாத்தனாருக்கு 3 வயசுல புள்ளை இருக்கா, அவனும் கொடுமை பண்ணினான்னு எழுது. ஜெயில்ல போயி சாகட்டும், களுதைங்க! - இதுதான் இந்த புதுமைப் பெண்குலத் திலகங்களின் மனப்பான்மை. இல்லாவிடில் 80 வயது கிழவர்கள் மீதும் 3 வயதுக் குழந்தைகள் மீதும் புகார் கொடுப்பார்களா!

2. இந்தச் சட்டம் cognizable, non-bailable and non-compoundable ஆக இருப்பதால் பழி வாங்குவது சுலபமாக இருக்கிறது

3. பொய்ப்புகார் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தாலும் புகாரின் மேல் நடவடிக்கை எடுக்க வற்புறுத்தல்கள் இருப்பதால் பொய் வழக்கு போடுவதை ஊக்குவிப்பதற்காகவே இயற்றப்பட்டுள்ள சட்டமாக இது அமைந்திருக்கிறது. மேலும் 15 ஆண்டுகளுக்கு முன் வரதட்சனை கேட்டார்கள் என்று இன்று கூட புகார் கொடுக்கும் வகையில் இதன் நடைமுறை இருக்கிறது.

4. "வரதட்சணைக் கொடுமை" என்ற சொல்லாட்சி வந்தவுடனேயே பெண்ணியவாதிகளும் ஜொள்ளுக் கிழங்களும் சேர்ந்து "ஐயகோ! இளம் பெண்கள் வரதட்சணைக் கொடுமைகளுக்கு ஆளாகிறார்களே; கணவன், மாமியார், மாமனாரை கைது செய்வது சமூகக் கட்டாயம் அல்லவா!" என்று கோஷ்டிகானமாக ஒப்பாரி வைப்பார்கள். இது இந்தச் சட்டத்தை வைத்து வியாபரம் செய்பவர்களுக்கு சாதகமாக அமைகிறது.

5. கெடுமதி கொண்ட பெண் பிசாசுகளும், அவர்களுக்குத் துணைபோகும் வக்கீல்களும் சேர்ந்து இந்தச் ச்ட்டத்தை கையிலெடுத்து கணவன் மற்றும் அவனுடைய ரத்த உறவுகளைக் கொடுமைப்படுத்தி மிரட்டிப் பணம் பறிக்கும் ஈனச் செயல்தான் இப்பொது நடந்து கொண்டிருக்கிறது. உண்மையில் கஷ்டப்படும் பெண்கள் எவருக்கும் இச்சட்டத்தால் யாதொரு பயனும் இல்லை.

இதன்கீழ் காணும் செய்தியைப் பாருங்கள்:

ஒரு ஆண்டு காலமாக கணவன் வீட்டிலேயே அந்த மனைவி வசிக்கவில்லை. ஆனால் அந்த நேரத்தில் கணவன் வீட்டார் அவளைக் கொடுமை செய்தார்களாம்.

கொடுமைகள் செய்து கொலை செய்ய முயற்சித்தார்களாம். அதனால்தான் பிறந்த வீட்டிற்கு ஓடினாளாம். ஆனால் திரும்பி அங்கு சென்று வாழ முயற்சி செய்கிறாளாம். ஆனால் கணவன் உள்ளே விடவில்லையாம். எவ்வளவு முறணான புகார்கள் பாருங்கள்!

எல்லாவற்றிற்கும் மேல் காந்தியடிகளையே அவமானப்படுத்தும் வகையாக, பொய்க் கேசு போட்டு நடவடிக்கை எடுக்க வற்புறுத்தி உண்ணா விரதம் வேறு!

வெட்கக்கேடு!

சரி. செய்தியை படியுங்கள்.

ஆண்டிப்பட்டி அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை கொலை செய்ய முயற்சி.
கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு

கண்டமனூர்,அக்.19- 2009. செய்தி - தினத்தந்தி

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது,

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா சித்தார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ் (வயது 35) இவருக்கும் தெப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டியராஜன் என்பவருடைய மகள் உமா ராணிக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் உமா ராணி யிடம் வரதட்சணை கேட்டு கணவர் காமராஜ் அடிக்கடி சண்டைபோட்டு வந்ததாக கூறப்படுகிறது. தீ வைத்து கொலை செய்யவும் முயற்சி செய்ததாக தெரிகிறது. இதன்காரணமாக கடந்த 1 ஆண்டாக உமாராணி கணவரை பிரிந்து தெப்பம்பட்டியில் உள்ள தாய் வீட்டில் வீட்டில் வசித்து வருகிறார்.

உண்ணா விரதம்

இதனையடுத்து கடந்த மாதம் உமாராணி தன்கண வருடன் சேர்ந்து வாழ்வதற்காக மீண்டும் கணவர் வீட்டிற்கு சென்றார். அப்போது கணவர் வீட்டில் உமாராணியையாரும் ஏற்றுக்கொள்ள வில்லை. மேலும் உமா ராணியை அவரது கணவர் வீட்டினர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் இவரது புகார் குறித்து போலீசார் முறையான விசாரணை செய்ய வில்லை என்று தெரிகிறது. இதனையடுத்து நேற்று காலை உமாராணி தனது கணவர் வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருக்க முயற்சி செய்தார்.

வழக்கு பதிவு

இது குறித்த தகவல் கிடைத்ததும் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூங்கோதை உத்தரவின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுசிலா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். உண்ணாவிரதம் இருக்க முயன்ற உமாராணியை அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இருதரப்பினரிடமும் விசாரணை செய்வதற்காக கணவர் குடும்பத்தாரை போலீசார் அழைத்தனர். ஆனால் யாரும் வரவில்லை. (இதற்குப் பெயர்தான் "கட்டப் பஞ்சாயத்து"!)

இதனைத்தொடர்ந்து கணவர் காமராஜ், மாமனார் ராஜ்(62), மாமியார் செல்லத்தாய்(58), கொளுந் தனார் சுந்தரம்(34), நாத்தனார் புனிதா(37) புனிதாவின் கணவர் ராஜாக்கனி(39) ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

பிஞ்சு மகனின் வாழ்வைக் குலைக்கும் தாய்

எல்லாமே பணத்திற்காகத்தான்!

இப்போதெல்லாம் மணமான பெண்கள் 498A மற்றும் குடும்ப வன்முறை போன்ற சட்டங்களின் கீழ் பொய் வழக்கு போட்டு கணவனையும் அவனுடைய பெற்றோரையும் கைது செய்ய வைத்து, கோர்ட்டுக்கு இழுத்து, தன் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி சிறிதும் அக்கரையில்லாமல் அத்தனை பேர்களுடைய வாழ்வையும் அலங்கோலம் செய்வதன் அறுதி நோக்கம் என்ன? பணம், ஐயா, பணம்!

இல்லாவிட்டால் ஏன் சில வக்கீல்கள் குடும்பம் சம்பந்தமான எந்த விதப் பிரச்னையையும் இதுபோன்ற பொய் வழக்குகளாக மாற்றும் குடிசைத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்! இதுபோல் கேசு மேல் கேசாகப் போட்டு, பெண்கள் கண்ணீர் சிந்தினால், "அவர்கள் கேட்ட பணத்தைக் கொடு" என்று கண்ணை மூடிக்கொண்டு கணவன் மீது ஆணையிடும் போக்கு கொண்ட நிதிபதிகளின் உதவியால் கணவனிடமிருந்து ஜீவனாம்சம், மெயிண்டனென்ஸ் என்னும் வகையில் ஒரு கணிசமான தொகையைக் கறந்து விடலாம் என்பதுதான் அவர்களது குறிக்கோள். ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி சொன்னது போல் இந்தவித சட்டங்களின் நடைமுறை ஒரு Legal Extortion!

அதுபோல் குழந்தைகளின் காப்புப் பொறுப்பு அளிப்பதிலும் பிரச்னைகளைச் செய்து தன் குழந்தைகளையே பணம் பிடுங்குவதற்காக பிணைக்கைதிகளாக மாற்றும் போக்கும் பல பெண்களுக்கு இருக்கிறது. இதற்கு தெரிந்தோ தெரியாமலோ நீதிபதிகளும் துணை போகிறார்கள்.

இந்த நிலை மாற வேண்டுமானால், குடும்ப நல நீதிபதிகளாக பெருமளவில் இளைஞர்களை நியமிக்க வேண்டும்; அவர்களில் 50% இளம் பெண்கள் இருக்கவேண்டும். அவர்களுக்குத்தான் தற்கால சமூக நிலை பற்றி முழுதாக புரிந்து கொள்ள இயலும்.

இப்போது ஒரு "மாஜி" தாயின் திருவிளையாடலைப் பாருங்கள்!

மாஜி 'தாய்' வழக்கால் தத்து மகன் அச்சம்

அக்டோபர் 16,2009. தினத்தந்தி

மும்பை: பத்து ஆண்டுக்கு மேல் விலகி இருந்த மாஜி மனைவி, திடீரென மகன் மீது உரிமை கோரி கோர்ட்டுக்கு சென்றாள். தத்து கொடுக்கப்பட்ட மகன் நிலை இப்போது கேள்விக்குறியாக உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்தவர் ராகேஷ் மேத்தா. இவரது மகன் கரண் மேத்தா(12). இச்சிறுவனை, அவரது உறவினர், திரண் என்பவருக்கு ராகேஷ் தத்து கொடுத்தார்; இதை அவரின் மாஜி மனைவி எதிர்த்து உள்ளார். "அவருக்கு மகன் மீது அன்பில்லை என்ற அடிப்படையில், கரண் மேத்தாவை, அவரின் முன்னாள் மனைவி மீத்தாவிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று குடும்ப நலக் கோர்ட் நீதிபதி, வி.ஜே.லோகியா உத்தரவிட்டார். அதற்கு, ராகேஷ் ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றதோடு, மேல் முறையீடும் செய்துள்ளார்.ராகேஷ் தனது மனுவில் கூறியிருப்பதாவது:

கரணின் ஒன்றரை வயதிலேயே அவன் தாய், அவனை விட்டு சென்று விட்டார். அதன் பின், 2006ம் ஆண்டு, இருவரும், விவாகரத்து பெற்றோம். 2007ம் ஆண்டு, மறுமணம் செய்து கொண்டேன். மீத்தா, கடந்தாண்டு, குடும்ப நலக் கோர்ட்டில் கரணை தன்னிடம் ஒப்படைக்க கோரி மனு தாக்கல் செய்யும் வரை, அவனை சந்திக்கவில்லை. அதன், பின், கரணை தன்வசம் இழுக்க, அவனை ஐந்து முறை சந்தித்துள்ளார். ஆனால், கரண் மீத்தாவிடம் பேச மறுத்துள்ளான். கரணின் நல்வாழ்விற்காகவே, குழந்தைகள் இல்லாத தம்பதியருக்கு, அவனை தத்து கொடுத்தேன். அவர்கள் தங்கள் சொத்தை கரணுக்கு முறைப்படி வழங்குவதற்காக, இத்தகைய ஏற்பாட்டை செய்தனர். மேலும், கரண் என் இரண்டாவது மனைவியுடன் சந்தோஷமாக உள்ளான். எனவே, கரணை என்னுடன் இருக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கருத்து யுத்தம் வீடியோ





காணுங்கள். உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்!

கலைஞர் டிவியில் நாளை கருத்து யுத்தம்

நாள்: 13-09-2009. ஞாயிறன்று பிற்பகல் 1-30 மணி முதல் 2-30 மணி வரை.

நிகழ்ச்சியின் பெயர்: "கருத்து யுத்தம்" .கலைஞர் டிவியில் காணத்தவறாதீர்கள்.

498A பொய் வழக்குகளால் பாதிக்கப்பட்டசுமார் 50 நபர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இத்தகைய வழக்குகளைப் போட்டு குடும்பங்களை சிதறடிக்கும் நபர்களும் அவர்களைத் தூண்டும் பெரிய இடத்துப் பேர்வழிகளும் பங்கேற்கின்றனர்.

கட்டாயம் நிகழ்ச்சியைப் பார்த்து உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவியுங்கள்.

நன்றி.

வீட்டுக்கு வீடு 498A வழக்கு

இப்போதிருக்கும் நிலவரத்தைப் பார்க்கும்போது கூடிய சீக்கிறமே நம் நாட்டில் வீட்டிற்கு ஒரு 498A வழக்கு போடப்பட்டிருக்கும் நிலைமை ஏற்படும் என்று தோன்றுகிறது.

"எங்கள் வீட்டில் எல்லாமே பெண்கள்தானே! எங்கள் மேல் எப்படி அந்த வழக்கு போடமுடியும்?" என்று கேட்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள். கீழ்க்கண்ட கேள்விகளில் ஏதேனும் ஒன்றிற்கு உங்கள் பதில் "ஆமாம்" என்றிருந்தால் நிச்சயம் நீங்கள் 498A கேசுகளிலிருந்து தப்ப முடியாது:

  • உங்கள் நண்பர், உறவினர் யார் வீட்டிலாவது ஆண் பிள்ளைகள் இருக்கிறார்களா?
  • உங்கள் நெருங்கிய நண்பர் அல்லது உறவினர் எவரேனும் திருமணம் செய்து கொண்டுள்ளார்களா? அவரோடு நெருங்கிப் பழகி அவருடைய வீட்டிற்குச் சென்று வருவதுண்டா?
  • அக்கம் பக்கத்தில் எவர் வீட்டிலாவது குடும்பப் பூசல் ஏற்பட்டு அங்கு சென்று நீங்கள் எப்போதாவது அறிவுரையோ உதவியோ கொடுத்ததுண்டா?
  • எந்த மணமான பெண்ணிடமாவது ஏதாவது ஒரு காரணத்தினல் தகராறு ஏற்பட்டதுண்டா?
  • உங்கள் கீழ் பணிபுரியும் பெண் எவரிடமாவது கடுமையாக நடந்து கொண்டதுண்டா? அல்லது அவர்கள் எதிர்பார்த்தபடி நடந்து கொள்ளத் தவறியதுண்டா?

சரி, அவர்கள் கொடுக்கும் புகார் எப்படியிருக்கும்?

பதில்: எப்படி வேண்டுமானாலும் இருக்கும். அது அவர்களுடைய வக்கீலின் கற்பனைத் திறமை, இதுபோன்ற பொய் வழக்கு போட ஏதுவான சட்டங்களைப் பற்றிய அவருடைய அறிவு, புகாரில் கையெழுத்து போடும் புதுமைப் பெண்ணின் கீழ்த்தர மனப்பான்மையின் பாதாள நிலை இதைப் பொருத்து மாறும்.

மாதிரிக்கு இன்றைய தினத்தந்தியில் வெளிவந்துள்ள செய்தியை படியுங்கள்:-

பரமக்குடி,செப்.9-

மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்ட வெளிநாட்டு என்ஜினீயர் மீது பரமக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

என்ஜினீயர்

பரமக்குடி பவுண்டு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் ஜெயஆனந்த்(வயது 33). இவர் நெதர்லாந்தில் என்ஜினீயராக உள்ளார். இவருக்கும் திருச்சி உறையூரைச் சேர்ந்த மோகன்தாஸ் என்பவரது மகள் சங்கீதவாணிக்கும்(26) கடந்த 6.7.2006ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் 60 பவுன் தங்க நகை மற்றும் சீர்வரிசைகள் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே வாலிபர் ஜெயஆனந்த் தனக்கு தகுதி யில்லாத பெண்ணை திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என்று கூறி மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்தாராம். இதனைத் தொடர்ந்து திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் தம்பதிகள் நெதர்லாந்து சென்று விட்டனர். பின்னர் அங்கிருந்து சங்கீதவாணி பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். (இந்தக் கூற்றுகளில் தெரிகின்ற முரண்பாடுகளைக் கவனியுங்கள்)

வழக்கு

இந்த நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அதனை கணவன் உள்பட அவரது வீட்டார் யாரும் பார்க்க வரவில்லையாம். மேலும் சங்கீதவாணி யின் நடத்தை குறித்து தவறாக பேசியதுடன் கூடுதலாக பணம் மற்றும் நகை கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த சங்கீதவாணி இதுகுறித்து பரமக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து மனுவை விசாரித்த நீதிபதி புகார் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் வெளிநாட்டு என்ஜினீயர் ஜெய ஆனந்த், இவரது தந்தை பாலசுப்பிரமணியன் ஆகியோர் மீது பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தம்பதிகளைப் பிரிச்சுடாதீங்க - சல்மா அறிவுரை

தமிழ்நாடு சமூகநல வாரியத் தலைவர் சல்மா அவர்கள் 498A சட்டத்தின் கொடூரமான பயன்பாடு குறித்த சரியான அவதானிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பெண்கள் புகார் கொடுத்தவுடன் அதன் அடிப்படையில் வழக்கு, கைது என்று "தடாலடி நடவடிக்கையில்" இறங்கி விடாதீர்கள் (குற்றம் சாட்டப்பட்ட கணவன் மற்றும் அவனுடடய பெற்றோர், உறவினர் மீது) என்று பெண் போலீசாருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

இது மிகச் சரியான அறிவுரைதான். இதைக் கடைப்பிடித்தாலே பாதி பிரச்னை தீர்ந்துவிடும். ஆனால் "உடனே அவர்களைக் கைது செய்ய வேண்டும்" என்று கூக்குரலிட்டுப் பிடிவாதம் பிடிக்கும் பெண்மணிகளும் (அப்போதுதானே பணம் கறக்க முடியும்), அவர்களுக்குத் துணைபோகும் பணத்தாசை பிடித்து அலைகின்ற வக்கீல்களும் சேர்ந்து ஆடும் பேயாட்டத்தை யார் கண்ட்ரோல் செய்வது!




நன்றி - தினமலர்.

பரந்து விரியும் 498A கேசுகள்

இப்போதெல்லாம் நம் பெண்குலத் திலகங்கள் திருமணம் செய்துகொள்வதே 498A கேசு போடுவதற்காகத்தானோ என்று தோன்றும் வகையில் ஊருக்கு ஊர் இத்தகைய கேசுகள் கப்பும் கிளையுமாக வளர்ந்துகொண்டே செல்கின்றன.

கல்யாண புரோக்கர்கள் இருப்பதுபோல் இப்போது 498A புரோக்கர்கள் தோன்றிவிட்டனர். இது எவ்வளவு உண்மை என்பது உங்களுக்கு விளங்க வேண்டுமானால் உங்கள் அருகாமையிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கோ, குடும்ப நிதிமன்ற வாசல்களுக்கோ சென்று பாருங்கள். "என்னம்மா, குடும்பத் தகறாரா? கவலையே படாதீங்க, நம்ம பலான வக்கீல் கிட்ட அளைச்சுக்கிட்டு போறேன். புருசன், மாமனார், மாமியார், நாத்தி, அவளோட கொயந்தை அத்தனை பேரையும் புடிச்சு உள்ள போட்டுடலாம். அப்பறம் புருசன்காரன் கிட்டேயிருந்து கணிசமா கறந்துடலாம்." இப்படிச் சொல்லி ஆசை காண்பித்து அழைத்துச் செல்ல ஆட்கள் அலைந்து கொண்டிருப்பார்கள். புருஷனையும் மாமியாரையும் உள்ள போடலாம்னு சொன்னவுடனேயே நம் பெண் பாவைக்கு வாயில் ஜலம் ஊறும். "ஆகா! ஜாலி" என்று குதித்துக்கொண்டு அந்த ஆளுடன் பலான வக்கீலிடம் சென்று அவர் எழுதிக் கொடுக்கும் 498A டெம்பிளேட் புகாரில் கையெழுத்துப் போட்டு விடுவார்.

மேலும் குற்றவாளிகளாக கணவன் வீட்டினர், மற்றும் அவனுடைய உறவினர், நண்பர்கள் இவர்களில் யார் யார் மேல் அந்த புதுமைப் பெண்ணுக்கு கோபம் இருக்கிறதோ, அவர்கள் அனைவரும் என்னை வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தினார்கள். அதிலும் மாமியார் என்னை காலால் உதைத்தார் (அவர் பாவம், டயாபிடீஸ், பிளட் பிரஷரில் அவஸ்தைப் பட்டுக்கொண்டு காலைத்தூக்க சீவனற்றுக் கிடப்பார்), மாமனார் புளூ ஃபிலிம் பார்த்தார், என்னைக் கையைப் பிடித்து இழுத்தார் (அவர் தன் கையையே தூக்க இயலாதவராக இருப்பார். இந்த மருமகளோ அத்லெடிக் சாம்பியனாக இருப்பார்) என்றெல்லாம் ஜோடிக்கப்பட்ட புகாரில் மனமொப்பி கையெழுத்திட்டு விடுவார், இந்த பாரதி கண்ட புதுமைப் பெண்!

பிறகென்ன, கணவனிடம் பேரம் பேசிக் கறக்கவேண்டியதுதான் பாக்கி. 99% கேசுகள் (498A) இத்தகைய Extortion-ல் தான் முடிகின்றன!

இப்போது சமீபத்திய அறுவடைக் கேசுகளைப் பாருங்கள்:-

1. திருப்பரங்குன்றம், ஆக.11- 2009

வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக 2 பெண்கள் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் அவர்களின் கணவர் குடும்பத்தார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கூடுதல் வரதட்சணை

திருப்பாலை எம்.எம். நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் அங்கயற்கண்ணி(வயது 38). இவருக்கும் நாகை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த

சிவகாசி மகன் சுரேசுக்கும்(40) கடந்த 98-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சுரேஷ் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். திருமணத்தின்போது அங்கயற்கண்ணிக்கு அவரது பெற்றோர் 50 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசைகள் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அங்கயற்கண்ணியிடம் அவருடைய மாமனார் சிவகாசி, மாமியார் சகுந்தலா, மைத்துனர் ரமேஷ் ஆகிய 3 பேரும் கூடுதலாக வரதட்சணை

வாங்கிவரும்படி வற்புறுத்தினார்களாம். அவர் மறுக்கவே அவரை அடித்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அங்கயற்கண்ணி புகார் செய்தார். அதன் பேரில் சிவகாசி, சகுந்தலா, ரமேஷ்

ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் கோகிலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
==================
2. மதுரை :: என்ஜினீயர் மனைவி புகார்

மதுரை உத்தங்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ரேகா(வயது 23). இவருடைய கணவர் பாபு(25). இவர்களுக்கு கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பாபு என்ஜினீயராக இருக்கிறார். இவர்கள் மேலூர் மூவேந்தர் நகரில் வசித்து வந்தனர். திருமணத்தின்போது ரேகாவின் பெற்றோர் அவருக்கு 55 பவுன் நகையும் பாபுக்கு 6 பவுன் தங்க செயினும் போட்டனர். மேலும் ரொக்கமாக 50 ஆயிரம் ரூபாயும், ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசைகளும் கொடுத்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரேகாவிடம் மேலும் ரூ. 5 லட்சம் வரதட்சணை கேட்டு பாபு, அவருடைய தந்தை ராஜேந்திரன், உறவினர்கள் அடக்கி ஜெயலட்சுமி, விஜயலட்சுமி,

மணிகண்டன் ஆகியோர் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் ரேகா புகார் செய்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் சாரதா 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
=============
3. திருவாரூர், ஆக.10- 2009

திருவாரூர் சுந்தரவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் நல்ல முகமது. இவரது மனைவி ஆசியாபீவி. இவர்களது மகன் சம்சுசித்திக். இவருக்கும், சென்னை ஆலத்தூரைச் சேர்ந்த ஜாபர் அலி மகள் கதிஜாபானுவுக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் சம்சுசித்திக், தனது மனைவி கதிஜாபானுவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். இதற்கு அவரது குடும்பத் தினரும் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து திருவாரூர் அனைத்து மகளிர் போலீசில் கதிஜாபானு புகார் கொடுத்தார். புகாரில் திருமணத்திற்கு வரதட்சணையாக கொடுத்த நகையை எனது கணவர் வீட்டினர் பறித்துக்கொண்டனர். மேலும் ரூ.50 ஆயிரம் வரதட்சணையாக கேட்டு துன்புறுத்தி கொடுமைப் படுத்தியதாக தெரிவித்திருந் தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்சுசித்திக்கை கைது செய்தனர். மேலும், அவரது தாய் ஆசியாபீவி, சகோதரர் மாலிக், ஆயிஷா ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

===========================
4. சூளகிரி, ஆக.6- 2009

ஓசூர் அருகே இளம் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக காதல் கணவர் கைது செய்யப் பட்டார்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

காதல் திருமணம்

ஓசூர் அடுத்த மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 29). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி

சுதா (20). கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது.

சுதாவின் வீட்டில் குடியிருந்த போது, "மலர்ந்த காதலால்" பெருமாள் திருமணம் செய்து கொண்டார். அதே நேரத்தில், இவர் இன்னொரு பெண்ணுடன் ஏற்கனவே

தொடர்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அவர் நர்சாக வேலை பார்த்து வருகிறார். பெருமாளின் காதல் திருமணம் அறிந்த அவர்

வேதனைப்பட்டுள்ளார்.

கள்ள தொடர்பு

தன்னுடைய `மலரும் நினை வுகளை' ஞாபகப்படுத்தி அடிக்கடி பெருமாளுக்கு கடிதம் எழுதியுள்ளார். குறிப்பாக, கடிதத்தில் ``உன்னை மறக்க முடியவில்லை. நீ

இல்லாமல் என்னால் வாழ முடியாது'' என குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தை பார்த்து சுதா வெகுண்டெழுந்தார்.

அதனால், காதல் தம்பதி களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. வேறு பெண்ணின் தொடர்பை கைவிடும்படி சுதா கண்டித்துள்ளார். எனினும் பெருமாள் வழக்கம் போல

அந்த பெண்ணுடன் ரகசியமாக பழகி வந்துள்ளார். அதன் காரணமாக, அவர்களுக்குள் தகராறு முற்றியது.

கணவர் கைது

பிரச்சினையை திசை திருப்ப (யார் திசை திருப்புகிறார்கள் என்பதைக் கவனியுங்கள்!) சுதாவிடம் வரதட்சனை கேட்டு பெருமாள் கொடுமைப் படுத்தி உள்ளார். மேலும், வீட்டையும் தனது பெயருக்கு எழுதி தரக்கோரி அடித்து, உதைத்து சித்ரவதை செய்துள்ளார்.

பெருமாளின் கொடுமை தாங்க முடியாமல் சுதா ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

டவுன் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுரேஷ்குமார் வழக்குபதிவு செய்து பெருமாளை கைது செய்தார். தொடர்ந்து, விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் எம்.

ஜி.ஆர்.நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.

====================

5. ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக.6- 2009

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரூ. 10 லட்சம் பணம் கேட்டு மனை வியை கொடுமைப்படுத்திய கணவன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

திருமணம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது குன்னூர். இந்த பகுதியை சேர்ந்தவர் ஜெய ஆனந்தன். இவரது மகள் சுபா (வயது 32). இவருக்கும் திருச்சி

அருகே உள்ள அரியமங்கலத்தை சேர்ந்த மனோகரனுக்கும் சிலஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது சுபாவுக்கு 101 பவுன் நகை மற்றும் ரூ.25 லட்சம் ரொக்கம் கொடுக்கப்பட்ட தாக தெரிகிறது. இந்தநிலையில் புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று கூறி மனோ கரன், மனைவி சுபாவிடம் உன் பெற்றோர் வீட் டில் ரூ.10 லட்சம் வாங்கி வருமாறு கூறினார்.

வழக்குபதிவு

ஆனால் பணம் வாங்கி வர சுபா மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மனோகரன், சுபாவை சித்ரவதை செய்ததாக தெரிகிறது. இதற்கு மனோகரனின் தந்தை வெங்கடேஷ்வரன், தாய் சுகுணாபாய், சகோதரர் பிரபாகரன், அவரது மனைவி பிரபாவதி ஆகியோர் உடந்தையாக இருந்தனர்.

இதுகுறித்து சுபா ஸ்ரீவில்லி புத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மனோகரன், வெங்கடேஷ்வரன், சுகுணாபாய், பிரபாகரன், பிரபாவதி மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

==================

6. தேனி,ஆக.10- 2009

பெரியகுளம் அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக, அந்த பெண்ணின் கணவர் உள்பட 3 பேர் மீது தேனி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

வரதட்சணை கொடுமை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் கிராமத்தில், டாக்டர் ராஜேந்திர பிரசாத் தெருவினை சேர்ந்தவர் ராதாகிருஷ் ணன்(வயது 31). இவருக்கும், சின்னமனூர் வ.உ.சி.நகரை சேர்ந்த கலைவாணி(26) என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, 25 பவுன் தங்க நகையும், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசையும் மணமகள் வீட்டார் கொடுத்ததாக தெரிகிறது.

6 மாதம் கணவருடன் தனிக்குடித்தனம் இருந்து விட்டு, கலைவாணியும் அவரது கணவரும் தாமரைக் குளத்திற்கு வந்துள்ளனர். அங்கு கணவர் ராதாகிருஷ்ணன்,

மாமனார் பாலகிருஷ்ணன், மாமியார் ராமுத்தாய் ஆகியோர் சேர்ந்து மேலும் 10 பவுன் தங்கநகையும், ஒரு லட்சம் பணமும் வரதட்சணை கேட்டு கலைவாணியை துன் புறுத்தியதாக கூறப்படுகிறது. கலைவாணியின் கழுத்தில் துண்டைப்போட்டு இறுக்கியும் துன்புறுத்தியதாக தெரிகிறது.

வழக்குபதிவு

இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கலைவாணி புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனார்கலி, சப்-இன்ஸ்பெக்டர்

பாரிஷா பேகம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
================

7. திருக்கோவிலூர், ஆக.10- 2009

திருக்கோவிலூர் அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப் படுத்தியதாக கணவர் கைது செய்யப் பட்டார்.

வரதட்சணை கொடுமை

திருக்கோவிலூர் அருகே உள்ள புதுகருவாச்சியை சேர்ந்த சரவணன் (வயது 35) கூலி தொழிலாளி. இவரது மனைவி பூமாதேவி (31). இவர்களுக்கு கடந்த 14

வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சரவண னுக்கும், காமாட்சி என்ற பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன் - மனைவி இருவருக்கும்

தகராறு ஏற்பட்டது.

2-வது திருமணம்

இதன் பிறகு சரவணன் தனது மனைவி பூமாதேவி யிடம் ரூ.50 ஆயிரம் பணம், 15 பவுன் நகை வரதட்சணை யாக வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தியதாக

கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு பிறகு சரவணன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த காமாட்சி என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இது பூமாதேவிக்கு தெரிய வந்தது.

இதனால் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசில் பூமாதேவி தனது கணவர் மீது புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ராஜகுமாரி, ஏட்டு சந்திரா ஆகியோர் வழக்குப் பதிவு செய்து சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(செய்தி - தினத்தந்தி)
====================

திருமணமாகி 9 ஆண்டுகளுக்குப்பின் 498A

9 ஆண்டுகள் என்ன, 100 ஆண்டுகள் கழித்துக்கூட கணவன் மற்றும் அவனது பெற்றோர், உறவினர், நண்பர்கள், மேலும் ரோட்டில் போகிறவர், வருகிறவர் அனைத்துப் பேருக்கும் எதிராக 498A கேசு போடலாம் என்கிறது அந்தச் சட்டம்.

இந்தச் செய்தியை வாசியுங்கள்:-

கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை துன்புறுத்திய வர்மகலை வைத்தியர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேவகோட்டை ராம்நகர் வீட்டுவசதிவாரிய குடியிருப்பில் வசிப்பவர் ஜெபக்குமார். வர்மகலை வைத்தியர். இவரது மனைவி அமலா (வயது 26). சித்த மருத்துவ டாக்டர். இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் ஜெபக்குமார் மனைவி அமலாவிடம் அவரது தங்கையை தனக்கு 2-வது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். (அநேகமாக இதுதான் உண்மையில் பிரச்னையாக இருக்கலாம். ஆனால் கையிலெடுப்பது என்னவோ வரதட்சணைக் கொடுமை (498A) புகாரைத்தான். ஏனென்றால் அதன் மூலமாகத்தானே அனைவரையும் கைது செய்ய வைக்கலாம்!). மேலும் 30 பவுன் நகை, ரூ. 2லட்சம் பணம் கேட்டு, அடித்து துன்புறுத்தினாராம். இதுகுறித்து அமலா தேவகோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அனுராதா, சிவக்குமாரின் தந்தை அன்பையா, தாயார் ரெசிலம்மாள், அண்ணன் கிறிஸ்து ராஜா, அண்ணன் மனைவி டெய்சி, மற்றொரு அண்ணன் ராஜசேகர், அவரது மனைவி லதா, அக்கா ஜெயந்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து ஜெபக்குமார், ரெசிலம்மாள், கிறிஸ்து ராஜா, டெய்சி ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

செய்தி - தினத்தந்தி - 22-07-2009
---------------

இதைப் படிக்கும் வலைப் பதிவர்களில் மணமான பெண்கள் யாரேனும் இருக்கிறீர்களா? உங்களுக்கு ஒரு இலவச டிப்ஸ் :-

சக வலைப் பதிவர்களில் யாரேனும் உங்களிடன் பின்னூட்டக் குசும்பு செய்து அதனால் அந்த நபர்மேல் உங்களுக்கு அதீத கோபம் வந்து, அவரை எப்படியாவது பழி வாங்கவேண்டும் என்று துடிக்கிறீர்களா? உடனே அருகாமையிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்து (பழுப்புப் பேப்பராக இருந்தலும் பரவாயில்லை) அந்த நபர் வரதட்சணைக் கொடுமை செய்தார் என்று புகார் கொடுத்து விடுங்கள். இதற்காக (498A) சட்டப் பிரிவுக்கு ஏற்றபடி அங்கு அநேகமாக ஒரு டெம்பிளேட் செய்து வைத்திருப்பார்கள். அப்படி கைவசம் ரெடியாக இல்லாவிட்டலும் இந்த 498A கேசு ஸ்பெஷலிஸ்டுகளான வக்கீல்கள் சிலர் இருப்பார்கள். அவர்கள் தகுந்த புகார்களை நன்கு ஜோடித்துக் கொடுப்பார்கள்.

வெறும் சோறு போதுமா? அதன்மேல் மசாலா, உப்பு புளி மிளகாய் வேண்டாமா! அதனால் அந்த நிபுணர்கள் 498A கூட இன்னும் சில செக்ஷன்கள் சேர்கிறமாதிரி, புளு ஃபிலிம் பார்த்தார்கள், அந்த நபர் என்னைக் கையைப் பிடித்து இழுத்தார் என்று ஜிகினா வேலை செய்து கொடுப்பார்கள். எந்த முகாந்திரமும் வேண்டாம்; எந்த விசாரணையும் வேண்டாம்; அந்த வலைப் பதிவர் உடனே கைது செய்யப் படுவார். பிறகு அவரிடமிருந்து ஒரு கணிசமான துகையைக் கறந்து கொண்டு உங்கள் புகாரை Quash செய்து விடலாம்.

இது போல்தான் இந்த சட்டப் பிரிவு பயன்படுத்தப் படுகிறது. குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பல நீதிபதிகள் இந்த சட்டத்தின் முழு துஷ்பிரயோகத்தை ஒப்புக் கொண்டாயிற்று. ஆனாலும் இது ஒரு கற்பக விருக்ஷம், காம தேனு, அட்சய பாத்திரமாக கணிசமான வக்கீல்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், மற்றும் இதர துறை சார்ந்த எனையோருக்கும் விளங்குவதால் ஒரு மாற்றமும் நடக்க மாட்டேனென்கிறது.

498A கூட செக்ஸ் கொடுமையும் சேர்த்துப் போடுவோம்!

முதலில் இந்தச் செய்தியை முழுதும் வாசியுங்கள்!
---------------------------

ஈரோடு, ஜுலை.16- 2009. செய்தி - தினத்தந்தி

செக்ஸ் கொடுமை செய்யும் கணவரின் அண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கிராம மக்களுடன் வந்த பட்டதாரிப்பெண், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் செய்தார்.

ஈரோடு நாதகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியப்பிரியா (வயது 24). எம்.எஸ்சி. பட்டதாரி. இவர் தனது பெற்றோர் சந்திரசேகர்-வளர்மதி, எம்.எஸ்.மங்கலம் பஞ்சாயத்து தலைவர் குமரேசன் மற்றும் கிராம மக்கள் நூற்றுக்கணக்கானவர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வந்தார். இதனால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு பரபரப்பான சூழ்நிலை உருவானது. இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு அவிநாஷ்குமாரை நேரில் சந்தித்து புகார் மனுவை கொடுக்க சத்தியப்பிரியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதன்பின்னர் அவர் போலீஸ் சூப்பிரண்டை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

புகார் மனு குறித்து சத்தியப்பிரியா நிருபர்களிடம் கண்ணீர் மல்க கூறியதாவது (கண்ணீர் பெண்களுக்கு ஒரு கைவந்த கலை; அது ஒரு சிறந்த ஆயுதம். அதை வைத்து யாரை வேண்டுமானாலும் வீழ்த்தலாம்!):-

எனது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் நாதகவுண்டன்பாளையம். எனக்கும் முள்ளாம்பரப்பு வீரப்பம்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மகேஷ் (32) என்பவருக்கும் கடந்த 25-5-2008 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 50 பவுன் நகையும், ரூ.50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது.
கணவர் மகேஷ், மாமனார் ஆறுமுகம், மாமியார் தமிழரசி மற்றும் கணவரின் அண்ணன் தியாகு என்கிற தியாகராஜன் (37) ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தேன். தியாகராஜனுக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் வீட்டார் அனைவருமே சாக்கு வியாபாரம் செய்து வருகிறார்கள்.

என் கணவர் எப்போதும் தனது தாயார், அண்ணன் பேச்சை கேட்டுத்தான் நடப்பார். தாயார் இருக்கும்போது என்னிடம் அவர் சரியாக கூட பேசமாட்டார். திருமணம் ஆன முதல் 4 மாதங்கள்தான் அவருடன் சந்தோசமாக குடும்பம் நடத்தினேன். இந்த நிலையில் நான் கருவுற்றேன். அந்த சந்தோஷம் நிலைப்பதற்குள் எதிர்பாராதவிதமாக கரு கலைந்து விட்டது.

இதற்கிடையில் தியாகராஜன் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அடிக்கடி செக்ஸ் கொடுமை செய்தார். இது குறித்து என் கணவரிடம் கூறினேன். ஆனால் அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கூட்டுக்குடும்பம் என்றால் அப்படி, இப்படி இருக்கத்தான் செய்யும் என்றார்.

பின்னர் தனியாக தொழில் தொடங்க வேண்டும். உன் தந்தையிடம் சென்று ரூ.1 லட்சம் வாங்கி வா என்று கட்டாயப்படுத்தினார். நானும் என் தந்தையிடம் கேட்டேன். ஆனால் அவ்வளவு பணம் கொடுக்க வசதி இல்லை என்று என் தந்தை கூறிவிட்டார். மேலும் எங்களுக்கு செட்டிப்பாளையத்தில் சொந்தமாக உள்ள ரூ.25 லட்சம் மதிப்பிலான காலி இடத்தை தன் பெயரில் எழுதி தரும்படி கேட்டு அடித்து சித்ரவதை செய்தார்.
கணவரின் வீட்டாரும், அந்த நிலத்தை எழுதி வாங்கி வந்தால்தான் அவருடன் சேர்ந்து குடும்பம் நடத்த விடுவோம். இல்லை என்றால் உன் பெற்றோர் வீட்டுக்கே துரத்தி விடுவோம் என்று மிரட்டினார். கணவரும் அடிக்கடி பணம் வாங்கி வா, அல்லது நிலத்தை எழுதி வாங்கி வா என்று கொடுமைப்படுத்தினார்.

அதன்பின்னர் எனது நகைகளை பிடுங்கிக்கொண்டு, வீட்டை விட்டு விரட்டிவிட்டனர். இனிமேலும் இவருடன் வாழ முடியாது என்று முடிவு செய்து என் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். எனது நிலை குறித்து பெற்றோரிடம் கூறினேன்.

அதைத்தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவர் குமரேசன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. என் கணவர் மகேஷை அழைத்து பேசினார்கள். அவரிடம் ஊர்க்காரர்கள் பலரும் பேசினார்கள்.

அதைத்தொடர்ந்து, ஆவணி மாதம் வந்து என்னை அழைத்து செல்வதாக உறுதி அளித்துச்சென்றார். ஆனால் அதற்குள் விவாகரத்து நோட்டீசு அனுப்பி விட்டார்.

இதனால் நானும் என் குடும்பத்தாரும் அதிர்ச்சி அடைந்தோம். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் மனு ஒன்றை கொடுத்து இருக்கிறேன். அதில் எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த என் கணவர், மாமனார், மாமியார், கணவரின் அண்ணன் தியாகராஜன் ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவரும், என் கணவரையும், அவரது குடும்பத்தையும் அழைத்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

என் கணவர் மட்டும் என்னுடன் தனியாக குடும்பம் நடத்த வந்தால் அவரை என்னால் திருத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு சத்தியப்பியா கூறினார்.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் கேட்டபோது, சத்தியப்பிரிவின் புகார் மனுவை ஈரோடு அனைத்து மகளிர்போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி இருக்கிறேன். சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர், மாமனார், மாமியாரை அழைத்து வந்து டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் விசாரணை நடத்த உத்தரவிட்டு இருக்கிறேன். அதன்பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
------------

முன்னுக்குப்பின் முரணான புகார்கள். கடைசியில் விஷயம் என்னவென்றால், 498ஏ சட்டத்தைக் கையிலெடுத்து பயமுறுத்தி கூட்டுக் குடும்பத்திலிருந்து கணவனைப் பிரித்து தனிக்குடுத்தனத்திற்கு வரவேண்டும்; அங்கு தன் ஆட்சி நடக்கவேண்டும். இதற்காக எந்தவித செக்ஸ் கொடுமைப் புகாரையும் ஜோடனை செய்து பதிவு செய்ய இக்காலப் பெண்கள் தயார்.

இதெல்லாம் என்ன ஜுஜிபி!

3 மாதக் குழந்தையும், 3 வயதுப் பையனும் வரதட்சணைக் கொடுமை செய்தனர், தன் கையையே தூக்க சக்தியில்லாத 80 வயது மாமனார் என் கையைப் பிடித்து இழுத்தார் என்றெல்லாம் பொய் வழக்கு போட்டு, யாதொரு விசாரணையுமின்றி மேலும் இது இயற்கைக்கு முரணாக, சாத்தியமில்லாத புகாராக இருக்கிறதே என்ற சிந்தனை கூட இல்லாமல் அவர்கள் கைது செய்யப்பட்ட நிகழ்வுகள் அநேகம்.

Sec 498A of IPC நம் நாட்டிற்கு பெண்ணிய வியாதிகள் அளித்துள்ள வரப்பிரசாதம். இதை கையிலெடுத்துக் கொண்டு கீழ்த்தரமான புத்தி கொண்ட மனைவிமார்களும் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து சில கெடுமதி வக்கீல்களும் அடிக்கிறார்கள் பகல் கொள்ளை (Every 498A case ends in outright extortion). இதை “சட்டபூர்வமான பயங்கரவாதம்” (Legal terrorism) என்று வர்ணித்திருக்கிறார் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி. என்ன சொன்னால் என்ன, தினந்தோரும் பல அப்பாவிகள் இந்தக் கொடுங்கோன்மைச் சட்டத்திற்கு தொடர்ந்து பலியாகி வருகின்றனர் என்பதுதான் நிதர்சனம்.

ஆகையால் இந்திய ஆண்கள் இத்தகைய 498A of IPC மற்றும் (வன்முறை என்பது ஆண்தான் செய்வான், பெண் வன்முறையே செய்யமாட்டள் என்று வரையறுத்திருக்கும்) குடும்ப வன்முறைச் சட்டங்கள் திருத்தப்படும் வரை அல்லது நீக்கப்படும் வரை திருமணம் என்னும் புதைகுழியில் விழாமல் இருத்தல் நலம் - அவர்களுக்கும் அவர்தம் பெற்றோருக்கும்!

மனைவியரால் ஆண்களுக்கு புது ஆபத்து

வரதட்சணை கொடுமை வழக்கில் சிக்கும் ஆண்களில் 56 சதவீதம் பேர் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் : ஆய்வில் வெளியாகும் தகவல்.

பெங்களூர், மே.29- 2009. செய்தி - மாலை மலர்

குடும்பங்களில் வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களை பாதுகாக்க கடந்த 2005-ம் ஆண்டு குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஏராளமான கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து “சேவ் இந்தியா பேமிலி பவுண்டேசன்” (Save Indian Family Foundation) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் வெளியாகும் தகவல்கள் வருமாறு:-

வரதட்சணை ஒழிப்பு சட்டம் அல்லது குடும்ப வன்முறை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குபதிவு செய்யப்படும் ஆண்களில் 56 சதவீதம் பேர் கம்ப்யூட்டர் என்ஜினீயர்களாகவோ அல்லது தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்களாகவோ அல்லது தொழில் அதிபர்களாகவோ இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் 24 ல் இருந்து 28 வயதுக்குட்பட்டவர்கள்.கடந்த ஆண்டு சுமார் 1,200 பேரிடம் நடத்திய ஆய்வில் மேற்கண்ட தகவல் தெரியவந்தது. இந்த சட்டம் ஒரு தலைபட்சமாகவே இருக்கிறது. இதனால் அப்பாவி ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் மற்றும் தொழில் அதிபர்களிடம் ஏராளமாக பணம் இருப்பதால் அவற்றை அடைய வரதட்சணை கொடுமை அல்லது குடும்ப வன்முறை ஆகிய சட்டங்களின் கீழ் புகார் கொடுக்கப்படுகின்றன.

நாடு முழுவதும் வரதட்சணை தொடர்பான வழக்குகள் ஆண்டுக்கு ஆண்டு 20 சதவீதம் அதிகரித்து வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் இவ்வாறு வரதட்சணை வழக்குகள் அதிகரித்து உள்ளன.

கடந்த 2003-ம் ஆண்டு 50,703 பேர் மீது வரதட்சணை ஒழிப்பு சட்டம் பாய்ந்தது. இது 2007-ம் ஆண்டில் 75,930 ஆக உயர்ந்தது. இவ்வாறு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்திய அமைப்பு, வரதட்சணை ஒழிப்பு சட்டமும், குடும்ப வன்முறை தடுப்பு சட்டமும் யாருக்கும் பாதகமாக இருக்காத வகையில் தகுந்த மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி, இந்திய தலைமை நீதிபதி, சட்ட ஆணையம் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோரை கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கிடையே குடும்ப வன்முறை ஒழிப்பு சட்டமானது ஒரு தலைபட்சமாக இருப்பதாக இந்திய சர்வதேச சட்ட மையத்தைச் சேர்ந்த எம்.ஜி.குமார் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில் ““நான் சந்தித்த பல வழக்குகளில் பெரும்பாலான ஆண்கள், அவர்கள் எந்த தவறும் செய்யாமலேயே புகாருக்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது”” என்று தெரிவித்தார்.

மூத்த வக்கீல் ஒருவர் கூறுகையில், ““எனக்கு தெரிந்த ஒரு கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஒரு பெண்ணை திருமணம் செய்தார். கிட்டத்தட்ட ஆதரவற்ற நிலையில் இருந்த அந்த பெண்ணிடம், அவருடைய உறவினர்கள் சென்று கணவர் மீது வழக்கு தொடரும்படி கூறி உள்ளனர். இது முழுக்க முழுக்க பணம் பறிப்பதற்காக தொடரப்பட்ட வழக்கு என்பது எனக்கு தெரியவந்தது. இதைதொடர்ந்து அந்த பெண்ணின் கணவருக்கு நீதி கிடைப்பதற்காக நான் வாதாடினேன்”” என்றார்.

498A வார்ப்புரு

இப்படித்தான் ஜோடிக்கிறார்கள் IPC Sec 498A கேசுகளை!

இந்த செய்தியின்படி கைது செய்யப்பட்டிருக்கும் முத்தமிழ்ச் செல்வன், மல்லிகா மற்றும் கைது செய்யப்படப்போகும் ராமசாமி, கவிதா - இவர்களுடைய பெயருக்குப் பதில் உங்கள் பெயரைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள்.

இத்தகைய கேசுகளுக்கு அரசும், வக்கீல்களும், பெண்ணியவாதிகளும் கொடுத்துவரும் ஊக்கத்தைப் பார்க்கும்போது உங்கள் ஒவ்வொருவர் குடும்பத்திலும் ஒருவராவது 498A - யால் தீண்டப்படப்போவது நிச்சயம். எல்லாம் தெரிந்த டோண்டு போன்றவர்களும், பெண்ணியவாதம் பேசும் செல்வன் போன்றவர்களும் பட்டபின் உணர்வார்கள். ஆனால் அதற்குள் காலம் கடந்திருக்கும்.

இனி செய்தி:- ராமநாதபுரத்தில் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு ஆசிரியைக்கு கொலை மிரட்டல் கணவர்-மாமியார் கைது

ராமநாதபுரம்,ஜுன்.17- 2009. செய்தி - தினத்தந்தி

ராமநாதபுரத்தில் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர்-மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் வடக்கு புதுத்தெருவை சேர்ந்தவர் முத்தமிழ் செல்வன். இவர் வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் கிளார்க் காக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ராமநாதபுரம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த மஞ்சுளா(30) என்ப வருக்கும் கடந்த 9 மாதங்க ளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மஞ்சுளா ராமநாதபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணி யாற்றி வருகிறார்.

இந்த நிலையில் முத்தமிழ் செல்வன் வேலூரில் சொந்த வீடு கட்ட ரூ.5 லட்சம் ரொக்கம், 20 பவுன் நகை ஆகியவற்றை வரதட்சணையாக வாங்கி வரும்படி தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதற்கு மஞ்சுளா தனது பெற்றோரிடம் வசதி இல்லாததால் இவ் வளவு பெரிய தொகையை வாங்க முடியாது என்று மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்தமிழ் செல்வன் கூடுதல் வரதட்சணை வாங்கி வந்தால் தான் உன்னோடு குடும்பம் நடத்துவேன் என்றும், இல்லா விட்டால் தீவைத்து கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டினாராம். இதற்கு அவரது தந்தை ராமசாமி, தாய் மல்லிகா, தங்கை கவிதா ஆகியோர் உடந்தையாக இருந்தனராம். இதுகுறித்து மஞ்சுளா ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மல்லிகா வழக்கு பதிந்து முத்தமிழ் செல்வன், அவரது தாய் மல்லிகா ஆகியோரை கைது செய்தார். மேலும் இதுதொடர்பாக தந்தை ராமசாமி, தங்கை கவிதா ஆகியோரை போலீ சார் தேடிவருகின்றனர்.

குழந்தைகள் படும் அவலத்தைக் கேட்பாரில்லை

தினமும் செய்தித்தாளைத் திறந்தால் கண்ணில் படும் செய்தி அன்புத் தாய்மார்களால் குப்பைத் தொட்டியில் வீசியெறியப்பட்ட பச்சிளம் குழந்தைகளைப் பற்றியதுதான்!

நாளுக்குநாள் இத்தகைய நிகழ்வுகள் அதிகமாகிக்கொண்டே வருவது விசனத்துக்குறிய விஷயம்.

ஆனால் இல்லாத வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கிறேன் பேர்வழி என்று சட்டத்தின்மேல் சட்டமாக அடுக்கடுக்காய் பல சட்டங்களைப் போட்டு வக்கீல்களுக்கும் இடைத்தரகர்களுக்கும், பெண்ணியவாதிகள் நடத்தும் அமைப்புக்களுக்கும் வருமானத்திற்கு வழி செய்யும் வேலை மும்முரமாக நடக்கிறதேயன்றி, இளம் சிறார்கள் மேல் எய்யப்படும் கொடுமைகளைத் தடுக்க எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை.

ஏன் இந்த நிலைமை? பணம், ஐயா, பணம்!

“ஐயகோ, இந்த நாட்டில் ஆயிரக் கணக்கான “இளம்” பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் உயிருடன் எரிக்கப்படுகிறார்களே” என்று தொடர்ந்து கூக்குரலிட்டுக் கொண்டிருந்தால் UNIFEM போன்ற நிறுவனங்களிலிருந்தும், அரசு ஒதுக்கும் நிதியிலிருந்தும் பணம் கொட்டும். தவிர, மேன்மேலும் பல முட்டாள்தனமான சட்டங்களைப் போடவைத்து அதன்மூலம் குடும்பங்களைச் சிதைத்து திருமணம் செய்துகொண்ட அனைவரையும், வீட்டை விட்டுவிட்டு, காவல் நிலையங்களுக்கும், வக்கீல் வீடுகளுக்கும், நீதிமன்றங்களின் வராண்டாவுக்குமாக அலைய விடலாம். அதனால் சம்பந்தப் பட்டவர்கள் கொள்ளையடிக்கலாம். குழந்தைகள் நலனைப் பேணினால் அன்புள்ளம் கொண்ட மனிதர்கள்தானே நன்மையடைவார்கள்; இடைத்தரகர்கள் பணம் பண்ன முடியாதே!

இப்போது புரிகிறதா!

சென்ற வார குமுதத்தில் ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. அதில் திருப்பதியில் ஏழைகளான பல இளம் ஆண்பிள்ளைகள் பாலியல் பலாத்காரங்களுக்கு ஆளாகி சீரழிகிறார்கள் என்று. இதைபற்றி எந்த அமைச்சரும் ஏதும் பேசவில்லை. ஆனால் கணவனிடமிருந்து கொள்ளையடித்து, அவனை இலவச ஏ.டி.எம் மெஷினாக்கி “இளம்” மனைவிக்கு பணம் கொடுக்கவைப்பதில்தான் அனைத்துத் தரப்புகளும் பிசியாக இருக்கின்றன.

இப்போது இந்தச் செய்தியை வாசியுங்கள்:-

-------------------------
ஆதரவற்ற குழந்தைகள் கடத்தல் : 5 பெண்கள் உள்பட 7 பேர் கைது

ஜூன் 12,2009, செய்தி: தினமலர்

திருநெல்வேலி : நெல்லை ஆதரவற்ற இல்லத்திற்கு குழந்தைகளை கடத்தி விற்பனை செய்ததாக 5 பெண்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ராஜன் என்பவர் "அன்பு சிறுவர் இல்லம்' என்ற பெயரில் அனாதைஇல்லம் நடத்திவந்தார். திருச்சி பகுதியில் குழந்தைகள் கடத்தப்பட்டது தொடர்பாக வந்த புகாரின்படி, திருச்சி போலீசார் வள்ளியூர் வந்து அனாதை மைய நிர்வாகி ராஜன் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

ராஜனின் இல்லத்தில் இருந்து பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தையை தத்தெடுத்த கன்னியாகுமரி மாவட்டம் கீழசந்தையடியை சேர்ந்த மனோகரன்(38) என்பவரும், இதே மையத் தில் தமது 4 வயது மகள் மாரியை தத்துகொடுத்த தென்காசி குருவம்மாள் என்பவரும் போலீசில் புகார் கொடுத்தனர்.

விசாரணையில், அங்கு தற்போது 45 சிறுவர், சிறுமியர் இருப்பதும் தெரியவந்தது. ராஜன் பல்வேறு இடங்களில் உள்ள புரோக்கர்களுடன் தொடர்பு வைத்துக்குகொண்டு ஒரு குழந்தைக்கு 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து குழந்தைகளை வாங்கி 45 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் விலைக்கு விற்பனை செய்துள்ளனர். குழந்தைகளை வாங்கிச்செல்பவர்களுக்கு போலியான பிறப்பு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

ராஜனுக்கு குழந்தைகள் சப்ளை செய்ததாக தென்காசி கோட்டையம்மாள்(65), சாம்பவர்வடகரை பொன்னுத்தாய்(60), கடையநல்லூர் அருணாசலவடிவு(40), தென்காசி வேல்மயில்(38), உசிலம்பட்டி பூச்சியம்மாள்(50) ஆகிய ஐந்து பெண்களையும் உசிலம்பட்டியை சேர்ந்த கதிர் என்ற கோடாங்கி(58), திருவட்டை(67) ஆகிய ஆண்களையும் கைது செய்தனர். ராஜன் தற்போது திருச்சி சிறையில் இருப்பதால் அவரிடம் மேலும் விசாரித்து குழந்தைகள் கடத்தல் குறித்த தகவல்களை சேகரிக்க உள்ளதாகவும் டி.ஐ.ஜி.,கண்ணப்பன் தெரிவித்தார்.

குடுமப நல வழக்குகளில் வக்கீல் தேவையில்லை

விவாகரத்து கேட்கும் தம்பதிகள் வக்கீல் இல்லாமலே கோர்ட்டில் ஆஜராகி வாதிடலாம். தமிழிலும் மனு தாக்கல் செய்ய முடியும்.

சென்னை, மே.13- 2009. செய்தி - தினத்தந்தி

விவாகரத்து வழக்குகளில் வக்கீல் இல்லாமலே கோர்ட்டில் ஆஜராகி கணவன் அல்லது மனைவி வாதிடலாம்.

நாளொன்றுக்கு சென்னையில் விவாகரத்து கோரும் மனுக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு 30 முதல் 40 மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இவற்றில் 75 சதவீதம் வழக்குகள் விவாகரத்து கோரும் மனுக்களாகும். அதிகபட்சமாக ஒரே நாளில் 50 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட வரலாறும் உண்டு.

சென்னையில் 3 குடும்பநலக் கோர்ட்டுகள் இயங்குகின்றன. ஒவ்வொரு கோர்ட்டும் 40-க்கு 25 அடி பரப்பளவில் உள்ளன. நாளொன்றுக்கு சுமார் 100 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. நெரிசல் அதிகரிப்பு இந்த வழக்கு விசாரணைக்காக கணவன், மனைவி மட்டும் ஆஜரானாலே 200 பேருக்கு மேல் கோர்ட்டுக்குள் நிற்க வேண்டிய சூழல் உருவாகிவிடுகிறது. ஆனால் இவர்கள் அனைவரும் உறவினர்களோடு வருகின்றனர். எனவே கோர்ட்டுக்குள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டே இருக்கிறது.

காலையிலேயே கோர்ட்டு விசாரணை தொடங்கி விடுகிறது. எனவே வழக்கு விசாரணைக்காக அனைவரும் வெளியே செல்லாமல் கோர்ட்டுக்கு உள்ளேயே சில மணி நேரம் இருக்க வேண்டிய நிலை உள்ளது. வழக்கு சம்பந்தப்பட்டவர்கள் தவிர வக்கீல்களும் ஆஜராவதால் நெரிசல் மேலும் அதிகரிக்கிறது. கூடுதல் கோர்ட்டு வருமா?

தற்போது 3 குடும்பநல கோர்ட்டுகளிலும் சேர்த்து 7 ஆயிரம் வழக்குக் கோப்புகள் நிலுவையில் உள்ளன. வழக்கின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. ஆனால் அந்தக் கோர்ட்டுகளுக்கு போதிய ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.

எனவே, சென்னைக்கு கூடுதலாக ஒரு குடும்பநல கோர்ட்டு கேட்டு, குடும்பநல கோர்ட்டில் இருந்து ஐகோர்ட்டு மற்றும் தமிழக அரசுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து பல விவரங்களைக் கேட்டு அரசு பதில் கடிதம் எழுதியது. ஆனால் சாதகமான நிலை ஏற்படவில்லை. மற்ற மாவட்டங்களில் இதுபோன்ற கோரிக்கை வரவில்லை என்பதால் சென்னைக்கு மட்டும் கூடுதல் கோர்ட்டுக்கு அனுமதிக்க முடியுமா? என்ற கேள்வியோடு அரசு ஆலோசனை செய்து வருகிறது.

எனவே, கூடுதல் கோர்ட்டுக்கான அனுமதி வரும்வரை, சிட்டிசிவில் கோர்ட்டு கட்டிடத்தின் தரை தளத்துக்கு குடும்பநலக் கோர்ட்டுகளை மாற்ற வேண்டும் என்றும் கூட்ட நெரிசலை தவிர்க்க இதுதவிர வேறு வழியில்லை என்றும் கோர்ட்டு ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர். அங்கு நீண்ட வராண்டா இருப்பதால் மக்கள் நடமாட்டத்துக்கு வசதியாக இருக்கும்.

வக்கீல் தேவையில்லை:

விவாகரத்து, ஜீவனாம்சம் பெற விரும்புகிறவர்கள் பெரும்பாலும் வக்கீல்களை நாடுவதைத் தவிர்க்கலாம் என்று சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் குற்ற வழக்குகள் போல் விசாரணை நடத்தும் இடம் குடும்பநல கோர்ட்டு அல்ல.

கணவனோ மனைவியோ, விவாகரத்து கேட்பதற்கு முதலில் வக்கீல்களையே நாடுகின்றனர். இது தேவையற்ற ஒன்று. குடும்பப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஆலோசனை (கவுன்சிலிங்) பெறும் இடத்தில் கணவன்-மனைவி, உறவினர்கள் தவிர வேறு யாரும் தேவையில்லை.

ஆயிரக் கணக்கில் குடும்பநல கோர்ட்டுகளில் வழக்கு தொடர்வதற்கு திருமண புகைப்படத்துடன் மனு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் இதற்கு சட்ட விதிகள் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எப்போது, எங்கு திருமணம் நடந்தது? எதற்காக விவாகரத்து கோரப்படுகிறது? என்பதை மட்டும் எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தாலே போதும். எந்த சட்டவிதிகளின் கீழ் விவாகரத்து கோரப்படுகிறது என்பதையெல்லாம் கோர்ட்டு அதிகாரிகள் கவனித்துக் கொள்வார்கள்.

ஆனால் இந்த நடைமுறை கடந்த பல ஆண்டுகளாக மாற்றப்பட்டு உள்ளது. இப்போது ஒருவர் தரப்பில் ஆஜராவதற்காக `வக்கலாத்து' தாக்கல் செய்வதற்கே வக்கீல்கள் ஆயிரக் கணக்கில் பணம் பெறுகின்றனர். இந்த ஆரம்பச் செலவுகளை கணவன்-மனைவி தவிர்க்கலாம்.

ஆங்கிலம் அவசியம் இல்லை

மேலும், கோர்ட்டில் மனு தாக்கல் செய்வதற்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. தமிழில் மனு எழுதி கொடுத்தாலே போதும். இந்த நடைமுறைகள் அமலுக்கு வந்தால் கோர்ட்டில் கூட்டம் கூடுவதும் குறையும், வழக்குகளும் துரிதமாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும்.

ஒவ்வொரு குடும்பநல கோர்ட்டிலும் மாதத்துக்கு சராசரியாக 190 வழக்குகள் முடித்து வைக்கப்படுகின்றன. முதன்மை குடும்பநல கோர்ட்டில் கடந்த ஏப்ரல் மாதம் முடித்து வைக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 231. இதுதான் குடும்பநல கோர்ட்டு சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

---------

குடுமப நல தீதிமன்றங்களில் சட்டப்படி வக்கீல்களை அனுமதிக்கக் கூடாது என்று இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கத்தினர் (Save Indian Family foundation) அரசுக்கும் உயர்நீதிமன்றத்திற்கும் மனு கொடுத்துள்ளனர்.

கைதுதான் முக்கியம்!

கணவன், மனைவியிடையே எந்தவித பிரச்னை ஏற்பட்டாலும் அது உடனே “வரதட்சணை” என்ற சாயம் பூசப்பட்டு இபிகோ 498A பிரிவின்கீழ் வழக்கு பதியப்பட்டு கணவன் மற்றும் அவனுடைய பெற்றோர் கைது செய்யப்படும் விந்தையை அன்றாடம் காண்கிறீர்கள். ஏன்?

சிம்பிள்! அதற்கென்றே ஒரு கொடுங்கோன்மை சட்டம் கைவசம் இருக்கிறதே, பிறகு என்ன, அதைக் கையிலெடுத்து பழி வாங்கும் வெறியைத் தணித்துக் கொள்ளலாமே!

அதன்படி புகார் கொடுப்பவர்களுக்கு எந்த வித முகாந்திரமோ, சாட்சியமோ, தரவோ கொடுக்கவேண்டியதில்லை. இன்னார் என்னிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினார் என்று புகார் அளித்தாலே போதும். மேலும் இந்த சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பின் அதிசயங்களைப் பாருங்கள்:

1. கொடுக்கப்பட்ட புகாரில் கண்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுதும் பொய் என்று நிரூபிக்கப்பட்டாலும் புகார் கொடுத்தவர் மேல் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கமுடியாது!

2. புகார் கொடுக்கப்பட்ட உடனே புகாரில் எதிரியாகக் குறிப்பிடப்பட்ட அனைவரையும், எந்தவித விசாரணையுமின்றி கைது செய்யவேண்டும். (”கைது” என்பதுதான் இந்தச் சட்டத்தின்மேல் பெண்களுக்கு ஒரு அட்ராக்‌ஷன். வக்கீல்களுக்கும்தான் - ஏனெனில் ஜாமீன் அது இது என்று காசை அள்ளலாமே!)

3. ஜாமீன் கிடையாது - cognizable offence

4. குற்றசாட்டை வாபஸ் பெற முடியாது - non-compoundable

5. வரதட்சணை கேட்டதாகவும், அதற்காக கொடுமப்ப் படுத்தியதாகவும் புகாரில் கூரப்பட்டுள்ள குற்றங்கள் எந்த காலகட்டத்தில் நிகழ்ந்தாலும், எப்போது வேண்டுமானாலும் கேசு போடலாம். உதரணமாக, உங்கள் மனைவி நீங்களும் உங்கள் தாயாரும் ஏனையோரும், 30 ஆண்டுகள் முன்னால் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாக இன்று புகார் கொடுத்து வழக்கு பதியலாம். இதுபோல் வேறெந்த சட்டப் பிரிவின் கீழும் செய்ய இயலாது.

6. கண்வன் மற்றும் அவனுடைய பெற்றோருடன் சேர்த்து யாரை வேண்டுமானாலும் புகாரில் சேர்த்து குற்றவாளிப் பட்டியலில் உள்ளிடலாம். 85 வயதான மாமனார், மாமியார், 3 வயது நாத்தனார் மகன் - இப்படி.

7. சிறிதும் தொடர்பில்லாத நபர்கள் பெயரையும் குற்ற்வாளிகளாகச் சேர்க்கலாம். மன்மோகன் சிங் பெயரைக் கூட சேர்க்கலாம்! பொய்யான நிகழ்ச்சிகளை கற்பனையுடன் சேர்த்து எழுதலாம்.

8. குற்றங்களின் பட்டியலில் மேலும் பல செக்‌ஷன்களைச் சேர்ப்பதற்காக, மாமனார் கையைப் பிடித்து இழுத்தார், புளு ஃபிலிம் பார்த்தார்கள்.. இப்படி எதை வேண்டுமானாலும் சேர்க்கலாம்.

இதுபோன்ற பொய் வழக்கு ஸ்பெஷலிஸ்டுகளாக பல வக்கீல்கள் இருக்கிறார்கள். இதுபோன்ற பல டெம்பிளேட்டுகளை கைவசம் வைத்துள்ளார்கள். குடும்ப வாழ்வை முறிக்கும் கெடுமதிப் பெண்கள் கொடுக்கும் காசுக்கு ஏற்றபடி புகார்களை ஜோடித்துக் கொடுப்பார்கள்.

இப்போது இந்த செய்தியை வாசியுங்கள். ஏதோ ஒரு பிரச்னை எப்படி 498A - யாக உருவெடுக்கிறது பாருங்கள்!

------------------------
சென்னையில் பட்டதாரி பெண், கணவர் மீது பரபரப்பு புகார் - 3-வது திருமணம் செய்ய முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

சென்னை, ஏப்.6- 2009

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் அக்ஸ்வின் (வயது 26). பட்டதாரி பெண்ணான இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

எனக்கும், கடலூர் மாவட்டம் பரங்கி பேட்டையைச் சேர்ந்த முகமது அலி மரைக்கான் (34) என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எனது கணவர் சிங்கப்பூரில் கம்ப்னிட்டர் கம்பெனி நடத்தி வருகிறார்.

திருமணத்துக்கு பிறகு அவருடன் நானும் சிங்கப்பூர் சென்று வசித்து வந்தேன். சிங்கப்பூர் சென்ற பிறகு எனது கணவர் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைக்கும் தந்தை என்று தெரிய வந்தது. இதனால் நான் கடும் அதிர்ச்சி அடைந்தேன்.

இது பற்றி நான் கேட்ட போது, முதல் மனைவி யாஸ்மினை விவாகரத்து செய்து விட்டதாக எனது கணவர் தெரிவித்தார். இதனால் எனது மனதை தேற்றிக்கொண்டு வேறுவழி இல்லாமல் அவரோடு குடும்பம் நடத்தினேன்.

இந்த நிலையில் எனது கணவர் என்னை அடித்து உதைத்து துன்புறுத்தினார். வரதட்சணையாக பெரிய அளவில் பணம் கேட்டு சித்ரவதை செய்தார். இதற்கிடையில் நான் கர்ப்பம் அடைந்தேன். என்னை பார்க்க எனது பெற்றோர் சிங்கப்பூர் வந்தனர். அவர்களிடம் எனது கணவர் என்னை அடித்து உதைத்து, சித்ரவதை செய்வது பற்றியும், ஏற்கனவே அவர் திருமணமானவர் என்பது பற்றியும் சொல்லி கதறி அழுதேன். இதைக் கேட்டு எனது பெற்றோர் கொதித்துப்போனார்கள்.

என்னை அழைத்துக்கொண்டு சென்னை வந்து விட்டனர். இங்கு வந்தவுடன் எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டு விட்டது.

இதற்கிடையில் எனது கணவரின் தாயார் மதீனா பேகமும், தங்கை சபீயாவும், சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊர் பரங்கிபேட்டை வந்துள்ளனர். அவர்கள் எனது கணவருக்கு 3-வது திருமணத்துக்கு பெண் பார்க்க வந்துள்ளதாக அறிகிறேன். சென்னை மடிப்பாக்கத்தில் 3-வது பெண்ணை பார்த்து நிச்சயம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் கூறி இருந்தார்.

இந்த புகார் மனு தொடர்பாக இணை கமிஷனர் ரவிக்குமார், துணை கமிஷனர் கணேசமூர்த்தி, உதவி கமிஷனர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் மேற்பார்வையில், சென்னை அண்ணாசாலை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கல்யாணி, வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

3-வது திருமணத்துக்கு பெண் பார்க்க வந்ததாக புகார் கூறப்பட்ட மதீனாபேகம், சபீயா ஆகிய இருவரையும் பெண் போலீஸ் தனிப்படையினர் நேற்று காலையில் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

சிங்கப்பூரில் உள்ள முகமது அலி மரைக்கான் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினார்கள்.

பொய் கேசு போடுவது இப்படித்தான்!

சாத்தூரில் வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ர வதை செய்ததாக கணவர் உள்பட 4 பேர் மீது வழக் குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சாத்தூர் அருகே உள்ள ஜெக நாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி பொன்னுத்தாயி (வயது 24). இவர் சாத்தூர் அனைத்து மக ளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள ஒரு புகார் மனு வில் கூறியிருப்பதாவது:-

எனக்கும், மனோகரனுக்கும் 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற் போது எனது கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் விளைவாகஎனது கணவர் மனோகரன், அவரது தந்தை ஆறுமுகச்சாமி, மாமி யார் முத்துலட்சுமி, தம்பி மணிகண்டன் ஆகியோர் ரூ.3 லட்சம் கேட்டு என்னை சித்ரவதை செய்கின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.


இது குறித்து போலீசார் மனோகரன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வக்கீல் இருக்கிறார், ஜாக்கிறதை!

தந்தைக்கு விஷம் கொடுத்து கொன்ற வக்கீல் குண்டர் சட்டத்தில் கைது

மார்ச் 15,2009, தினமலர்

திருச்சி : சொத்துக்கு ஆசைப்பட்டு தந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றதோடு, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வக்கீலை தீர்த்துக் கட்ட முயன்ற வழக்கில் கைதான திருச்சி வக்கீல், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

வக்கீல் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைதாவது தமிழகத்தில் இதுவே முதன்முறை.

திருச்சி எஸ்.பி., கலியமூர்த்தி கூறியதாவது:

திருச்சி வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் வக்கீல் ராஜேஷ்கண்ணா (35). அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி. சுப்பிரமணியபுரத்தில் வசித்து வந்த இவரை, வக்கீல் ராஜேஷ்கண்ணா கூலிப்படை உதவியுடன் சில மாதம் முன் விஷம் கொடுத்து கொலை செய்தார். பின், அதே கூலிப்படையுடன் சோமரசம்பேட்டை வசந்தம் நகரில் வசிக்கும் கள்ளக்காதலி வித்யாவின்(30) கணவரான வக்கீல் வெங்கடேசனை வெட்டினார். அப்போது தப்பியோடிய தணிகாசலம் என்பவனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட தணிகாசலத்திடம் நடத்திய விசாரணையில், "ரவிச்சந்திரன்(35) செல்வம்(27) குமார் (30) ராதாகிருஷ்ணன்(24) ஆகியோருடன் சேர்ந்து வக்கீல் ராஜேஷ்கண்ணா தூண்டுதலின் பேரில் அவரது தந்தை கிருஷ்ணமூர்த்திக்கு விஷம் கொடுத்துக் கொன்றோம். வக்கீல் வெங்கடேசன் மனைவி வித்யா - வக்கீல் ராஜேஷ்கண்ணா கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வெங்கடேசனை தீர்த்துக் கட்ட முயன்றதாக' ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான். அதன் பேரில், கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார், வக்கீல் ராஜேஷ்கண்ணா, அவரது கள்ளக்காதலி வித்யா, கூலிப்படையினர் ரவிச்சந்திரன், தணிகாசலம், செல்வம், குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில், மாவட்ட எஸ்.பி., பரிந்துரைப்படி வக்கீல் ராஜேஷ்கண்ணா, ரவிச்சந்திரன் இருவரும் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தமிழக வரலாற்றில் வக்கீல் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.

-------------

அன்றாடம் குடும்பங்களில் நிகழும் சண்டை, சச்சரவுகளுக்கு வக்கீல்களும், வழக்குகளும், கோர்ட்டுகளும்தான் தீர்வா? பெண்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். வழக்குப் போடுவதால் யாருக்கு நன்மை? வழக்குப் போடுபவர்களுக்கா, இல்லை வக்கீல்களுக்கா? சிந்தித்துப் பாருங்கள்!

அநாவசிய கைது நடவடிக்கைகளைக் குறைக்க ஒரு சட்டத்திருத்தம் பாரளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகும் சட்ட நடைமுறைக்கு கொண்டுவராமல் காலம் தாழ்த்தி வருகிறது அரசு. ஏன்? வக்கில்களின் வருமானம் குறையுமே என்பதற்காக. மக்களின் துன்பம் இதனால் தீருமே என்பதைப் பற்றி யாருக்குக் கவலை. தடி எடுத்தவன் தண்டல்காரன்.

இந்த வக்கீல்களின் நடத்தையின் மூலம் ஒன்று தெளிவாகிறது. நாம் பழைய கற்காலத்தை நோக்கி வெகு வேகமாக முன்(பின்)னேறிக்கொண்டிருக்கிறோம்!