Showing posts with label பெண்ணியம். Show all posts
Showing posts with label பெண்ணியம். Show all posts

பணம் கேட்டு மாமனாரை மிரட்டிய மருமகளுக்கு வலைவீச்சு

பெண்ணியவாதிகள் “போராடிப்” பெற்ற பொய்வழக்கு சட்டங்கள் எதற்குப் பயன்படுகின்றன பாருங்கள்?

வரதட்சணை முறை ஒழிய வேண்டுமானால், வரதட்சணை கேட்போரையும் கொடுப்போரையும் ஒருங்கே கைது செய்து சிறையிலடைக்க வேண்டும். குற்றம் நடந்த உடனேயே இரண்டு பேரையும் கைது செய்து வழக்கு நடத்தி தூக்கில் போடவேண்டும். இப்பொது உள்ளதுபோல் சாவகாசமாக ”ஒரு கல்ப கோடி காலம் முன் என்னிடம் வரதட்சணை கேட்டர்கள். நானும் கொடுத்தேன்” என்று புகார் கொடுப்போரை உடனே கைது செய்யவேண்டும்!

தற்போது உள்ள 498A சட்டம், திருமணம் நடந்து பல ஆண்டுகள் கழித்து கள்ளக்காதல், மிரட்டிப் பணம் பறித்தல், தனிக்குடித்தனம் போன்ற காரணங்களுக்காக பொய் வழக்கு போட்டுப் பணிய வைக்கத்தான் இந்தச் சட்டம் பயனபடுகிறது. பெண்கள் துயர் துடைக்கவோ, வரதட்சணை முறையை ஒழிக்கவோ இச்சட்டங்கள் பயன்படுவதில்லை.

இனி செய்தி:

மாலைமுரசு - மதுரை. நவ. 28, 2009

மதுரையில் ரூ. 5 லட்சம் கேட்டு மாமனாரை மிரட்டிய மருமகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை எச்.எம்.எஸ் கலனியை சேர்ந்தவர் எஸ்.ஏ.ராஜன் (62). இவரது மகன் சீனிவாசன். இவருக்கும் சீதா பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே சீதாபிரியதர்ஷினிக்கு ஏற்கனவே 2003-ம் ஆண்டு திருமணமாகி இருப்பது தெரியவந்தது.

இதனால் இவருக்கும் சீனிவாசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில் எச்.எம்.எச் காலனி வீட்டில் சீனிவாசனின் தந்தை ராஜன் இருந்தார். அப்போது சீதாபிரியதர்ஷனி மற்றும் சில பெண்கள் நுழைந்தனர்.

வீட்டில் நுழைந்த சீதாபிரியதர்ஷினி ராஜனிடம் ரூ. 5 லட்சம் கேட்டு மிரட்டினார். கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் ராஜன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சீதாபிரியதர்ஷினியை வலைவீசி தேடி வருகின்றனர்.

"என்னை தொடாதே. அந்த தகுதி உனக்கு இல்லை"

சிறுமி பர்பி, கண்ணீர் மல்க கூறுகையில்,"அப்பாவை பார்க்க வேண்டும் என, கேட்கும்போதெல்லாம், அம்மா என்னை கடுமையாக அடித்து துன்புறுத்துவார். விடுமுறை நாட்களில் அம்மா என்னுடன் நேரத்தை செலவிட மாட்டார். அவரது தோழிகளை வீட்டுக்கு வரவழைத்து பேசிக் கொண்டிருப்பார்" என்றார்.இவ்வாறு பர்பி கூறிக்கொண்டிருக்கும் போது, அவளது தாய் அனாமிகா வேகமாக வந்து, சமாதானப்படுத்த முயன்றார். இதைப் பார்த்த பர்பி, ஆவேசமாக,"என்னை தொடாதே. அந்த தகுதி உனக்கு இல்லை' என, அழத் துவங்கினாள்."


நீதிபதி அளித்த உணமையான சாக்லேட்!

செய்தி: தினமலர் - நவம்பர் 23,2009


கோல்கட்டா : வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்த பத்து வயது சிறுமியை, நீதிபதியே, கடைக்கு அழைத்துச் சென்று சாக்லேட் வாங்கி கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் கோல்கட்டா கோர்ட்டில் நடந்தது. தனது தந்தையுடன் வசிக்க வேண்டும் என்ற, அந்த சிறுமியின் நீண்ட நாள் ஆசையையும் நீதிபதி நிறைவேற்றி வைத்தார்.

கோல்கட்டாவைச் சேர்ந்தவர் ராணா. இவரது மனைவி அனாமிகா. இவர்களுக்கு பத்து வயதில் பர்பி என்ற பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக ராணாவும், அனாமிகாவும் பிரிந்து வாழ்கின்றனர். குழந்தை பர்பி, அம்மாவுடன் தங்கி இருந்தாள். ஆனாலும், அப்பாவுடன் தங்கியிருக்க வேண்டும் என்பது தான், அவளது விருப்பம். குழந்தையை யார் வைத்துக் கொள்வது என்பதில் அனாமிகாவுக்கும், ராணாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. வேறு வழியின்றி இருவரும் கோர்ட் படியேறினர். கோல்கட்டா மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது.

விசாரணையின்போது, பர்பியும் கோர்ட் டுக்கு அழைத்து வரப்பட்டாள். "தந்தையுடன் தான், வசிப்பேன்' என, பர்பி உறுதியாக தெரிவித்தாள். இருந்தாலும், நீதிபதி முகோபாத்யாயா, இதில் அவசரப்பட்டு முடிவு எடுக்க விரும்பவில்லை. தந்தையின் மிரட்டல் காரணமாக, பயந்து போய் குழந்தை இவ்வாறு கூறுகிறதா என்பது உட்பட பல்வேறு சிந்தைனைகள் அவரது மனதில் ஓடின.நீதிபதி முகோபாத்யாயா, தனது இருக்கையை விட்டு எழுந்தார். நேராக சிறுமி பர்பி இருக்கும் இடத்துக்கு வந்தார். அடுத்ததாக கோர்ட்டில் நடந்த நிகழ்வு தான், அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

பர்பியின் கையை பிடித்து வெளியில் அழைத்துச் சென்றார், நீதிபதி. அருகில் இருக்கும் கடைக்குச் சென்று, சாக்லேட் வாங்கி கொடுத்தார். மகிழ்ச்சியுடன் அதை வாங்கிக் கொண்டாள், பர்பி. பின்னர், சிறுமிக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக பேச்சுக் கொடுத்தார்."இங்கே பார். இப்போது இருந்து நான் உனக்கு நண்பன். எந்த பள்ளியில் படிக்கிறாய்? உனது பொழுது போக்கு என்ன? உன் நண்பர்கள் யார்?' என, சிறுமியின் மனதுக்குள் இருப்பதை சிறிது, சிறிதாக கேட்டுத் தெரிந்து கொண்டார். நீதிபதியின் மென்மையான அணுகுமுறையால், அவர் மீது பர்பிக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

மீண்டும் கோர்ட்டுக்கு அழைத்து வந்தார். விசாரணை தொடர்ந்தது."உனக்கு ஏன் அம்மாவிடம் இருக்க பிடிக்கவில்லை' என, விஷயத்துக்கு வந்தார், நீதிபதி.இதற்கு சிறுமி பர்பி, கண்ணீர் மல்க கூறுகையில்,"அப்பாவை பார்க்க வேண்டும் என, கேட்கும்போதெல்லாம், அம்மா என்னை கடுமையாக அடித்து துன்புறுத்துவார். விடுமுறை நாட்களில் அம்மா என்னுடன் நேரத்தை செலவிட மாட்டார். அவரது தோழிகளை வீட்டுக்கு வரவழைத்து பேசிக் கொண்டிருப்பார்' என்றார்.இவ்வாறு பர்பி கூறிக்கொண்டிருக்கும் போது, அவளது தாய் அனாமிகா வேகமாக வந்து, சமாதானப்படுத்த முயன்றார். இதைப் பார்த்த பர்பி, ஆவேசமாக,"என்னை தொடாதே. அந்த தகுதி உனக்கு இல்லை' என, அழத் துவங்கினாள்.

பர்பியின் வாக்குமூலத்தை கேட்ட நீதிபதி, தனது தீர்ப்பை வாசித்தார். "பர்பியை அவளது தந்தையுடன் தங்கியிருக்க இந்த கோர்ட் உத்தரவிடுகிறது' என்றார். இதைக் கேட்ட பர்பி மகிழ்ச்சி அடைந்தாள். நேராக நீதிபதி இருக்கும் இடத்துக்கு சென்று,"நன்றி நீதிபதி அங்கிள்' என, கூறி விட்டு, வேகமாக தனது தந்தையின் கையை பிடித்தபடி, கோர்ட்டை விட்டு வெளியேறத் துவங்கினாள். சென்று கொண்டிருக்கும்போதே, நீதிபதியை நோக்கி தனது தலையை திருப்பி, மெல்ல புன்னகைத்தாள். அங்கு கூடியிருந்தவர்களின் முகங்களிலும் புன்னகை அரும்பியது.

============

இதுபோன்ற உணமையான "நீதி"பதிகளும் உள்ளனர்!

பெண்கள் இன்னமும் அடிமைகளாகத்தான் இருக்கிறார்கள்

ஆமாம், இந்த ஆணாதிக்க சமுதாயம் பெண்களுக்கு சுதந்திரம் ஏதும் கொடுக்காமல் கற்பு, பண்பாடு என்ற பழைய பஞ்சாங்கங்களைப் பேசிக்கொண்டு பெண்களை அடக்கி அபலைகளாக ஆக்கிக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் தொடர்ந்து திருமணமான இளம் பெண்கள் குடும்ப வன்முறையினால் பாதிக்கப் படுகிறார்கள். இன்னமும் கணவனுக்காக சமையல் செய்யச் சொல்லும் கொடுமை நடக்கிறது. தனிக்குடுத்தனம் செல்ல தைரியமில்லாத பல கோழை கணவர்கள் உள்ளனர். இவர்களை அடித்து ஜெயிலில் தள்ள வேண்டும். இப்போதுள்ள சட்டங்களின் கடுமை போதாது. ஆணாகப் பிறந்ததே குற்றம் என்று சட்டமியற்றி பிறந்த உடனேயே உள்ளே தள்ள வேண்டும். பிறகு காயடித்து செக்கு மாடுகளாக மாற்றி பெண்களின் அடிமைச் சேவகம் செய்ய வெளியே அனுப்ப வேண்டும்.

ஆகையால் இந்தியப் பெண்களே, அடங்க மறுங்கள்! பொங்கி எழுங்கள்! கள்ளக் காதல் உங்கள் பிறப்புரிமை! வாழ்க ஆச்சி மனோரமா!!



நன்றி: குமுதம்