Showing posts with label வயதானவர். Show all posts
Showing posts with label வயதானவர். Show all posts

பணம் கேட்டு மாமனாரை மிரட்டிய மருமகளுக்கு வலைவீச்சு

பெண்ணியவாதிகள் “போராடிப்” பெற்ற பொய்வழக்கு சட்டங்கள் எதற்குப் பயன்படுகின்றன பாருங்கள்?

வரதட்சணை முறை ஒழிய வேண்டுமானால், வரதட்சணை கேட்போரையும் கொடுப்போரையும் ஒருங்கே கைது செய்து சிறையிலடைக்க வேண்டும். குற்றம் நடந்த உடனேயே இரண்டு பேரையும் கைது செய்து வழக்கு நடத்தி தூக்கில் போடவேண்டும். இப்பொது உள்ளதுபோல் சாவகாசமாக ”ஒரு கல்ப கோடி காலம் முன் என்னிடம் வரதட்சணை கேட்டர்கள். நானும் கொடுத்தேன்” என்று புகார் கொடுப்போரை உடனே கைது செய்யவேண்டும்!

தற்போது உள்ள 498A சட்டம், திருமணம் நடந்து பல ஆண்டுகள் கழித்து கள்ளக்காதல், மிரட்டிப் பணம் பறித்தல், தனிக்குடித்தனம் போன்ற காரணங்களுக்காக பொய் வழக்கு போட்டுப் பணிய வைக்கத்தான் இந்தச் சட்டம் பயனபடுகிறது. பெண்கள் துயர் துடைக்கவோ, வரதட்சணை முறையை ஒழிக்கவோ இச்சட்டங்கள் பயன்படுவதில்லை.

இனி செய்தி:

மாலைமுரசு - மதுரை. நவ. 28, 2009

மதுரையில் ரூ. 5 லட்சம் கேட்டு மாமனாரை மிரட்டிய மருமகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை எச்.எம்.எஸ் கலனியை சேர்ந்தவர் எஸ்.ஏ.ராஜன் (62). இவரது மகன் சீனிவாசன். இவருக்கும் சீதா பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே சீதாபிரியதர்ஷினிக்கு ஏற்கனவே 2003-ம் ஆண்டு திருமணமாகி இருப்பது தெரியவந்தது.

இதனால் இவருக்கும் சீனிவாசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில் எச்.எம்.எச் காலனி வீட்டில் சீனிவாசனின் தந்தை ராஜன் இருந்தார். அப்போது சீதாபிரியதர்ஷனி மற்றும் சில பெண்கள் நுழைந்தனர்.

வீட்டில் நுழைந்த சீதாபிரியதர்ஷினி ராஜனிடம் ரூ. 5 லட்சம் கேட்டு மிரட்டினார். கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் ராஜன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சீதாபிரியதர்ஷினியை வலைவீசி தேடி வருகின்றனர்.

தர்மம் கடைசியில்தான் வெல்லுமாம்!

நீலு சோப்ரா என்பவருக்கு வயது 80. அவருடைய மனைவி க்ரிஷன் சரூப்பின் வயது 76. இவர்கள் மீதும் இவர்களுடைய மகனான ராஜேஷ் மீதும், இவர்களுடைய மருமகள் 498A மற்றும் 406, 114 போன்ற சட்டப் பிரிவுகளிலும் புகார் கொடுத்து வழக்குத் தொடுத்திருந்தார். இது நடந்தது 1993-ல்.

இந்தப் புகார் பொய்யானது, இதில் துளிக்கூட உணமையில்லை என்று அந்தப் புகாரை தள்ளுபடி செய்யும்படி கோரி அவர்கள் வழக்குத் தொடுத்தனர்.

இந்த விஷயத்தில் ஒரு முக்கியமான நுணுக்கத்தை நீங்கள் அவதானிக்க வேண்டும் ஒரு மனைவி தன்னை கணவனும் அவனுடைய பெற்றோர் மற்றும் உறவினர்களும் கொடுமைப்படுத்துவதாக ஒரு புகாரைக் கொடுத்தால் போதும். அதன் மேல் நடவடிக்கை எடுத்து வழக்கு நடத்துவது அரசின் பொறுப்பு. புகார் கொடுப்பதோடு சரி. மற்றச் சிலவு முழுதும் மக்களின் வரிப்பணத்தில்!

ஆனால் அந்தப் புகார் பொய்யானது என்றால் கணவன் தரப்பினர்தான் தன் சொந்தக் காசில் வழக்காடவேண்டும்!

சரி, இப்போது இந்தக் கிழவர்கள் கதைக்கு வருவோம்!

தங்கள் மேல் தொடுக்கப்பட்ட பொய் வழக்கை எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று அவர்கள் கோரிக்கை கீழ்க் கோர்ட்டிலும் டில்லி உயர்நீதி மன்ரத்திலும் தள்ளுபடி செய்துவிட்டனர்.

அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

இந்தப் போராட்டத்தினிடையே கணவன் ராஜேஷ் செத்தே போயிட்டான்!

ஆனால் அவனுடைய வயதான பெற்றோர் தொடர்ந்து போராடினர்.

உச்ச நீதி மன்றத்தில் நேற்றைய முன் தினம் (19-10-2009) அந்தப் பொய்ப் புகாரைத் தள்ளுபடி செய்து (quash) தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பது என்ன?

தன் புடவைகளையும் நகைகளையும் அவர்கள் திருடி விட்டனர் என்றும் வரதட்சனைக் கொடுமை செய்தனர் என்று பொத்தம் பொதுவாக அந்த மருமகள் புகார் கொடுத்திருக்கிறாரேயன்றி, அந்தப் புகாரில் எந்தவொரு விவரமும் இல்லை. இதன் அடிப்படையில் செயல்படுவது நீதிக்கு விரோதமனது என்று கூறியிருக்கின்றனர். அந்த நீதிபதிகள்.

A bench of justices VS Sirpurkar and Deepak Verma said:

"Under such circumstances, it would be an abuse of the process of law to allow the prosecution to continue against the aged parents of Rajesh, the present appellants herein, on the basis of vague and general complaint which is silent about the precise acts of the appellants," the bench said while quashing the case registred nearly 16 years ago."

இதனிடையே 16 ஆண்டுகள் கழிந்து விட்டன!

இந்தப் பதினாறு ஆண்டுகளில் தன் மகனையும் இழந்த வயதான அந்தப் பெற்றோர்கள் எந்தப்பாடு பட்டிருப்பார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்!

இந்தப் பதினாறு ஆண்டுகளுக்கு யார் பதில் சொல்வது?

தன் வேலையில் ஒரு அரசு அதிகாரி தவறு செய்தால் அவருக்கு தண்டனை உண்டல்லவா? நிதிபதிகளும் அரசு பணியாளர்கள் தானே? தவறான தீர்ப்பு வழங்கி இந்த வயதான தம்பதிகளை 16 ஆண்டுகள் அலைக்கழித்து தன் மகனுடைய சாவையும் அனுபவிக்கச் செய்த கீழக்கோர்ட்டு நிதிபதிகளுக்கு என்ன தண்டனை?

அதுபோல் பொய் வழக்கு போட்ட அந்த பெண்குலத் திலகத்திற்கு என்ன தண்டனை?

மக்களே, சிந்திப்பீர்!

"பெண்ணியவாதம் ஒரு தீவிரவாதம்"

"சட்டத்தின் மூலம் குடும்ப வாழ்வை தாங்கிக் காக்க இயலாது; அதை அழிக்கத்தான் இயலும்"

" இன்றைக்கு காந்திஜி உயிருடன் இருந்தால் அவரையும் குடும்ப வன்முறைச் சட்டத்தில் கைது செய்து உள்ளே தள்ளச் செய்திருப்பார்கள் நம் நாட்டின் பெண்னியவாதிகள்!"

செய்தி இங்கே.

வயதானவர்கள் கதி அதோகதிதான்

பெற்றோர்களின் கதி வருங்காலத்தில் இப்படித்தான் இருக்கும். இப்போதே முதியோர் இல்லங்கள் பெருமளவில் தொடங்கப்பட்டு விட்டன. வசதியுள்ளோர் அத்தகைய இல்லங்களில் தங்குகின்றனர். ஏழை முதியோர்கள் பாடு?

-------------------------------------
கோவை, செப்.18- 2009 . செய்தி - தினத்தந்தி

மகன்கள் மற்றும் மருமகள்களிடமிருந்து பாதுகாப்பு கேட்டு 73 வயது மூதாட்டி கோவை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு இந்திராநகரை சேர்ந்தவர் ராஜம்மாள்(வயது 73). இவரது கணவர் வடிவேலு இறந்து விட்டார். கணவர் இறந்த பிறகு கூலி வேலை செய்து சொந்தமாக வீடு கட்டினார்.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தனது மகன்களான ஞானவேல்(42) மற்றும் செல்லத்துரை (40) ஆகியோருக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால் 2 மகன்களும் தங்களின் வயதான அம்மாவுக்கு வீட்டின் ஒரு ஓரத்தில் சிறு அறையை மட்டும் ஒதுக்கி விட்டு, வீட்டின் முழு பகுதியையும் ஆக்கிரமித்து கொண்டனர்.

அது மட்டுமல்லாமல் தாய்க்கு உணவு வழங்குவதையும் நிறுத்திக்கொண்டனர். செலவுக்கும் பணம் கொடுப்பதில்லை. தள்ளாத வயதிலும், கூலி வேலை, வீட்டு வேலை செய்து ராஜம்மாள் பிழைப்பை நடத்தி வருகிறார். இதனால் இவரை மகன்களும், மருமகள்களும் மிரட்டி வருகின்றனர்.

தனது பெயரில் உள்ள வீட்டை ஆக்கிரமித்ததோடு மட்டுமல்லாமல், தன்னை வெளியேற்ற சதி நடப்பதை அறிந்த, ராஜம்மாள், கோவை 6-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வடவள்ளி வக்கீல் வெண்ணிலா மூலம் குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார்.

எனவே தனது 2 மகன்கள் மற்றும் மருமகள்களிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்றும், தன்னை அவமரியாதை செய்யக்கூடாது என்றும், தனது பெயரில் உள்ள வீட்டை ஆக்கிரமித்து உள்ள மகன்களை காலிசெய்து கொடுத்தால், அதை வாடகைக்கு கொடுத்து, பிழைப்பு தேடிக்கொள்வேன் என்றும், அல்லது மாத வாடகையாக தலா ரூ.750 வழங்க வேண்டும் என்றும், மேலும் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கில் கூறியிருந்தார்.

பாதுகாப்பு அளிக்க உத்தரவு

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ஜோதி, வடவள்ளி போலீசாரை அழைத்து, வயதான ராஜம்மாளுக்கு, மகன்கள் மற்றும் மருமகள்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டர்.

ஜீவனாம்சம் ,வீட்டை காலி செய்வது மற்றும் வாடகை குறித்த புகார்கள் மீதான விசாரணைக்காக வழக்கு வருகிற 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.