‘தேவதையை கண்டேன்’ சினிமா பாணியில்

"வேறொருவரை மணப்பதாக கூறும் காதலி மீது நடவடிக்கை எடுங்கள்"

- புறநகர் கமிஷனரிடம் வாலிபர் புகார்

ஆலந்தூர், ஜன. 28: ‘தேவதையை கண்டேன்’ என்ற படத்தில் வருவது போன்ற சம்பவம், சென்னையில் நடந்துள்ளது.

தன்னை 4 ஆண்டுகளாக காதலித்துவிட்டு, இப்போது வேறு நபரை திருமணம் செய்யப்போவதாக கூறும் காதலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் காதலன் புகார் கொடுத்துள்ளார்.

அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியைச் சேர்ந்தவர் ஐசக் சுஜின் (25), இன்ஜினியர். இவர், சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

நந்தம்பாக்கம் கணபதி காலனியைச் சேர்ந்த ஷாலினி (23) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு நண்பர் மூலம் எனக்கு பழக்கமானார். இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். சென்னையில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் ஷாலினி படித்தார். அவருக்கு கல்லூரிக் கட்டணம் செலுத்துவது, நகை வாங்கிக் கொடுப்பது என தாராளமாக செலவு செய்தேன். எனது வீட்டுக்கும் ஷாலினியை அழைத்துச் செல்வேன். அப்போது மருமகள் போலவே அவரை எனது பெற்றோர் நடத்தினர்.

இந்நிலையில், கடந்த மாதம் வேறு நபருடன் தனக்கு திருமணம் நடக்கப்போகிறது. இனி என்னுடன் பேசாதீர்கள் என்று ஷாலினி கூறிவிட்டார். என்னால் ஷாலினியை மறக்க முடியவில்லை. அதனால் அவரது வீட்டுக்கு போய் பார்த்தேன். அப்போது ஷாலினியின் தந்தை, என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். 4 ஆண்டுகளாக என்னைக் காதலித்துவிட்டு வேறு நபரை மணக்கப் போதவதாகக் கூறும் ஷாலினி மீதும் கொலை மிரட்டல் விடுத்த அவரது தந்தை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஜசக் சுஜின் மனுவில் கூறியுள்ளார். இதுகுறித்து விசாரிக்க பரங்கிமலை இன்ஸ்பெக்டருக்கு, கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டுள்ளார்.

------------'

இது வித்தியாசமான புகார். ஆனால் தினமும் நாம் பார்க்கும் செய்தி, பல பெண்கள் தன் காதலனுடன் வருடக்கணக்கில் சுற்றி விட்டு, ”என்னை மணப்பதாக வாக்களித்து ஜாலியாக இருந்துவிட்டு (என்னவோ இவளுடைய ஒத்துழைப்பு இல்லாமல் அவன் மட்டும் தனக்குத்தானே ஜாலியாக இருந்தான் போல!) என்னை கைவிட்டுவிட்டான்” என்று பெண்கள் புகார் கொடுப்பதும் உடனே அந்த ஆண்களை கற்பழிப்பு கேசில் புக் செய்து கைது செய்வதும்தான் நடைமுறை.

வன்கொடுமை சட்டத்தில் மாப்பிள்ளை கைது

இந்தக் குற்றச்சாட்டு ஏதேனும் நம்பத்தகுந்ததாக உள்ளதா என்று பாருங்கள். அந்தப் பெண் சொன்னால் போதும், “சூ, சூ, பிடிடா, விடாதே” என்று போலீஸ் செயல்படுவதுதான் ஆண்களுக்கும் அவர்களைப் பெற்றவர்களுக்கும் இந்த சமூதாயத்தில் அமைந்த சாபக்கேடு!

----------------

(செய்தி - தினத்தந்தி)


நாகர்கோவில்: திருமணமான ஐந்து மாதத்தில் மனைவியிடம் அதிக வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைப் படுத்திய புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.


கன்னியாகுமரி, நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (31). இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த முத்துசெல்வி (26)க்கும், கடந்த ஆகஸ்டு 20ம் தேதி திருமணம் நடைபெற்றது. 15 ஆயிரம் ரூபாய் மற்றும் பத்து சவரன் நகை வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

திருமணம் முடிந்து 40 நாட்களி லேயே மாப்பிள்ளை வீட்டில், வரதட்சணை கேட்டுத் தொல்லை கொடுக்கத் துவங்கினர். முருகனும் பண ஆசையில் முத்து செல்வியிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். இதுதொடர்பாக முத்துசெல்வி கோட்டார் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இருவரையும் அழைத்து முதலில் தனித்தனியாகவும், பின் சேர்த்தும் கவுன்சிலிங் நடத்தி சேர்த்து வைத்தனர்.பின் வீடு திரும்பினர்.அடுத்த அரை மணி நேரத்தில், முத்துசெல்வி அடித்து உதைத்து, ரோட்டுக்கு அனுப்பப்பட்டார்.
முத்துசெல்வி போலீசில் மீண்டும் புகார் செய்தார்.இது தொடர்பாக, முருகன்,மாமியார் செந்தில்வேலம்மாள் உட்பட எட்டு பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முருகன் மற்றும் உறவினர் சேகர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

ஆட்டோக்காரர் உயிர் அரைக்காசுகூட பேறாதா?

ஒரு மணமான பெண் தற்கொலை செய்துகொண்டால் அதற்கு அவளுடைய கணவன்தான் காரணமானவன் என்று உடனே முடிவு செய்து அவனை அவனுடைய பெற்றோரோடு சேர்த்து கைது செய்யவேண்டும் என்று ஒரு சிறப்புச் சட்டம் இந்நாட்டில் நடைமுறையில் இருக்கிறது.

கணவனை, மனைவியின் தற்கொலைக்குத் தூண்டினான் (abetting the suicide) என்று ஒரு செக்‌ஷனிலும், வரதட்சணைக் கொடுமை செய்து தற்கொலைக்குத் தள்ளினான் (sec 498A) என்று இன்னொரு செக்‌ஷனிலும் கேசு போட்டு கைது செய்து ஜாமீன் கொடுக்காமல் சிறையிலடைத்து விடுவார்கள். வெறும் அனுமானம் மட்டுமே போதும், குற்றத்தை நிரூபிக்கத் தேவையில்லை என்று சட்டத்தில் மாற்றம் செய்து ஆண்களையும் அவர்களுடைய பெற்றோர்களையும் இந்நாட்டின் இரண்டாம்தரக் குடிமக்களாக தரமிறக்கி நாயினும் கேடாக அவர்களை நடத்துகிறார்கள். அப்படியும் அது போன்ற மொத்த வழக்குகளில் 1% கூட நிரூபிக்கமுடியாத அளவுக்கு பொய் வழக்குகள் என்பது சமீபத்திய அரசு ஆய்வில் வெளியாகியிருக்கிறது. ஆனால் அந்தக் கணவன்மார்களும் அவர்களுடைய வயதான தாய் தந்தையினரும் பட்ட பாட்டிற்கு பதில் சொல்வோர் யார்?

இதோ கீழ்க்கண்ட நிகழ்வினைப் பாருங்கள் இந்த ஆட்டோக்காரரை தற்கொலைக்குத் தூண்டியது யார்?

இதே பெண்ணாக இருந்தால் இந்நேரம் கணவன் கைதாகி ஒரு மாமாங்கம் கழிந்திருக்கும்.

இந்நாட்டில் பெண்ணுக்கு மட்டும்தான் நீதியா? ஆண் உயிர் என்ன செல்லாக்காசா?

கேட்பாரில்லையா?

மீண்டும் சொல்கிறேன். இன்னிலை நீடித்தால் ஆண் சிசுக்கள் கர்ப்பத்திலேயே கொல்லப்படும் நாள் தொலைவில் இல்லை!

இப்போது செய்தி:-


தேனி அல்லிநகரத்தில் மனைவி பிரிந்து வாழ்வதால் ஆட்டோ டிரைவர் தற்கொலை

அல்லிநகரம்,ஜன.30- 2009

தேனி அல்லிநகரத்தில் மனைவி பிரிந்து வாழ்வதால் மனம் உடைந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- ஆட்டோ டிரைவர் தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி தெருவை சேர்ந்தவர் தங்கசெல்வம் (வயது 33). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பெயர் சந்திரா. இவர்களுக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகிறது. ரஞ்சனி(4) என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் தங்கசெல்வம் ஆட்டோ செலவிற்காக ரூ.2 ஆயிரம் பணத்தை வீட்டில் வைத்திருந்தார். இந்த பணத்தை எடுத்து அவரது மனைவி சந்திரா செலவு செய்து விட்டார். இதுகுறித்து தங்கசெல்வம், மனைவியிடம் கேட்டுள்ளார். இதில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதனைதொடர்ந்து கணவருடன் கோபித்து கொண்டு சந்திரா அவரது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த தங்கசெல்வம் சம்பவத்தன்று ரத்தினம் நகர் சாலை பகுதியில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் தங்கசெல்வத்தை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழி யிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்

காரணம் தெரியாத கணவன் தற்கொலை

மனித உயிரில் ஏற்றத்தாழ்வு உண்டா?

உண்டு அய்யா! மனைவியின் உயிர்தான் பெரியது. அது வேளியே போனால் கணவனும் அவனுடைய பெற்றோர் மற்றும் உடன் பிறப்புக்கள் உடனே “உள்ளே” போகணும்!

சகல சக்தி வாய்ந்த வரதட்சணைச் சட்டம் இருக்கும் வரை ஆண்மகனைப் பெற்ற அனைத்துப் பெற்றோர்களுக்கும் அவர்கள் வாழ்வில் ஒருமுறையாவது சிறைவாசம் நிச்சயம்!!

1. கணவன் தற்கொலை - காரணம் தெரியாது.
------------------------------------------------------

விருதுநகரில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

விருதுநகர், ஜன. 28- 2009. செய்தி: தினத்தந்தி

விருதுநகர் மேற்கு பாண்டியன் காலனியைச் சேர்ந்தவர் முத்துமாரி. இவரது கணவர் முத்துப்பாண்டி. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். முத்துப்பாண்டி மேட்டுப்பாளையத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இதனிடையே 3 மாத கர்ப்பிணியாக உள்ள தனது மனைவியை பார்க்க முத்துப்பாண்டி ஊருக்கு வந்தார். இந்த நிலையில் அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இது பற்றி விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

--------------

2. மனைவி தற்கொலை - காரணம்: சந்தேகமின்றி வரதட்சணை கொடுமை.
கணவர்-தம்பி கைது.

அம்பத்தூர், ஜன.21- 2009 - தினத்தந்தி.

தூத்துக்குடி பிரைன் நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 27) இவரும் தூத்துக்குடி மாவட்டம் இட்டமொழியை சேர்ந்த பிச்சை பண்டாரம் என்பவரின் மகள் சந்தரசெல்வி (22) என்பவரும் காதலித்தனர் இவர்களது காதலை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாதால் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் அம்பத்தூர் வெங்கடேஸ்வரா நகர் காமராஜர் தெருவில் வசிக்கும் பாண்டியராஜனின் அண்ணன் பிச்சைகனி வீட்டில் அடைக்கலம் புகுந்தனர். அங்கு தங்கியிருந்த போது கணவன், மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2006-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ந் தேதி வீட்டில் சந்திரசெல்வி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும், வரதட்சணை கொடுமை உள்ளதா என்று ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார். விசாரணையின் முன்பு ஆஜரான சந்திரசெல்வியின் தந்தை பிச்சைபண்டாரம், ``எனது மகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார்கள்'' என்று வாக்குமூலம் அளித்தார்.

கடந்த 2 வருடமாக நடைபெற்ற விசாரணையின் முடிவில், சந்திரசெல்வியின் தற்கொலைக்கு காதல் கணவர் பாண்டியராஜன், அவருடைய தம்பி பாலமுருகன் ஆகியோர் காரணம் என்றும், இதனால் 2 பேரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் அம்பத்தூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சையத்ஜமால் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் அடங்கிய தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பாண்டியராஜன், பாலமுருகன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

இவர்களிடம்தான் மனைவிகள் தஞ்சமடைகின்றனர்!


மது குடித்து விட்டு கலாட்டா செய்த பெண் போலீஸ் அதிரடி சஸ்பெண்ட்

ஜனவரி 26,2009, தினமலர்

திருவனந்தபுரம்: கேரளாவில், மது குடித்து விட்டு போதையில் கலாட்டா செய்த பெண் போலீஸ் சஸ் பெண்ட் செய்யப்பட்டார்.

கேரளா, வயநாடு மாவட்டம் கல்பேட்டாவில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் வினயா. இதே போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய மற்றொரு தலைமைக் காவலருக்கு பதவி உயர்வு கிடைத்தது. இதையடுத்து, அவர் சக போலீசாருக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.இதில், வினயா உள் ளிட்ட 19 போலீசார் கலந்து கொண்டனர். விருந்தில் பங்கேற்ற பெரும்பாலானோர் மது குடித்தனர். வினயா கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே குடித்தார். ஒரு வழியாக விருந்து முடிந்தது.

போதையில் மிதந்த அனைவரையும் பாதுகாப்பாக அவரவர் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல, கார் ரெடியாக இருந்தது. ஆனால், வினயா அந்த காரில் ஏற மறுத்து அடம் பிடித்தார். சக போலீசாருடன் பொது இடத்தில் தகராறில் ஈடுபட்டார். அந்த வழியாகச் சென்ற பஸ் சில் ஓடிச் சென்று ஏறினார். இந்த விவகாரம் போலீஸ் உயரதிகாரிகளுக்கு தெரியவந்தது. விசாரணைக்குபின் வினயா சஸ்பெண்ட் செய்யப் பட்டார்.

விருந்தில் பங்கேற்ற மற்ற போலீசாருக்கு எதிராக துறை ரீதியிலான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. விருந்துக்கு ஏற்பாடு செய்த தலைமைக் காவலருக்கு எதிராகவும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கள்ள உறவில் நல்லதா விளையும்!

பெண்கள் அனைவருமே கற்பைப் போற்றி, “கணவனையன்றி மாற்றானைக் கண்ணெடுத்தும் பார்ப்பேனோ” என்று விரதம் காப்பவர்கள் போலவும், ஆண்கள் அனைவருமே செக்ஸ் வெறி பிடித்து அலையும் கயவர்கள் போலவும் இந்த சமுதாயத்தில் பெண்ணியவாதிகளும், ஜொள்ளுவிடும் கிழங்களும், பத்திரிக்கைகளும், ஊடகங்களும் உண்மையை அப்பட்டமாக மறைத்து ஒருதலைப் பட்சமாக சித்தரிப்பது இப்போது ஃபேஷனாகப் போய்விட்டது. கற்பு என்னும் சொல்லே இக்காலப் பெண்கள் மனத்தளவில் ஒரு கெட்ட வார்த்தையாக மாறிப்போய்விட்ட காலகட்டத்தில் இப்படி ஆண்களை மட்டமாகச் சித்தரிப்பதை அனைத்து ஆண்களும் ஏன் வாய்மூடி மௌனியாக சகித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது.

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளிவந்துள்ள “ஆண்கள் எல்லோரும் ஏன் மனைவியை ஏமாற்றுகிறார்கள்?” என்ற தலைப்பிட்ட கட்டுரையைப் பாருங்கள். ஏன், பெண்கள் கணவனை ஏமாற்றி கள்ளக்காதலில் ஈடுபடுவதேயில்லையா? ஏனிந்த விஷமத்தனமான சித்தரிப்பு?

ஏன் உண்மையை மறைக்கிறார்கள்? பென்ணியவாதிகளுக்குப் பயந்தா? அல்லது, பெண்கள் அனைவரும் கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று தொடர்ந்து சித்தரிப்பதால் அவர்களுக்கு ஏதேனும் ஆதாயம் கிட்டுகிறதா?

இன்றைய பெண்களின் கற்பு நெறிக்கு இதோ சில சாம்பிள்கள்:-

1. பெண் கொலை வழக்கில் மருமகள்- கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை ஈரோடு விரைவு நீதிமன்றம் தீர்ப்பு - ஈரோடு, ஜன.22- 2009

ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள எஸ்.பெரியபாளையம் வெள்ளியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யம்மாள் (வயது 63). இவர் பால் வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மகன் அய்யாசாமி, திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஜோதி (37).

அய்யாசாமி வேலை பார்த்த கம்பெனியிலேயே வெள்ளியம்பாளையம் கே.டி.கே.தங்கமணி நகரை சேர்ந்த சிவராமன் (28) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். அடிக்கடி அய்யாசாமி வீட்டுக்கு வந்து சென்றதால் ஜோதியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. யாருக்கும் தெரியாமல் இருவரும் தங்கள் கள்ளக்காதலை வளர்த்து வந்தனர்.

அய்யம்மாளின் சகோதரர்கள் தங்களின் பூர்வீக சொத்தில் 5 சென்ட் நிலத்தை அய்யமாளுக்கு கொடுத்தனர். அதை அவர் தனது மகள் கோவிந்தம்மாளுக்கு மட்டும் கொடுக்க இருந்தார். இதனால் அய்யம்மாள் மீது மருமகள் ஜோதிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதற்கிடையில் ஜோதி-சிவராமன் இருவரின் கள்ளத்தொடர்பு அய்யம்மாளுக்கு தெரியவந்தது. அவர் ஜோதியை கண்டித்தார். எனவே அய்யம்மாளை கொலை செய்ய திட்டமிட்டார்.

கடந்த 2-8-2007 அன்று மாலை அய்யம்மாள் வெளியே சென்றிருந்த போது சிவராமன் வீட்டுக்கு வந்து ஜோதியுடன் உல்லாசமாக இருந்தார். அப்போது திடீரென்று வந்த அய்யம்மாள் அவர்களை பார்த்து விட்டு கண்டித்தார். பின்னர் மாட்டை கொண்டு வர நல்லாறு ஓடை பக்கம் சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்ற ஜோதி, சிவராமன் ஆகியோர் அய்யம்மாளை கழுத்தை நெரித்தும், கல்லால் முகத்தில் தாக்கியும் கொலை செய்தனர்.

இந்த வழக்கில் சிவராமன், ஜோதிக்கு ஆயுள் தண்டனையும், கொலையை மறைக்க முயன்ற சிவராமனுக்கு மேலும் 3 ஆண்டுகள் ஜெயில்தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

2. வாணியம்பாடி அருகே அம்மிக்கல்லை தலையில் போட்டு பெண் படுகொலை. கள்ளக்காதலன் கைது - ஆம்பூர்,ஜன.22-2009

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள மிட்டானங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி அம்சா (வயது 45). இவர்களுக்கு மோகன் என்ற மகன் உள்ளார். அம்சா கூலி வேலைக்கு சென்றபோது பத்தாப்பேட்டையை சேர்ந்த குமரவேல் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதுபற்றி கோவிந்தனுக்கு தெரிந்ததும் அவர் மனைவியை கண்டித்தார். இதனால் அம்சா கணவனை விட்டு பிரிந்து சென்று பத்தாப்பேட்டையில் கள்ளக்காதலன் குமரவேலுவுடன் குடும்பம் நடத்தி வந்தார்.

குமரவேல் பீடி தொழில் செய்து வந்தார். அவருக்கு போதுமான வருமானம் இல்லாததால் அம்சாவிடம் பணம் கேட்டார். அம்சா தனக்கு சொந்தமான நிலத்தை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை குமாரவேலுவிடம் கொடுத்தார். இதை குமரவேலு குடித்து அழித்துவிட்டார்.

இதனால் குமரவேலுவுக்கும், அம்சாவுக்கும் தகராறு ஏற்பட்டது. தினமும் அம்சா பணத்தை கேட்டு தொந்தரவு செய்தார். இதனால் அம்சா மீது குமரவேலுவுக்கு வெறுப்பு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இரவு அம்சாவும், குமரவேலும் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அம்சா மறுபடியும் பணத்தை கேட்க ஆரம்பித்தார். இதனால் ஆவேசம் அடைந்த குமரவேலு அருகில் இருந்த பலகையை எடுத்து அம்சாவின் தலையில் தாக்கினார். இதில் அவர் கீழே விழுந்தார். மேலும் ஆத்திரம் அடங்காத குமரவேலு அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து அம்சாவின் தலையில் போட்டார். இதில் படுகாயம் அடைந்து அம்சா ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்து போனார்.

3. அடகு வைத்த தங்க நகைகளை திருப்பிக் கேட்டதால் கழுத்தை அறுத்து கொன்றேன். கள்ளக்காதலியை கொலை செய்த புதுமாப்பிள்ளை வாக்கு மூலம்

தேனி மாவட்டம், ஆண்டிப் பட்டி அருகே உள்ள வைகை அணைப் பூங்கா அருகே கடந்த 15-ந் தேதி ஒரு பெண் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார். இது பற்றிய தகவல் கிடைத்ததும் ஆண்டிப்பட்டி போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர் தேனியைச் சேர்ந்த வேலையா என்பவரின் மனைவி கலாவதி (வயது32) என்று தெரிய வந்தது. கொலை செய்தது யார்? என்ன காரணம் என்பது தெரியாமல் இருந்தது.

இதற்கிடையே தேனி சிவராம் நகரைச் சேர்ந்த கார்த்திகேயன்(26), அல்லி நகரம் கிராம நிர்வாக அதிகாரி வனக்காமு மூலம் ஆண்டிப்பட்டி போலீசில் சரண் அடைந்தார். போலீ சாரிடம் கொடுத்த வாக்கு மூலத்தில் அவர் தெரிவித்து இருப்பதாவது:-

நான் தேனியில் ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தேன். எனக்கும் கலாவதிக்கும் 3 வருடத்துக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த தங்க நகைகளை வாங்கி அடகு வைத்தேன்.

இந்நிலையில் 4 மாதங் களுக்கு முன்பு எனக்கு திருமணம் நடந்தது. இதனால் கலாவதியுடன் அதிகமாக தொடர்பு கொண்டு பேச முடியவில்லை. இதற்கிடையே அவரை சந்தித்த போது உனக்கு திருமணம் ஆகி விட்டது. எனது தங்க நகைகளை மீட்டு என்னிடம் கொடுத்து விடு என்று என்னை வற்புறுத்தி வந்தார்.

அவளுடைய தொல்லை தாங்காமல் சம்பவத்தன்று அவளை வைகை அணைப் பூங்காவிற்கு மொபட்டில் அழைத்து வந்தேன். வரும் போது கத்தியை எடுத்து வந்தேன். பூங்காவில் மறை வான பகுதிக்கு அழைத்துச் சென்று அவளிடம் பேசினேன். அப்போது கழுத்தை அறுத்து கொலை செய்தேன். அவள் அணிந்து இருந்த தங்க சங்கிலி, அவளிடம் இருந்து செல் போன், கால் கொழுசு, கைக்கடிகாரம் ஆகிய வற்றை யும் எடுத்துச் சென்று விட்டேன். போலீஸ் என்னை தேடுவதை அறிந்ததும் நான் போலீசில் சரண் அடைந்தேன்.

4. ஏற்காடு ஓட்டலில் விஷம் குடித்தார் - 3 பேரை திருமணம் செய்த பெண் தற்கொலை - கள்ளக்காதலனுக்கு தீவிர சிகிச்சை

சேலம் வி.எம்.ஆர். தியேட்டர் அருகில் வசித்து வந்தவர் சங்கீதா (வயது 33). இவருக்கு சுனில் (4) என்ற மகனும், சிபானா (3) என்ற மகளும் உள்ளனர். சங்கீதா (சங்கீதா - என்ற பெயர் நினைவிருக்கிறதா!) 3 பேரை திருமணம் செய்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக அவர்களை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (27). இவர் சேலம் சொர்ணபுரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் அரிகிருஷ்ணனுக்கும், சங்கீதாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகினர். இதனால் சங்கீதா வீட்டிலேயே அரிகிருஷ்ணன் இருந்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் ஏற்காட்டிற்கு வந்தனர். அங்குள்ள இயற்கை எழில்மிகு நிறைந்த இடங்களை சுற்றிப்பார்த்தனர். பின்னர் ஒரு தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்கள். நேற்று காலை அவர்கள் இருவரும் அறையிலேயே விஷம் குடித்து விட்டதாக தெரிகிறது. இதில் வாயிலில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்துள்ளனர்.

இதை பார்த்த ஓட்டல் ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஏற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், சங்கீதா வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அரிகிருஷ்ணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சங்கீதாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், எதற்காக அவர்கள் விஷம் குடித்தனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப நடந்த மனைவி வர மறுத்ததால் 4 குழந்தைகளின் தந்தை தூக்கில் தொங்கினார்

ஒரு மணமான பெண் தற்கொலை செய்துகொண்டால் உடனே சப்-கலெக்டர் விசாரணை நடத்த வேண்டும். அடுத்தபடி அந்தப் பெண்ணின் பெற்றோர் அல்லது உறவினர் ஒருவர் ”அந்தப் பெண்ணின் தற்கொலைக்கு அவளுடைய கணவனும் மாமியாரும்தான் காரணம், அவர்கள் வரதட்சணை கேட்டுக் கொடுமைப் படுத்தினார்கள்” என்று புகார் கொடுத்து விடுவார்கள் உடனே அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் படுகிறார்கள். இது 100% கேசுகளில் அன்றாடம் நடப்பது.

ஆனால் மனைவி செய்யும் கொடுமையால் கணவன் தற்கொலை செய்துகொண்டால் கேட்பார் கிடையாது. ஒரு சலனமும் இருக்காது. ஒரு மூலையில் செய்தி வெளியிட்டுவிட்டு கப்சிப் ஆகிவிடுவார்கள் அந்த மனைவி மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது கிடையாது.

ஏனெனில் இந்த நாட்டில் கணவனுடைய உயிர் செல்லாகாசு. பெண்களைப் பார்த்து ஜொள்ளுவிடும் ஆண்களே இப்படித்தான் எண்ணுகிறார்கள்.

ஆண்கள் மேம்பாட்டிற்காக ஒரு அமைச்சகம் உண்டா?
பத்திரிக்கைகள் உண்டா?
வளர்ச்சிப் பணிகள் உண்டா?
ஆண்கள் பாலியல் பலாத்காரங்களுக்கு உட்பட்டால் மேல் நடவடிக்கை உண்டா?
ஆண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு உண்டா?
பெண்களுக்கு உள்ளதுபோல் ஆண்கள் நலனுக்காக வாரியங்கள், என்.ஜி.ஓ-க்கள் உண்டா?

ம்ஹூம். ஒன்றும் கிடையாது. ஏனெனில் இந்த நாட்டில் ஆண்கள் அனைவருமே மனைவிகளின் “கருமேனியை சிவப்பாக்கும் கிரீம்” வாங்குவதற்காக பணம் கொட்டி அழும் இலவச ஏ.டி.எம் கார்டுகள். அவர்களுக்கென்று தனிப்பட்ட உரிமைகள் ஏதும் கிடையாது.

உரிமைகள் பெண்களுக்கே!

கடமைகள் ஆண்களூக்கே!!

சீக்கிரமே ஆண்சிசுக்கள் கர்ப்பத்திலேயே அழிக்கப்படும் காலம் வரப்போகிறது!

இப்போது செய்தியை வாசியுங்கள்:-

தஞ்சாவூர்,ஜன.21- 2009. குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் 4 குழந்தைகளின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கும்பகோணம் சன்னா குளம் பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி. இவருடைய மகன் சசிகுமார்(வயது37). இவருக்கும் தஞ்சை கீழவஸ்தாசாவடி அம்மாக்குளம் பகுதியைச் சேர்ந்த முத்தரசிக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் தனக்கு ஆண் குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தில் மனைவியுடன் தினந்தோறும் சசிகுமார் தகராறு செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கமும் உண்டு. அடிக்கடி குடித்துவிட்டு வந்து முத்தரசியிடம் சண்டை போட்டதால் கோபித்துக் கொண்டு தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தஞ்சையில் உள்ள தாய் வீட்டிற்கு முத்தரசி வந்துவிட்டார்.

அங்கு கடந்த சில மாதங்களாக தாய் வீட்டில் தான் முத்தரசி வசித்து வருகிறார். மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த சசிகுமார், மனைவியை அழைத்து வந்து குடும்பம் நடத்துவதற்கு முடிவு செய்தார். அதன்படி நேற்றுமுன்தினம் தஞ்சையில் உள்ள மாமியார் வீட்டிற்கு சசிகுமார் வந்தார்.

அங்கிருந்த மனைவி முத்தரசியை தன்னுடன் வருமாறு அழைத்தார்.

ஆனால் அவர் மறுத்து விட்டார். இதனால் அவர் களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த சசிகுமார், வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்தார்.

தனது மாமியார் வீட்டிற்கு அருகில் உள்ள பால்வாடியின் பின்புறம் மரம் ஒன்று உள்ளது. உடனே அங்கு சென்ற சசிகுமார், தான் உடுத்தி இருந்த வேட்டியை அவிழ்த்து மரத்தின் ஒரு கிளையில் கட்டி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தகவலை அறிந்த தஞ்சை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன், ஏட்டு வேலு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

498A சட்டத்தில் இனிமேல் கைது செய்ய முடியாது!

பகல் கொள்ளை நிறுத்தப்படும்!

தற்போது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெறப்பட்ட குற்றவியல் நடைமுறைக் கோட்பாடுகளில் செய்யப்படும் (Criminal Procedure Code - CrPC) மாற்றங்களின் அடிப்படையில் 7 ஆண்டுகள் மற்றும் அதற்குக் குறைவாக தண்டனை குறிப்பிடப்பட்ட சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் இனிமேல் போலீசார் கைது செய்யக்கூடாது. விசாரிக்கவேண்டுமானால் நேரில் ஆஜராகும்படி ஒரு தாக்கீது அனுப்பினால் போதும்.

இந்த மாற்றப்பட்ட விதிமுறைக்குள் இபிகோ 498A பிரிவும் அடங்கும்.

இதற்கு முன்னமையே உச்சநீதிமன்றத்தால் ”சட்டபூர்வ பயங்கரவாதம்” (Legal Terrorism) என்று இச்சட்டம் வர்ணிக்கப்பட்டதும், குடியரசுத் தலைவரே இச்சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதை ஒப்புக்கொண்டதும், இதுபற்றி ஊடகங்களும், பல பத்திரிக்கைகளும், குடும்பநல பாதுகாப்பு இயக்கங்களும் குரல் கொடுத்து வந்ததும் நீங்கள் அறிவீர்கள்.

ஆனால் இந்த சட்ட மாற்றத்தை எதிர்த்து “குய்யோ, முறையோ” என்று கைகால்களை உதைத்துக்கொண்டு அழுவாச்சி செய்து அடம்பிடிப்பவர்கள் யார் தெரியுமா?

அங்குதான் இருக்கிறது சூட்சுமம்! வக்கீல்களய்யா, வக்கீல்கள்!

அவர்களுக்கு ஏன் திடீரென்று மக்கள்மேல், சமுதாயத்தின் மேல், மனைவிமார்கள் மேல் ஏகப்பட்ட கரிசனம் பொங்கி வழிகிறது தெரியுமா?

கைது செய்யப்பட்ட கணவர்கள், அவர்களது பெற்றோர்கள், உறவினர்களை ஜாமீனில் எடுப்பது, முன் ஜாமீன் பெறுவது, பிறகு கேஸ் நடத்துவது, வாய்தா வாங்குவது, கட்டப் பஞ்சாயத்து செய்து பணம் பறித்து “செட்டில்” பண்ணுவது போன்ற வகைகளில் அடித்து வந்த பகல் கொள்ளை இனிமேல் நின்றுவிடும். அதனால்தான் அவர்கள் கிரீச் என்று கூச்சலிடுகிறார்கள்!

இன்னொரு சாத்தியமும் உள்ளது. இப்போது இந்த சட்டத்தில் உடனே கைது என்னும் பூதம் இருப்பதால்தான் பல கொடுமைக்கார ராட்சசப் பெண்கள் இதைக் கையிலெடுத்து “என்னிடம் ஒரு கோடி ரூபாய் வரதட்சணை கேட்டார்கள். 80 வயது மாமனார் கையைப் பிடித்து இழுத்து கற்பைச் சூறையாடினார். அதற்கு என் நாத்தனாரின் இரண்டு வயதுக் குழந்தையும் துணை செய்தது” என்றெல்லாம் கற்பனைப் புகார் கொடுத்து அவர்களைக் கைது செய்ய வைத்து, பிறகு ”10 லட்சம் கொடு, 20 லட்சம் கொடு, வழக்கை வாபஸ் பெறுகிறேன்” என்று பணம் பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கைதுக்கு பயந்துகொண்டுதான் பல கணவர்கள் பணத்தை வக்கீல்களிடமும், இந்த நாசகாரப் பெண்பேய்களிடமும் அழுதுகொண்டிருக்கின்றனர். அதுவும் வெளிநாட்டில் வேலை பார்க்கும் மென்பொருளாளர்கள் பாடு மிகவும் பரிதாபம். சொந்த ஊரில் இருக்கும் பெற்றோர்களுக்கு என்ன ஆகுமோ என்று பயந்து செத்துக் கொண்டிருப்பவர்களும், அவர்களைப் பார்ப்பதற்காக ஊருக்கு வரும்போது விமான நிலையத்திலேயே கைது செய்யப்படுபவர்களும் ஏராளம். எந்த மென்பொருளாளரய்யா வரதட்சணைக் கொடுமை செய்கிறார்? ஆனால் அவர்கள்மேல்தான் 75% கேசுகள்!! விவரங்கள் வேண்டுமா, கேளுங்கள் தருகிறேன்.

இந்த சட்டத்தின் அடிப்படையில் நம் நாட்டில் ஆண்டுக்கு சுமார் 3600 கோடி ரூபாய் கைமாறுகிறது. ஆனால் கைது இல்லையானால் இனிமெல் பருப்பு வேகாது என்று இந்தவகை புகார்களே குறைந்துபோகும்! வேறு ஆயுதம் ஏதேனும் கிடைக்குமா என்று பார்ப்பார்கள்!

குடும்பம் என்றால் மனத்தாங்கல்கள், மனமாச்சறியங்கள் இருந்தே தீரும். அவற்றிற்கெல்லாம், போலீசும், கோர்ட்டுமா தீர்வு?

டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியை வாசியுங்கள்.

மனைவி இறந்தால் கணவன்தான் குற்றவாளி!

பொங்கல் சீர் வரிசையை குறை கூறியதால் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் தற்கொலை - திருவொற்றியூர், ஜன.17- 2009

திருவொற்றினிர் கிராமத்தெரு சோமசுந்தரம் நகரை சேர்ந்தவர் கலிய மூர்த்தி. இவருடைய மகள் அருள் செல்வி (வயது 29). எம்.காம். பட்டதாரி. இவர் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர்.

இவருக்கும் எர்ணாவூர் பூம்புகார் நகரை சேர்ந்த பாண்டியனுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பாண்டியன் தனியார் கூரியர் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். திருமணத்தின்போது பெண்ணுக்கு 10 பவுன் நகை, மணமகனுக்கு 10 பவுன் நகை மோட்டார் சைக்கிள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

தற்போது கர்ப்பமாக உள்ள அருள் செல்வி, தலைப்பொங்கல் கொண்டாட தாய் வீட்டு வந்தார். வீட்டுக்கு வந்தது முதல் சோகமாக இருந்த அருள் செல்வி, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அருள் செல்வியின் தாயார் கிருஷ்ணவேணி திருவொற்றியூர் போலீசில் கொடுத்த புகார் மனுவில், ``நாங்கள் கொடுத்த பொங்கல் சீர் வரிசை குறைவாக உள்ளது என்று கூறி என் மகளை அவருடைய கணவர் பாண்டியனும், அவருடைய தாயாரும் திட்டியுள்ளனர். சம்பள பணத்தை குறைவாக கொடுத்ததாக கூறி என் மகளை பாண்டியன் கன்னத்தில் அறைந்துள்ளார். என் மகள் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

உடனே கணவர் பாண்டியனை போலீசார் கைது செய்துவிட்டனர். அவர்மீது மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதலில் வரதட்சணைக் கொடுமை என்று பதிவு செய்து, பிறகு தற்கொலைக்குத் தூண்டினார் என்று மாற்றிவிட்டனர் (ஏனெனில் இது இன்னும் கடுமையானது).

ஒரு மனைவி திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் இறந்தால் ரெவின்யூ அதிகாரி விசாரணை நடத்தவேண்டும். போலீஸ் அதன் பிறகு தான் கைது நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் மனைவியின் பெற்றோர் சொன்னால் போதும் என்று முடிவெடுத்து விசாரணை அறிக்கை வருமுன்னே கைது செய்ய அவசரம் ஏன்?

இப்படி சட்டமும் நடைமுறையும் முழுதும் ஆண்களுக்கு எதிராக இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். கைது செய்யப்படும் அனைவரும் குற்றவாளிகளல்ல. ஒரு மணமான பெண் இறந்து விட்டால் உடனே அவளுடைய கணவனும் மாமியார் மாமனாரும் ஆட்டோமாடிகாக குற்றவாளிகளா? இந்தப் பதிவை வாசிக்கும் அன்பர்கள் சிந்தித்துப் பாருங்கள். நடுநிலையாகச் சிந்திக்கும் அனைவருக்கும் நான் சொல்லும் நியாயம் புரியும். டோண்டு போன்ற மனநல மருத்துவரை உடனே அணுகவேண்டிய நிலையிலிருக்கும் நபர்களுக்கு வேணுமானால் புரியாமல் இருக்கும்.

கணவனைக் கொல்லத் தூண்டும் செக்ஸ் வெறி

சமீப காலங்களில் வெறி பிடித்த பெண்கள் தங்கள் கணவன், பச்சிளம் மாறாத தன் குழந்தைகள் (வாழ்க தாய்மை!), தன் பெற்றோர் இதுபோன்ற தன்னைச் சார்ந்தவர் அனைவரையும் கள்ளக்காதலுக்காக கோடூரமாகக் கொலை செய்துவரும் செய்திகள் நிறைய வெளிவந்துகொண்டிருக்கின்றன.

என்னவோ ஆண்கள் அனைவரும் கிரிமினல்கள் போலவும், பெண்கள் எல்லோருமே ஒன்ரும் தெரியாத அப்பாவிகள் போலவும் சித்தரித்துவரும் ஊடகங்கள்கூட இப்போது அப்பட்டமான நிலையை உணர்ந்து வெளிப்படையாக உண்மைச் செய்தியை வெளியிடத் தொடங்கியிருக்கின்றனர்.

சீக்கிறமே பெண்ணியவாதிகளால் செய்யப்படும் மூளைச் சலவையிலிருந்து மீண்டு நம் சமூகத்தில் ஒரு விழிப்புணர்வு தோன்றும் என்று நம்பலாம்.

கீழே காணும் செய்திக்கு நன்றி: ஜூனியர் விகடன்.



கள்ளக்காதலைக் கணவன் கண்டித்தான், மகனை எரித்துக் கொன்றாள் தாய்

பக்கத்து வீட்டுக்காரனோடு சல்லாபித்ததைக் கண்டித்த கணவன் மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் சிறுவன் (மகன்) உயிரோடு எரித்துக்கொலை - தாய் கைது

செய்யாறு, ஜன.16- 2009. - செய்தி - தினத்தந்தி


இந்த சம்பவம்பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் உள்ள உக்கல் கிராமத்தை சேர்ந்தவர் வேலு (வயது 32). சலவை தொழிலாளி. இவருடைய மனைவி சுமதி (26). திருமணமாகி 6 வருடம் ஆகிறது. இவர்களுக்கு முருகன் (5) என்ற மகன் இருந்தான்.

பக்கத்து வீட்டை சேர்ந்த மணி என்பவருடன் சுமதி அடிக்கடி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலையிலும் வேலு, சுமதி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கணவன் மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் சுமதி தனது மகன் முருகன் மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்தார். இதில் முருகனின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து படுகாயம் அடைந்தான்.உடனடியாக அவனை காஞ்சி புரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாப மாக செத்தான்.

இதுகுறித்து தூசி போலீசில் வேலு புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து சுமதியை கைது செய்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின் றனர்.
-----------------

இதே அந்த மனைவி செத்திருந்தால் கணவனும் மாமியாரும் தீவைத்துக் கொளுத்திவிட்டார்கள் என்று முடிவு செய்து - எவ்வித சாட்சியமும் தேeவையில்லை - அவர்களை 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரை தீட்டிவிடுவார்கள்.

ஏனெனில் இந்திய சட்டங்களை கட்டமைக்கும் பெரியமனிதர்கள் மற்றும் நீதிபதிகளின் எண்ணப்ப்பாங்கின்படி மனைவி என்பவள் பண்பின் சிகரம்; பொறுமையின் சின்னம்; கணவனும் அவனுடைய பெற்றோரும், உடன்பிறந்த சகோதரிகளும் கிரிமினல்கள்.

இந்த நிலை மாறவேண்டுமானால் பெண்ணியவாதிகள் பேச்சை யாரும் பெரிதுபடுத்தக் கூடாது. ஊடகங்கள் நடுநிலையோடு செய்தி வெளியிடவேண்டும். மக்கள் தங்களை மூளைச்சலவைக்கு உட்படுத்திக் கொள்ளாமல் உண்மையை உணரவேண்டும்.

கள்ளக்காதல் கலாசாரம் பெருகுகிறது

கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக கணவனை தீர்த்து கட்ட அவசரப்படுத்திய வக்கீல் மனைவி - அரிவாள் வெட்டு வழக்கில் பரபரப்பு தகவல்கள்

(ஆண்கள் அனைவரும் கிரிமினல்கள், பெண்கள் அனைவரும் ‘வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்கள்’ என்ற பொய்ப் பிரசாரத்தைப் பரப்பிக்கொண்டு பகல் கொள்ளையடிக்கும் பெண்ணியவாதிகள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், என்.ஜி.ஓக்கள் ஆகியோருக்கும், “அய்யோ பாவம், அபலைப் பெண்கள்” என்று உருகி, ஆணழிப்புச் சட்டங்களை ஆதரிப்போருக்கும், இந்த செய்தியை சமர்ப்பிக்கிறேன்!)

திருச்சி,ஜன.14- 2009 - செய்தி - தினத்தந்தி

கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக கணவனை தீர்த்து கட்டுவதற்கு வக்கீல் மனைவி வித்யா அவசரப்பட்டது பரபரப்பு தகவலாக வெளிவந்து உள்ளது.

திருச்சி சோமரசம் பேட்டை அருகில் உள்ள வாசன் சிட்டி நகரை சேர்ந்தவர் வக்கீல் வெங்கேடஷ் (வயது39). இவரது மனைவி வித்யா (30). இவர்களுக்கு உதயா என்ற ஒரு வயது பெண்குழந்தை உள்ளது. கடந்த 11-ந்தேதி இரவு வக்கீல் வெங்கேடஷ் வீட்டில் இருந்த போது ஒரு கும்பல் அவரை அரிவாளால் வெட்டியது. அவரை வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றவர்களில் ஒருவனை பொதுமக்களும் போலீசாரும் விரட்டி சென்று பிடித்தனர். பிடிபட்ட தணிகாசலம் என்பவனிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள்.

அப்போது வெங்கேடசை அரிவாளால் வெட்ட சொன்னது திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த இன்னொரு வக்கீலான ராஜேஷ் கண்ணா (37) என்பது தெரியவந்தது. வெங்கடேசின் மனைவி வித்யாவுடன் ராஜேஷ் கண்ணாவுக்கு இருந்த கள்ளத்தொடர்பின் காரணமாக தான் இந்த அரிவாள் வெட்டு சம்பவம் கூலிப்படை மூலம் நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையொட்டி வக்கீல் ராஜேஷ் கண்ணா, கூலிப்படையை சேர்ந்த தணிகாசலம், ரவி, செல்வம், வித்யா ஆகிய 5 பேரை சோமரசம் பேட்டை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். வித்யா கைக்குழந்தையுடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தெரிந்த விவரங்கள் வருமாறு:-

வெங்கடேஷ், ராஜேஷ் கண்ணாவின் எதிர் வீட்டில் ஒரே அப்பார்ட்மெண்டில் சில வருடங்களுக்கு முன்பு குடியிருந்திருக்கிறார். அப்போது தான் ராஜேஷ் கண்ணாவுடன் வித்யாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாம். இது அவரது கணவர் வெங்டேசுக்கு தெரிந்ததும் அவர் வீட்டை சோமரசம் பேட்டைக்கு மாற்றி இருக்கிறார். ஆனால் அதன் பின்னரும் ராஜேஷ் கண்ணா- வித்யா கள்ளத்தொடர்பு நீடித்திருக்கிறது. இதை வெங்கடேஷ் பல முறை கண்டித்து இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த வித்யா தனது கள்ளக்காதலுக்கு கணவர் தடையாக இருக்கிறாரே என நினைத்து ராஜேஷ் கண்ணாவுடன் இதுபற்றி பேசி இருக்கிறார். அப்போது தான் அவர்கள் வெங்கடேசை தீர்த்து கட்டிவிட்டு ஒன்றாக சேர்ந்து வாழலாம் என முடிவு செய்திருக்கிறார்கள்.

இதற்காக ராஜேஷ் கண்ணா தன்னிடம் வழக்கு சம்பந்தமாக வந்து சென்ற அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்த ரவி என்பவரை தேர்வு செய்து உள்ளனர். ரவி ஏற்கனவே ஒரு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவர். அவருக்கு கூலியாக ஒரு லட்சம் ரூபாய் பேசி முதல் கட்டமாக 20 ஆயிரத்தை வித்யாவே கொடுத்து இருக்கிறார். பணம் கொடுத்த பின்னரும் வேலையை விரைவாக முடிக்காதது ஏன் என்று கேட்டு வித்யா அவசரப்படுத்தினாராம். இதைத்தொடர்ந்தே ராஜேஷ் கண்ணா ஆட்கள் வெங்கடேசை அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள்.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையின்போது வெளியாகி உள்ளது.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கூலிப்படையை சேர்ந்த ராதாகிருஷ்ணன், குமார் ஆகிய இருவரும் இன்னும் சிக்கவில்லை. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜேஷ் கண்ணா சொத்துக்காக தனது தந்தையையே பிராந்தியில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து இருக்கிறார். கள்ளக்காதலியை அடைவதற்காக, அவரது கணவனை கொலை செய்ய கூலிப்படையை ஏவி அரிவாளால் வெட்டி உள்ளார்.கூலிப்படையாக செயல்பட்ட ரவி, தணிகாசலம், செல்வம் ஆகிய 3 பேர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. எனவே இவர்கள் அனைவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான நடவடிக்கையை போலீசார் எடுத்து வருகிறார்கள்.

பெண்ணியவாதிகளே இதற்கு யார் காரணம்?

சென்னை அருகே நடந்த இளம்பெண் கொலையில் கள்ளக் காதலன் கைது பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் கொன்றதாக வாக்குமூலம்

செங்குன்றம், ஜன.13- 2009 : செய்தி: தினத்தந்தி

சென்னை அருகே நடந்த இளம்பெண் கொலையில் அவளது கள்ளக் காதலன் கைது செய்யப்பட்டார். அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் கொலை செய்ததாக வாக்குமூலத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை அருகே உள்ள புழல் கதிர்வேடு ஊராட்சி வீரராகவன் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 30). இவரது மனைவி மீனாட்சி (26) இவர்களுக்கு சாருலதா (7), ரூபஸ்ரீ (3) என்ற மகள்கள் உள்ளனர். 5-ந் தேதி காலை சந்திரசேகர் வேலைக்கு சென்றுவிட்டார். குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டனர். வீட்டில் இருந்த மீனாட்சியும், அவரது மாமியார் கல்யாணியும் மார்க்கெட்டுக்கு கிளம்பினார்கள். அப்போது மீனாட்சிக்கு செல்போனில் அழைப்பு வரவே, கல்யாணியை மட்டும் மார்க்கெட்டுக்கு பஸ் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு, மீனாட்சி வீடு திரும்பினார்.

கல்யாணி வீடு திரும்பிய போது மீனாட்சி வீட்டுக்குள் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு இருந்தார்.

இதுகுறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. மாதவரம் துணை கமிஷனர் ராமசுப்பிரமணியன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, ஹரி, பழனி ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

போலீசார் முதலில் மீனாட்சி நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாமா? கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாமா? அல்லது கணவரே கொலை செய்தாரா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தினார்கள். இதில் துப்பு துலங்காததால், மீனாட்சி கடைசியாக செல்போனில் பேசிய நபரை தொடர்பு கொண்டனர்.

அவர் ஓட்டேரி சத்தியப்பா நகரை சேர்ந்த வடிவேல் மகன் சரவணன் (32) என்பது தெரியவந்தது. இவர் சென்னை டாணா தெருவில் அலங்கார மீன்கள் கடை வைத்திருக்கிறார். அவரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள். இதில் அவர், மீனாட்சியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதுகுறித்து சரவணன் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

“எனக்கும், மீனாட்சிக்கும் படிக்கும் போதே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. பின்னர் அவள் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டாள். ஆனாலும் எங்கள் பழக்கம் தொடர்ந்து நீடித்து வந்தது. அவளது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்து வந்தோம். வேறு சிலருடனும் தொடர்பு சமீப காலமாக அவளுக்கு வேறு சிலருடனும் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது. அதோடு என்னிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்தாள். சம்பவத்தன்றும் அவள் என்னுடன் செல்போனில் பேசினாள். நானும் அவளது வீட்டுக்கு சென்றேன். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உல்லாசமாக இருக்கலாம் என்று அழைத்தேன். ஆனால் அவள் என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தாள்.

இதன் காரணமாகவும், வேறு சிலருடன் அவளுக்கு தொடர்பு ஏற்பட்டதாலும் ஆத்திரம் அடைந்து அவளை கத்தியால் குத்தி கொலை செய்தேன்.”

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறினார். கைது இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை திருவொற்றினிர் மாஜிஸ்திரேட்டு கண்ணன் முன்பு ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்

கொலைவெறியூட்டும் காதல் நாடகங்கள்

பண்பாடு சார்ந்த நம் பாரம்பரிய வாழ்க்கை முறை பிற்போக்கானது என்றும் மனம்போனபடி வாழ்வதுதான் நாகரிகமானது என்று மூளைச்சலவை செய்யப்பட்டுள்ள இளம் பெண்களின் வாழ்வு எந்த அளவுக்கு சீரழிந்து நிற்கிறது என்பதைப் பாருங்கள்.

பெற்றோர் சொல் கேளாதீர்; கண்டவனோடு கண்ட நேரத்தில் ஊர் சுற்றுங்கள்; எல்லாவற்றையும் திறந்து போட்டுக்கொண்டு உடையணியுங்கள், அது உங்கள் உரிமை, அதுதான் பெண் விடுதலை; காதல்(காமம்)தான் வாழ்வில் முக்கியமான விஷயம், அதற்காக எதையும் இழக்கலாம் - இப்படியெல்லாம் சினிமாக்களும் ஊடகங்களும், பெண்ணியவாதிகளும் ஓயாமல் போதனை செய்து கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவு? ந்மக்கென்று இருந்த பாரம்பரிய பண்பாடுகளை இழந்து “கண்டதே காட்சி, கொண்டதே கோலம்” என்று நிற்கிறோம்.

குடுமப வாழ்வு முறையையே சிதைத்து தகப்பன் பெயர் தெரியாத மக்களைக் கொண்ட சமுதாயமாக நம் நாட்டை மாற்றுவதற்கு கங்கணம் கட்டிக்கொண்டு பல அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கு பல மேலை நாடுகளிலிருந்து கோடி கோடியாகப் பணம் வருகிறது.

கட்டுக்கோப்பான குடும்ப வாழ்வு முறையையும், சேமிப்பு மனப்பான்மையையும் ஒழித்துவிட்டல் மேலை நாகரிகத்திற்கு மக்கள் முழுதும் அடிமையாகி கடன் வாங்குவதிலும், படாடோபங்களிலும், டம்பாச்சாரி சிலவுகளிலும் ஈடுபட்டு ஒரு சூன்யமான நிலையை நோக்கி நம் சமுதாயத்தை செலுத்திவிடலாம் என்று முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த முயற்சியில் அவர்களுக்கு வெற்றியும் கிட்டிக் கொண்டிருக்கிறது. அதற்கு இசைவாகத்தான் நம் சமூகத்தை உருக்குலைக்கும் 498A போன்ற சட்டங்கள் இயற்றப்படுகின்றன.

இப்போது இந்த செய்தியை வாசியுங்கள்:-

திருச்சி மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: தோழி நித்யா கொலை செய்து எரிக்கப்பட்டாரா? பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்கள்

திருச்சி, ஜன.12-2009 - செய்தி - தினத்தந்தி

காதலனுடன் உயிரோடு திரும்பி வந்த கல்லூரி மாணவியின் தோழி நித்யா கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டாரா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.


திருச்சி கருமண்டபம் அசோக் நகரை சேர்ந்த சுப்பிரமணியன்- ஜோதி தம்பதிகளின் மகள் வசந்தி(வயது 20). இவர் பிராட்டினிரில் ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். வயிற்று வலி காரணமாக வசந்தி, கடந்த மாதம் 26-ந் தேதி வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கண்டோன்மெண்ட் போலீசில் சுப்பிரமணியன் புகார் கொடுத்தார்.


இதனையடுத்து போலீசார் ஒரு வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் அந்த பெண்ணின் உடலை ஓயாமரி சுடுகாட்டில் சுப்பிரமணியன் குடும்பத்தினர் தகனம் செய்தனர்.

இந்த நிலையில் வசந்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட அதே நாளில் திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை தாயனூரைச் சேர்ந்த மல்லிகாவின் மகள் நித்யா(20) மாயமானாள். நித்யாவை பல்வேறு இடங்களில் அவரது தாய் மல்லிகா தேடினார். ஆனால் எங்கும் கிடைக்காததால் சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் தனது மகள் மாயமாகி விட்டதாக ஒரு புகார் மனு கொடுத்தார்.

இந்த நிலையில் தீக்குளித்து இறந்ததாக கூறப்பட்ட வசந்தி நேற்று முன்தினம் தனது காதலன் வெங்கடேசோடு உயிருடன் திரும்பி வந்தார். திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலெக்சாண்டர் மோகனிடம் வசந்தி ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், தங்கள் காதலுக்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களை சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.

இறந்து போனதாக பெற்றோரால் கூறப்பட்ட வசந்தி தனது காதலனோடு உயிருடன் திரும்பி வந்தது இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் வசந்தியின் வீட்டில் உடல் கருகி இறந்து கிடந்த பெண் யார்? அது ஏற்கனவே காணாமல் போனதாக சோமரசம் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நித்யாவாக இருக்கலாமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.

தோழிகளான வசந்தியும், நித்யாவும் ஒருவரையே (வெங்கடேஷ்) தீவிரமாக காதலித்து வந்ததால்தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்க கூடும் என்ற அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வசந்தியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்த இடத்தில் நித்யா தீ வைத்து கொளுத்தப்பட்டிருக்கலாம், அல்லது தனது காதலுக்கு குறுக்கே நிற்கும் வசந்தியை பழிவாங்குவதற்காக நித்யாவே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.

இதனால்தான் பயந்து போய் வீட்டை விட்டு வசந்தி காதலருடன் தப்பி ஓடியிருக்கலாம் என்றும் அதனை மறைக்கவே வசந்தியின் பெற்றோர் நாடகமாடி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் வசந்தியின் வீட்டில் இறந்து கிடந்தது நித்யா தான் என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் உண்மை நிலையை தெரிந்து கொள்வதற்காகவும், வசந்தியின் தந்தை சுப்பிரமணியன், அவரது மகன்களை கண்டோன்மெண்ட் போலீசார் பிடித்து சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் போலீசாருக்கு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்து உள்ளன.

இந்த வழக்கில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வருவதால், உண்மை நிலையை அறிய எரிந்த நிலையில் கைப்பற்றப்பட்ட பெண்ணின் உடலுக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை முக்கிய சான்றாக எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. பிரேத பரிசோதனை அறிக்கையில் இறந்த பெண்ணின் உடலில் தீக்காயம் ஏற்படுவதற்கு சுமார் 4 மணி நேரத்திற்கு முன்பே உயிர் பிரிந்து இருக்கலாம் என்றும், உடலில் தலைப்பகுதியில் காயங்களுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு இருக்கிறது.

இதனால் நித்யா அடித்து கொல்லப்பட்டு அதன் பின்னர் அவரது உடல் எரிக்கப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. எனவே பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் போலீசார் தீவிர புலன் விசாரணை நடத்தினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முறையாக விசாரிக்காமல் வழக்கை முடிவுக் கொண்டுவந்த திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

எது நியாயம்?

ஐயகோ, அபலைப் பெண்கள் படும்பாட்டைக் கேட்பாரில்லையா!

இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் பேதைப் பெண்கள் படும் அவலத்தைத் தடுப்பார் யாரோ!

தினமும் நூறுக்கணக்கான பெண்கள் வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாகி எரிக்கப்படுகிறார்களே!

பல்லாயிரக்கணக்கான பெண்கள், கணவன் மற்றும் அவனுடைய பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்கள் மூலம் நிகழ்த்தப்படும் குடும்ப வன்முறையால் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்களே, இதைத்தடுக்க இன்னும் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டாமா!

ஐயோ பாவம், இந்தியப் பெண்கள். அத்துணை கொடுமைகளையும் வன்முறைகளையும் சகித்துக் கொண்டு குடும்ப மானம் காப்பதற்காக மௌனமாய் அனுபவிக்கிறாளே, அவர் வீறு கொண்டெழுந்து இந்த ஆண்களைப் பழிவாங்க நாம் வழியமைத்துக் கொடுக்க வேண்டாமா!

இப்படியெல்லாம் இந்தியாவிலுள்ள பெண்ணியவாதிகள் மற்றும் ஊடகங்கள் கூக்குரலெழுப்பிக் கொண்டிருப்பதை நீங்கள் அன்றாடம் காண்கிறீர்கள்.

இதற்கேற்றார்ப்போல் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.

இதுபோன்ற ககருத்தாக்கங்கள் மீண்டும் மீண்டும் மக்கள் மனத்தில் மோதும்போது, அவை முழுதும் உண்மை என்றே இற்றைப் படுத்தப்படுகின்றன. இது ஒரு உளவியல் உத்தி - sort of brainwashing technique.
இதன் விளைவு?

சமீபத்தில் பெண்கள்மேல் ஆசிட் உற்றிய பையன்கள் போலீசாரால் கைது செய்யப்படும்போதே கொல்லப்படும்போது, இந்த பெண்ணியவாதிகளும், ஊடகங்களும், மற்றும் பொது மக்களில் பெரும்பான்மையோரும் “இவர்களை இப்படித்தான் கொல்லவேண்டும்!” என்று வெறிகொண்டு கூக்குரலிட்டதைக் கண்டோம்.

ஆனால், அதே நேரத்தில் மும்பையில் பல நூற்றுக் கணக்கானவர்களை சிதைத்து சீரழித்து படுகொலை செய்த பயங்கரவாதி கசாப் என்பவனுக்கு கட்டாயம் வக்கீல் வைத்து வாதாட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறுதியிட்டுச் சொல்கிறார். இதே மக்கள் அவனுக்கு ஆதரவாக கோரிக்கை எழுப்புகிறார்கள். “ஆமாம், அது நியாயம்தானே!” என்று இதே பொது மக்களும் ஆமோதிக்கிறார்கள்.

இந்த நியாய உணர்ச்சி ஏன் அந்தப் பையன்கள் விஷயத்தில் வெளிப்படவில்லை?

இங்குதான் காண்கிறீர்கள், நான் மேலே குறிப்பிட மூளைச்சலவையின் தாக்கத்தை.

ஆசிட் ஊற்றியதை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால் குற்றம் புரிந்ததாக சந்தேகப்பட்டவர்களை என்கவுண்டரில் போட்டுத்தள்ளியதை நீங்கள் ஏன் நியாயப்படுத்துகிறீர்கள் என்று கேட்கிறேன்!

ஆனால், கிட்டத்தட்ட என்கவுண்டர் போலத்தான் வரதட்சணைக் கொடுமைச் சட்டம், வரதட்சணைக் கொலைச் சட்டம், பெண்கள் தற்கொலை பற்றிய சட்டம், கற்பழிப்புச் சட்டம் - இவை போன்றவை அமைக்கப்படிருக்கின்றன. சாதாரண குற்றப் பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பொதுவான நியாய அடிப்படையில் கிட்டும் சட்டரீதியான உரிமைகள் இந்தக் குற்றங்களின் அடிப்படையில் சாட்டப்பட்டவர்களுக்குக் கிடையாது. மேலும் இந்த வழக்குகளின் நடைமுறை மிகவும் அநாகரிகமானது, காட்டுமிராண்டித்தனமானது.

இவ்வகை குற்றங்கள் நிரூபிக்கப்படவேண்டாம். குற்றம் சாட்டப்பட்டாலே போதும். மனைவியோ, அவரது உறவினரோ சொன்னால் போதும். சாட்சியச் சட்டங்களை (Evidence Act) இதற்காகவே திருத்தம் கொணர்ந்து இத்தகைய செக்‌ஷன்களுக்கு அந்த சாட்சிய வரைமுறைகளிலிருந்து விதிவிலக்கு அளித்திருக்கிறார்கள்.

இதுபோன்ற ஒருதலைப்பட்சமான அநியாயமான சட்ட விதிமுறைகளை எவ்வாறு நியாயப்படுத்துகிறார்கள் தெரியுமா?

”பெண்களுக்கெதிராக அன்றாடம் நிகழ்த்தப்படும் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டுவர சாதாரண சட்டஙகள் போதாது. ஏனெனில் ஒட்டுமொத்த சமுதாயமே பெண்களுக்கு எதிராக இருக்கிறது.” - இப்படி பெரட்டிப் பெரட்டி அடிப்பார்கள். மக்களும் “ஙே” என்று விழித்து “ஆமாம்தானே, அது நியாயம்தானே” என்பார்கள்.

எது நியாயம்?

பெண்களைவிட இரண்டு பங்கு ஆண்கள் நம் நாட்டில் தற்கொலை செய்து கொள்கிறார்களே, அது நியாயமா?

பொறியியல், மருத்துவக் கல்லூரி மற்றும் கலைக் கல்லூரிகளில் பெண்கள்தான் அதிகமாகப் பயிலும் இந்நாட்களிலும், அலுவலகங்களில் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக வேலை பார்க்கும் இக்காலத்திலும், கணவன் தான் ஜீவனாம்சம் கொடுத்து அழவேண்டும் என்று தீப்பளிக்கிறார்களே, அது நியாயமா?

வரதட்சணை என்பதே படித்த நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் அறவே இல்லாதபோது தினம் தினம் ஆயிரக்கணக்கான பொய் 498A வழக்குகள் போடப்பட்டு, அதனால் பல கணவர்களும் அவர்கள் பெற்றோர்களும் கைது செய்யப்படுகிறார்களே, அது நியாயமா?

அவ்வாறு பதியப்படும் பொய்வழக்குகளில் பல வயதான தாய்மார்கள் மற்றும் நிறைமாத கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் கூடிய பெண்கள் மற்றும் 3 வயதுகூட நிரம்பாத குழந்தைகள் - இவர்கள் கைது செய்யப்படுகிறார்களே, இவர்கள் பெண்கள் கிடையாதா? ஒரு ஆண்மகனைப் பெற்ற பாவத்திற்காக மற்றும் அந்த ஆண்மகனுக்கு உடன்பிறப்பாகப் பிறந்த குற்றத்திற்காக இவர்கள் இத்தகைய அநியாயமான சித்திரவதையை அனுபவிக்கவேண்டுமா? இது நியாயமா? பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் என்று போர்டு போட்டுக்கொண்டு இருக்கிறாரே ரேணுகா சவுத்துரி, அவர் கண்களுக்கு இவர்கள் தென்படவில்லையா?

இத்தகைய பொய்வழக்குகளில் 90%க்கு மேல், கணவர்களிடமிருந்து லட்ச லட்சமாக பணம் பிடுங்கி (extortion) ரத்து செய்யப்பட்டு சமரச விவாகரத்தில் (mutual consent divorce) முடிகின்றனவே, அவை அப்பட்டமான புனைசுருட்டு புகார்கள் என்பது இதன்மூலம் நிரூபணம் ஆகியும் இந்தச் சட்டத்தை நீக்கவோ, திருத்தவோ கூடாது என்று கூச்சலிடுகிறார்களே, குடியரசுத் தலைவர் உணமையைக் கூறியுள்ளபோதும், எங்கே தாங்கள் அடிக்கும் பகல் கொள்ளையில் மண் விழுந்துவிடுமோ என்னும் பயத்தில் அதனை எதிர்க்கிறார்களே, இது நியாயமா?

கண்டவர்களுடன் ஜாலியாக சுற்றி என்ஜாய் பண்ணிவிட்டு, மாட்டிக் கொண்டால் பிரச்னை வருமோ என்று கிலி பிடித்து பயப்படும்போது கையில் சிக்கும் அப்பாவியை மயக்கி, “ஐயகோ, அவன் என்னை கற்பழித்துவிட்டான்” என்று புகார் கொடுக்கிறார்களே, கற்பெனும் சொல்லையே வேம்பென வெறுக்கும் வெறி பிடித்த பெண்கள், அது நியாயமா?

அப்படி அவள் சொன்னால் போதும், குற்றம் நிரூபிக்கப்படத் தேவையில்லை, போடு அவனை சிறையில் என்ற வகையில் கொடுங்கோன்மையான சட்டங்களை அமைத்திருக்கிறார்களே, அது நியாயமா?

இதனை வாசிக்கும் மக்களே, நான் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி கதைக்கவில்லை. உங்கள் வாயிற்படியில் காத்துக் கொண்டிருக்கும் பயங்கரத்தை பற்றி உங்களுக்கு எடுத்து சொல்கிறேன். விழிப்புடன் இருங்கள். இல்லையேல் உங்கள் பலர்மீது பாய இந்தப் பேய்கள் காத்துக் கொண்டிருக்கின்றன!

இத்தகைய அநியாயச் சட்டஙகள் ஒழுங்காக்கப் படாவிட்டால், சீக்கிரமே, ஆண் சிசுக்கள் கர்ப்பத்திலேயே கலைக்கப்படும் காலம் வரும். இது நிச்சயம்!

குழந்தைகள் நலனுக்கு தந்தையின் அன்பும் அடிப்படைத் தேவை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சுழற்பந்து வீச்சாளருமான அனில் கும்ப்ளேயின் மனைவியினுடைய முன்னாள் கணவர் திரு. குமார் ஜாகீர்தார். இவருடைய குழந்தை முன்னாள் மனைவியிடம்தான் கோர்ட்டாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவருக்கு தன் குழந்தையை “பார்க்கும்” உரிமைதான் தரப்பட்டது. ஆனால் அவருக்கு குழந்தையை காண்பிக்காமல் தங்களுடன் பல ஊர்களுக்குக் கொண்டு சென்று குமாரை தவிக்கவிடுகின்றார் அவருடைய முன்னாள் மனைவி. இதை எதிர்த்து, தனக்கு குழந்தைக் காண அனுமதிக்கப்பட்டிருக்கும் உரிமையைப் பெற்றுத்தரக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார், குமார் ஜாகீர்தார்.


அதோடு நில்லாமல் தன்னைப்போல் குழந்தையை அன்புடன் கொஞ்சி விளையாடி வளர்க்கும் உரிமைகள் பறிக்கப்பட்டு, தன் பெற்ற குழந்தையையே காணக் கிடைக்காமல் ஏங்கித்தவிக்கும் தந்தையர்களின் உரிமைகளை நிலை நிறுத்த “இரு பெற்றோர்களுடனும் தான் வளர வேண்டும் எனக்கேட்கும் குழந்தைகளின் உரிமை இயக்கம்” (Child Rights Initiative for Shared Parenting - "CRISP”) என்னும் ஒரு அமைப்பைத் தொடங்கி குழந்தைகள், தந்தைகள் மற்றும் தாத்தா, பாட்டிகளின் உரிமைகளுக்காகப் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்.
இந்த CRISP இயக்கத்தின் சென்னைக் கிளை நேற்று துவங்கப்பட்டது. அது பற்றிய “இந்தியன் எக்ஸ்பிரஸ்” செய்தியின் தமிழாக்கம் இது:

”ஆண்டொன்றுக்கு சுமார் இரண்டு லட்சம் குழந்தைகள் மணமுறிவினால் பாதிக்கப்பட்டு ஒற்றைப் பெற்றோரால் (single parent) வளர்க்கப்படுகிறார்கள். இதனால் அந்தக் குழந்தைகளின் மனநலம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.
விவாகாகரத்து பற்றி தீர்ப்பளிக்கும் நீதிபதிகள், குழந்தைகளின் காப்புப் பொறுப்பை யாரிடம் அளிப்பது என்ற முடிவை கணவன், மனைவியினிடையே பரஸ்பரம் தொடுக்கப்படும் புகார்களின் அடிப்படையில் எடுக்காமல் அந்தக் குழந்தையின் நலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு தீப்பளிக்க வேண்டும்” என்றார் திரு. குமார்.

”குழந்தைகளுக்கும் உரிமைகள் உண்டு என்பதை நினைக்காமல் ஒருதலைச் சார்புடன் (biased) முடிவெடுத்து நீதிபதிகள் பெண்கள் கையிலேயே குழந்தைகளை ஒப்படைக்கிறார்கள்”

”இந்த முறையற்ற செய்கையினால் குழந்தைகள் தகப்பனின் அனபைப் பெறமுடியாமலேயே வளர்கிறார்கள். தங்கள் தந்தையிடமிருந்து முழுதுமாகப் பிரிக்கப்படுகிறார்கள்”

“இந்திய நகரங்களில் சுமார் 40% (ஐந்தில் இரண்டு) திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. இதுபோன்ற குடும்ப விவகார வழக்குகள் நீதிமன்றங்களில் ஆமை வேகத்தில் நகர்ந்து குழந்தைகளின் காப்புப் பொறுப்பை நிர்ணயிக்க ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பிடிக்கிறது.
அதன் பின்னும் அளிக்கப்படும் தீர்ப்புகளில் தந்தை குழந்தையைக் காணும் உரிமை ஒரு மாதத்திற்கு ஒரு மணி நேரம் மட்டுமே கிட்டுகிறது. ஒரு டிவி சீரியலை விடக் குறைந்த நேரம் இது” என்று விசனப் படுகிறார் திரு. குமார்.

ஆனால் அந்தக் குழந்தையின் பராமரிப்புச் செலவிற்கு பணம் கொடுப்பது என்னவோ அந்தத் தந்தைதான். இது ஒரு கொடுமையான முரண்நகை (irony)!

மேலும் இந்திய நீதிமன்றங்கள் தங்கள் மனத்தில் ”கணவன் என்றால் பொருளீட்டுபவன்; மனைவிதான் குழந்தைகளைக் கவனிப்பவள்” என்னும் பழையகால அனுமானத்திலேயே உழன்றுகொண்டு கனவன்மார்களுக்கு எதிராகவே தீப்பளித்துவருகின்றனர். இன்றைய மாறுபட்ட சமூகச் சூழலை அவர்கள் கருத்தில் கொள்வதில்லை என்றும் அங்கலாய்க்கிறார் திரு குமார் ஜாகீர்தார்.

நான்கு பேரை மணந்து இரட்டைக்கொலை செய்த ஐயங்கார் சங்கீதா

முன்னுரை:

ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி அனந்தகிருஷ்ணன், அவரது மனைவி யமுனாபாய் ஆகியோர், கடந்த 1-ம் தேதி சைதாப்பேட்டையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில், பெரியகாஞ்சிபுரத்தைச் சேர்ந்த தினேஷ், புகழேந்தி, செந்தில்நாதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அப்போது, காதல் மனைவி சங்கீதா சொன்னதால்தான், கொலைகளை செய்ததாக போலீசாரிடம் சொன்னார் தினேஷ்.
(பார்ப்பன சாதிப் பெண்கள் சிலரின் தற்போதைய கேவல நடத்தைகளையும், 498A - வரதட்சணைக் கொடுமைச் சட்டம் எவ்வாறு சகட்டுமேனிக்கு கெடுமதியினர் கையில் பகல் கொள்ளைக்கு பயன்படுகிறது என்பதையும் இந்த கொலையின் மூலம் தெளிவாக வெளியாகிறது. இதற்குப் பிறகும் “ஐயோ பாவம் பெண்கள். போலிஸ் ஸ்டேஷனுக்குப் போகக்கூட அஞ்சி கொடுமயை அனுபவித்து வருகிறார்கள் நம் பேதைப் பெண்கள்” என்று பசப்பி வருகிறார்களே. எவ்வளவு கேவலமான சமூகமய்யா நம்முடையது!)

நான்கு கணவர்கள் - 498A பொய்வழக்கு பகல் கொள்ளை:

போலீசில் சங்கீதா அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் இது.

கணவன் எண் - 1 . அடித்த கொள்ளை ரூ. 1 லட்சம்.

“நான் பிளஸ் 2 முடித்ததும் 17 வயதிலேயே, வறுமையின் காரணமாக பெற்றோர் 48 வயதான கண்ணனுக்கு திருமணம் செய்து வைத்தனர். தீபாராதனை தட்டில் விழும் பணத்தை நம்பித்தான் எங்கள் குடும்பம் இருந்தது. எதுவுமே தெரியாத வயதில் திருமணம் செய்ததால், கணவர் என்னை செக்ஸ் கொடுமைப்படுத்தினார். அவர் செய்த சித்ரவதைகளை தாங்கிக் கொண்டு, 5 ஆண்டுகள் அவருடன் வாழ்ந்தேன். கொடுமை தாங்கமுடியாததால் பெற்றோர் வீட்டுக்கு வந்தேன். பின்னர் விவாகரத்து பெற்றேன். அதற்காக, எனக்கு ஜீவனாம்சமாக ரூ.1 லட்சம் கொடுத்தார் கண்ணன்.

கணவன் எண் - 2. 498A கொள்ளை ரூ. 3 லட்சம்
அதன்பிறகு, எப்போதும் கோயிலில் இருப்பேன். கோயிலுக்கு அரக்கோணத்தைச் சேர்ந்த ஜெகநாதன் அடிக்கடி வருவார். என்னுடைய அழகில் மயங்கி என்னை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தார்; நான் மறுத்தேன். ஆனால், என் பெற்றோர்தான் அவருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தனர். அவரும் என்னைவிட இருமடங்கு வயதில் பெரியவர். அவரும் என்னை செக்ஸ் சித்ரவதை செய்தார். குடித்துவிட்டு வந்து கண்ட இடங்களில் கடிப்பார். பல நேரங்களில் மது குடித்து விட்டு தூங்கி விடுவார்.அதன் பிறகுதான், எனக்கு செக்ஸில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. என் கணவரால் என்னை திருப்திப்படுத்த முடியவில்லை. உல்லாசமாகவும் ஆடம்பரமாகவும் வாழ ஆசைப்பட்டேன். பக்கத்து தெருவில் வசித்த வாலிபருடன் பழகினேன். ஜெகநாதன் போதையில் தூங்கியதும், நாங்கள் சந்தோசமாக இருப்போம். அதை ஜெகநாதன் பார்த்து விட்டார். அதனால், அவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நான் அவர் மீது வரதட்சணை புகார் செய்தேன். அதற்காக எனக்கு அவர் ரூ.3 லட்சம் வரை கொடுத்தார். நான் ஜெகநாதனுடன் 2 ஆண்டுகள்தான் வாழ்ந்தேன்.

கணவன் எண் - 3

பின்னர், பெற்றோருடன் காஞ்சிபுரத்தில் இருந்தேன். என்னுடன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்த உமாசங்கரை திருமணம் செய்தேன். அவருக்கு ஆரம்பத்தில் என்னுடைய 2 கணவர்கள் பற்றி தெரியாது. அதன் பிறகுதான் தெரிந்தது. ஆனாலும், என்னுடன் அவர் வாழ்ந்து வந்தார். இதற்கு, அவரது சகோதரிகளும், தம்பியும் சம்மதிக்கவில்லை. என் பழைய வாழ்க்கை பற்றி தரக்குறைவாக உமாசங்கரின் அக்கா பேசினார். எனக்கு முன் கோபம் அதிகம். நானும் அவரும் ஒருநாள் நடுரோட்டில் குடிமிப்பிடி சண்டை போட்டோம்.

கணவன் எண் - 4

காஞ்சிபுரம் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சேர்க்கப்பட்டிருந்தேன். அங்கு, தனது உறவினரை பார்க்க வந்த தினேஷடீடன் எனக்கு காதல் ஏற்பட்டது. எனக்கு 3 கணவர்களும் செய்த கொடுமை பற்றி கூறினேன். அவர் என் மீது பரிதாபப்பட்டார். ஆனால், உமாசங்கர் எனக்காக பேசவில்லை. அதனால் அவரை உதறி விட்டு தினேஷடீடன் குடும்பம் நடத்தினேன். ஏற்கனவே, திருமணம் செய்த 3 பேரும், என் ஜாதியை சேர்ந்தவர்கள்.தினேஷின் பெற்றோருக்கு என்னுடைய 3 திருமணம் பற்றி தெரியாது. செக்ஸில் முழுமையாக தினேஷை திருப்தி செய்தேன். அவரும் வாட்ட சாட்டமாக இருப்பார். நாங்கள் பதிவு திருமணம் செய்தோம். இரவில் ஆண்களைப் போல நடந்து கொள்வேன். அது, அவருக்கு சந்தோசத்தை கொடுத்தது.

எங்களது குடும்ப வாழ்க்கைக்கு பணம் தேவைப்பட்டது.அப்போதுதான் அனந்தகிருஷ்ணன், தனக்கு குழந்தை இல்லை. ஆனால் எங்களிடம் ரூ.5 லட்சம் ரொக்கமும், 300 சவரன் நகையும் இருப்பதாக தெரிவித்தார். நானும், தினேஷும் வறுமையில் இருந்தோம். அதனால் அனந்தகிருஷ்ணனை கொலை செய்து விட்டு நகை, பணத்துடன் வந்தால் கோவாவுக்கு சென்று டிராவல்ஸ் ஆரம்பிக்கலாம் என்று தினேஷிடம் கூறினேன்.

சாகச சங்கீதா ஒரு ஐயங்கார் பெண்மணி (அதனால் மரியாதையாகக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் டோண்டு சண்டைக்கு வருவார்!)

சென்னை போலீஸ் கமிஷனர் கூறியது:

"கொலைக்கு மூளையாக செயல்பட்ட சங்கீதா, ஐயங்கார் பிரிவைச் சேர்ந்தவர். கொலையான தம்பதி ஐயங்கார் அல்லாத பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்குள் எப்படி பழக்கம் ஏற்பட்டது என்ற விவரம், சங்கீதாவை கைது செய்த பின்னர் தெரிய வரும்.அவரிடம் 75 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என்று தெரிகிறது. ஆனால், சங்கீதாவின் மூன்றாவது திருமணத்திற்கு கொலையான தம்பதியர் சென்றுள்ளனர். இத்தகவலை சங்கீதாவின் மூன்றாவது கணவர் உமாசங்கர் உறுதிப்படுத்தியுள்ளார். சங்கீதாவின் நான்காவது கணவர் தினேஷ். "தோழியின் பெற்றோரை கொலை செய்ய வேண்டும்' என சங்கீதா கூறிய பொய்யை தினேஷ் நம்பி கொலை வழக்கில் சிக்கியுள்ளார்.... "

கொள்ளையடித்த நகையை விற்றதில் கிடைத்த ரூ.75 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு சங்கீதா தப்பி ஓடி இருக்கிறார். அவர் இருக்கும் இடம் தெரியவந்துள்ளதாகவும், விரைவில் பிடித்து விடுவோம் என்றும் போலீசார் கூறினார்கள். தமிழக போலீஸ் வரலாற்றில் சங்கீதா போன்ற ஒரு சாகச கொலைகாரியை இப்போது தான் முதன் முதலாக பார்க்கிறோம் என்று போலீசார் ஆச்சரியமாக கூறினார்கள். ...அவரது கிரிமினல் லீலைகள் பற்றி மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மனோகரா படத்தில் வரும் வில்லி வசந்த சேனை கதாபாத்திரத்தை போல சங்கீதாவும் மாபாதகியாக செயல்பட்டு உள்ளதாக போலீசார் சொல்கிறார்கள்.

போலிசாரையும் மயக்குகிறாள் சாகச காதகி:-

1. சிரித்து பேசி மயக்க முயற்சி

சங்கீதாவிடம் போலீசார் விசாரித்தபோது, அவர்களையும் மயக்கும் விதமாக சிரித்து, சிரித்து பேசினார். தனது மேலாடைகளை அடிக்கடி, கீழே விழ வைத்தார். இதனால் பயந்துபோன போலீசார், பெண் போலீசார் முன்னிலையில் விசாரணை நடத்தினர். பின்னர், அவரது வாக்குமூலம் டைப் செய்யப்பட்டது. அவரிடம் இருந்து வெறும் 6 சவரன் நகை மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பல நூறு சவரன்களை அவர் மறைத்து வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே, போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட தினேஷ், செந்தில்நாதன், புகழேந்தி ஆகியோரை, கொலை நடந்த இடத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு எப்படி கொலை செய்தோம் என்பதை போலீசார் முன்னிலையில் அவர்கள் நடித்துக் காட்டினர். அதை போலீசார் வீடியோ படம் எடுத்துள்ளனர்.
2. டிடெக்டிவ் ஏஜென்சிக்கு வந்தவர்களுக்கும் வலை
அனந்தகிருஷ்ணன் இறந்தது பற்றி பத்திரிகை, டி.வி.மூலமாக தெரிந்து கொண்டேன். எங்களை பிடிக்க முடியாது என்று நினைத்தேன். எனக்கு 10க்கும் மேற்பட்ட காதலர்கள் உள்ளனர். சென்னையிலேயே 2 காதலர்கள் உள்ளனர். அவர்களிடமும் அடிக்கடி செலவுக்கு பணம் வாங்குவேன். அவர்களுடன் பீச், பார்க், சினிமா என்று பல இடங்களில் சுற்றித் திரிந்தேன். தனியார் டிடெக்டிவ் ஏஜென்சியில் வேலை பார்த்தேன். வசதியான பலர் தங்கள் பிரச்னைகளுக்கு உளவியல் ரீதியாக தீர்வு காண வருவார்கள். அப்படிப்பட்டவர் களை நோட்டமிட்டு, அவர்களை என் வலையில் விழ வைக்க முயன்றேன். சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கொலை செய்யும் அளவுக்கு சென்றதால் போலீசில் சிக்கிக் கொண்டேன்.இவ்வாறு சங்கீதா கூறியுள்ளார்.போலீசில் சிக்காமல் இருந்திருந்தால், இன்னும் பலரை ஏமாற்றி பணம் பறித்திருப்பார் சங்கீதா. அவருடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

----------

செய்திகள்: தினமலர், தினத்தந்தி, தினகரன்

உண்மையைக் கூறும் குடியரசுத் தலைவருக்கு எதிர்ப்பு

"வரதட்சணை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா? ஜனாதிபதி பிரதிபா கருத்துக்கு பெண்கள் எதிர்ப்பு”

ஜனவரி 06,2009. தினமலர்

புதுடில்லி : "வரதட்சணைக் கொடுமைக்கு எதிரான சட்டத்தை பெண்களில் சிலர், தவறாகப் பயன்படுத்தி கணவர்களைத் தண்டிக்கின்றனர் என்ற சர்வே தகவல் கூறுகிறது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூறிய கருத்து, பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் யாவட்மால் பகுதியில், பெண்கள் மாநாடு நடந்தது. பெண்களுக்கு நீதி கிடைக்கிறதா? என்ற தலைப்பில் நடந்த இந்த மாநாட்டில், பெண் வக்கீல்களும், பள்ளி, கல்லூரி ஆசிரியைகளும் பங்கேற்றனர்.

மாநாட்டில் பேசிய ஜனாதிபதி பிரதிபா, "பெண்கள் பாதுகாப்பாக இருக்க, பல வகையில் சட்டங்கள் உள்ளன. ஆனால், வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி, கணவர்களை சில பெண்கள் தண்டிப்பதாக சர்வே தகவல்கள் கூறுகின்றன. இப்படி தவறு நேராவண்ணம் வக்கீல்கள் உஷாராக இருக்க வேண்டும்' என்று பேசினார்.

இந்த பேச்சு, இப்போது பெண்கள் அமைப்புகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. "ஜனாதிபதி பிரதிபா அப்படி பேசியிருக்கக் கூடாது. ஏற்கனவே, பெண்களுக்கு சாதகமாக சட்டங்கள் உள்ளதாக கருத்து நிலவும் நிலையில் இப்படி பேசினால், இந்த சட்டங்களால் பெண்கள் பலன் அடைவதாக அர்த்தமாகி விடும்” என்று கூறியுள்ளனர்.

தேசிய குற்ற ஆவணங்களின் படி, கடந்த ஆண்டு இரண்டு லட்சத்து 16 ஆயிரம் வரதட்சணைக் கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன. அவற்றில், 85 - 95 சதவீதம் பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதை சுட்டிக் காட்டிய பெண்கள் அமைப்பினர், "சட்டம் இருக்கும் போதே இப்படி நேரும் போது, பெண்களுக்கு இந்த சட்டங்களால் பெரிய அளவில் பாதுகாப்பு இல்லை' என்று வருத்தப்பட்டனர்.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவி சுதா சுந்தரம் கூறுகையில், "பெண்கள் சம்பந்தப்பட்ட பல சட்டங்கள் போதுமான அளவில் அமல்படுத்தப்படுவதில்லை. பெண்களுக்கு பாதுகாப்பாக உள்ள சட்டங்களை சரியாக அமல்படுத்தாத நிலையில், ஜனாதிபதியின் கருத்து வேதனையானது' என்று தெரிவித்தார்.

இதுகுறித்து ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் கூறிய போது, "குறிப்பிட்ட சில சம்பவங்களின் அடிப்படையில் ஜனாதிபதி அப்படி பேசியிருக்கிறார்' என்று தெரிவிக்கப்பட்டது.

"ஒரு பெண் வீட்டை விட்டு வெளியே போய், போலீசிடம் புகார் செய்வதோ, கோர்ட் படியேறுவதோ கடைசி கட்டத்தில் நடக்கிறது. "கணவன், அவன் குடும்பத்தார் கொடுமைகளை சகித்துக்கொள்ளவே ஒரு பெண் நினைக்கிறாள். அது தான் இன்றைய நாள் வரை நடந்து வருகிறது. அது முடியாத போது தான், கடைசி கட்டமாக வெளியேறுகிறார்; போலீசுக்கு போகிறாள்; கோர்ட் படியேறுகிறாள். அப்படியிருக்கும் போது, சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதான கேள்விக்கே இடமில்லை' என்றும் சுதா சுந்தரம் கூறினார்.
===================

“95 சதவீதம் பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்” - என்றால் என்ன பொருள்? 95% கேசுகள் பொய்யாக ஜோடிக்கப்பட்டவை என்பதுதானே? அவர்கள் சொல்வது என்ன? நாடு முழுவதுமான பல கோர்ட்டுகளில் நடந்த 95% வழக்குகளில் தள்ளுபடி செய்த நீதிபதிகள்மீது களங்கம் கற்பிக்கிறார்களா?

இந்த சுதா சுந்தரம் போன்றவர்கள் ஏன் கூப்பாடு போடுகிறார்கள் தெரியுமா?

இந்த வரதட்சணை சட்டம் (Sec 498A of IPC) ஒரு கூட்டுக் கொள்ளைச் சட்டம். இவர் போன்ற பெண்ணியவதிகளும், சில வக்கீல்களும் இன்னும் சில கெடுமதியினரும் சேர்ந்து இந்த கொடுங்கோன்மை சட்டத்தை மெகா அளவில் தவறாகப் பயன்படுத்தி கணவன்மார்களிடமிருந்தும், புகார் கொடுக்கும் மனைவிகளிடமிருந்தும் பகல் கொள்ளை அடித்து வருகிறார்கள்.

குடியரசுத் தலைவியே இப்படி உண்மையைப் போட்டு உடைத்துவிட்டாரே, அதனால் எங்கே அந்தக் கொள்ளை நின்றுபோய்விடுமோ என்று கிலி பிடித்து கொய்யோ முறையோ என்று கூச்சலிடுகிறார்கள் இந்த பணக்காரப் பெண்மணிகள். உண்மையில் இவர்களுக்கு துன்பப்படும் பெண்கள்மேல் எந்த அக்கரையும் இல்லை. அப்படி இருந்திருந்தால் அன்றாடம் கூலி வேலை செய்து வயிறு பிழைத்து குடிகாரக் கண்வனிடம் அடிவாங்கும் பெண்களின் வாழ்வு முன்னேற இவர்கள் ஏதேனும் செய்வார்கள் அல்லவா? அங்கெல்லாம் காசு பெயராதே! வரதட்சணை கேசு போட்டு பணம் கறக்க முடியாதே!!

உண்மைக்கு இடமில்லாத நாடு இது. இங்கு “சத்தியமேவ ஜயதே” என்னும் சுலோகம் வேறு!

வெட்கக்கேடு!!

குடித்துக்கொண்டே ஆபாசப்படம் பார்க்கிறாள் மனைவி

"குடித்துக்கொண்டே ஆபாசப்படம் பார்க்கிறாள். தட்டிக்கேட்டால் அடித்து உதைக்கிறாள்" என்று 4 குழந்தைகளின் தந்தை புறநகர் போலீஸ் கமிஷனரிடம் மனைவி மீது புகார் செய்தார்.

ஆண்கள் குடித்து விட்டு வந்து அடிப்பதாகவும், ஆபாசப்படத்தை போட்டுப்பார்த்து அதேபோல நடக்க வற்புறுத்துவதாகவும் இதுவரை பெண்கள்தான் புகார் செய்து வந்தனர். இதற்கு மாறாக சென்னை புறநகர் கமிஷனர் அலுவலகத்துக்கு 4 குழந்தைகளுடன் வந்த அப்பாவி ஒருவர் புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

"எனது பெயர் கந்தவேல் (வயது38). எனது மனைவியின் பெயர் சகாயம் (வயது30). எங்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

ஆபாசப்படம் பார்க்கும் மனைவி

எனது மனைவி சகாயம் அவரது சகோதரர் அந்தோணி என்பவருடன் சேர்ந்து மது குடிக்கிறாள். குடிபோதையில் வீட்டிலேயே டி.வி.யில் ஆபாசப்படத்தை போட்டுப்பார்த்து ரசிக்கிறாள். இதை தட்டிக்கேட்டால் என்னை அடித்து உதைக்கிறாள்.

சம்பவத்தன்றும் இதேபோல ஆபாசப்படம் பார்த்துக்கொண்டிருந்தாள். இதனை கண்டித்த என்னையும், எனது குழந்தைகளையும் அடித்து, உதைத்து வீட்டை விட்டே துரத்திவிட்டாள்.

மிரட்டல்

நானும் வேறு வழி இல்லாமல் அதே பகுதியில் வேறு வீடு பார்த்து எனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறேன். ஏற்கனவே ஒரு முறை இதேபோல எனது மனைவி நடந்ததால் இதுபற்றி பல்லாவரம் போலீசில் புகார் செய்தேன். போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இருந்தாலும் நாளுக்கு நாள் அவளது தொல்லை அதிகரித்து வருகிறது. என்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுகிறாள். எனவே அவள் மீதும் அவளுக்கு உடந்தையாக இருக்கும் உறவினர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் இதுபற்றி விசாரணை நடத்த மீனம்பாக்கம் உதவி கமிஷனர் குப்புசாமிக்கு உத்தரவிட்டுள்ளார்.

~ செய்தி - தினத்தந்தி ஜன.4 - 2008.

====================

இதே பொண்ற புகாரை ஒரு மனைவி கொடுத்திருந்தால் உடனே நம் போலீஸ் சிங்கங்கள் பாய்ந்து வந்து கணவனையும அவனது பெற்றோரையும் கைது செய்திருப்பார்கள். அல்லது என்கவுண்டரில் போட்டுத் தள்ளியிருப்பார்கள். பெண்ணியவாதிகளும் ”அது சரிதான் இவர்களை இப்படித்தான் கொல்லவேண்டும்” என்று கூச்சலிட்டிருப்பார்கள்.

ஆனால் இப்போது தவறிழைத்திருப்பது மனைவிதானே, “அய்யோ, பாவம், பேதைப் பெண் என்று” பேசாமலிருந்து விடுவார்கள்.

நவீன பார்ப்பனீயம்!

இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கத்தினர் 19-12-2008 அன்று மாண்புமிகு தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்த மனுவின் முகப்பை இதன்கீழ் இட்டிருக்கிறேன். பாருங்கள்:-

"நவீன பார்ப்பனீயம்" என்னும் வர்ணாசிரம தர்மத்தின் புதிய வார்ப்பு எவ்வாறு உருவாகியுள்ளது என்று விளக்கும் இந்தப் பகுதியை பாருங்கள்:-


இன்றைய தினம் அநியாயமான முறையில் கட்டமைக்கப்பட்ட "குடும்ப அழிப்புச் சட்டங்கள்" எவ்வாறு சில சட்டரீதியான கொள்ளையரின் பணம் கறக்கும் ஈனத்தொழிலாக மாறியுள்ளது என்பதை விளக்கும் இந்த வரிகளை வாசியுங்கள்:-

அந்த மனுவின் PDF வடிவினை நீங்கள் டவுன்லோடு செய்து கொள்ள ஏதுவாக இதன் அடியில் அதற்கான சுட்டியையும் இணத்துள்ளேன். அதனை வாசித்தபின் அதில் கண்டுள்ள செய்திகளையும், கோரிக்கைகளையும் உங்கள் வலைப்பதிவுகள் மூலம் பலரறியச் செய்யுமாறு வேண்டுகிறேன்!

இந்த மனுவின் PDF வடிவை டவுன்லோடு செய்ய இங்கே "கிளிக்" செய்யவும்.

தேனிலவில் கணவனைக் கொன்ற ஐயங்கார் பெண்!

திருமணமாகி 8 நாட்களுக்குள் தன் அன்பு மனைவியிடன் ஆசையாய் கேரளாவுக்கு உல்லாசப் பயணம் சென்றான் அனந்தராமன் என்ற ஐயங்கார் இளைஞன். நல்ல வசதி படைத்த வீட்டினர் இருவரும்.

இன்பக் கனவுகளுடன் தன் புது மனைவியுடன் கேரளாவில் உள்ள் "முன்னார் குந்தளா டாம்" சென்றான் அனந்தராமன். அங்கே திடீரென இருவர் அந்த தம்பதியை நெருங்கினர். .... அனந்தராமன் கழுத்தை ஒரு நைலான் கயிரால் நெறித்தனர்..... துடிதுடித்து அந்த இடத்திலேயே செத்துப் போனான் அனந்தராமன். ....யாருமில்லாத அந்த உல்லாச இடத்தில் சாட்சிகளற்று பரிதாபமாக தனது 30ஆவது வயதில் அந்த இளைஞன் செத்துப் போனான்.

புலன் விசாரிக்க வந்த போலீசிடம் யாரோ தனது நகையை எடுத்துக்கொண்டு தன் கணவனை கொன்று விட்டத்தாய் புகார் கூறினாள் அனந்தராமனின் இளம் மனைவி வித்தியா லஷ்மி . 24 வயதான வித்தியா லஷ்மி கதறி அழுத செய்திதான் முதலில் வெளிவந்து எல்லோர் மனத்தையும் உருக்கியது! ஐய பாவம் இளம்பெண்!

.....ஊரும் உறவும் நடுங்கிப் .போயினர்..... கதறினர் ......ஆனால் முனாரில் உள்ள அன்பழகன் என்ற ஒரு ஆட்டோ டிரைவரின் வாக்குமூலத்தால் உண்மைகள் வெளி வர ஆரம்பித்தன.

அனந்தராமன், வித்தியா லஷ்மி தம்பதியை பின் தொடர்ந்த கொலையாளிகள் இருவரும் ஒரு ஆட்டோவில்தான் அந்த டேம் பகுதிக்கு வந்தனர். வரும் வழியில் அவர்களுக்கு போன் கால்களும் எஸ் எம் எஸ்களும் வந்த வண்ணம் இருந்தன. சென்னையில் இருந்து வந்திருந்த அந்த கொலையாளிகளின் மொபைல் போனில் சரியான சிக்னல் கவரேஜ் (டவர்) கிடைக்காததால் ஆட்டோ டிரைவர் அன்பழகன் போனுக்கு அந்த எஸ் எம் எஸ் களை அனுப்ப சொன்னார்கள் கொலையாளிகள் இருவரும்....

அந்த மெஸேஜ்களை பார்வையிட்ட போலீஸார் திருக்கிட்டுப் போயினர்!

அவர்களை கொலைக்களத்துக்கு கூப்பிட்டது மனைவி வித்யா லக்ஷ்மியே!!!

கொலையும் செய்வாள் பத்தினி......

ஐயங்கார் வகுப்பை சேர்ந்த, வசதி படைத்த வித்தியா லக்ஷ்மிக்கும் சென்னையை சேர்ந்த ஏழை கிறித்துவ வகுப்பை சேர்ந்த ஆனந்துக்கு இளம் வயதிலேயே காதல் ஏற்பட்டது. அந்த காதலை வீடும் சமூகமும் ஒப்புக்கொள்ளாததால், பெற்றோர் பார்த்து வைத்த அப்பாவி ஐயங்கார் பையன் அனந்தராமனைத் திருமணம் செய்துகொண்டு விட்டு, பின் தன் கணவனை கொடூரமாய் கொல்ல முற்பட்டாள் இளம் ஐயங்கார் மனைவி வித்தியா லஷ்மி!

தன் கணவனை உல்லாசப் பயணம் என்ற பெயரில் யாருமில்லாத இடத்துக்கு அழைத்துச் சென்றாள். அதே இடத்துக்கு தன் கள்ளக் காதலனையும் அவனது சகாவையும் கூப்பிட்டாள். இதற்கு பல போன் கால்களும் எஸ் எம் எஸ் களும் அனுப்பினாள். இவற்றில் கடைசீ சில நிமிஷங்களில் அனுப்பப்பட்ட எஸ் எம் எஸ் கள்தான் ஆட்டோ ஒட்டுனர் அன்பழகனிடம் சிக்கின.

ஒரு பக்கம் தன் கணவனுடன் உல்லாசமாய் சல்லாபித்துக் கொண்டு, அதே நேரத்தில் தானும் தனது இளம் கணவனும் எங்கே இருக்கிறோம், அவனைக் கொல்ல எப்படி வர வேண்டும் என்றெல்லாம் கொலையாளிகளுக்கு செய்தி அனுப்பிக்கொண்டே இருந்தாள் வித்யாலஷ்மி.

கொலையாளிகள் அந்தராமனைக் கொன்றவுடன், தனது பத்துப் பவுன் சங்கிலியைக் கழற்றி அவர்களிடம் கொடுத்து விட்டு, தன் கணவனை யாரோ அடையாளம் தெரியாதவர்கள் கொன்று விட்டு தனது சங்கிலியை கழற்றிக்கொண்டு ஓடிவிட்டனர் என்று கத்திக்கொண்டே ஓடினாள் கள்ளக்காதலி, கொலைகாரி வித்தியாலக்ஷ்மி!!!!

கொலையாளிகள் சந்தேகிக்க கூடிய விதத்தில் பேசியதையும், தனது மைபைலில் வந்த செய்திகளையும் கண்ட அட்டோ ஓட்டுனர் அன்பழகன் போலீஸிடம் தந்த விபரங்களின் பெயரில் கொலையாளிகளை ஒரு லாட்ஜில் இருந்து போலீஸார் கைது செய்தனர்.

போலீஸ் விபரங்களை கோர்ட்டில் சமர்பிக்க, வித்தியா லக்ஷ்மிக்கும் கொலையாளிகளுக்கும் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது கோர்ட்டு.

மேல் விபரங்கள் செய்தியில் ......................

Chennai woman murders husband in honeymoon

நன்றி:

கல்யாணமாகி 8 நாட்களில் செத்துப்போன அனந்தராமன்........